|
பெண்கள்
|
|
Written by நிஷா
|
|
Sunday, 08 November 2009 22:42 |
|
சில அதிர்ச்சித் தரவுகள் பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன. |
|
Last Updated on Monday, 08 February 2010 07:27 |
|
Read more...
|
|
பெண்கள்
|
|
Written by சந்திரவதனா
|
|
Thursday, 23 July 2009 22:44 |
புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.
எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றி நடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ஆண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. |
|
Last Updated on Tuesday, 26 January 2010 23:32 |
|
Read more...
|
|
பெண்கள்
|
|
Written by சந்திரவதனா
|
|
Thursday, 23 July 2009 22:43 |
|
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.
பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.
பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது |
|
Last Updated on Friday, 29 January 2010 08:01 |
|
Read more...
|
|
|
பெண்கள்
|
|
Written by சந்திரவதனா
|
|
Thursday, 23 July 2009 22:41 |
|
இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.
இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.
ஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும், ஏன்...! இன்னும் |
|
Last Updated on Friday, 29 January 2010 08:00 |
|
Read more...
|
|
பெண்கள்
|
|
Written by சந்திரவதனா
|
|
Thursday, 23 July 2009 22:39 |
பெற்றோரே சிந்தியுங்கள்! இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் |
|
Last Updated on Friday, 29 January 2010 07:56 |
|
Read more...
|
|
பெண்கள்
|
|
Written by சந்திரவதனா
|
|
Thursday, 23 July 2009 22:37 |
|
மார்ச் - 8
இன்று சர்வதேசப் பெண்கள்தினம். ஆணாதிக்க அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் அர்த்தம் நிறைந்த நாள். ஒடுக்கப் பட்டும், மனம் நெரிக்கப் பட்டும் இருந்த பெண்கள் தம் வலிமையை உணர்ந்து விலங்கை ஒடிக்கத் துணிந்து ஓங்கிக் குரல் கொடுத்த நாள்.
1857 ம் ஆண்டில், போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் நிலக்கரிச் சுரங்கங்களிலும், புடவை ஆலைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பெண்கள் வேலை செய்ய வேண்டியதொரு கட்டாயம் ஏற்பட்டது.
அது வரை காலமும், மென்மையானவர்கள், வீட்டு வேலைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள்.... என்ற பல்விதமான அட்டவணைகளுக்குள் அடக்கப்பட்டு, தாம் வலிமையற்றவர்கள்தான் என்ற ஒரு மாயையில் மதிமயங்கிக் கிடந்த பெண்கள், அப்போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்துக் கொண்டார்கள். |
|
Last Updated on Friday, 29 January 2010 08:05 |
|
Read more...
|
|