home loans
Literatur


கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா..? PDF Print E-mail
சிறுகதைகள்
Written by Chandra   
Tuesday, 17 August 2010 02:28

சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது.
அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான்.
ஆனாலும்.......எங்கை.......? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது.
எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது?

காலைமை எழும்பினதிலையிருந்து ஆற அமர நேரமில்லை. வேலை.

ம்......கூம் வேலை எண்டு மட்டும் இந்த மனுசன்ரை காது படச் சொல்லக் கூடாது.
உடனை "என்னப்பா உனக்கு இஞ்சை வேலை......?"
"ஊரிலை மாதிரி என்ன இங்கையும் கல்லிலை அடிச்சு உடுப்புத் தோய்க்கிறியளோ....? அல்லது
ஆட்டுக் கல்லிலையும் அம்மியிலையும் அரைக்கிறியளோ.....? அல்லது அடுப்பைத் தன்னும் பச்சை விறகை வைச்சிட்டு ஊதி ஊதி எரிக்கிறியளோ.......?" எண்டு பன்மையிலை கேட்கத் தொடங்கீடும்.

Last Updated on Tuesday, 17 August 2010 02:35
Read more...
 
இரயில் பயணங்களில்... PDF Print E-mail
நினைவுகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 04 August 2010 04:58
அப்போது எனக்கு 21வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமையான இயல்புகள் என்னையும் விட்டு வைக்கவில்லை. சத்தியிலும், குமட்டலிலும் அதானாலான அசௌகரியங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச் சேலை உடுத்தியிருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற்சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.
Last Updated on Wednesday, 04 August 2010 05:00
Read more...
 
தோழமைக்கு... PDF Print E-mail
கவிதைகள்
Written by மு.கந்தசாமி நாகராஜன்   
Friday, 30 July 2010 03:56
எதிர்பாராத வேளையில்
எனக்குக் கிடைத்த
உன் நட்பால்
இன்றும் உணர்கின்றேன்
அன்பின் வலிமையை!

சந்தித்து
ஆண்டுகள்
ஆன போதிலும்
இன்றும் கேட்கின்றேன்
உன்
இதயத்தின் ஒலிகளை...

உன்
மொழிகளைக் கேளாத
செவிகளும் வியக்கின்றன
என் இதயத்துள் ஒலிக்கும்
உன்
மொழிகளைக் கண்டு.

இன்னமும்
கர்ணனையே
உயர் நண்பனென்று
போற்றும்
அறிவிலிகளைக் கண்டு
மெளனமாய்
சிவந்து போகின்றன
என்
விழிகளும் இன்று.

பாலையில்
நான் காய்ந்த போது
சோலையைக் காட்டிய
நீ
சோலையில் நான்
சுகிக்கும்போது
தொலைவில்தான்
நிற்கின்றாய்

அன்பென்பதை
அறிந்திடாத
எனக்குக் கூட
அதன் ஆற்றலையும்
புரிய வைத்த
உன்னால்தான்
இன்னமும்
என்
பேனாமுனைகள்
ஈரத்தைக் கசிகின்றன.

திசை தெரியா
அலைகடலுள்
என்னை
மீட்டெடுத்த
தோணி
நீ!

மொழி தெரியா
முட்டாள் என்னை
மொழிஞனாக்கிய
சிற்பி
நீ!

கலையறியா
காட்டான்
என்னை
கலைஞனாக்கிய
கலைமகள்
நீ!

முத்து
பிறப்பது
அதிசயமில்லை
கண்டெடுப்பதுதான்.
என்னைக்
கண்டெடுத்தது
நீயேதான்!

உன்னால்
பிறந்த
என் மொழிகள்
இன்று
உனக்காகவே
அர்ப்பணம் ஆகின்றன!

என்றென்றும்
நாம்
தொடர்ந்திடத்தான்
இன்றும்
வேண்டுகின்றேன்
இறையை நான்

- மு.கந்தசாமி நாகராஜன் -
 
கைத்தொலைபேசி PDF Print E-mail
கவிதைகள்
Written by திரு.ம.இலெ.தங்கப்பா   
Monday, 31 May 2010 19:56
வந்தாலும் வந்ததிந்த நாகரிகந்தான்
வாத்து மந்தை பெருத்ததடா எங்கள் நாட்டிலே
எந்தஇடம் போனாலும் கீ கீ, குவா குவா!
என்னஎன்று திரும்பிப் பார்த்தால் கைத்தொலைபேசி! (01)
வழியோரம் பேசுகிறார் கைத்தொலைபேசி!
வண்டியிலே முணுமுணுப்பார் கைத்தொலைபேசி!
குளியலைறையில் சளப்புகிறார் கைத்தொலைபேசி!
கூடத்திலே படுத்துக்கொண்டும் கைத்தொலைபேசி! (02)
தெருக்குப்பை அள்ளுபவர் வேலை நடுவில்
சிரித்துப் பேசிக் குழைவது பார் கைத் தொலைபேசி!
சறுக்குமரம் சறுக்கிக் கொண்டே பள்ளிச்சிறுமி
தந்தையிடம் பொம்மை கேட்பாள் கைத்தொலைபேசி! (03)
பழம்விற்கும் பாட்டி கையில் கைத்தொலைபேசி!
பாம்பாட்டி கூடைக்குள்ளும் கைத்தொலைபேசி!
குழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டோர் சின்னக்குறத்தி
கூச்சமுடன் பேசுகிறார் கைத்தொலைபேசி! (04)
பாதிமுகம் மழிக்கையிலே முடிதிருத்துநர்
பதைத்து வெளியே ஓடுகிறார் கைத்தொலைபேசி!
காதலியை முதலிரவில் தழுவப் போகையிலே
காதிலே கோள்சொல்லுதடா கைத்தொலைபேசி! (05)
மாலை கட்டிச் சாமிக்குப் பூசை செய்கையில்
மடிக்குள்ளிருந்து அழைக்குதடா கைத்தொலைபேசி!
தாலி கட்டும் வேளையிலே குறுக்கில் புகுந்து
தடுக்குதடா திருமணத்தைக் கைத்தொலைபேசி! (06)
தொலைக்காட்சிக் கதையிலெல்லாம் கைத்தொலைபேசி!
சுற்றிச்சுற்றி வருகுதடா கைத்தொலைபேசி!
தலைக்கு வந்த தண்டனையைக் கடைசி நொடியில்
தப்பிக்கச் செய்யுதடா கைத்தொலைபேசி! (07)
பிச்சைக்காரருக்கு ஒருஉருவா கொடுத்து நடந்தேன்;
பின்னிருந்து கூப்பிட்டது காதில் விழவே
அச்சமுடன் திரும்பிப் பார்த்தேன்; கூப்பிடவில்லை!
ஆருடனோ பேசுகிறார் கைத்தொலைபேசி! (08)
பேருந்தில் ஏறிக்கொஞ்சம் கண்ணை மூடினேன்
பின்னிருந்து குடைந்ததடா கைத்தொலைபேசி!
வேறிருக்கை மாற்றிக் கொண்டேன், நண்பர் சிரித்தார்
விழித்துப் பார்த்தால் அங்கேயும் கைத்தொலைபேசி! (09)
நாய்எதையோ கவ்விக்கொண்டு பாய்ந்திடக் கண்டேன்
நான் விரட்டி அதைப் பிடித்தேன் கைத்தொலைபேசி!
வாயிருந்தும், காதிருந்தும் கைத்தொலைபேசி!
வைத்திலாதார் எத்தனைப்பேர் நாட்டில் இருப்பார்? (10)
ஆய்வாளர் ஒருவர்தமை அணுகிக்கேட்கிறேன்,
அவர்சிரித்தே ஏளனமாய் என்னைப் பார்க்கிறார்
'ஓய், என்ன விளையாட்டா, கைத்தொலைபேசி!'
உமைத்தவிர எவர்க்கும் அதுஉயிர்த் தொலைபேசி! (11)
அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து
ஆண்டவனின் திருப்பிறவி, கைத்தொலைபேசி!
எங்கெங்கும் படையலிட்டுப் பூசை செய்யுங்கள்;
எண்ணியதை நிறைவேற்றும் கைத்தொலைபேசி! (12)


கவிஞர் தங்கப்பா அவர்கள் கைத்தொலைபேசி பற்றி மிக அழகாக நுணுக்கமான பார்வையுடன் இக்கவிதையைப் படைத்துள்ளார். மிகஎளிய மக்களும் அதனைப் பயன்படுத்துவதனை மிகஅழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார். குப்பை அள்ளுபவர், பழம் விற்கும் பாட்டி, பாம்பாட்டி, முடிதிருத்துநர், பூசாரி, பிச்சைக்காரர் முதலிய எல்லோரும் இதனைப் பயன்படுத்துகின்றனர் எனப் பாடி இருப்பது, சாமான்யரும் இந்த அறிவியல் விந்தைக்கருவியை அனுபவித்து மகிழுகின்றனர் எனச் சமத்துவப் பார்வையைக் கூறுகின்றது. ஆனாலும், இந்த நாகரிகம் பயனற்ற முறையில், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தேவை இல்லாது பயன்படுத்தப்படுவதையும் குறிப்பாகச்சுட்டுவது சிறப்பு! பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை! பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா? அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா? கவிஞரைத்தான் கேட்கவேண்டும்! பொதுவில் நம் அனைவரிடமும் உள்ள ஓர் அற்புதச்சிறுகருவியைப்பற்றிச் சுவைபட இவ்வளவு அழகான, சுவையானகவிதையைத் தந்த தங்கப்பா மனதில் தங்கும் தங்கக் கவிதை தந்துள்ளார்! நான் சுவைத்த அக்கவிதையை அனைவரும் சுவைக்க வேண்டாமா?

சான்று:

சிந்தனையாளன் - பொங்கல் சிறப்புமலர் 2007, திருவள்ளுவராண்டு 2038, பக்கம்:159-160

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF
Last Updated on Tuesday, 17 August 2010 02:25
 
வழிகாட்டிகள்..! PDF Print E-mail
சிறுகதைகள்
Written by நிர்மலன்   
Monday, 15 February 2010 15:24

இந்திரனுக்குக் கண் நோகுமாப் போலிருந்தது. தலை வலித்தது. கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்த ஆறாம்தர ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் தாள்கள் மேசை முழுதும் பரவியிருந்தன. அவன் அவற்றிலிருந்த பிழைகளை சிவப்புப் பேனாவால் திருத்திக் கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதுதான் அவனுக்கு வேலை. ஐந்தாவது  தரமாய்ப் புறூவ் பார்த்தாயிற்று. மேலும் பல எழுத்துப் பிழைகள் கண்ணில் தட்டுப்பட்டன. வாணியிடம் கொடுத்திருந்தால் இப்படிப் பிழைகள் வந்திராது. முதலாவது தடவை புறூவ் பார்த்தவுடனேயே அச்சுக்கூடத்திற்கு அனுப்பியிருக்கலாம். வாணி சரியாக அடிப்பதனாற் போலும் எல்லோரும் அவளிடமே வேலைகளைக் கொடுக்கிறார்கள். தர்மினியின் தட்டெழுத்து படுமோசமாய் இருக்கிறது. முதற்தரம் பிழை என்று குறித்துக் கொடுத்தவை அடுத்த முறை பிரிண்ட் எடுத்து வரும் போது சரியாகத் திருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் தரம் பிழையாக உள்ளவை குறித்துக் கொடுக்கும் போது வரும் 'பிரிண்ட் அவுட்டில் முதற்தரம் குறித்துக் கொடுத்த பிழைகள் மீண்டும் தோன்றுகின்றன. சிங்களத்திலிருந்து  தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக்குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமிழில் செய்ய வேண்டியிருக்கிறது.

Last Updated on Tuesday, 16 February 2010 05:38
Read more...
 
சிவா PDF Print E-mail
சிறுகதைகள்
Written by நிர்மலன்   
Monday, 08 February 2010 08:04
ஐந்தாறு வருடங்களுக்குப் பின் சிவாவைக் கண்டதில், என் மனதில் மகிழ்ச்சியும் வியப்பும் பீதியும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தன. சிவாவின் முகம் இறுகியிருப்பது  போலிருந்தது. நான் அருகில்சென்று அமர்ந்ததையும் கவனியாதவனாய், மணவறையை நிமிர்ந்து பார்த்தபடியிருந்தான். குட்டையாக முடியை வெட்டியிருந்த அவன் நன்கு மெலிந்து கறுத்திருந்தான். முகத்தில் படர்ந்திருந்த நான்கைந்து நாள் தாடியையும் மீறி, அதிலிருந்த காயத்தின் வடு தெரிந்தது.

'என்னடா சிவா'

' ஓ!.. முரளி ஏதோ இருக்கிறன்டா...'

அவன் கதைக்கையில் மேற்தாடையின் முன்பல்லொன்று உடைந்திருப்பது தெரிந்தது. ஆறேழு ஆண்டுகள் இருக்குமோ? இவனைப் பிடித்து உள்ளே அடைத்து.. எப்படி இவன் வெளியில் வந்திருப்பான்? இவனுடன் கதைப்பதும் பயந்தான். யாராவது எங்கேயும் போட்டுக் கொடுத்தால்...
'என்ன முரளி யோசனை? பயப்படுறியா?' துயர்கலந்த சிரிப்புடன் தொடர்ந்து சொன்னான் 'என்னிலை குற்றம் நிரூபிக்கப்படாமல், போன கிழமை தான் கோட்ஸாலை வெளியிலை விட்டவங்கள்.'
Last Updated on Monday, 08 February 2010 09:12
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 22