மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்து
தாயின் தழுவல் பொற்கை மறந்து
சொந்த வீட்டுப் படுக்கை மறந்து
புதுத் தளிர்க்கை மறந்து
மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்த....
மாவீரருடனான ஈரநினைவுகள்...... இதோ..

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ்!

நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...! மிகுதி

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ்!

ஐந்து நிமிடங்கள் தான் அசைந்து போயிருக்கும். ஒரு பயங்கரச் சத்தம். வீடு அதிர்ந்தது போல இருந்தது. எனக்கு நெஞ்சே வெடித்தது போலிருந்தது. என் பிள்ளைகள் விழிகள் பிதுங்க விறைத்து நின்றார்கள். நல்ல வேளையாக அம்மா அந்த நேரம் வீட்டில் நிற்க வில்லை. நின்றிருந்தால் கதிகலங்கிப் போயிருப்பா. நானும், மற்றத்தங்கையும், பிறந்தநாள் கொண்டாடும் தங்கையும் ஸ்டோர் றூம் வாசலையே பார்த்தபடி நின்றோம். ஸ்டோர்றூமுக்குள்ளிருந்து புகை வந்து கொண்டிருந்தது. ஸ்டோர்றூம் வாசல் புகை மண்டலமாயிருந்தது. வாசலிலிருந்து நீளத்துக்கு விறாந்தையிலிருந்து முற்றம் வரை துகள்களாய் சிவப்பாய், கறுப்பாய் பலநிறங்களில் ஏதேதோ எந்து விழுந்தன. வேறு எந்த சத்தமும் இல்லை. உள்ளே தம்பியும், தங்கையும் சிதறி விட்டார்களா....? மிகுதி

சுமை தாளாத சோகங்கள்!

இத்தனை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. -தம்பி சாகேல்லையெண்டு தங்கச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு! -அந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில் படுக்கையில் பயணிக்கையில்..... என்று எந்த நேரமும் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி அழுத விழிகளைத் துடைக்க மறந்து ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டு இருக்கிற பொழுதுதான்.... மிகுதி

அந்த மௌன நிமிடங்களில்.....!

மனசுஓலமிட, கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். அக்கா அக்கா-------! என்று என் முன்னே சிரித்து விட்டு அடுத்த கணமே களத்தில் காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள்.
அங்கு அவனும் வந்தான்................. அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோ}ஷமாய் இருந்தது. மிகுதி

கப்டன் மயூரன்!

விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது மிகுதி

கப்டன் மயூரன்!

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.ஈடிச, எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது..... மிகுதி

மாவீரன் றோகன்! (வெள்ளை)

இனவெறிக் கரங்களால் தமிழினத்தின் குரல்வளை நெரிக்கப்படுவது கண்டு துடித்தெழுந்த கொள்கை வீரனான ஓர் இளம் காளையின் வீரவரலாறு இது.... மிகுதி

மரணங்கள் முடிவல்ல!

கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள் , மல்லிகைக்கொடிகள், ரோஜாச்செடிகள் எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும் கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள் , கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின்பக்கக் கதவை மெதுவாகத் திறக்க ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் படமுன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன...... மிகுதி

மாவீரன் வெங்கடேஸ்!

எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன்.
தென்பாண்டிச் சீமையிலே... பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சு குலுங்கி அதிர்வுறும். என் பிள்ளை வெங்கடேஷின் நினைவு என்னை அலைக்கழிக்கும்..... மிகுதி

கணேஸ் மாமா!

ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலை ஓசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள எதிரிகளின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின.... கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறிபட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும் ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது. மிகுதி

Impressum Thileepan Thumilan

நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும் மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே!

Copyright © 2002 Chandravathanaa Selvakumaran.
For more information, please contact Chandravathanaa