மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) |
![]() |
Literatur - கட்டுரைகள் | |||
Written by வர்ணகுலத்தான் | |||
Sunday, 06 May 2018 08:05 | |||
![]() துரையப்பா கொலைவழக்கில் ‘வேம்படி மோகன்’ என்ற பெயரில் பஸ்தியாம் பிள்ளையால் தீவிரவேட்டைக் குள்ளாகியவர் இராமதாஸ் மோகனதாஸ் ஆவார். 1916இல் அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய Goldwin pictures நிறுவனமே பின்னாட்களில் Metro Goldwyn mayer எனும் பிரமாண்டமான Media Company உருவா யிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் Trad mark ஆக காணப்படுவது திரைப்படசுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1976இல் மோகண்ணா உருவாக்கிய தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூர்வமான அடையாளச்சின்னமே மதுரை ஓவியர் நடராசாவிற்கு பின்னாட்களில் பொன்னாடை போர்த்தியது எத்தனை பேருக்கு தெரியும். பிறந்த இடத்தால் திறமைபெற்ற மோகண்ணா வாழ்ந்த இடத் தால் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டவர். ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என செயற்பட்ட எங்கள் தலைவரின் கொள்கை இன்று மோகண்ணாவின் முன்னால் கேள்விக்குறியாகி நிற்கின்றது. குழந்தையை பெற்றவன் தந்தையா? குழந்தைக்கு சட்டைதைத்தவன் தந்தையா? சாட்சிகளாய் பலரிருந்தும் தலைவரின் மனதில் தானிருக்கின்றேன் அதுபோதும் எனக்கு என தன்னடக்கத்துடன் வாக்குமூலம் தந்தவர் மோகண்ணா!… தமிழீழ விடுதலைப்புலிகளிற்காக இவர் உருவாக்கிய அடையாள சின்னம்போல புலம்பெயர் வல்வெட்டித்துறை சங்கங்களிற்காக அச்சுஅசலான அன்னபூரணியின் படத்தினை மையப்படுத்தி இவர் உருவாக்கிய சின்னமும் அதிஅற்புதமானது. இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்ற இவர் பாடசாலைக்காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியில் பாலாமாஸ்டரிடம் ஓவியக் கலையை கற்றிருந்தார். பின்பு இருபதாம் நூற்றாண்டின் சிறந்தஓவியர் என தமிழகத்தின் முன்னால் முதலமைச்சரான சி.என்.அண்ணாத்துரையால் கொளரவிக்கப்பட்ட K.மாதவனால் பட்டை தீட்டப்பட்டவர். ஓவியம் சோறுபோடுமா என்றவர்கள் மத்தியில் ஓவி யத்தை முழுநேரத்தொழிலாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். வல்வெட்டித் துறை சுங்கவீதியில் தனது ஓவியக்கடையை ஆரம்பித்து பருத்தித்துறை சென்றல் தியேட்டருக்கு மருகாமையில் ‘மோகன்ஆட்ஸ்’ எனும்பெயரில் இவரது வியாபார ஸ்தானம் பரந்து விரிந்தது. வடமராட்சியின் ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் இவரது ஓவியங்கள் அன்று துலங்கின. வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியான பெரியவர் வெங்கடாசலத்தையும் வைத்திலிங்கபுலவரையும் தத்ரூபமாக வரைந்து எங்கள் மத்தியில் நடமாட வைத்தவர் மோகண்ணாதான். வல்வெட்டித்துறையில் யுத்த காலத்திற்கு முன்பு வருடாவருடம் களைகட்டும் அருள்மிகு முத்துமாரியம்மனின் இந்திரவிழாவில் இவரது கைவண்ணத்தில் உருவாகும் போட்டிக்கோவில் இவரது திறமை அதிஅற்புதமாக ஜொலிக்கும். வல் வெட்டித்துறையின் கையெழுத்து சஞ்சிகைகளான அலைஒளி மற்றும் அருவி என்பன மோகண்ணாவின் வண்ணச் சித்திரங்களிற்காகவே பலரின் கைபட்டு விரிந்தன. 1976 இல் பருத்தித்துறை நவீன சந்தை திறக்கப்பட்டபோது அதன் தொண்ணூறுவீதமான விளம்பரபலகைகளை உருவாக்கியமைக்காக அன்றைய முதல்வர் நமசிவாயம் நடராசாவினால் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டப்பெற்றவர். கலைக்காகவே பிறந்து கலைக்காகவே வாழ்ந்த இவர் திரு.வையாபுரிஅப்பா அவர்களிடம் தற்பாதுகாப்பு மற்றும் உடற் பயிற்சிகளும் கற்றிருந்தார். இதுபோலவே சிலம்பக்கலையை மதிப்புக் குரிய சோதிசிவத்திடமும் கராட்டிக்கலையை ஆசான் இரத்தினசோதியிடமும் கற்று தேறியிருந்தார். கலைக் காவிய நாயகர்களான வல்வை ஹெலியன்ஸ் நண்பர்கள் நாடககுழுவினரின் நடிகரும் ஒப்பனை கலைஞருமாக மிளிர்ந்தவர். ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையின் முதலாவது ஆஸ்தான ஓவியராகி இவர் வரைந்த ஓவியங்கள் எண்ணற்றவை கேணல்கிட்டு, லெப்டினன் கேணல் குமரப்பா லெப்டினன் கேணல் புலெந்திரன், லெப்டினன் கேணல் விக்டர், கப்டன் பண்டிதர், கப்டன் லாலா என பலபோராளிகள் மற்றும் தளபதிகள் மறைந்தபின்னும் அதிரடிப்படை சீருடையில் சிரிக்கும் அத்தனை படங்களும் இவரின் கைவண்ணங்களே. பிரபாகரனின் நீண்டநாள் கனவானது பின்னாட்களில் விடுதலைப் புலிகளின் முதலாவது கப்பலான ‘சோழன்’ ஆக மாறிய போது தலைவரின் விருப்பத்திற்கு அமைய அதனில் பணிசெய்து தனது கண்களின் ஒன்றினையும் இழந்தார். நிரம்பிய வரலாற்று அறிவும் தொடர்ச்சியான தேடலும் இடைவிடாதவாசிப்பும் ஒரு வரலாற்று அறிஞனாக இவரை மாற்றியிருந்தது. திருமாவளவனான கரிகாலன் ராஜ ராஜசோழன் ராஜேந்திரசோழன் எனப்பலரின் தரவுகளையும் தலைவர் பிரபாகர னுடன் ஒப்பிடும் அதீதஆற்றல் இவருக்கிருந்தது. ஈழத்தமிழனின் கடலோடும் பெருமையையும் வல்வெட்டித்துறை கடலோடிகளின் திறமையையும் பறைசாற்றும் ‘அமெரிக் காவில் அன்னபூரணி’ நூலின் நூற்றி எழுபத்தைந்து படங்களையும் வரைந்து அந்தவரலாற்றிற்கு மீளவும் உயிரூட்டியவர். அதுபோலவே தலைவர் பிரபா கரனின் முழுவாழ்கையையும் அந்நிகழ்வுகளையும் தன்கைவண்ணத்தால் வரைய எண்ணமிட்டு செயற்பட்ட மோகண்ணாவின் இழப்பானது என்றும் எவராலும் நிரப்ப முடியாதது. சிலகாலங்களே அவருடன் இணைந்து செயற்பட்டபோதும் அவரது இழப்பின்துயர் அளவிடமுடியாதது. அன்னாரின் குடும்பத்துடன் துயரினை பகிர்ந்து அவருக்காக தலைவணங்கும். - வர்ணகுலத்தான் 10-11-2015 Quelle - eelamaravar.wordpress.com மோகன் ஆட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை வல்வையில் வந்தது 06-07-1949 வானகம் சென்றது 09-11-2015 வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட ராமதாஸ் மோகனதாஸ் (மோகன் ஆர்ட்ஸ்) அவர்கள் 09.11.2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
|
|||
Last Updated on Tuesday, 08 May 2018 06:57 |