home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 43 guests online
Literatur
நூல் ஏணி PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஆர். நீலா   
Friday, 28 August 2009 05:55
பொன்னுத்தாய்க்கு இரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

"பாவிப்பய.... என்னமா நம்புற மாதிரி பேசுறான்...?'

இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்!

அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்.... ""ஆமாப்பா.... அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி.... அங்க என்ன பாடமா நடத்துறான்...? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...''

பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. "நேத்து பெஞ்ச மழயிலே மொளச்ச காளான்.... எப்படியெல்லாம் எடுத்துக்கட்டி பேசுறான்...? நான் மாலையும் கழுத்துமா இந்த வீட்டு வாசப்படி மிதிச்ச மக்கா நாளே "அத்தாச்சி.... ஆய கழுவி விடு...' ன்னு வந்து நின்ன வாண்டு.... இன்னிக்கி வளந்துட்டானாம்.... என்ன வேணாலும் பேசுவானாம்... அவுக ஆயி அப்பன் அதக்கேட்டு பூரிச்சுப் போவாகளாம்.... நான் கேனமாரி கேட்டுக்கிட்டு நிக்கணுமாம்... இருக்கறவுக இங்க இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?''

அவள் எண்ண ஓட்டம் புரிந்ததுபோல் மாமனாரின் குரல் வந்தது. "அவன் என்ன சொல்லீட்டான்னு இப்ப நீலீக்கண்ணீர் வடிக்கிறே? அவன் சொன்னாலும் சொல்லாட்டியும் நாஞ்சொல்றேன்.... இனிமேட்டுக்கு நீ அங்க போகக்கூடாது.... மீறிப் போகணுமின்னா நடையக் கட்டிக்க.... நாங்களும் சொல்ற எடத்திலே சொல்லிக்கிறோம்....''
Last Updated on Thursday, 03 September 2009 08:55
Read more...
 
விடுபடல் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சு. தர்ம மகாராஜன்   
Monday, 24 August 2009 21:58
தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல், அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது.

தனது இருபத்தியாறாவது வயதில், முதல் காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது, தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில், அவன் தன்னை பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது, அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல், வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை, அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து, துக்கமானாலும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.
Last Updated on Thursday, 03 September 2009 08:56
Read more...
 
குட்டு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by முல்லை   
Friday, 21 August 2009 09:04
இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

அந்த சம்பவம் எனக்கு பதினைந்து வயது இருக்கும்போது நடந்தது. நாற்பது வருடங்களின் பின்னரும் இன்னமும் அந்தச் சம்பவம் பசுமையாக இருக்கிறது.

அன்று நானும் எனது அண்ணனும் ஒரு உறவினரது வீட்டிற்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். நேரம் இரவு பத்துமணியைத் தாண்டியிருக்கும். எனது அண்ணனுக்கு என்னை விட ஐந்து வயதுகள்தான் அதிகம். தோற்றத்தில் நல்ல உயரமாகவும், பருமனாகவும் இருப்பார். அன்று அவரது காலில் ஏதோ காயம் ஏற்பட்டதால் அவரால் சைக்கிள் ஓட முடியவில்லை. உறவினர் வீட்டில் இருந்து திரும்பும் போது நான்தான் சைக்கிளை ஓட்டி  வந்தேன். எனது கால்களுக்கு சைக்கிள் பெடல்கள் எட்டாததால் நான் இருபக்கமும் வளைந்து வளைந்து பெடல்களை மிதிக்க வேண்டியிருந்தது. அது எனக்கு சிரமமாக இருந்தாலும் எனது அண்ணனை முன்னால் வைத்து சைக்கிள் ஓடும் போது எனக்கு ஏகப்பட்ட குசியாக இருந்தது.

உறவினர் வீடும் எங்களது வீடும் ஒன்றரை கிலோமீற்றர் தூரமேயிருக்கும். பிரதான பாதையூடாகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம். வாகனங்கள் ஏதும் வந்தால் எனது அண்ணன் முன்னெச்சரிக்கை தந்து "பாதையின் ஓரமாகச் சைக்கிளை ஓட்டு" என்பார்.

Last Updated on Thursday, 19 December 2013 08:24
Read more...
 
புதிய மனுசி PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஆதிலட்சுமி சிவகுமார்   
Monday, 17 August 2009 22:07
நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. 'இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் கூடாது.." குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக் கொண்டிருந்தார்கள்... மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று... அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால் இவளைப்போல கம்பி கம்பியாய் நீளமான தலைமுடி.

"மூத்தபிள்ளை சரியாய்த் தேப்பனையே மாதிரி... நல்ல நேரம் பொம்பிளைப் பிள்ளையாய்ப் போச்சு... இல்லாட்டி.. தேப்பனை முடிச்சுப்போடும்..."
ஐஸ்வர்யா பிறந்திருந்தபோது உறவினர்கள் சொன்னார்கள். ஆனால் என்ன விதியோ.. அவன் இல்லாமற்தான் போய்விட்டான். மனது கனத்தது.

மற்றைய நாட்களில் என்றால் கூலிவேலைக்குப் போய்விட்டு வரும் அவள் பாயிற் சரிந்தவுடனேயே தூங்கிப் போவாள். இன்றைக்கு அவளால் முடியாமலிருந்தது. ஆறு வருடங்களாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு வேகமாய் முன்னேறிய துன்பங்கள் எல்லாமாக ஒன்று திரண்டு தன்னைத் துன்புறுத்துவதாக அவள் உணர்ந்தாள். அழக்கூடாது என்கிற வைராக்கியத்தோடு இறுகிப் போயிருந்த அவளின் விழிகள் ஈரலித்தன.
Last Updated on Monday, 17 August 2009 22:29
Read more...
 
மணமாலை என்றோர் செய்தி வந்தால்... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by குகக் குமரேசன்   
Sunday, 16 August 2009 21:38

நாலு குமர் கரைசேர்க்க
நாற்பது தாண்டியது...
நாற்றும் நட முடியாது
நடுத் தலையும் வெளித்தது...

இனி என் முறைதானென்று
இள நகை புரிந்திருக்க!
ஐந்தாவது குமருக்கு
அழகாய் அடுக்குப் பண்ணிவிட்டு,
அவசரமாய் போனெடுத்தாள் அம்மா!
அவள் என்ன செய்வாள்
கரை சேர்க்கத்தானே கடல் கடந்தோமென்று
கரையிலிருந்து குரல் கொடுத்தாள்!

மூத்தக்கா போனெடுத்து
முதலில் மூத்தவனையாகிலும் எடுத்துவிடு என்றாள்!

வேலையை விட்டுவிட்டார்! - இனி
வெளிநாடு போகத் திட்டமென்று
விரைவாகத் தொடர்பு கொண்டாள் இளையக்கா!

Last Updated on Friday, 29 January 2010 13:28
Read more...
 
பால்யம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Saturday, 15 August 2009 21:18
காற்றடித்தால் தலையை மட்டும் சிலுப்பி ஆரவாரம் பண்ணிவிட்டு அசையாமல் நிற்கும் போர்க்களத்து வீரனென.... கோவிலின் தெற்கு வீதியையும் மேற்கு வீதியையும் இணைக்கும் அந்த மூலைப்பொட்டை உறுதிப்படுத்தும் சந்தியில் ஒரு பெரிய அரசமரம்! அருகே நீளமாய் ஆட்கள் அமர செதுக்கப்பட்தொரு பளிங்குக் கல்!

அண்ணாந்து பார்த்தால்.... விண்ணையும் மண்ணையும் தனக்குள் அடக்கிவிடுகிற பிரமை தோன்றும்.

வெள்ளைப் புறாக்களும், கரிக் குருவிகளும், காகங்களும் இந்த விதானத்தினுள் புகுந்து காணாமல் போய்விடுவதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். மலைப்பாம்புகளென நீண்டு, வளைந்து, சுருண்டு, புரண்டு பரவிக்கிடக்கும் அரசின் திரண்ட வேர்களில் கால்களைப் பதித்து தாவித்தாவி நடக்கத் தொடங்கினால் கிழக்கு நோக்கி நீள்வரிசையாக.... ஆல், சீனிப்புளி, சஞ்சீவி, வேம்பு, செவ்வரளி, திருவாத்தி, பொன்னலரி... என்று எண்ணிக் கொண்டே போகலாம்.
Last Updated on Monday, 03 November 2014 23:22
Read more...
 
தேங்காய்ச் சொட்டு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ந.மயூரரூபன்   
Friday, 14 August 2009 04:44
அம்மா ஒவ்வொரு நாளும் எரிச்சலோடும், சலிப்போடும் சொல்லிக்கொண்டிருப்பா.

'அரிசிப்பையை ஓட்டை போட்டுட்டுது'
'அப்பளத்தைக் காணேல்லை'
'தேங்காய்ப் பாதியை சுரண்டிப் போட்டுது'
இப்பிடி அடிக்கடி அம்மா முணு முணுத்துக்கொண்டிருப்பா.

இதுக்கு என்ன செய்யிறது? ஒரு நாளெண்டாலும் பரவாயில்லை. எந்த நாளும் இப்பிடித்தான் சரியான தொந்தரவு. என்ன செய்யலாமெண்டு யோசிச்சன். எலிப்பொறி கண்ணில் பட்டுது எனக்கு பாவமாத்தான் இருந்தது. ஆனா, என்னத்தைச் செய்யிறது?

அணில் தேங்காய்ச்சொட்டின்ரை மணத்துக்குக் கட்டாயம் வருமெண்டு எனக்குத் தெரியும். இந்த அணில் தேங்காய்ச் சொட்டைத் தேடி வாறதை நினைச்சுப் பாக்கேக்குள்ள நாங்கள் எந்தச் சொட்டைப் பாத்து யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தனாங்கள் எண்டு எனக்கு மட்டுமில்லை, வந்த எல்லோருக்கும் பிறகுகூட விளங்கேல்லைத்தான். சரி. வந்ததுதான் வந்தம். ஆனா இங்க அந்த அணில் மாதிரி என்ன தொந்தரவு செய்தனாங்கள்? நாங்களும் எங்கட பாடுமெண்டு அவங்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தம். ஒருதற்றை சோலிக்குக் கூடப் போகேல்லை.

Last Updated on Sunday, 16 August 2009 21:31
Read more...
 
காலங் காலமாய் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by ஞான பாரதி   
Tuesday, 11 August 2009 04:36
பொழுது பொறந்து எவ்வளவு
நேரமாச்சு
பொட்டச்சிக்கு என்னடி
தூக்கம்?

ஆம்பளப் புள்ளைக
திங்கிற முன்னாடி
எங்கடி உக்காந்துட்டவ...

வெளிய போறவகளுக்கு
குளிக்க இடம்விடாம
என்னடி பண்ணுறவ
பாத்ரூமுல..

வேலைய பார்க்காம
என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு
போன்ல...

வாசத்தெளிச்சு
காபி வச்சுக் கொடுக்காம
இன்னும் எம்புட்டு நேரந்தே
பாத்திரம் கழுவுவ?

சம்பாரிச்சுட்டு வாரவகளுக்கு
ஹோட்டல்கள்ல திங்கவிடாம
சூடா ஏதாச்சும்
செஞ்சு கொடுடி..

கூட்டி பாயவிரிச்சுவிட
இம்புட்டு நேரமா?

தினமும் இதையே
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
என்னைப் பார்த்து...

அவளை அவளது அம்மா
சொன்னது போலவே!

- ஞான பாரதி
 
சுவாசித்தலுக்கான நியாயங்கள் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சகாரா   
Tuesday, 11 August 2009 04:30

அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில் கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா ?

ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த
பறவை / விலங்கு இறந்த வேளையில்
நெருங்கிய உறவை இழந்ததுபோல
துக்கப்பட்டதுண்டா?

அறிமுகமில்லாத ஒருவர்
முகவரிக் குழப்பத்தில் திண்டாடியபோது
தெரிந்தவரைக்கும் சரியாக
வழிகாட்டியதுண்டா?

நலிந்தவர் மூத்தவர்
நிற்கத் தடுமாற
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை
விட்டுக் கொடுத்ததுண்டா?

விபத்தில் சிக்கி
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக
நெஞ்சு கிடந்து
அடித்துக்கொண்டதுண்டா?

பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா?

அப்படியானால்
வாழ்த்துக்கள்

இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்.

- சகாரா

நதிக்கரையில் தொலைந்த மணல் கவிதைத் தொகுப்பிலிருந்து

 
காதல் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by நவீன்   
Tuesday, 11 August 2009 04:28
சிறகடிக்கும் ஒரு ஓரப் பார்வை
மெல்லிய தீண்டல்கள்
ஒளித்து மறைத்துப் படிக்கும் கடிதங்கள்
எதுவுமே பேசாமல்
முகம் பார்த்தபடி மணிக் கணக்கில்...

இப்படி எதுவுமே இன்றி
அதென்ன
மண்ணாங்கட்டிக் காதல்
இன்டர்நெட்டில்...!
 
பருவம் - என்றால் என்ன? PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by anonmy   
Tuesday, 11 August 2009 04:28
பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.
 
வானம் எம் வசம் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Friday, 07 August 2009 06:23
கவிதையின் வடிவம் பற்றியும், அதற்கான வரையறைகள் பற்றியும் இன்னும் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு என் வசம் வந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு புதிய சகாப்தமாய் அமைந்த அந்த நாட்கள் தந்த களிப்பில் பிறந்த கவிதைகள் இவை.

அது சிங்கள வான்படைகள் வான் உலா வந்து எம்மவரைக் கொல்லும் காலங்களில் ஒன்று.

அதை உதயலட்சுமி இப்படிச் சொல்கிறார்
விமானங்கள் வந்து தினம் வான் பரப்பிலோடும்
குண்டுகள் கொட்டிக் கொக்கரித்தாடும்
மேலெழும் புகையில் மேகங்கள் மறையும்
கந்தக மணத்திலே சந்தனங்கள் வாடும்
அந்திப் பொழுதிலும்
Last Updated on Tuesday, 11 March 2014 20:18
Read more...
 
மனஓசை - சந்திரவதனா PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Dr.எம். கே. முருகானந்தன்   
Friday, 07 August 2009 05:48
உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:34
Read more...
 
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by த.சிவசுப்பிரமணியம்   
Friday, 07 August 2009 05:44
`அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற இளங்கீரனது நாவல் வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்ச நிலையை அடையாளங் காட்டும் ஒரு காலத்திற்குரியது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்துண்ணும் தேவையுள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக் கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ காலனித்துவச் சூழலிலும் இன்னும் யதார்த்த பூர்வமான சித்தரிப்புக்களாகவே உள்ளன. இந்நாவல் பெண்கள் குறித்த முற்போக்கான ஒரு பார்வையை உடையது என்ற வகையில் வர்க்க உணர்வு குன்றாத நோக்குடன் வரையப் பட்டது. ஈழத்தின் நாவல், இலக்கிய வரலாற்றில் முதன்மை நிலையில் வைத்துக் கணிக்கப் படுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் இளங்கீரன் மதிக்கப் படுகின்றார். இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டு நூலுருப் பெற்றுள்ளது. கடந்த தசாப்தங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் மத்தியில் நிலவிய வர்க்க ஒற்றுமையையும், உறவையும் இந் நாவலூடாகத் தரிசிக்கும் போது, இன உறவின் விருத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பலத்திலும் நம்பிக்கையின் நூலிழைகள் ஊடாடுவதனை உணர முடிகிறது.

- த.சிவசுப்பிரமணியம்
Last Updated on Tuesday, 11 March 2014 19:53
Read more...
 
பூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சோழியான்   
Friday, 07 August 2009 05:42
வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரசு தொடர்ந்து வருமா வராதா' என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களது நேரங்கள் சுமைகளாகக் கழியும்போதும், பதினாறு வருடங்களாக புகலிடத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென்றொரு தரமான இடத்தைத் தக்கவைத்தவாறு, புதிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வந்ததோடு, ஏற்கெனவே அறிமுகமாகிய படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் களமமைத்து அவர்களையும் உற்சாகப் படுத்தி, சிறுவர்களையும் தமிழால் வளைத்திழுக்கும் பூவரசானது நூறாவது இதழை எட்டிப்பிடித்திருப்பதானது, இந்துமகேஷ் என்பவரது தனிமனித சாதனையே என்றால் மிகையாகாது.
Last Updated on Tuesday, 11 March 2014 20:13
Read more...
 
யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by ரதன்   
Friday, 07 August 2009 05:19
பாதிரிமார் யாழ்ப்பாணத்துக்கு வராவிடின் நாவலராற்றிய அரும் பெரும் பணிகள் நிகழ்ததற்கு தருணமெழுந்திராது” என நாவலர் ஆற்றிய சேவைகள் பற்றி க.கணபதிப்பிள்ளையவர்கள் கூறியதாக பேராசிரியர் கைலாசபதி தெரிவித்துள்ளார் (நாவலர் மாநாடு விழா மலர் 1969). கைலாசபதி மேலும் “நாவலர் இலங்கைத் தேசியத்தை (தமிழ் தேசியமல்ல) வலியுறுத்தினார்” என கருத்து தெரிவித்துள்ளார். (“புதுமை இலக்கியம் - தை 1974 “நாவலர் அடிச்சுவட்டில் தேசியம்”) இலக்கிய மேதைகளும், அறிஞர்களும் புகழ்ந்த நாவலரைப் பற்றி குறமகள் பின்வருமாறு கூறுகின்றார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” குறமகளின் இந்தக் கூற்று உண்மையானது. நாவலர் சாதியத்துக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் செயற்பட்டார். குறமகளின் மேற்கூறிய ஆய்வு நூலிலேயே, இவர் நாவலரைப்பற்றி துணிச்சலாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:29
Read more...
 
யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கலாநிதி பார்வதி கந்தசாமி   
Friday, 07 August 2009 05:15

பேசாப் பொருளைப் பேசத்துணிந்த குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் நூல் வெளியீடு
'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி'குறமகள் கதைகள் என்ற சிறுகதை நூலின் எழுத்தாளரான வள்ளிநாயகி இராமலிங்கம் யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஒர் ஆய்வு என்ற ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இளமைக் காலம் முதல் பெண்களின் சமத்துவத்தில் அக்கறை காட்டிவந்த வள்ளிநாயகிக்கு வீட்டில் எல்லாவித தேவைகளும் நிறைவேற்றப் படக் கூடிய பொருளாதாரச் சூழ்நிலை இருந்ததாலும் தொடர்கல்விக்கான தந்தையாரின் ஆதரவு கிடைத்ததாலும் மிடுக்காக எதையும் செய்யக் கூடியவராக அவர் காலப் பெண்களுள் ஒரு புதுமைப் பெண்ணாக வாழக் கூடியவராக இருந்தார். இந்த வாய்ப்பு யாழ்ப்பாணத்துப் பெண்கள் பலருக்குக் கிடைக்காதது. காலனித்துவ மரபால் வந்த கிறிஸ்தவக் கல்லூரியூடாக ஆங்கிலக் கல்வியையும் பெற்றுக் கொண்ட வள்ளிநாயகி கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப பணியாற்றியவர். இந்தியாவில் புவனேஸர் கல்லூரியில் வெளிவாரிப் பட்டதாரியாகி நாடக டிப்ளோமாவைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் செய்து கொண்டவர். தமிழார்வத்கைப் பாலபண்டித வகுப்புக்களுக்குச் சனி – ஞாயிறு கிழமைகளில் சென்று நிறைவேற்றிக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி வகுப்பில் கற்க முயன்ற குறமகள் ஆய்வுக் கட்டுரைக்கான தகவல் சேகரிப்பு முயற்சியின் மூலம் இந்த நூற் தொகுதியின் மூன்று கட்டுரைகளையும் எழுதிக் கொண்டார். வள்ளிநாயகியின் வீட்டுச்சூழல் காந்தியக் கருத்துக்களை இறுகப் பற்றிப் பிடிக்க வைத்தது. இவரின் சித்தப்பா ஒருவர் கல்வி கற்க வேண்டிய தேவையின் அவசியத்தை வெகுவாக உணர்த்தினார். அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட வள்ளிநாயகி உயர்கல்வி கற்பதற்கு உந்தப் பட்டார்.

Last Updated on Sunday, 09 August 2009 10:39
Read more...
 
பெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by அ. மங்கை   
Friday, 07 August 2009 05:10

ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்

ஈரக் கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணில் இருந்து கசிவுகளை உடலிலும் மனத்திலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் இது.

1986 இல் வெளியான "சொல்லாதசேதிகள்" என்னும் கவிதைத்தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு பயணதில் இருபது ஆண்டுகளுக்குப்பின் 92 ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இணையம் தவிர்த்து அச்சில் வெளியான ஆக்கங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தொகுப்பினை செய்தவர் அ.மங்கை அவர்கள், சென்னயில் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார், ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடன் உயர்வான தொடர்புகளைக் கொண்டிருப்பவர். மற்றைய பலரைப்போல் ஈழத் தமிழ் இலக்கிய வட்டத்துடனான தொடர்புகளை வியாபார நோக்கில் பயன்படுத்துபவர் அல்லர், உணர்வுபூர்வமாக ஒன்றித்து செயலாற்றுபவர்.

Last Updated on Tuesday, 11 March 2014 20:16
Read more...
 
தொலைநோக்கி - (நா.யோகேந்திரநாதன்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Chandra   
Friday, 07 August 2009 05:05
நா.யோகேந்திரநாதனின் "தொலைநோக்கி" நூல் வெளியீடு

புலிகளின்குரல் வெளியீட்டுப் பிரிவின் வெளியீடான நா.யோகேந்திரநாதனின் "தொலைநோக்கி" நூல் 8.10.2006 அன்று வெளியிடப் பட்டது. புலிகளின் குரல் நடுவப் பணியகத்தில் 8.10.2006 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு புலிகளின்குரல் பிரதம செய்தி ஆசிரியர் தி.தவபாலன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஏற்றினார்.
Last Updated on Tuesday, 11 March 2014 20:20
Read more...
 
நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by தயா பகவன்   
Friday, 07 August 2009 05:00

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தசாப்த கால போராட்ட வரலாற்றை சித்திரிக்கும் - நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - நூல் 1.10.03 அன்று  யாழ். பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மாலை 3.30ற்கு இடம்பெற்ற நிகழ்விற்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் தளபதி அமுதாப் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி பல்லவன் ஏற்றினார். ஈகைச் சுடரினை தாக்குதல் பிரிவுத் தளபதி பிரதாப் ஏற்றினார்.

வெளியீட்டுரையை நவம் அறிவுக் கூடத்தைச் சேர்ந்த போராளி கலைக்கோன் வழங்க சிறப்புரையை யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி நிகழ்த்தினார். நூலினை லெப். கேணல் பல்லவன் வெளியிட்டு வைக்க லெப். கேணல் ஜெஸ்மினின் தாயார் பெற்றுக் கொண்டார்.

Last Updated on Tuesday, 11 March 2014 20:06
Read more...
 
செட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Friday, 07 August 2009 04:55
செட்டை கழற்றிய நாங்கள் கவிதைத் தொகுப்பு
ஒரு பார்வை


95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.

செட்டை கழற்றிய நாங்கள், கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல, ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.

சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.
Last Updated on Tuesday, 21 October 2014 22:11
Read more...
 
உயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு ) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Friday, 07 August 2009 04:53
புலம் பெயர்வது எத்துணை அவலமானது என்பதை சரித்திரங்களில் படித்த போதோ அல்லது எமது முந்தையோர் கதையாகச் சொன்ன போதோ நாம் சரியாகப் புரிந்தோமா...!

இல்லை. ரசித்தோம், சிரித்தோம், அப்படியா...! என்று வியந்தோம். எம்மிடமும் அது வந்த போதுதான் அதன் வலி உணர்ந்தோம். புரண்டோம். அழுது புலம்பினோம். அதனால்தானோ என்னவோ புலம் பெயர் படைப்புக்களை புலம்பல் என்று சிலர் நகைக்கிறார்கள். அவர்கள் இன்னும் அதன் வலியுணராதோர். தலையிடியும் காய்ச்சலும் தமக்கு வந்தால்தான் தெரியும். எமக்கு வந்து விட்டது. அவர்க்கு வர வேண்டாம். அவர்கள் எம்வலி உணராவிட்டாலும் எமக்குக் கவலையில்லை. எமது படைப்புகள் எமது துயரத்தின் வடிகால்கள்.

இலக்கியமாக வரவில்லையா..? சிறுகதை என்ற சிறப்புக்குள் அடங்கவில்லையா..? கவிதையாக இனிக்க வில்லையா? கட்டுரைக்குரிய கட்டுக்கோப்பு இல்லையா..? பரவாயில்லை. முடிந்தால் அவைகளுக்குள் அடங்க முயற்சிக்கிறோம். முடியாதவர்களைத் தொந்தரவு பண்ணாதீர்கள். புலம்பெயர் படைப்புக்கள் அத்தனைக்குமே புலம்பல் என்ற சாயம் பூசி வைக்காதீர்கள். அந்தக் காலப் படைப்புக்களிலும் சரி, தம் நிலம் வாழ்வோரின் இந்தக் காலப் படைப்புக்களிலும் சரி எங்கும் தர ரீதியான பல படைப்புக்கள் இருக்கின்றன. அது போலத்தான் புலம் பெயர் படைப்புக்களும். போர்க்களத்தில் நிற்கும் போது இரத்தம் சிந்தாதே என்றோ, மரணத்தின் முன் நிற்கும் போது கண்ணீர் சிந்தாதே என்றோ சொல்ல முடியாது. காலத்துக்கேற்ப களத்துக்கேற்ப படைப்பிலக்கியங்களின் தன்மைகளும் மாறும் என்ற யதார்த்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:10
Read more...
 
முட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by ராஜமார்த்தாண்டன்   
Friday, 07 August 2009 04:50

ஈழத்தில் பிறந்து, தற்போது பிரான்ஸில் வசித்து வரும் மெலிஞ்சி முத்தனின் மூன்றாம் கவிதைத் தொகுதி 'முட்களின் இடுக்கில்'.

ஈழத்தின் சமகாலத்திய போர்ச் சூழல், உள்முரண்கள், அவர்களுக்கேயான பேச்சுவழக்குச் சொற்கள் புரிந்தவர்களுக்கு ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் எளிமையானவை. காரணம், அவை வெளிப்படையானவை - ஒற்றைப் பரிமாணம் கொண்டவை (சோலைக்கிளி போன்ற விதிவிலக்குகளும் உண்டு). அதே சமயம் தமிழகக் கவிதைகளை விடவும் அவை மண் சார்ந்தவை மனிதம் சார்ந்தவை நம் கற்பனைகளை மீறிய பெரும் துக்கம் சார்ந்தவை. மெலிஞ்சி முத்தனின் 'முட்களின் இடுக்கில்' தொகுப்பிலுள்ள கவிதைகளும் இத்தகையவையே. அதே சமயம் விதிவிலக்காகப் பன்முகத்தன்மையும் சூசகமான வெளிப்பாடும் கொண்ட சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. இத்தகைய கவிதைகளே பெரும்பாலான ஈழத்துக் கவிஞர்களிடமிருந்து மெலிஞ்சி முத்தன் தனித்து நிற்பதை நுட்பமாகவும் உணர்த்துகின்றன.

Last Updated on Tuesday, 21 October 2014 22:19
Read more...
 
நங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by ரவி (சுவிஸ்)   
Friday, 07 August 2009 04:46நளாயினியின் “நங்கூரம்” கவிதைத் தொகுப்பு
ஓர் அறிமுகம்!
 

“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”

அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று

Last Updated on Tuesday, 21 October 2014 22:10
Read more...
 
அந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by மூனா   
Friday, 07 August 2009 04:41
அந்தக் காலத்து யாழ்ப்பாணம் 2005 தை மாதம் அவுஸ்திரேலியா Mellbournஇல் வெளியிட்டு வைக்கப் பட்டது

புத்தக வெளியீட்டு விழாவொன்றுக்குப் போறன். நீயும் வரப்போறியோ?" அண்ணன் கேட்டார்.

"என்ன புத்தகம்?"

"அந்தக் காலத்து யாழ்ப்பாணம்" புத்தகத்தின் தலைப்பே புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை இழுத்தது."புத்தக வெளியீட்டு விழாவிற்கே நான் வந்திருந்தேன். ஆனால் பார்வைக்கு அது பொங்கல் விழாவாக இருந்தது. அதுவும் முதியவர்கள் இணைந்து வழங்கிய பொங்கல் விழா. இருக்கைகளில் ஆறஅமர இருந்தவர்கள், அங்குமிங்கும் ஓடித் திரிந்தவர்கள், வந்தவர்களுக்கு பொங்கல், வடை, பாயசம் வழங்கியவர்கள் என்று எல்லோருமே முதியவர்கள். கண்ணுக்குப் பட்ட இடமெல்லாம் முதிய அலைகளே. மேடையில் நிகழ்ச்சிகளை மட்டும் இளையவர்களே தந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பெரிசுகளில் சிலரது பேரப்பிள்ளைகளாக இருக்க வேண்டும்.
Last Updated on Sunday, 09 August 2009 10:35
Read more...
 
எங்கிருந்து வந்தாயடா? PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தாமரை   
Wednesday, 29 July 2009 07:15

எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க

இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை

ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது

விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)

- தாமரை

 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Tuesday, 28 July 2009 10:01
1.10.1928 ஆம் ஆண்டு பெற்றோர்கள் தந்தை சின்னையா மன்றாயருக்கும் அன்னை ராஜாமணி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் வி.சி. கணேசன் (எ) நடிகர் திலகம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன். இவர் பிறந்த சமயம் தந்தை சின்னையா மன்றாயர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் சிறை சென்றிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்பொழுது சிவாஜி அவாகள் நாலரை வயது சிறுவனாய் வளர்ந்திருந்தார்.

இவருக்கு ஏழு வயது நடக்கும்பொழுது தன் தந்தையுடன் கட்டபொம்மன் நாடகம் பாக்கச் சென்றார். நாடகம் நடத்துபவர்கள் வெள்ளைக்கார பட்டாளத்திற்கு ஆள் போதவில்லையென்று கணேசனை மேடையேற்றினர். அதுவே இவரின் முதல் நாடகம். ஆர்வமாய் நடித்தார். ஆனால் தந்தையாருக்கோ தான் எதிரியாக நினைக்கும் வெள்ளைக்காரர் படையில் மகன் நடித்து விட்டானே என்று கோபம். வீட்டிற்கு வந்ததும் என் எதிரியின் படையில் சேர்ந்து எப்படி கூத்தாடலாம் என்று அடித்தார். அன்றுதான் நாமும் ஏன் பெரிய நடிகனாக ஆகக் கூடாது என்ற வைராக்கியம் கணேசனின் மனதில் தோன்றியது. அந்த நேரத்தில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியான மதுரை ஸ்ரீபாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டிருக்க - தனது நடன, பாட்டு ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி தான் அனாதை என்று கூறி, அவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தி, நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.
அங்கு காலை ஏழு மணிக்கு எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு முதலில் பாட்டு இரண்டாவது டான்ஸ். அடுத்தது அன்று நடக்க வேண்டிய நாடகத்திற்கு வேண்டிய உரையாடல்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டும். இந்த முறைப்படியான பயிற்சி இவரை பெண் வேஷம் போடுவதிலிருந்து ஆண் வேஷம் அணிந்து நடிக்கும் 'ராஜபார்ட் நடிகர்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.
Last Updated on Wednesday, 24 October 2012 08:22
Read more...
 
சோமிதரனுடன் ஒரு சந்திப்பு PDF Print E-mail
Literatur - Interview
Written by தேவிபாரதி   
Tuesday, 28 July 2009 09:57

சந்திப்பு: தேவிபாரதி

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை

"நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு"

நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரைத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல. குண்டுவெடிப்புகளினூடாகவும் இடப்பெயர்வுகளினூடாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்காணவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த நான் எங்கள் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை, அது எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் கடந்து சென்ற பின்னரே தெரிந்துகொண்டேன்.

என் பத்தாம்வயதில் எரிந்து நின்ற அந்தக் கட்டடத்தை முதன்முதலாகப் பார்த்தேன். அப்பொழுது, பத்தாண்டுகளுக்குப் பிறகு யாருமே அதை நினைவில் வைத்திருக்கவில்லை. நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு. அதனால்தான் அதைக் குறித்து பெரிய இலக்கியப் பதிவுகள் உருவாகவில்லை. சேரன் ஒரு கவிதை எழுதினார், எம். ஏ. நுஃமான் ஒரு கவிதை எழுதினார், வேறு சில நல்ல கவிதைகளும் உள்ளன. மற்ற பல கவிதைகளிலும்கூட எரிக்கப்பட்ட யாழ் நுணலகம் பற்றிய சில வரிகள் தென்படுகின்றன. ஆனால், ஒரு பெரிய நாவலோ குறிப்பிடும்படியான திரைப்படமோ ஒரு நாடகமோகூட எம்மிடையே உருவாகியிருக்கவில்லை.

Last Updated on Saturday, 12 July 2014 21:25
Read more...
 
தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சச்சிதானந்தன் சுகிர்தராஜா   
Tuesday, 28 July 2009 09:54

இங்கிலாந்து : மறு பார்வை
தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்


சச்சிதானந்தன் சுகிர்தராஜா

இன்றைய ஆங்கில இலக்கிய வகைமைகளில் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை ஏற்படுத்தியதில் கணிசமான பங்கு Jhumpa Lahiri, Amy Tan போன்றவர்களுக்குப் போய்ச்சேரும். மேற்கத்திய எழுத்துலகம் எதிர்பார்த்த இனம் சார்ந்த படைப்புகளாக இவை இருந்தாலும், குறுகிய பார்வையுள்ள ஆங்கில நாவல் நிலப்பரப்பை விசாலமாக்கி ஆங்கில இலக்கியத் தன்மையைப் புத்தாக்கம்செய்த பெருமை இந்தப் புலம்பெயர்ந்த நாவல்களுக்குண்டு. இதுவரை புலம்பெயர்ந்த வங்காளிகள், பஞ்சாபியர்களுடைய பிரிவுகள், ஏக்கங்கள், அடையாளமிழத்தல்களைப் படித்து அலுத்துப்போன ஆங்கில வாசகர்களுக்கு இப்போது தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு நாவல்கள் பிரசுரமாயிருக்கின்றன. ஒன்று வாசுகி கணேசானந்தனின் Love Marriage மற்றது பிரிதா சமரசனின் Evening Is the Whole Day.

Last Updated on Tuesday, 11 March 2014 20:15
Read more...
 
சுட்டிப்பெண் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 27 July 2009 06:08

முழுவதுமாகக் கணினிக்குள் கவிழ்ந்திருந்த என் கவனத்தைக் கலைக்கும் படியாக வெளியே மாடிப் படிகளில் எதுவோ தொப்.. தொப்.. என்று உருண்டு வீழும் சத்தம் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அனுமானிக்கக மனசு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுதுக்குள் ஒரு வீரிட்ட அலறல்.

மனசு பதைக்க.. கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து ஓடினேன். அது வேறு யாரினதுமல்ல. மேல்வீட்டுப் பெண்குழந்தை டிலாராவினது அலறல். `வீழ்ந்து விட்டாளா..? படியில் உருண்டிருப்பாளா..?` கணத்துக்குள் மனசு பற்பல கேள்விகளை அடுக்கியது. அவளின் வீரிடல் ஓயவில்லை. படபடப்போடு கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தேன்.

டிலாராவேதான். என் வீட்டு வாயிலிலிருந்து இறங்கும் மாடிப்படிகளின் கடைசிப் படியில் வீழ்ந்திருந்தாள். வாயைக் கூட்டி விரித்து அடித்தொண்டையால் கீச்சிட்டுக் கொண்டிருந்தவள் என்னைக் கண்டதும் சடாரென வீரிடலை நிறுத்தி என்னைப் பார்த்து ஒரு மென்சிரிப்பை உதிர்த்து.. ஒரு கண்ணையும் சிமிட்டினாள்.

`என்னடா இது..? வீழ்ந்து கிடப்பவளின் சமிக்ஞை இப்படியா இருக்கும்.` அதிசயித்தவாறு அவளருகில் விரைந்து.. அமர்ந்து.. "வீழ்ந்து விட்டாயா..? எங்கேயாவது அடி பட்டதா..?" என்ற படி அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன்.

"இல்லை" என்றாள். மெதுவாக, குசுகுசுப்பாக..

"அப்படியானால்...?"

மீண்டும் ஒரு கண் சிமிட்டலோடு, படிகளின் பக்கச் சட்டங்களைப் பிடித்து எட்டிக் குனிந்து மேலும் கீழுமாகத் தொடரும் படிவரிசைகளின் நடுவே கீழே நிலத்தில் வீழ்ந்திருக்கும் ஒற்றைச் சப்பாத்தைக் காட்டினாள் அவள்.

"என்ன..?" புரியாமல் வினாவினேன்.

"அண்ணா என்ரை சப்பாத்தை எறிஞ்சு போட்டான்."

ஓ... அதுவா..! சப்பாத்து வீழ்ந்த சத்தமா அது..! "அதுக்கேன் நீ அழுகிறாய்..?"

மீண்டும் ஒரு முறை செயற்கையாய் வீரிட்ட அவள்.. "எறிஞ்சது அவன்தானே..! அவன்தான் அதை கீழை இறங்கிப் போய் எடுத்துக் கொண்டு வந்து தரோணும். நான் அழுதால்தான் அம்மா அவனை கீழே அனுப்பி எடுக்க வைப்பா."

எனக்குச் சிரிப்பாய் வந்தது.  "சுட்டிப்பெண்" -என்று சொல்லி அவள் கன்னத்தைத் தட்டி விட்டு நான் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திய கையோடு அவள் மீண்டும் வீரிடத் தொடங்கினாள். அவளது அம்மா தனது பெரிய உடம்போடு இழைத்து இழைத்து இறங்கி வந்து அவள் பிரச்சனை பற்றி ஆராயும் வரை அவள் ஓய மாட்டாள் என்பது எனக்குத் தெரியும்.

(இந்தப் பெண் வேறு யாருமல்ல. அழகு என்று காரணம் சொல்லி என்னைப் பொட்டு வைக்கச் சொன்ன அதே சுட்டிதான் இவள்.

சந்திரவதனா
2003

Last Updated on Wednesday, 13 February 2013 08:49
 
பொட்டு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 27 July 2009 05:46

பொட்டு வைப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும்? அதனால் என்ன பயன்?
என்பவை பற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அம்மா வைத்துப் பழக்கிய பொட்டை நானும் தொடர்ந்து வைத்து வந்தேன்.

சின்ன வயசில் சின்னச்சீரகம் உட்பட மூலிகைகள் கொண்டு காச்சி வடித்து, சிரட்டையில் ஊற்றிக் காயவைத்த கறுத்தப் பொட்டை தண்ணீர் தொட்டு உரைத்து நெற்றியில் அம்மா வைத்து விடுவா. சின்னதாக கன்னத்திலும் ஒரு பொட்டுப் போட்டு விடுவா. அதனால் நெற்றிப் பொட்டின் நரம்புகள் குளிர்மையும், நன்மையும் பெறுமாம். அம்மாதான் சொல்லுவா.

வளர்ந்த பின் சிவந்த சாந்துப் பொட்டு. அது கூட மூலிகைகள் கலந்து செய்ததுதானாம். பயன் இருந்திருக்கும். அப்பா சொல்லுவார் ´பொட்டு வைத்திருக்கும் ஒரு பெண்ணை ஹிப்னோட்டிசவாதியால் ஒன்றுமே செய்ய முடியாதாம். சில ஆண்கள் தமது பார்வையின் வசீகரத்தால் தனியாகச் செல்லும் பெண்களை தமக்கு அடிமையாக்கி விடுவார்களாம். அப்படியான ஏமாற்று வேலை எல்லாம் பொட்டு வைத்த பெண்களிடம் கை கூடாதாம்.`

திருமணத்தின் பின் குங்குமப் பொட்டு. அதுவும் மூலிகைகள் கொண்டு செய்த நல்ல பயன் தரு அரும் பொருளாம்.

ஆனால் வெளிநாட்டில் ஸ்ரிக்கர் பொட்டு. இதனால் என்ன பயன்? பல தடவைகள் யோசித்துப் பார்த்து ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் பயன் எதுவும் இல்லையென்பதால் பொட்டு வைப்பதை விட்டு விட்டேன்.

இன்று மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது 7 வயதுகள் நிரம்பிய மேல் மாடித் துருக்கியப் பெண்குழந்தை கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் பல நாட்கள் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை இப்போ கேட்பது போன்ற பாவனையில் "ஏன் நீ இப்போ பொட்டு வைப்பதில்லை" என்று கேட்டது. சிரித்து விட்டு "இப்போ எனக்கு அதில் ஆர்வம் இல்லை" என்றேன்.

"ம்... நீ பொட்டோடு எவ்வளவு வடிவாக இருப்பாய். நெற்றியில் சிவப்பாக ஒரு பொட்டு. அது அழகு..." உதடுகளை நெளித்து, நட்போடு சிரித்து அழகாகச் சொல்லிக் கொண்டு என்னைத் தாண்டி இறங்கிக் கொண்டு போனது.

ம்... ஸ்ரிக்கர் பொட்டினால் என்ன பயன்..? இதுவோ...!

சந்திரவதனா
23.9.03

Last Updated on Wednesday, 13 February 2013 08:49
 
காதல் ஒரு போர் போன்றது PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 22 July 2009 05:13
அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப்பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன பந்தம?

குளிரிலே இதமான போர்வையாய், வியர்க்கையில் குளிர் தென்றலாய்,
மழையிலே ஒரு குடையாய், வெயிலிலே நிழல் தரு மரமாய், தனிமையில் கூடவே துணையாய், கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்..... அவன் நினைவுகள் எப்போதும் என்னோடுதான்.

ஓ... இது தான் காதலா! இது காதலெனும் பந்தத்தில் வந்த சொந்தமா?
எனக்கும் தெரியவில்லை.

வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவனும் என்னுள் குடி புகுந்து, என் மனமுகட்டில் அமர்ந்திருக்கிறான்.

இன்றைய பொழுதில் அவன்தான் எல்லாமுமாய் எனக்கு இருக்கிறான். எந்தக் கணத்திலும் அவனை என்னால் மறக்க முடிவதில்லை. அவன் பக்கத்தில் இல்லை என்று சொல்ல முடியாத படி அவன் நினைவுகள் என்னுள்ளே விருட்சமாய் வியாபித்து, பூக்களாய் பூத்துக் குலுங்கி, அழகாய், கனி தரும் இனிமையாய் பிரவாகித்து இருக்கின்றன. எனது அசைவுகள் கூட அவனை மையப் படுத்தியே தொடர்கின்றன. எதைச் செய்தாலும் எங்கோ இருக்கும் அவன் என் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பது போன்ற உணர்வுகள் கூடி, எப்படியோ எனது வேலைகள் எல்லாமே அவனுக்காகவே செய்யப் படுவன போல ஆகி விடுகின்றன.

இவையெல்லாம், இந்த உணர்வுகள் எல்லாம் எந்தக் கணத்தில் ஆரம்பித்தன என்று தெரியவில்லை. எதேச்சையாகத்தான் நடந்தது என்று சொல்லி விடவும் முடியவில்லை. எப்படி என்றும் தெரியவில்லை. ஆனால் அவன் இல்லாமல் நான் முழுமையாக இல்லை என்பதை மட்டும் ஒவ்வொரு பொழுதிலும் உணர்கிறேன். இது காதல்தானே!

காதல் பொய். அப்படி என்று ஒன்றுமே இல்லை. அது வெறும் பருவக் கோளாறு மட்டுமே என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் காதல் இனிமையானது என்பதை உணர்ந்துதான் வைத்திருந்தேன். இப்போதுதான் அதன் முழுமையையும் உணர்கிறேன்.

அவன் எப்போதும் என் நினைவுகளில் சுழன்று கொண்டே இருக்கிறான். ஆனாலும் அவனை எப்போதும் ´மிஸ்´ பண்ணிக் கொண்டே இருக்கிறேன். அவனைத் தவிர்த்து வேறெதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை.

காதல் கொண்ட அனைவரும் பிதற்றும் வார்த்தைகள்தானே இவை என்று சொல்கிறீர்களா? அப்படித்தான் சொல்வீர்கள் நீங்களும் காதலில் விழும் வரை.
அதென்ன காதலில் விழுவது, அது என்ன குளமா, கிணறா என்று கேட்கிறீர்களா? அப்படித்தான் முன்னர் நானும் யோசித்திருக்கிறேன்.

எத்தனையோ தடவைகள் என்னருகில் எத்தனையோ பேர் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால் இப்பொழுது யாராவது என்னருகில் கட்டியணைத்தாலோ அல்லது கொஞ்சிக் குலாவினாலோ நான் தடுமாறிப் போகிறேன்.

காதல் என்பது உடல்களை விடுத்து உள்ளங்கள் மட்டும் ஸ்பரிசிக்கும் ஒரு இனிய பிணைப்பு என்றுதான் இதுவரை கருதியிருந்தேன். இப்போது அவன் முன் என் கருத்துக்கள் கொஞ்சம் தள்ளாடுகின்றன. அன்பை தழுவி உணர்ந்து கொள்வது போல், இறுக அணைத்து பகிர்ந்து கொள்வது போலக் காதலையும் ஆலிங்கனத்தால் உணர்ந்து கொள்ளலாம், பகிர்ந்து கொள்ளலாம்… என்பதெல்லாம் அவனோடான நேசத்தின் பின்தான் எனக்குப் புரிந்தது. ஒரு பார்வையால், ஒரு சிரிப்பால்… என்று காதலை உணர்த்தலாந்தான். அதே போல ஒரு தொடுகையால், ஒரு அன்பான அணைப்பாலும் கூட காதலை உணர்த்தலாம்.

அவன் நினைவுகள் என்னை எத்தனை தூரம் பரவசப் படுத்துகிறதோ, அதேயளவுக்கு என்னை வளைக்கும் அவன் கரங்கள் என் வரை நீளாதோ என்று ஏங்கவும் வைக்கிறது. என் காதோரம் படர்ந்து என்னைச் சிலிர்க்க வைக்கின்ற அவன் மூச்சுக் காற்றை இந்தக் காற்றுத் தன்னோடு கூட்டி வராதோ என்று மனம் சபலம் கொள்கிறது. ஏகாந்தப் பொழுதுகளிலெல்லாம் மனம் அவனோடு கைகோர்த்து நடக்கிறது. அருவியின் ஓசை அவன் சிரிப்பையும், தென்றலின் தழுவல் அவன் அணைப்பையும், இயற்கையின் தோற்றம் அவன் அழகையும் என்னுள் கவிதைகளாய்த் தெளிக்கின்றன. உதிக்கின்ற கவிதைகளில் எல்லாம் அவன் பிம்பந்தான் உயிர் கொள்கிறது.

முகம் பார்க்காமலே எழுத்தால், குரலால்... என்று ஏதேதோ காரணங்களால் நெஞ்சைத் தொட்டவர்கள் பலர். எத்தனையோ நூறு மின்னஞ்சல்களின் மத்தியில், முகமே தெரியாத ஒருவனின் ஓரிரு வரிகளே இதயச் சுவர்களை வேர்க்க வைக்கிறது. முழுமதியாய் சிரிக்க வைக்கிறது. காற்றுச் சுமந்து வரும் ஒரு குரல் நெஞ்சச் சுவர்களில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அந்த எழுத்துக்களுக்கு அல்லது அந்தக் குரலுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று தெரிவதில்லை. அப்படித்தான் இவனிடமும் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னை ஆக்கிரமித்தானா அல்லது நான் அவனுள் என்னைத் தொலைத்தேனா தெரியவில்லை. எதையும் பிரித்தறியவும் முடியவில்லை.

அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக் கூட்டுக்குள் ஏதோ உருள்வது போன்ற உணர்வு. அந்தரம். தவிப்பு. நினைக்கும் போதெல்லாம் என்றால்.. மறந்தும் போகிறேன் என்றல்லவா அர்த்தம் கொள்ளும். அப்படி அவனை மறப்பதும் இல்லை. எத்தனையோ முக்கியமான விடயங்கள் எல்லாம் மறந்து போகும். அவனை மட்டும் எந்தப் பொழுதிலும் மறக்க முடிவதில்லை. அவன் நினைவுகளே ஆதார சுருதியாய், என்னை ஆகர்ஷிக்கும் பொழுதுகளாய்… அவனில்லாமல் நானில்லை என்ற நிலையில்… படுக்கும் போது கூட அவன் நினைவுகளைத்தான் போர்த்திக் கொண்டு படுக்கிறேன். இது காதல்தானே.

மௌனம் கூட அழகு என்று சொல்வார்கள். நான் கூட பலருக்கும் எனது மௌனத்தையே பதிலாக்கி இருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் மௌனத்தை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. விழி பேசும் போது மொழி தேவையில்லைத்தான். பார்க்கவே முடியாத தூரத்தில் மௌனம் எப்படி அழகாக இருக்கும்? அவன் மௌனமாய் இருக்கும் பொழுதிலெல்லாம், பிரபஞ்சம் பிரமாண்டமாய் பரந்து விரிந்திருப்பது போலவும், நான் மட்டும் அங்கு தனியாக இருப்பது போலவும் உணர்கிறேன். எங்கே அவன், எந்த அலையிலும் நம் சொந்தம் கலையாது என்று சொன்னவன் இப்போ எங்கே போய் விட்டான், என்று கலங்குகிறேன். மனம் கலைந்து, உடல் களைத்து, சலித்து விம்முகிறேன். சிறு துரும்பின் அசைவில் கூட அவன் மௌனம் என்னில் கண்ணீராய் சிதறி விடக் காத்திருக்கிறது.

மீண்டும் மீண்டுமாய் மின்னஞ்சல் கணக்கைத் திறந்து பார்க்கிறேன். எத்தனையோ வந்திருந்தாலும் அவனது வரவில்லை என்னும் போது மனசு வெறுமையாகி விடுகிறது. அந்த ஒரு சிறிய தாமதமே, ஏன்? எப்படி மறந்தான்? ஒரு மின்னஞ்சல் எழுதக் கூட முடியாமல் என்னை மறந்து விட்டானா? என்ற கேள்விகளை எனனுள் மிகுந்த ஆதங்கத்தோடு அடுக்கத் தொடங்கி விடுகிறது. அந்தப் பொழுதுகளில் எல்லாம் நான் சோகத்தில் துவண்டு போகிறேன். இதயம் இருண்டு போவது போல உணர்கிறேன். கணப் பொழுதுகளும் யுகங்களாய் நீள்கின்றன.

தொலைபேசி அழைப்புக்கள் ஒவ்வொன்றுமே அவன்தான் என்ற நினைப்பில் மின்சாரத் தாக்குதலாய் என்னை அதிர வைக்கின்றன. பின் அவனில்லை என்றானதும் காற்றுப் போன பலூனாய் எல்லா அதிர்வுகளும் கலைந்து போகின்றன. எதையும் செய்ய முடியாமல், உடல் வலுவிழந்தது போலச் சோர்கிறது. மனம் சாப்பிட மறுக்கிறது. அடிக்கடி கண்கள் பனித்துப் பனித்து விழியோரங்களில் வழிகின்றன. குழறி அழுது விடலாம் போலிருக்கிறது. மை கொண்டு எழுதியவை என் மனசு போலக் கண்ணீரில் கரைகின்றன. ஏன் ஏன் இப்படியானது, ஏன் என்னை இப்படிப் பைத்தியமாய் ஆக்கினான், என்று என்னையே கேட்கிறேன். காதல் ஒரு போர் போன்றது என்பதை அப்போதுதான் உணர்கிறேன்.

ஆனாலும் அடுத்து வரப் போகும் அவனது ஒரு அழைப்பிலோ, சின்ன மின்னஞ்சலிலோ நான் சிறகடிப்பேன். இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமானவளாக ஆனந்தச் சிறகுகளை விரித்த படி உயர உயரப் பறந்து கொண்டே இருப்பேன். என் வானம் எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கும். மீண்டும் ஏதோ ஒரு வார்த்தையாலோ அல்லது வார்த்தைகளே இல்லாத மௌனத்தாலோ அவன் என்னை நோகடிக்கும் வரை பறந்து கொண்டே இருப்பேன். அவன் என்னை நினைக்கவில்லையோ என்ற நினைவுகளுடன் மோதி, மூக்குடைந்து, என் சிறகுகள் கிழிந்து கீழே தொப்பென வீழும் வரை பறந்து கொண்டே இருப்பேன்.

வீழ்ந்த பின்னும் மின்னஞ்சல் தேடி, தொலைபேசி அழைப்புக்காய் ஓடி… அவன் நினைவுகளில் வாடிக் காத்திருப்பேன்.

அவ்வப்போது என் கண்கள் பனித்து விழியோரம் உருள்கின்ற கண்ணீர் துளிகளிலும், ஏகாந்தப் பொழுதுகளில் இதழோரம் துளிர்க்கின்ற புன்னகைகளிலும் அவன் நினைவுகள்தான் ஒட்டியிருக்கின்றன என்று சொன்னால் அவன் நம்புவானோ, இல்லையோ, இதுதான் காதல் என்பதை நான் நம்புகிறேன்.

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட இந்தக் காதல் என்பது மிக மிக இனிமையானது. இன்பமானது, அதை நான் முழுவதுமாக உணர்கிறேன். இதே காதல்தான் சமயத்தில் காதல் ஒரு போர் போன்றது என்ற உணர்வையும் எனக்குத் தருகிறது.

சந்திரவதனா
2.5.2007

Comments
Last Updated on Monday, 07 September 2009 06:41
 
பால்வினை PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by தீபா   
Wednesday, 22 July 2009 05:02
சில பெண்கள் ஆடம்பர வாழ்க்கை ஒன்றுக்காக தமது உடலை அறியாத தெரியாத ஒருவனிடம் அனுபவிக்கக் கொடுப்பதைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கிறது. இதைச் சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடலுறவு என்பது உணர்வோடு சம்பந்தப் பட்டது. அந்த உணர்வுகள் எதுவும் இல்லாது வெறும் ஜடங்களாய் பணத்துக்காக உடலைக் கொடுப்பது எத்துணை கேவலமானது.

பணம் தேவையென்றால் எத்தனையோ வேலைகள் இங்கு குவிந்து கிடக்கின்றன. அதில் கிடைக்கும் பணம் சொற்பமாயினும் அது புனிதமானது. எமது நியமான நேர்மையான உழைப்பிற்கான ஊதியம் அது.

அதை விடுத்து ஐரோப்பிய அமெரிக்க பள்ளி மாணவிகளும் பல்கலைக்கழக மாணவிகளும் ஓரளவு பணமிருந்தும் ஆடம்பரம் ஒன்றுக்காக சைப்பிரஸ் போன்ற பணக்கார நாடுகளுக்கு உல்லாசப் பயணிகளாகச் சென்று உடலை விற்று வருவது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியதொரு விடயம்.

இவர்களின் இந்த செயற்பாடு வறிய நாடுகளான சீனா தாய்லாந்து ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு உறுதுணையாக இருக்கின்றன.

சில பெண்கள் பால்வினையை தமது விருப்போடு ஒரு தொழிலாகச் செய்வதால், கட்டாயப் பால்வினைக்கு வற்புறுத்தப் படும் பலபெண்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது.

இந்த விடயத்தில் பெண்கள் எல்லோருமாக ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். ஆண்கள் தமது இச்சைகளுக்காகப் பெண்களை எப்படிப் பயன் படுத்துகிறார்களென்பதை உணர்ந்து புரிந்து அதை எதிர்க்கத் துணிய வேண்டும். ஒட்டு மொத்தமான பெண்கள் இனமும் ஓங்கிக் குரல் கொடுக்கும் போதுதான் இது இல்லாது ஒழிக்கப் படுவதற்கு ஒரு வழி கிடைக்கும்.

பெண்களைப் பால்வினைக்குப் பயன் படுத்தும் இந்த செயற்பாடு கூட ஒரு திட்டமிட்ட பெண்கள் மீதான சதிதான்.

முந்திய காலத்தில் பணக்கார ராஜாக்களுக்கும், வணிகர்களுக்கும் இன்னும் சுகபோக வாழ்வில் மையல் கொண்ட மானிடர்க்கும் போகும் இடமெல்லாம் பாலியல் தேவைப் பட்டுள்ளது. அவர்கள் மனைவியர் வீடுகளுக்குள் அடைந்து கிடக்க இந்த அவாப் பிடித்த ஆண்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வேற்றுப் பெண்களை அனுபவிக்கத் தயாராயிருந்தார்கள். அந்தப் பெண்கள் சிறுமிகளாகக் கன்னி கழியாதவர்களாக இருப்பதையே இவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

இவர்களது இந்த வஞ்சகத்தனமான அற்ப ஆசைகளுக்கு ஏழைப் பெண்கள்தான் பலியானார்கள். ஆரம்பகாலத்தில் யப்பானில் தாய் தந்தையரை இழந்த பெண் குழந்தைகளும், தாய் தந்தையர் ஏழைகளாக இருந்த குடும்பத்துப் பெண்குழந்தைகளும் குறிப்பிட்ட சில குடும்பங்களினால் வீட்டு வேலை செய்வதற்கெனச் சொல்லி அடிமைகளாக வாங்கப் பட்டார்கள்.
அவர்கள் உணவு உடை கொடுத்து வளர்க்கப் பட்டு இந்த இச்சை கொண்ட ஆண்களுக்காகத் தயார் படுத்தப் பட்டார்கள். அந்தப் பிள்ளைகளை வாங்கும் போது அவர்கள் அழகாக இருக்க வேண்டுமென்பதில் இந்தக் குடும்பங்கள் மிகவும் கவனம் காட்டின. அழகிய பெண் குழந்தைகள்தான் நல்ல விலைக்குப் போனார்கள்.

இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களுக்கு முன் நடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பாக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது.

இந்தப் பெண்களை தாம் வளர்ப்பதுக்கும் வாங்குவதற்கும் செலவழித்த பணம் என்று சொல்லி அந்த வளர்ப்புப் பெற்றோர் ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குத் தீரும் வரை இந்தப் பெண்கள் இந்தத் தொழிலைச் செய்து பணத்தை வளர்ப்புப் பெற்றோருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் விலைமாதர்கள் உருவானார்கள் என்றொரு ஆதார பூர்வமான கதை உள்ளது. இவர்கள் Gysha(ஹைஷா) என அழைக்கப் பட்டார்களாம்.

இது இன்றைய நவீன உலகத்திலும் தொடர்வது மிகவும் மனவருத்தமான ஒரு விடயமே.

இன்று பெண்கள் அவர்கள் கணவன்மார்களாலேயே பால்வினைத் தொழிலுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள்.

உதாரணமாக தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேறிய குடும்பத்துப் பெண்கள் குடும்பச் செலவைச் சமாளிப்பதற்காக அவர்கள் கணவன்மார்களாலேயே பால்வினைத் தொழிலுக்கும் இரவு நடனத்துக்கும் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.

1992 இலிருந்தே பாக்கிஸ்தான் எல்லையில் -பெண்கள் விபச்சார விடுதிச் சொந்தக்காரர்களுக்கும் தரகர்களுக்கும் விற்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. இங்கு 12 வயதுப் பெண்பிள்ளைகள் நல்ல விலை போகிறார்களாம். இவர்கள் பெரிதும் விரும்பி வாங்கப் படுகிறார்கள்.

இப்படியே உலகின் பல மூலைகளிலும் பெண்களும் பெண்குழந்தைகளும் வதைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எல்லாப் பெண்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்காவிடில் இதற்கு விமோசனம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பெண்களே ஒன்று திரளுங்கள். நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிலும் ஆண்களாலும் சமூகத்தாலும் ஒவ்வொரு விதமாகப் பயன் படுத்தப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எதையும் உங்கள் பிரச்சனையில்லை என்று சொல்லி ஒதுங்கி விடாதீர்கள். நாளை நீங்களோ அல்லது உங்கள் மகளோ இதே பிரச்சனையில் வதைபடலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.


தீபா செல்வகுமாரன்
யேர்மனி

பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002
 
பால்வினைத் தொழில் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 22 July 2009 04:58
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.

தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான விபச்சாரமும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் விபச்சாரமும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.

பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை. இங்கு யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப் படுகின்றன.

இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.

இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.

இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

இப்படி கடத்தி வரப் படுபவர்கள் விரும்பினால் கூட மீள முடியாத படி, துப்பாக்கி முனையிலும், குண்டர்கள் மத்தியிலும் காவல் வைக்கப் பட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் சொற்பமே. இவர்களின் உடலுக்காகக் கிடைக்கும் பணத்தில் 70 வீதத்தைத் தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுதி 30 வீதமே இவர்களிடம் கொடுக்கப் படுகிறது.

இது ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்கு பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஒரு இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.

அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாலிப வயதுப் பெண்கள் நினைக்கிறார்கள் யேர்மனி பணக்காரநாடு. அங்கு போனால் நல்ல வேலையுடன் வசதியாக வாழலாமென்று. அதனால் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களைத் தேடி யேர்மனியின் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவருக்கான வேலைக்கோ, அல்லது பிள்ளைகளைப் பராமரிக்கும் பேபிமைண்டர் வேலைக்கோ அல்லது இது போன்ற இன்னும் வேறு வேலைகளுக்கோ விண்ணப்பிக்கிறார்கள்.

இது கூடுதலாகத் எமது தாயகத்திலிருந்து சவுதி போன்ற கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் எமது தமிழ் சிங்களப் பெண்கள் செய்வது போன்ற ஒரு ஒப்பந்தத்துடனான ஒரு வருட அல்லது இன்னும் கூடிய காலங்களுக்கான வேலையாகவே கருதப் படும்.

ஆனால் தாமும் பணம் சம்பாதிக்கும் காலம் ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இப்படி விண்ணப்பித்து வேலைக்கென யேர்மனிக்கு வந்து சேரும் வாலிபவயதுப் பெண்களுக்கு யேர்மனியில் காத்திருப்பது ஒரு பயங்கரமான, அருவருப்பான துயரம் தோயந்த எதிர்காலமே!

கூடுதலாக பேர்லினிலோ அல்லது ஹம்பேர்க்கிலோ தான் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு சென்ற பின்தான் அவர்கள் கட்டாய பால்வினைத் தொழில் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு விளங்கப் படுத்தப் படும். அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுவார்கள். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துப்பாக்கி முனைகளும் குண்டர்களும் காவலுக்கு நிற்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பெண்கள் தப்பியோடினால் அவர்களது தாய்நாட்டில் இருக்கும் அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் துன்புறுத்தப் படுவார்கள், அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்று சொல்லிப் பயமுறுத்தப் படுவார்கள். இந்திய தமிழ் சினிமாக்களில் வரும் பிளாக்மெயில் தனமான வில்லத்தனம் போலவே அந்தப் பயமுறுத்தல் இருக்கும்.

இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் பொலீசிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த விபச்சார விடுதிகளை நடாத்துபவர்களின் முறைப் படி, தலைமைத் தரகரால் அப் பெண்கள் சில இரவுகிளப்புகளுக்கும் அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகளே இல்லாமலோ நடனமாட கட்டாயமாக அனுப்பி வைக்கப் படுவார்கள்.

பல பெண்கள் உக்ரையின், லிற்றவ்வன், லெற்லாண்ட், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விசாவுக்கென ஏஜென்சியிடம் 750யூரோ கொடுத்து எதிர்காலத்தைப் பற்றியதான பலத்த நம்பிக்கையுடன் இங்கு யேர்மனிக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் இங்கே வந்ததும் தான் தாம் ஏஜென்சியால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து தெரிந்து நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாக மனமுடைந்து, ஆனாலும் விடுதலையோ அதை விட்டு வெளியேற ஒரு வழியோ தெரியாமல் துவண்டு போகிறார்கள்.

இவர்களைக் கூட்டி வந்த தரகர்கள் இவர்களை விபச்சார விடுதிக்கு விற்பனை செய்வார்கள். இவர்களின் பெறுமதி சிலசமயங்களில 25000யூரோ வரை கூட உயர்ந்திருக்கும். உக்ரையின் நாட்டுப் பெண்கள் அழகானவர்களாம். அவர்கள்தான் அதிகம் விலை போவார்கள்.

இடைத் தரகர் அந்தப் பணத்தை முக்கிய தரகரிடம் பெற்றுக் கொண்டு போன பின்னர் அந்த முக்கிய தரகர் தான் கொடுத்த 25000யூரோவையும் இந்தப் பெண்களிடமே பெற்றுக் கொண்டு விடுவார். அதாவது இந்தப் பெண்கள் தமது உடலை இன்னொரு ஆடவனின் இச்சைக்கு இரையாக்கும் போது வரும் பணத்தில் அந்த 25000யூரோ கணக்கு வைத்துக் கழிக்கப் படும். எப்படியானதொரு கொடுமை இது என்பது எத்தனை பேருக்குப் புரியும்.

புரிந்த ஆண்கள் கூட தமது இச்சை தீர்ந்தால் போதுமென்ற எண்ணத்துடன் இப்படியான சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று இந்தக் கொடுமைகளுக்கு உரமும் வலுவும் கொடுப்பது எத்துணை அவலமானது. யேர்மனியில் மட்டும் ஒரு நாளைக்கு பத்துஇலட்சம் ஆண்கள் விலைமாதர்களிடம் போய் வருகிறார்களாம்.

இதே நேரம் எல்லாப் பெண்களுமே கடத்தப் பட்டு பலாத்காரத்தின் பேரில்தான் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. போலந்து, செக்கொஸ்லொவோக்கியா போன்ற நாட்டுப் பெண்களில் பலருக்கு இங்கு யேர்மனியில் வேலை என்ற பெயரில் என்ன காத்திருக்கிறது என்பது தெரியும்.

ஆனாலும் வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் போன்ற காரணங்களால் யேர்மனிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிலகாலங்களுக்கு உழைத்து விட்டு, அந்தப் பணத்துடன் தாய் நாடுகளுக்குத் திரும்பி நல்லதொரு வசதியான வாழ்வைத் தொடங்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை நிறைந்த ஆசை. அதற்காக ஏஜென்சிக்கு 750யூரோ கொடுத்து சட்டத்துக்கு முரணாக விசா பெற்று அவர் மூலமாகவே இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்து பால்வினைத் தொழிலை பணத்துக்கான ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்.

இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணித்தியாலப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.

2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.

சிலபெண்கள் - இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.

பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள்.

எல்லோரும் நினைப்பது போல போலந்து நாட்டையோ ரஷ்ய நாட்டையோ சேர்ந்த தரகர்கள்தான் பெண்களை கட்டாய பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான விபச்சார விடுதிகளின் சொந்தக் காரர்களும், தலைமைத் தரகர்களும் யேர்மனியர்களாகவே இருக்கிறார்கள். ரஷ்சியர்கள் அனேகமாக இடைத் தரகர்களாகத்தான் இருக்கிறார்கள்.

விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.

கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய்தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு யேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு யேர்மன் ஆண் 7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு யேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள். தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள். எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.

இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும். அவளின் இந்தப் பெறுமதி 25000யூரோ வைக் கூடத் தாண்டியிருப்பதாக பேர்லினைச் சேர்ந்த பெண்கள் சங்கத்துக்கான காரியதரிசி Helga Korthaase சொல்கிறார்.

இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப் பட்டு விடுதலை பெற்று குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன.

இந்த வருட ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டு, அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும், பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.

இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை."

இந்த விபச்சாரம் யேர்மனியில் மட்டுந்தான் என்று சொல்வதற்கில்லை. உலகளாவப் பரந்து கிடக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக கென்யா, சீராலியோன்... போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் பெண்குழந்தைகள் அவர்களுக்கான உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் விலைமாதர்கள் ஆக்கப் படுகிறார்கள்.

பெண்குழந்தைகள் பாலுறவுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்களுக்கு உண்ண உணவும், நோய்களுக்கான மருந்தும் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் வேலைசெய்யும் 70 பேர்கள், இந்தத் துர்வேலையைச் செய்து கொண்டிருந்ததை UNO உதவி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

இதற்கு ஃபறீ ரவுணைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார். "இது ஒன்றும் புதிதல்ல. இங்கு உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடன் பாலுறவு கொள்வதால்தான் அகதிகளாகத் தப்பியோடி வந்த சிறுமிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். " என்று.

UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று

பால்வினை என்னும்
பாழ் கிணற்றுக்குள்
வாழ்விழந்த பெண்கள்
மீள வழி உண்டா.........!
ஏழ்மையினாலும்
சில மனிதர்களின் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
இவர்கள் உள்ளங்களும்தான்!

சந்திரவதனா
யேர்மனி
May - 2002

பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002
 
காதல் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 22 July 2009 04:25
இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.

ஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.

இந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.

இந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........
(காதற்பாட்டு, அந்திப்பொழுது -
பாரதியார் பாடல்கள்
)


ஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும், இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும், துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.

காதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம். அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.

மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி, மதம், அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.

இன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.

தற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.

மனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.

மிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும், காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.

உடல்களை விடுத்து
உள்ளங்கள் பரிசிக்கும் காதல்
உன்னதமானது.


சந்திரவதனா
யேர்மனி
14.2.2000

  

Comments:

காதல் இனிதே said...

காதல்...........வகை
1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவனை ஏமாற்றிஎதிரி இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்
2...காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் ஏந்தி மடிகின்ற அன்புடையது
3....காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்
4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்
5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்
..........................................................................

Last Updated on Thursday, 14 February 2013 08:26
 
காதலர்தினம் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 22 July 2009 04:22
ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்!


வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி(2) யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி(2) இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

- உன்னுடைய வலண்டைனிடமிருந்து

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

************************
ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

சந்திரவதனா
யேர்மனி
1999
Last Updated on Saturday, 14 February 2015 16:02
 
கலை வளர்க்கும் பூனைகள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 05:06
மண்டபம் நிறைந்திருந்தது. மேடையில் பரதம் நர்த்தனமாடியது. இளவட்டங்கள் கதிரைகளில் இருக்காமல் மண்டபத்தின் சுவரோரமாக நின்று நர்த்தனத்தையோ அல்லது நர்த்தகிகளையோ ரசித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் இருக்கைகளை விட்டெழுந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டு திரிந்தார்கள்.

சுந்தரேசர் இந்தக் களேபரங்களுக்குள் மண்டபத்துள் அடங்கிப் போய் விடாமல் வெளியிலே நின்றார். அவர் அப்படித்தான். மண்டபத்துள் மனைவியின் அருகில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விட வெளியில் பெரியமனுசத் தோரணையுடன் கன்ரீனிலோ... கசட் விற்கும் இடங்களிலோ... நின்றால்தான் நடனமாடி விட்டுப் போகும் பெண்களுடனோ அல்லது வெளியில் கன்ரீனில் சிற்றுண்டி வாங்க வரும் பெண்களுடனோ இரண்டு பகிடி விட்டுச் சிரிக்கலாம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

அவர் இந்த விடயத்தில் படுகில்லாடி. இதொன்றும் அவரது மனைவி கோமதிக்குத் தெரியாமலில்லை. இளவயதிலேயே அவர் சபலபுத்திக்காரன்தான். கிளி மாதிரி அழகிய மனைவி கோமதியைப் பக்கத்தில் வைத்து விட்டுக் காகங்களைத் தேடிப் போய் வருவதில் அவருக்கு அலாதி திருப்தி. இளமையில்தான் அப்படியென்றால் இப்போ வயசு ஐம்பதைத் தொட்ட பின்னும் நரைத்த மீசையை மளிச்சு விட்டுக் கொண்டு அலையோ அலை என்று அவர் அலைவதைப் பார்க்க கோமதிக்குப் பொல்லாத எரிச்சல் வரும்.
Last Updated on Friday, 22 June 2018 06:42
Read more...
 
முரண்களும் முடிவுகளும் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 05:03
இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, “அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன்." என்று துளசி சொன்ன போது கோமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்ன நீ விளையாடுறியே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்..! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே?" கோமதி அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் கத்தினாள்.

“இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை." துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.

´என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய் தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி எண்டு எல்லாரும் சொல்லுகினம் எண்டு அவரட்டைச் சாதகத்தைக் காட்டி பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது. பிறகேன் இப்பிடி நடக்குது.´ கோமதி குழம்பினாள்.
Last Updated on Thursday, 03 September 2009 08:58
Read more...
 
இயற்கையே நீயுமா.....? PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by Chandra   
Monday, 20 July 2009 05:01
"எனக்கா, எனக்குமா....!? நானுமா....!?" அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை கெட்டு ஆடுவது போலவும் ஒரு பிரமை அவளை மருட்டியது. தலை விறைத்து மனமெல்லாம் உதறல் எடுத்தது. மீண்டும் ஒருமுறை மார்பகத்தை ஒற்றை விரலால் மெலிதாக அழுத்தி அழுத்தி தடவிப்பார்த்தாள். "ஓம்......." தட்டுப்படுது. சின்னதாய் ஒரு கட்டி.

ஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. துள்ளியெழுந்த வேகத்துடன் அப்படியே கம்பளத் தரையில் அமர்ந்து விட்டாள். இப்போது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

காலையே வேலைக்குப் போனவள் வந்து பிள்ளைகள் பாடசாலையால் வரமுன்னம் அவசரமாய்ச் சமைத்து, அவர்கள் வர சாப்பாடு கொடுத்து ரியூசனுக்கு அனுப்பி விட்டாள்.

இப்போ சில நாட்களாகவே உடம்பில் ஒரு அசதி. எல்லாவற்றிலும் ஒரு மறதி. இடது பக்கத் தோள் மூட்டில் தாங்க முடியாத வலி. அதுதான் மாலையில் செய்யும் பகுதி நேர வேலைக்குப் போகுமுன் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி சோபாவில் சாய்ந்தவள்.

சாய்ந்து படுக்கும் போது இடது பக்கம் சாய்வதில் ஏதோ ஒரு பாரம் தெரிந்தது. முதுகுப் பக்கம் தெண்டுவது போல ஒரு அந்தரமாய் இருந்தது.. நிமிர்ந்து படுத்துப் பார்த்தாள். அது சுகமாக இருந்தது. பஞ்சி தீர்வது போலத் தெரிந்தது. அப்படியே படுத்திருந்த படியே அவளின் கைகள் தன்னையறியாமலே மார்பகங்களை மேயத் தொடங்கியது. அப்போதுதான் அந்தக் கட்டி அவள் விரல்களில் இடிபட்டு, மனதுள் ஒரு இடியை இறக்கியது. சில மாதங்களாகவே அவளையும் அவளது சக வேலையாட்களையும் வாட்டிக் கொண்டிருந்த வேதனையும் பயமும் இதுதான்.

ஐந்து மாதங்களின் முன்பு புதைகுழியில் கிடந்த எறீனாவின் மேல் பூங்கொத்தைப் போட்டு விட்டு, இனி மண்ணை அள்ளிப்போட்டு மூடி, நினைவுக்கல்லை நாட்டி விடுவார்களே என்ற கனத்த நினைப்போடு வந்த போதிலிருந்து மனசை விட்டகலாத சோகம்,-- சர்மிளாவால் அதை மறக்க முடிவதில்லை..

"எறீனா........!" பெருமூச்சொன்று சர்மிளாவையும் மீறி வெளிவந்தது.
பாஷை நிறம் என்று சர்மிளா அந்நியதேசத்தில் அந்நியப் பட்டு நின்ற போது அவளை அரவணைத்து அவளும் மனிதஜென்மம்தான் என்று உணர வைத்த அந்த வெண்மையான மென்மையான எறீனா. என்ன மாதிரி அழகாயிருந்தவள். சுற்றியுள்ள எல்லோரையும் எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவள், இயற்கையே சிரித்து நின்ற ஒரு அழகிய கோடை நாளில் அழுத விழிகளுடன் வேலைக்கு வந்தாள். வழமை போல் சர்மிளா தவிர்ந்த மற்றைய எல்லோரும் ஆல் போல் தழைத்து, அரசு போல் குடை விரித்திருந்த கஸ்தானியன் மரத்தின் கீழ் நின்று சிகரெட் புகைக்க, எறீனா மட்டும் வழமைக்கு மாறாக சர்மிளாவுடன் உள்ளே போனாள்.

உள்ளே போய் கதவைச் சாத்தியதுதான் தாமதம் சர்மிளாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். சர்மிளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இப்படி எறீனா அழுகிறாள் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும் எறீனாவின் அழுகை அவளை என்னவோ செய்ய "என்ன நடந்திட்டுதெண்டு இப்ப அழுறாய், தயவு செய்து சொல்லிப் போட்டு அழு." கலக்கத்துடன் அதட்டினாள்.

எறீனா உடனே சர்மிளாவை இழுத்துக் கொண்டு குசினிக்குள் ஓடினாள். தனது மேலாடைகளை அவசரமாக இழுத்துக் கழற்றினாள். சர்மிளாவின் சுட்டு விரலை அவள் அனுமதியின்றிப் பிடித்து, ஒரு ஆவேசத்துடன் இழுத்து, தனது இடது மார்பகத்தில் வைத்து "இப்போ அழுத்திப் பார்" என்றாள்.

சர்மிளாவுக்கு இப்போது எறீனாவின் குழப்பத்துக்கான காரணம் ஓரளவு புரிந்தாலும், விரலால் எதையும் உணர முடியவில்லை. "ஏன் இப்பச் சும்மா அழுறாய். அங்கை ஒண்டுமே தெரியேல்லை." என்றாள்.
"சரியாக அழுத்திப்பார். இதிலை. இதிலை." என்று தனது விரலாலேயே எறீனா சரியான இடத்தைக் காண்பித்தாள்.,

எறீனாவின் அழகிய பெரிய மார்பகத்தின் ஆழத்தில் சிறிதாக, கட்டியாக எதுவோ தட்டியது. இப்போதுதான் சர்மிளர்வுக்குத் திக்கிட்டது. நெஞ்சு படபடத்தது.

உயிர் சுமக்கும் கருவறைக்குள்ளும்
உதிரத்தைப் பாலாக்கி
உணவூட்டும் மார்பகத்துக்குள்ளும்
உயிர் கொல்லும் புற்றுநோயை
உருக்கொள்ள வைத்தது யார்?????


"ஆண்டவா...! அவள் உனக்கு என்ன பாபம் செய்தாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை? மூன்று உயிர்களைக் கருவிலே சுமந்து, தன் உதிரத்தைப் பாலாக்கி, இந்த மார்பகங்களால் தானே அக்குழந்தைகளுக்கு உரமூட்டி, இந்த உலகத்தில் நடமாட வைத்தாள். அந்தப் புனிதமான மார்பகங்களுக்குள் உயிர் கொல்லும் இந்த வைரசுக்கள் எப்படி வந்தன?"
இயற்கை மீதும் ஆண்டவன் மீதும் சர்மிளாவுக்கு அளவிலாத கோபம் வந்தது. ஆனாலும் அதை அவள் எறீனாவிடம் காட்டிக் கொள்ளாமல் , உடனேயே சமாளித்துக் கொண்டு "அது சும்மா கட்டியா இருக்கும். இதுக்குப் போய்ப் பயப்படுறியே..!" என்றாள்.

"இல்லை சர்மிளா, நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்டும் வெறும் பிரமையிலை இதைச் சொல்லேல்லை. எனக்கு முதல்லை இதைப் பற்றி ஒரு எண்ணமுமே வரேல்லை. இண்டைக்கு நான் சும்மா செக்கிங்குக்கு எண்டு Frauen Artzt (gynaecology- பெண்களுக்கான பிரத்தியேக வைத்தியர்)ட்டைப் போனனான். அவர்தான் இதைக் கண்டு பிடிச்சவர். உடனை அவற்றை முகமே கோணிப் போட்டுது. வழமையான அவற்றை புன்சிரிப்புக் கூட அப்பிடியே எங்கையோ ஒழிச்சிட்டுது. நாளைக்கு என்னை mammography செய்ய ஸ்பெஷல் டொக்டரிட்டைப் போகச் சொன்னவர். எனக்குச் சரியான பயமாயிருக்கு." மீண்டும் அழத் தொடங்கி விட்டாள்

"எறீனா..! சீ... சும்மா அழாதை. அது சும்மா ஒரு கட்டியாக(Tumor) இருக்கும். இப்பிடி வாற கட்டியளிலை, எப்பவுமே நாலைஞ்சு கட்டியள் துப்பரவா எந்தக் கெடுதியையும் விளைவிக்காத கட்டியளாத்தான் இருக்கும். அப்பிடியான அனேகமான கட்டியளுக்கு எந்த வைத்தியமும் செய்யத் தேவையில்லை. உதாரணமா Zysten (cyst- நீர் நிறைந்த பை) இது எந்தக் கெடுதியையும் விளைவிக்காது. அது போலை Mastopathien (ஹோர்மோன் மாற்றத்தாலை பால் சுரப்பிகளில் ஏற்படுகிற மாற்றங்கள்) இதுக்கும் பயப்படத் தேவையில்லை." சர்மிளா தனக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி எறீனாவைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள்.

எறீனாவை இந்த சமாதானஙகள் பெரிய அளவாக ஆறதல் படுத்தவில்லை. இது Fibroadenome(பால் சுரப்பிகளிலும் இணையச் சவ்வுகளிலும் வரும் கட்டி) ஆகவும் இருக்கலாம்தானே? குழப்பத்துடன் கேட்டாள்.

"Fibroadenome எண்டாலும் பயமில்லை. இவைகளும் கெடுதலை விளைவிக்காதவைதான். மார்பகத்தைக் கீறி அந்தக் கட்டியை மட்டும் எடுத்து விட்டால் போதும். உடம்பின்ரை மற்றப் பகுதியளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
நீ நினைக்கிற மாதிரி பயப்பட ஒண்டுமில்லை. சும்மா தேவையில்லாமல் இதையெல்லாம் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பாதை. உனக்கொண்டும் நடக்காது. இந்தா நான் கோப்பி போடுறன். குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகு."

அன்று சர்மிளா எறீனாவை அப்படிச் சமாதானம் செய்து கோப்பியைப் போட்டுக் கொடுத்து குடிக்க வைத்தாலும்-----------
அதற்குப் பிறகு ஒவ்வொன்றாக நடந்தவை சர்மிளாவின் நினைவுகளில் ஓட, ஒரு கணம் அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இயலாமையா ஆக்ரோஷமா தெரியவில்லை. தன்மீது பச்சாத்தாபமும் இயற்கையின் மீது சீற்றமுமாய் குழம்பினாள்.

`இனியென்ன? என்ரை கையிலை ஏதும் இருக்கே? நாளைக்கு டொக்டரிட்டைப் போனால் அவர் பாத்திட்டு mamography செய்ய ஸ்பெசலிஷ்ற்ரிட்டை அனுப்புவார். அவர் mamography செய்து போட்டு "பயப்படவேண்டாம். ஓரு கட்டி இருக்குதுதான். ஆனால் பயப்படத் தேவையில்லை. எதுக்கும் நாலு நாளிலை டொக்டரிட்டைப் போங்கோ. ரிப்போர்ட் அனுப்பிவிடுறன்." எண்டுவார்.

நாலு நாளிலை டொக்டரிட்டைப் போனால் அவர் சொல்லுவார் "பயப்படாதைங்கோ.ஓரு கட்டி இருக்குதுதான். அது சும்மா tumor ஆத்தான் இருக்கும். பயங்கரமா ஓண்டும் இருக்காது. அதை வெட்டி எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சிடும்." என்று.

அவரே மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து அந்தக் கட்டியை வெட்டி எடுக்கிறதுக்கான நாளையும் குறிச்சுத் தருவார்.

பிறகென்ன! மருத்துவமனைக்கு இரண்டுநாள் முந்தியே வரச்சொல்லுவினம் அந்தச் செக்கிங் இந்தச் செக்கிங் எண்டு இரத்தத்திலை இருந்து இதயம் வரை தலையிலை இருந்து கால் நுனிவரை செக் பண்ணப்படும். Chemo ஏத்துவினம். பிறகு என்னை மயக்கிப் போட்டு என்ரை மார்பகத்தை கீறி அந்தக் கட்டியை எடுத்து Heidelberg மருத்துவமனைக்கு அனுப்புவினம்.

பிறகு அது கெடுதி விளைவிக்கக் கூடிய மூர்க்கமான கட்டி எண்டு சொல்லி- மார்பகத்தை அப்பிடியே முழுசா வெட்டி எடுப்பினம். கொஞ்ச நாளிலை புற்றுநோய் வைரஸ் மற்ற மார்பகத்துக்கும் தாவீட்டுது எண்டு சொல்லி அதையும் வெட்டி எடுப்பினம்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமா வெட்டி வெட்டி- கிட்னியிலையும் தாவீட்டுது எண்டு சொல்லி------- இப்பிடித்தானே எறீனாவுக்கு எல்லாம் நடந்தது. கான்சர் கிருமிகள் அவளை அணுஅணுவாகத் தின்றபோது எப்படி எல்லாம் துடித்தாள், துவண்டாள். எத்தனை தரம் அவளை வெட்டி வெட்டித் தைத்தார்கள். அத்தனை துன்பத்தையும் அனுபவித்தவளின் உயிராவது மிஞ்சியதா? நாற்பத்திரண்டு வயதிலேயே புதைகுழியுள் போய்விட்டாளே. அன்று அவள். இன்று நானா? இது என் முறையா? எதற்காக இந்தப் பழிதீர்ப்பு?` சர்மிளாவின் நினைவுகள் விசனமாக நகர்ந்து கொண்டிருந்தன.

அவளை ஆறுதல் படுத்த யாரும் அருகிருக்கவில்லை. வேலையிடத்தில் இருக்கும் கணவனை தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னால் தேவலை போலிருந்தது. நினைத்த மாத்திரத்திலேயே எறீனாவின் ஒரு மார்பகம் எடுக்கப்பட்டதும், எறீனாவை விவாகரத்துச் செய்து கொண்ட எறீனாவின் கணவன் ஞாபகத்தில் வந்தான்.
கணவனுடன் தொலைபேசும் எண்ணம் அப்படியே கலைந்து போக நேரத்தைப் பார்த்தாள். அது தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டும். அழுத விழிகளுடன் அவசரமானாள்.
புற்றுநோய் கிருமிகள் அவளைத் தின்னத் தொடங்கி விட்டனவோ! இல்லையோ! புற்றுநோய் பற்றிய நினைவுகள் அவளைக் கொல்லத் தொடங்கியிருந்தன.

-முற்றும்-

சந்திரவதனா
யேர்மனி

பிரசுரம் - ஈழமுரசு (4-10 ஒக்டோபர்2001)

Post a Comment

 

 
கணேஸ்மாமா PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 04:57
பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. “அப்பாச்சி.., இது அண்டங்காகமோ.., அரிசிக்காகமோ..?" தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன்.

பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் கவனத்தைச் செலுத்தி, அரிசிக்குள் நெல் ஒன்றைக் கண்டு அதை அவசரமாக எடுத்து எறிந்த படியே.. “சொல்லேலுதில்லை மேனை, பார்த்தால் அரிசிக்காகம் போலை இருக்கு. ஆனால் தொண்டையை விரிச்சுக் கத்துறதைப் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரி இருக்கு" என்றா.

எனக்கு ஆசை. அது அரிசிக்காகமாக இருக்கோணும். ஜேர்மனியில் இருந்து என் கணவரின் கடிதம் வரோணும் என்பதுதான். அதே நேரம் அது அண்டங்காகமாக இருந்து அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாதென்ற அங்கலாய்ப்பும் என்னுள் இருந்தது.

நேற்றும் இப்படித்தான் காகம் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அப்பாச்சி அடித்து வைத்துச் சொல்லி விட்டா. அது அரிசிக்காகம் என்றும், யாரோ வரப் போகிறார்கள் என்றும்.
Last Updated on Monday, 20 June 2011 08:07
Read more...
 
கல்லட்டியல் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 04:56

துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும், வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டன. எங்கு பார்த்தாலும் வெண்மை. வானம், பூமி, மரங்கள், வீடுகள் எல்லாமே வெண்பனிப் போர்வையில் கண்களைக் கொள்ளை கொண்டன.

இந்த அழகையெல்லாம் ரசிக்க பெண்களுக்கெங்கே நேரம்! அழகிய வெண்பனிக் குவியலுக்குள் எழுந்து நிற்கும் வீடுகளுக்குள் எல்லாம் பெண்கள் அவசரமாய்த்தான் திரிவார்களோ?!

காலையின் கருக்கலைக் கூடத் துடைத்தெறிந்த பனியின் வெண்மையில் ஒளிர்ந்திருந்த ஜேர்மனியின் நகரங்களில் ஒன்றான ஸ்வெபிஸ்ஹாலின் மலைச்சரிவொன்றில் அமைந்திருந்த அந்தச் சாம்பல் நிற வீட்டுக்குள் லலிதா பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். எல்லாப் பெண்களுக்கும் உள்ள அதே அவசரம். அதே வேலைச் சுமைகள். ஊதிப் பற்ற வைத்த அடுப்பு மின்சாரத்தில் இயங்கினால் என்ன! ஆட்டுக்கல்லும் குளவியும் கிரைண்டர் ஆனால் என்ன! பெண்களுக்கு வேலைகளுக்குக் குறைவில்லை.

சுந்தரேசனை மட்டும் இந்தக் காலைப் பரபரப்பு எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை. லலிதா போட்டுக் கொடுத்த தேநீரை உறிஞ்சி உறிஞ்சிச் சுவைத்த படி, அவன் அன்றைய பத்திரிகையை நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை சுந்தரேசனுக்கு மனைவியாக லலிதா வாய்த்தது போல், லலிதாவுக்கும் ஒரு மனைவி வாய்த்திருந்தால் லலிதாவின் காலைகளும் நிதானமாக விடிந்திருக்குமோ?!

லலிதா தேநீர், சாப்பாடு எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்தி மேசையில் வைக்கும் போதே பிள்ளைகளின் அறைகளில் அலாரங்கள் அலறின. அலாரங்கள் எப்படித்தான் அலறினாலும், அவள் போகாமல் அவர்கள் எழும்ப மாட்டார்கள்.

லலிதா பிள்ளைகளின் அறைகளுக்குள் விரைந்தாள். மூத்தவன் மணிக்கூட்டின் அலாரபட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான். சின்னவனோ அலாரத்தின் அலறல் பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நடுவனோ “அம்மா, இன்னும் கொஞ்சம் படுக்கப் போறன்." என்று கெஞ்சினான்.

மூன்று பேரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, பாடசாலைக்கு அனுப்பி, சுந்தரேசனையும் வேலைக்கு அனுப்புவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. நேரமும் 7.30 ஐத் தொட்டு விட்டதால் ´அப்பாடா´ என்று அமரக் கூட முடியாமல் அவசரமாகத் தலை சீவி, சப்பாத்தையும் போட்டு, ஜக்கெற்றையும் போட்டுக் கொண்டு, கைப்பையுடன் படிகளில் ஓடி இறங்கினாள்.

வாயிற் கதவைத் திறந்ததும், சில்லென்ற குளிர்ந்த காற்று முகத்திலறைய, காது மடல்கள் விறைக்க வேறுவழியின்றி பனிக்குவியலுக்குள் காலை வைத்த போது இடது பக்கமிருந்து வந்து கொண்டிருந்த ´றூடி´யுடன் மோதப் பார்த்தாள். ஆனாலும் மிகவும் பிரயத்தனப் பட்டு மோதுவதைத் தவிர்த்துக் கொண்டாள்.

ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தபடி ஜக்கெற்றைக் கூடப் பூட்டாமல் விரையும் அவளைச் சிரிப்புடன் பார்த்த றூடி, “உன்னோடு மோதியிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு இனிமையான நிகழ்வைத் தவிர்த்து விட்டாயே!" என்று சலிப்படைந்த பாவனையுடன் ஜேர்மனிய மொழியில் சொன்னார்.

63 வயது நிரம்பிய ஜேர்மனியரான றூடியின் குறும்பு எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவரது அப்படியான குறும்பு அவளை என்றைக்குமே கோபப் படுத்தியதில்லை. காரணம் அவளின் அப்பாவின் வயதுதான் றூடிக்கும். ´அப்பாவைப் போலவே எப்போதும் குறும்பு.´ நினைத்துக் கொண்டவள் சிரித்தாள்.

சற்று நேரத்துக்கு முன்பு வரை அவளுள் இருந்த இறுக்கமான நிலைமாறி மனசுக்குள் ஒரு மகிழ்வு ஓடியது.

காரில் குவிந்திருந்த பனியை வழித்தெறிந்து, இறுகப் படிந்திருந்த பனியைத் தேய்க்கும் போது, குளிரில் கைவிரல்கள் கொதித்தன. விரல்களை ஊதிவிட்டு, ஊதிவிட்டு பனியைச் சுரண்டியெறிந்து விட்டு காரினுள் ஏறினாள். ஹியரிங்கைப் பிடித்த போது ஏற்கெனவே குளிரில் கொதித்த விரல்களும், கைகளும் நடுங்கின. கார் கண்ணாடிகளைப் புகார் மறைத்தது. எதுவுமே தெரியவில்லை. நெஞ்சுக்குள் குளிர்ந்தது.

´வேளைக்கே வெளிக்கிட்டு பஸ்சிலேயே போயிருக்கோணும். கராச் இல்லாமல் வின்ரரில் கார் சரி வராது.´ மனசு முணுமுணுத்தது. குளிரில் உடம்பே நைந்து போனது போல இருந்தது. கைவிரல்களின் நுனிகள் வெடித்து, இரத்தம் கசியத் தயாராக இருந்தது.

இந்த வதைகளைத் தாங்க மாட்டாத அவள் ´என்ன வேலை, அதுவும் இந்தக் குளிரிலை. பேசாமல் வீட்டிலை நிண்டு றேடியோ கேட்டு, புத்தகங்களை வாசிச்சு… சந்தோஷமாக வாழ முடியாமல் வேலை வேலையெண்டு... என்ன வாழ்க்கையோ..´ மனதாரச் சலித்தாள்.

கார் கண்ணாடியைக் கீழே இறக்கி விட்டாள். றூடி நிதானமாகத் தனது பென்ஸ் காரைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற கையைக் கூடத் தூக்க முடியாத நிலையில் தலையை மட்டும் ஆட்டி விடை பெற்ற லலிதாவுக்குக் கார் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது. குளிர் புகாராகக் கண்ணாடிகளை மறைத்தது. கார் வெப்பமூட்டியின் வெப்பத்தில் புகார் விலகி கார்க் கண்ணாடிகள் தெளிவாகும் வரை மிகுந்த சிரமப் பட்டாள்.

தெளிந்த கார் கண்ணாடிகளினூடே பனிப்பூக்கள் பூத்த மரங்கள் மிகவும் அழகாகத் தெரிந்தன. அவளின் மனமோ ஊரிலிருக்கும் அப்பாவிடம் தாவி மெல்லிய சோகத்துள் ஆழ்ந்து போனது. ஸ்மார்ட்டாக காரின் பனியைத் தேய்த்துக் கொண்டிருந்த றூடியையும் முந்தநாள் தபாலில் வந்த புகைப்படத்தில் இருந்த அப்பாவின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததின் விளைவே லலிதாவின் சோகம்.

லலிதாவின் அப்பாவும் ஒரு காலத்தில் ஸ்மார்ட்டாகவும், குறும்பாகவும் இருந்தவர்தான். பெண்களைப் பெற்றதால் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் வாழ்க்கையை அநுபவிப்பதில் ஆசை கொண்டவர். ஆனால் பெண்களின் பிறப்பே இன்னொருவனின் கையில் ஒப்படைக்கப் படுவதற்காகத்தான் என்று கருதும் சமுதாயத்தில், அவர் நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது அவர் செய்த தப்பு. அதற்குத் தண்டனையாக நகைக்கும், வீடு, வாசல்களுக்குமாய் பெண்களைப் பெற்ற எல்லா அப்பாமார்களையும் போல அவரும் தன்னையும், தன் தனித்துவமான ஆசைகளையும் கரைத்துக் கொண்டது நியம்.

இந்த நியந்தான் லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சமுதாயக் கோட்பாடுகளில் நெரிபட்டவர்கள் பெண்கள் மட்டுந்தானா? பெண்களைப் பெற்றவர்களுந்தான். சமூகத்தின் மேல் அவளுக்குக் கோபந்தான் ஏற்பட்டது.

அவளுக்கு இப்போதும் நல்ல ஞாபகம். அப்பாவுக்கு சுற்றுலா என்றால் நிறையவே பிடிக்கும். இலங்கையின் எல்லாப் பாகங்களையும் மனைவி, குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட்ட அவருக்கு இந்தியாவின் மகாபலிபுரம் போன்ற அழகிய இடங்களையும் மனைவி குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட வேண்டுமென்ற அளவிலாத ஆசை.

அப்போ அவருக்கு சம்பளத்துடன் ´அரியஸ்´ ஆக ஒரு தொகைப் பணம் வந்திருந்தது. அப்பணத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதாகத்தான் அவர் எண்ணியிருந்தார். அரியஸ் பணத்துடன் வீட்டுக்கு வரும் போதே அவர் முகத்தில் உற்சாகம் பொங்கியிருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தான் லலிதா பூப்பெய்த வேண்டுமா? வீட்டிலே நடந்த ஒரு சந்தோசத்தில் இன்னொரு சந்தோசம் கரைந்து விட்டது.

பெரியவளாகி நிற்கும் லலிதாவையும், தொடர்ந்து வரிசையில் நிற்கும் மூன்று பெண் குழந்தைகளையும் காட்டி நகை, நட்டு, காணி, வீடு என்று அவர்களுக்குச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி லலிதாவின் அம்மா, அப்பாவின் சுற்றுலா ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

அம்மாவின் விருப்பப்படி அப்பணத்தில் லலிதாவுக்குக் கல்லட்டியலும், மிகுதியில் தங்கைமாருக்குச் சில நகைகளும் செய்வதாகத் தீர்மானிக்கப் பட்டது.

சில நாட்களில் அப்பாவின் அரியஸ் பணம் சிவப்பு வெள்ளைக் கற்களுடன் அழகிய அட்டியலாகவும், சங்கிலிகளாகவும், காப்புகளாகவும் மாறிவிட்டது.

லலிதா அட்டியலைப் போட்டுக் காட்டிய போது அப்பாவின் முகத்திலும் பூரிப்புத் தெரிந்தது. ஆனாலும் அப்பாவின் சுற்றுலா ஆசை அட்டியலுக்குள் தொலைந்து விட்டதே என்ற கவலை லலிதாவைப் பற்றிக் கொண்டது.

தொடர்ந்த காலங்களிலும் அப்பாவுக்கு வரும் பணமெல்லாம் காணி வாங்குவதில், வீடு கட்டுவதில், நகைகளில், ஒவ்வொரு பெண்ணினதும் கல்யாணச் செலவில் என்று கரைந்தன. வேலையும், ஊதியமும் கடமையாய், கட்டாயமாய் என்றாகி விட்டது.

லலிதா வேலை செய்யத் தொடங்கி வெகு நேரமாகியும் அப்பாவின் நினைவாகவே இருந்தாள். மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையிலும் அவளின் நினைவுகளின் ஓரத்தில் சோகம் இழைந்தோடிக் கொண்டிருந்தது. ´நாங்களாவது பக்கத்தில் இருந்திருந்தால் அப்பா பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருப்பார். பொல்லாத நாட்டுப் பிரச்சனை அதற்குக் கூட வழியில்லாது செய்து விட்டதே.´ பேதலித்த மனதுடன் காரை விட்டு இறங்கினாள்.

முன்னாலிருந்த சிறுவருக்கான விளையாட்டு மைதானத்தில் குளிரையும் பொருட்படுத்தாது சில ஜேர்மனியக் குழந்தைகள் பனிகளைச் சேர்த்து பெரிய ஐஸ் மனிதன் ஒன்றைச் செய்து விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் சில குழந்தைகள் ஐஸ் கட்டிகளை உருட்டி, உருட்டி ஒருவரையொருவர் கலைத்துக் கலைத்து எறிந்தார்கள்.

அவர்களின் விளையாட்டில் லலிதா தன்னை மறந்து லயித்திருந்த அந்தக் கணத்தில் ஒரு சிறிய ஐஸ்கட்டி சில்லென்று அவளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பினாள். றூடி ஒரு பெரிய ஐஸ் உருண்டையுடன் நின்று, லலிதாவுக்கு எறியப் போவது போலப் பாவனை காட்டினார்.

Nein... Nein... (நோ.. நோ..) லலிதா சிரித்தவாறு கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அவளுக்குள் இருந்த இறுக்கம் கலைந்து மீண்டும் அவள் மனசு இலேசாகியிருந்தது. அந்த உஷாருடன் வீட்டுக்குள் மீண்டும் பம்பரமாய் சுழலத் தொடங்கினாள்.

சந்திரவதனா
30.1.2000

Last Updated on Monday, 07 September 2009 06:12
 
மரணங்கள் முடிவல்ல PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 04:55

சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.

இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் ´வெள்ளை´ என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.

பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகனை, ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடி வதங்கியபடி கண்டதும் செல்வமலர் சந்தோசம், துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய “பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா..?!" என்றபடி கட்டியணைத்துக் கதறினாள். ´களத்தில் நின்றபோதும் அம்மா, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை´ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் செல்வமலரைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும், அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாச தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது அவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.

கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வர முடிந்தது என்றாலும், இந்தச் சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் செல்வமலருக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சி வரை போன கணவன் கனகசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

இப்போ, வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவார், என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.

“என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்திடோணும். நான் பட்டுச் சாத்துவன், பொங்கிப் படைப்பன்…" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதி கொடுத்தாள். அவள் மன்றாட்டம் வீண் போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை கனகுவும் வந்து சேர்ந்து விட்டான். செல்வமலரின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோசத் துள்ளல் அவளிடம்.

நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனம் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். கனகுவுக்குக் கூட அவளது குழந்தைத் தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாத படி கூடியிருந்து கதைத்து விட்டு பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.

அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து ´அமைதி காக்க´ என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய பின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக்கோட்டில் வாழ்கின்ற செல்வமலரையும் தொற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும், காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் செல்வமலரின் வீடு வரை வரவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும், தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் கடந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும், கொப்புளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.

கனகு மாங்காய்ப்பூட்டைக் கொண்டு போய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் வீதியையும் எட்டிப் பார்த்தான். வலது பக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய வீதியிலும் சரி, இடது பக்கம் பல்லப்பையை நோக்கிய வீதியிலும் சரி எந்த வித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை. பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டி விட்டு உள்ளே வந்தவன் படுத்கை அறைக்குள் புகுந்து கொண்டான்.

மூன்று பிள்ளைகளும், கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்வமலரின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவு போல் அந்தச் சத்தம் கேட்டது.

“கனகசுந்தரம்... கனகசுந்தரம்... கதவைத் திற."

முதலில், ஏதோ கனவென்றுதான் செல்வமலர் நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்ட போதுதான் ஆழ்ந்து தூங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.

´மூன்று மாதங்களின் பின் இன்றுதானே வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்குகிறேன்´ என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருந்த கனகுவும் திடுக்கிட்டுக் கண் விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.

´அது இந்தியப்படைதான்.´ பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்து கொண்ட கனகுவும், செல்வமலரும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.

“கனகசுந்தரம்..!"

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.

“டேய், அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா" செல்வமலர் குரல் எழுப்பிக் கதைக்க முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கி, கிசுகிசுப்பாக, தழதழத்த குரலில் ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.

“கனகசுந்தரம், கதவைத் திற!"

மீண்டும் அதட்டலாய் ஒலித்த அந்தக் குரல் செல்வமலரினதும், கனகுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும், தீபிகாவும் உசாராகி விட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகி விட்டான்.

“அப்பு, நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப் போயிடடா." செல்வமலரிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து, துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.

“தம்பி, வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்." கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக் கொடிகள், ரோஜாச் செடிகள்… எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க, அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும், கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.

கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின் பக்கக் கதவை மெதுவாகத் திறக்க, ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் பட முன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.

கவிதா வெலவெலத்துப் போனாள். “தம்பி போகாதை, இங்காலை வா" மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த செல்வமலர் வெடிச் சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக் கொண்டு, வாசலில் நின்ற இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.

அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத் தனமாக அழுத்திப் பிடித்தது. “இங்கை புலி இருக்குது." பார்வையால் அவளை விழுங்கிய படியே அந்தக் கைக்குரியவன் கர்ச்சித்தான். “இல்லை, இல்லை" செல்வமலர் நடுங்கிய படி மறுத்தாள். அவன் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன், நடுவீதியில் இருத்தினான்.

“ஐயோ… என்ரை பிள்ளையளும், மனுசனும் உள்ளை" கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும், கனகுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து செல்வமலரின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறி பார்த்து நீட்டிய படி நின்றான்.

கனகுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். செல்வமலர்தான் அவனை அனுப்பப் பயந்து, அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும், பிள்ளைகளையும் இவர்கள் கண்களில் பட விடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுவீதியில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்றும் அவளுக்குப் புரியவில்லை. பின் பக்கம் போன கவிதாவும், ராஜனும் என்ன ஆனார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. ´எப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்.´ பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.

அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில், பயப்பிராந்தியைத் தரக் கூடிய முகங்களுடனான இந்திய இராணுவத்தினர் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.

´என்ரை பிள்ளையைக் காட்டிக் குடுக்கவோடா இவங்களைக் கூட்டிக் கொண்டு வந்தனி? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?´ செல்வமலருக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்திழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.

பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில், வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுவீதி என்றும் பாராமல் வீதியில் புரண்டு புலம்பினாள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும், புட்டளையிலிருக்கும் புட்டளைப் பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.

இதே நேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

“தம்பி.., தம்பி.., எங்கையடா நீ.." கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டிய படியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை “அக்கா..!" என்ற படி ராஜன் கட்டிப் பிடித்தான்.

“அக்கா, தண்ணி.." திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.

“தம்பி..!" இறுகக் கட்டிப் பிடித்தாள்.

“அக்..கா.., தண்...ணி.."

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.

“விடு... என்ரை தம்பி" கவிதா திமிறினாள்.

“தம்பிக்குத் தண்ணி..." அவள் முடிக்க முன்னரே இன்னுமொரு முரட்டுக்கை அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது.

“அ..க்..கா..!" மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.

இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுவீதியில் இருத்தப் பட்டாள். இருட்டிலும், அவள் நெஞ்சுச் சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது. பிசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததும், “தம்..பி..!" குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள்.

மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.

நான்கு மணி நேரத்துக்கு முன்பு சந்தோச வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக் களிப்புடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர.. கனகு அவர்களிடம் போய் “என்ரை பிள்ளை..?" கேட்டான்.

“நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து, அவன் ´புலி´ எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்டு எடுத்துக் கொண்டு போ." சொல்லிக் கொண்டு சந்தோசமாகப் போனார்கள் அவர்கள்.

களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழ்ந்த வீட்டிலேயே உயிரையும், உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில், அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்க, நடைப்பிணங்களாக கனகசுந்தரமும், செல்வமலரும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

காலம் - 4.12.1987

சந்திரவதனா
செப்டெம்பர் 1999

Last Updated on Monday, 07 September 2009 06:01
 
சங்கிலித் துண்டங்கள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 04:53
அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்த மகிழ்வலைகளில் என் மனம் குதூகலிக்க மறுத்தது.

இந்து என் மனநிலையைப் புரிந்து கொண்டவளாய், என்னை சந்தோஷப் படுத்த எண்ணி ஏதேதோ கதைத்தாள். சிரித்தாள். நானும் ஒப்புக்குச் சிரித்துக் கொண்டு நடந்தேன்.

ஆரவாரப்பட்டுக் கொண்டு வேகமாக ஓடி வந்த கடல் அலைகளில் ஈரமாகிப் போன என் சட்டையின் கீழ்ப்பகுதி என் கால்களில் ஒட்டிக் கொண்டு நின்றது. என் மனசு மட்டும் எதிலுமே ஒட்டாமல் வெறுமையாக இருந்தது. அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கைமாருடன் இந்தக் கடற்கரையில் நடந்த இனிய காலங்கள்... சிரித்து, ஓடி, விழுந்து… எத்தனை இனிமை! நினைவுகள் தந்த சிலிர்ப்பில் மனம் களித்து, உடனேயே கலைந்தது.

“சந்தியா, என்ன மௌனமாகீட்டாய்? எதையும் நினைச்சு நினைச்சு மனசைக் குழப்பிக் கொண்டிராதை. இந்தளவாவது வந்து அப்பாவோடை இருக்க முடிஞ்சதை நினைச்சுச் சந்தோஷப்படு." என் சோகத்தை எல்லாம் துடைத்தெறிந்து விடுவதாய் கங்கணம் கட்டிக் கொண்டவளாய் இந்து என்னை அன்பாகக் கடிந்தாள்.

ஊற்றாய் சுரந்து, எனக்குள்ளே அருவியாகப் பிரவாகித்துக் கொண்டிருந்த சோகம் அவளின் அன்புத் தொடுகையில் தடுமாறி அணைமீறி விழிவழி பாய்ந்து கடலுடன் கலந்தது. அப்பா..! போயிட்டார். முந்தநாள் எல்லாம் முடிந்து போய் விட்டது. என்ரை அப்பா என்னை விட்டுப் போயிட்டார். இந்த உலகத்தை விட்டே போயிட்டார்.

எத்தனை வாட்டசாட்டமாக இருந்தவர். மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு… இராஜ ராஜ சோழன் சிவாஜியைப் பார்த்து அப்பாதான் நடிக்கிறாரோ என்று சின்ன வயசில் எனக்கு ஒரு சந்தோசமான சந்தேகம் வரும். அப்படி ஒரு அழகும், ஆளுமையும் அப்பாவிடம். அவர் வாழ்வு இத்தனை வேகமாக முடிந்திருக்கத் தேவையில்லை. எதையும் நம்பவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மனசு விம்மி விம்மித் துவண்டது.

வவுனியாவில் வைத்தியர்கள் பற்றாக்குறையாம். பாதிக்கப் பட்டது யார்? எம் தமிழர்கள்தான். பத்துக்கு மேற்பட்ட வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய மூன்று பெரிய வைத்தியசாலைகளுக்குமாக மூன்றே மூன்று வைத்தியர்கள் மட்டுமே. அடிபட்டுப் போன தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர் என்ற போதுதான் கொடுமையின் தீவிரம் என்னையும் குதறியது. மனம் குமுறியது.

ஆனாலும் நேற்று வவுனியா புகையிரத நிலையத்துக்கு வரும் வரை நான் அழவேயில்லை. அம்மாவைக் கட்டித் தழுவி விடை பெறுகையில் என்னையும் மீறி ஏக்கம் பெருமூச்சாய் வெளி வந்தது. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. அப்போதும் நான் அழவேயில்லை. எங்கே அம்மா அழுது விடுவாளோ என்ற பயம் தான் என்னைத் தடுத்திருக்க வேண்டும்.

திடீரென்று, அம்மா ஜேர்மனிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ´அப்பா மரணத்தின் வாசலில் நிற்கிறார்´ என்ற போது மனம் புலம்ப, விழி கசிய அவசரமாய் விமானமேறி விட்டேன். வழியெல்லாம் அப்பாவை நினைத்து அழுத மனசு, ஜேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளையும் நினைத்து அழுதது. ´உயிருக்கு உத்தரவாதமில்லாத தாய்நாட்டை நோக்கிய இந்தப் பயணம் சரிதானா´ என்ற கேள்வி என்னைக் குடைந்தெடுத்தது.

வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் ரோட்டின், அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, ஏக்கம் தோய்ந்த விழிகளுடன் காத்திருந்த அப்பா, வாடி, வதங்கி நோயின் வலியில் வேதனை ஓடி இருந்த விழிகள் ஒரு கணம் பிரகாசிக்க, தினவெடுத்த அந்தத் தோள்கள் சற்று ஒடுங்கிப் போயிருந்தாலும், பாசப்பிரவாகத்தில் துடிதுடிக்க “ஓ..” வென்று கதறியபடி எனை ஆரத்தழுவி விம்மிய போது குடைந்தெடுத்த குற்ற உணர்வுகள் பறந்தோட, அவர் விழி துடைத்து, தலை கோதித் தாயானேன்.

என்னைத் தன் தோளில் சுமந்து, சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வாழும் படியாக நேர்த்தியாக வளர்த்தெடுத்த என் அப்பாவுக்கு தன் தலை சாய்க்க, என் தோள் தேவைப் பட்டிருந்தது.

ஏழு நாட்கள்..! ஏழே ஏழு நாட்கள். பன்னிரண்டு வருடங்களின் பின் அப்பாவுடனான அந்த ஏழு நாட்களில் ஒரு குழந்தையாய் அப்பா நடந்து கொண்ட விதம் என் பயணத்துக்கு அர்த்தம் கூறியது. அனர்த்தம் நிறைந்த எனது நாட்டை நோக்கிய என் வரவுக்கான அவசியத்தைக் கூறியது. இன்னும் என்னவெல்லாமோ கூறியது. அப்பாவின் இந்த இறுதி நாட்களிலாவது, எங்கோ அந்தகாரத்துக்குள் பிள்ளைப் பாசத்தைத் தேட வையாது, ஓடி வந்து இந்த ஏழு நாட்களையும் உயிர்ப்புடையதாக்கியதில் எனக்குள் நிம்மதி நிறைந்த தாய்மைப் பூரிப்பு ஏற்பட்டது.

அதனால்தானோ என்னவோ எட்டாவது நாள், அப்பாவின் ஜீவன் அவரை விட்டுப் போன போது, நான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. என் மனம் மட்டும், அப்பாவுடன் கை கோர்த்து என் அழகிய பருத்தித்துறை மண்ணில் நடந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நினைவுகளும் மீட்டப்பட்டு மனம் சிலிர்த்தது.

கண்ணின் மணி போலக் காத்து, என்னை வளர்த்த என் அப்பாவை விட்டு... எப்படி முடிந்தது என்னால்? பன்னிரண்டு வருடங்கள்... நான்... எனது கணவர், எனது பிள்ளைகள்... என்று ஒரு வகை சுயநலத்துடன் இருந்து விட்டேனே! இந்தப் பன்னிரண்டு வருடங்களின் ஒவ்வொரு கணத்தையும் என்னைப் பெற்றெடுத்து, தாலாட்டி, சீராட்டி வளர்த்து இந்த சமூகத்தில் நடமாட வைத்த அப்பா, அம்மா என்ற இந்த இரண்டு ஜீவன்களும் எப்படிக் கழித்திருப்பார்கள்! எனக்கு என் பிள்ளைகள் முக்கியமாகி விட்டார்கள். இவர்களுக்கு நான் பிள்ளையில்லையா? இவர்களுக்கு முக்கியமான நான் எங்கோ இருந்து விட்டேனே! தள்ளாத வயதில் என்னைப் பெற்றவர்களைத் தவிக்க விட்டு, பிள்ளைப் பாசத்துக்காக ஏங்க விட்டு, நான் சுமந்து பெற்ற என் பிள்ளைகளுக்காக என்னை அர்ப்பணித்து... மனசு கிடந்து அல்லாடிக் கொண்டே இருந்தது.

ஊரில், பருத்தித்துறையில், சொந்த வீட்டில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராச்சியத்தையே கட்டியாண்டவர்களை, சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத படி தாண்டிக்குளம் தாண்டி வந்து வவுனியாவில் தன்னந் தனியாகத் தங்க விட்டு… நினைவுகள் சாட்டைகளாக மனசை விளாசிக் கொண்டேயிருந்தன. வந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஜேர்மனிக்குப் போனதோடு என் மனம் கல்லாகி விட்டதென்று. வந்தவர்கள் யாரும் சொந்தக்காரர்கள் அல்லர்.

குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவப் படைகளுக்கு கேட்கும் படி குழறியழும் துணிவு யாருக்கும் இல்லையென்றாலும் அவர்கள் எல்லோரும் மூச்சிழுத்து அழுது கொண்டிருந்தார்கள். மூக்கைச் சீறி சேலைத் தலைப்பால் துடைத்தார்கள்.

அப்பாவுக்கும், அப்பாவைச் சுற்றிக் கொண்டு நின்று அழும் இவர்களுக்கும் இடையிலான பிணைப்பு சொந்தம் இல்லை. ஆனால் சொல்லில் வடிக்க முடியாத பந்தம்.

அப்பாவின் கால் மாட்டில் இருந்து அழும் நாகேஸ் அன்ரி என்னை விட இளையவள். அவள்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. எண்பத்தாறில் நடந்த ஒரு கொடூரத்தில் அநுராதபுரத்தில் இவள் கணவனும் வெட்டிப் பிளக்கப் பட்டு விட்டானாம். அப்பா.., அப்பா.., என்று உருகி உருகி அழுதாள்.

அப்பாவின் வலது பக்கம் நின்றழும் பக்கத்து அறை பரிமளாவும் அப்பா.., அப்பா.., என்று விசும்பினாள். என் வயதிலிருக்கும் அவளும் கணவனை இழந்தவள்தான். மதவாச்சியில் அவள் கணவன் கண்ட துண்டமாக்கப்பட்டு காலங்கள் ஓடி விட்டதாம்.

இப்படியே அந்த வீட்டுக்குள் இருக்கும் ஏழு குடும்பங்களும் தமக்குள் ஒவ்வொரு சோகக் கதையைச் சுமந்து கொண்டு என் அப்பாவுக்காக விம்மி விம்மி அழுதன.

அவர்கள் எல்லோருக்கும் என் அப்பா, அப்பா முறையாக இருந்தார். அம்மா, அம்மா முறையாக இருந்தார். இதே போல் என்னை விட இளைய நாகேஸ் அன்ரி எல்லோருக்கும் நாகேஸ் அன்ரிதான். அப்பாவும் அவளை நாகேஸ் அன்ரி என்றுதான் கூப்பிடுவாராம். பாதிக்கப் பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் தமக்குள் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அன்ரி.. என்ற உறவு முறைகளை ஏற்படுத்தி பாசப் பிணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் அப்பாவில் அவர்களுக்கிருக்கும் உரிமை எனக்கில்லைப் போல் ஒரு குற்ற உணர்வு என்னைக் குத்திக் கொண்டிருந்தது. அப்பா படுக்கையில் வீழ்ந்த போது, நான் ஜேர்மனியில் இருக்க சொந்தப் பிள்ளைகள் போல், சகோதரர்கள் போல் பாசத்தைக் கொட்டிப் பார்த்தவர்கள் இவர்கள் தானே! இவர்கள் பாசத்தின் முன் நேசத்தின் முன் நான் எம்மாத்திரம்..! மனசு கூசிப் போயிருந்தது.

எல்லாம் முடிந்து, அன்றைய இரவு எங்கள் மனங்களைப் போலவே அப்பாவின் படுக்கையும் வெறுமையாகக் கிடக்க, ´ஷெல்´ கள் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி காற்றைக் கிழித்து, இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டிருந்தன.

“அம்மா, இனி இங்கை தனிய இருந்து என்ன செய்யப் போறியள்? நாளைக்கு நீங்களும் என்னோடை வாங்கோ. வந்து அங்கை கொழும்பிலை இருங்கோ. கொழும்பிலை இருந்தியள் எண்டால் நான் ஜேர்மனிக்குப் போனாப் பிறகும் உங்களோடை பிரச்சனையில்லாமல் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்." அம்மாவைக் கேட்டுப் பார்த்தேன்.

“இல்லை. அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமையளை எல்லாம் செய்து முடிச்சுப் போட்டுத்தான் இந்த இடத்தை விட்டு நகருவன்." அம்மா ஒரேயடியாக மறுத்து விட்டா.

அம்மாவுக்கு அப்பா மீதுள்ள பிடிப்பும், பிரியமும் நான் அறியாததல்ல. அப்பா கூட வயது போன காலத்திலும் அம்மா மீது மிகவும் பிரியமாகவே இருந்தார். இந்த நிலையில் அம்மாவை எந்த வற்புறுத்தலும் அசைக்காது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.

அதுக்காக, அம்மா அப்பாவுக்கான கடமைகளை முடிக்கும் வரை காத்திருக்க எனக்கு அவகாசம் இல்லை. எனக்கு அவசரம். எனது பிள்ளைகள் ஜேர்மனியில். நான் அவர்களிடம் போய்ச் சேர வேண்டும். வேலைக்கு மேலதிக லீவு போட இயலாது. நாளைக்கு ஃப்ளைட் (Flight). எல்லாவற்றிற்கும் மேலால் வவுனியா பாஸ் நாளையுடன் முடிவடையப் போகிறது. புதுப்பிப்பதென்றால் கொழும்பு வரை போய் திரும்பி வர வேண்டும். அதற்கெல்லாம் எனக்கு நாட்கள் காணாது. என் பிள்ளைகளிடம் நான் போய் விட வேண்டும். அதனால் நான் புறப்பட்டு விட்டேன்.

உயிர் தந்து தன் உடலில் எனைச் சுமந்த என் அம்மாவை விட உயிர் கொடுத்து நான் என் உடலில் சுமந்த என் பிள்ளைகள் எனக்கு முக்கியமாகப் பட்டதால் என் அம்மாவைத் தன்னந்தனியாக விட்டு விட்டு நான் புறப்பட்டு விட்டேன்.

வவுனியா ரெயில்வே ஸ்ரேசனில் ரெயின் வரும் வரை காத்திருந்த போதுதான் அதுவரை அடக்கி வைத்திருந்ததெல்லாம் அணை உடைத்த வெள்ளமாய் மனமுடைத்து வெளிப் பாய்ந்தது. நான் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டேன். பக்கத்தில் நின்ற பெண்தான் என் சோகத்தின் முழுக் காரணம் தெரியாவிட்டாலும் சோகம் பற்றித் தெரிந்தவளாய் என்னைச் சமாதானப் படுத்தினாள்.

ரெயின் வந்து சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவு திறந்து ஏறிய பின்பும் என் விசும்பல் அடங்கவில்லை. அம்மாவைத் தன்னந்தனியாக விட்டுச் செல்கிறேன் என்ற நினைவே என்னைக் கொன்றது. இறாகமவில் சிங்கள இராணுவப் படைகள் ரெயினுக்குள் ஏறி செக்கிங் என்ற பெயரில் எம்மைக் குடைகிறவரை என் விழியோரம் கசிந்து கசிந்து கொண்டேயிருந்தது.

பக்கத்திலிருந்த இளம்பெண் கட்டிக் கொண்டு வந்த இடியப்பப் பார்சலைக் கூட திறந்து காட்டச் சொல்லி அவர்களில் ஒருவன் கிளறிப் பார்த்த போது, விழி நீர் உறைந்து, மனசு அழ மறந்து பயத்தில் வெட வெடத்தது. மிடறு விழுங்கக் கூட துணிவில்லாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது நான் மட்டுமல்ல. அந்த கொம்பார்ட்மெண்டுக்குள் இருந்த அனைவருந்தான். துணிவாகக் காட்சியளித்தவர்கள் கூட விழி பிதுங்க விறைத்தது போல இருந்தார்கள்.

கொழும்புக் கோட்டையில் நிம்மதி மூச்சுடன் இறங்கிய போது சில பேரின் நிம்மதிகள் இராணுவத்தினரால் சூறையாடப் பட்டிருப்பது தெரிந்தது. அறுபதைத் தாண்டிய ஆண்கள் சிலரும், பருவ வயதிலுள்ள பெண்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைதாகி இருந்தார்கள். அவர்கள் இனிக் காணாமற் போய் விடலாம். அல்லது களுத்துறைச் சிறையிலோ வேறெங்கோ அடைத்து வைக்கப்படலாம்.

நினைவுகள் சுமைகளாக அழுத்த ரணமான மனத்துடன் வெள்ளவத்தை வந்த எனக்கு ஒத்தடமாக இருப்பவள் எனது பால்ய காலத்து நண்பியான இந்த இந்துதான்.

ஒத்தடத்தையும் மீறிய வலி எனக்குள். வெள்ளவத்தைக் கடற்கரையின் இயற்கை அழகிலோ, இந்துவின் ஆறுதல் வார்த்தைகளிலோ சமாதானப்பட மறுத்தது என் மனம். நாளை நான் ஜேர்மனியை நோக்கிப் பறக்கப் போகிறேன். என் அம்மாவைத் தனியாக விட்டு விட்டு, ஜேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளிடம் ஓடப் போகிறேன்.

என் முடிவு சரிதானா? என் குழந்தைகளுக்காக என்னைப் பெற்ற தெய்வத்தை விட்டுச் செல்வது சரிதானா? குற்ற உணர்வுகள் என்னைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன.

பேச்சிலே, பாட்டிலே, கவிதையிலே பெற்றவளைத் தெய்வம் என்று புகழ்வது மிகவும் சுலபம். நியத்திலே அந்த தெய்வத்தைத் தவிக்க விட்டு விடுவதுதான் இங்கு அதிகம். அதைத்தான் நானும் செய்யத் தயாராகியிருந்தேன்.

சந்திரவதனா
யேர்மனி
1997
    

(பிறேமன் யேர்மனியிலிருந்து வெளிவரும் பூவரசு இனிய தமிழ் ஏடு
2001 இல் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.)                 

கருத்துக்கள்
Post a Comment
Last Updated on Monday, 07 September 2009 05:45
 
திரும்பக் கிட்டாத அந்த... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by anonym   
Friday, 17 July 2009 09:08
மழைக்காலத்து அமாவாசை இருட்டில்
தொலைந்து போன காசை
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்
தேடுபவளைப் போல்
என் பள்ளிப் பருவத்து பேதைமை மகிழ்ச்சியை
நினைவு வெளிச்சத்தில் தேடிப் பார்க்கிறேன்.
திரும்பக் கிட்டாத அந்த
அரும்பு நாட்களின் ஆனந்தத்தை
விரும்பி அழைக்கிறேன்
அது என் எண்ண வாசலில்
எட்டிப் பார்க்கையில்
இளமைச் சிறகடித்துப் பறக்கிறேன்.
 
என் இதய வெளிகளில் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by ஒரு மனசு   
Friday, 17 July 2009 09:05
என் இதய வெளிகளில்
நீ பதித்த ஞாபகச் சுவடுகளை
இயலுமானால் அழித்து விடு
முடியாவிடின்
சுவர்களைத் தாண்டி உன்
சுவாசங்களை உலவ விடு.
 
நித்திரைகள் நித்தியமானால் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by ஒரு மனசு   
Friday, 17 July 2009 08:56
நித்திரைகள் நித்தியமானால்
இனி நித்தம் உனை நினைத்து
பித்துப் பிடித்தல் இருக்காது
என நினைக்கையில்
மனசு நித்திரை கேட்கிறது.
 
பணம் பணமறிய அவா PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by ஜாஃபர்சாதிக் பாகவி   
Friday, 17 July 2009 08:05

அன்னை தேசத்துஅகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்தவறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ளமாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள்
தலை சாய்த்துக்கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப் படாத் திசைகளில்
தொடர்கிறது நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா என்றுதான்
கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா என்றல்லவா
பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப் பெற்று விடுகிறது நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்...
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில கைக் குழந்தையைத் தொலைத்த தாயின்
பதற்றத்தைப் போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசியபின்னால்
அடையும் அவஸ்தைகள்... நம்மில்
பலருக்கு தாம்பத்திய வாழ்க்கை கூட
தவணை முறையில்தான் தட்டுப்படுகிறது....
தொலைபேசியிலும் தபாலிலும் கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில் இல்லறம் நடக்கிறது...
மனைவியின்மூச்சுக் காற்று தந்த சுகம் கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம் தன்னந்தனியாய் இந்தத் தீவுகளில்...
வீடு கூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?

உயிரோடு இருக்கும்பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான் கொடுக்க முடிகிறது செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும் காகிதங்கள் உணருமா பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும் எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!

காலத்தின்இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல் வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல தபால்களுக்காக...

வாழ்க்கையின் பாதி விரக்தியிலும், விரகத் தீயிலும் எரிந்து போகும்
நம் வாலிப வாழ்க்கை கடைசியில் நரம்புகள் அறுந்து போய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?

- கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி

 

Comments

மாதங்கி hat gesagt...

கவிதை பிரமாதம்
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார்-
வைர வரிகள்

இது போன்ற கவிதையை வலைப்பூவில் அடையாளம் காட்டியதற்கு நன்றி

12:37 PM

 

தேவ் | Dev hat gesagt...

nijangal nenjai thoduvathu nicchyam...

intha padhivu atharkku saandru

Dev
http://mindcrushes.blogspot.com/

12:09 PM

Last Updated on Friday, 17 July 2009 08:43
 
வன்னியிலே கவி படித்த வானம்பாடி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 22:28
கவிஞர் தீட்சண்யன் (30.1.1958 - 13.5.2000)

59 க் கலவரத்துக்குள்தான் அவன் பிறந்தவனாம். தொட்டில் எல்லாம் வாங்கி வைத்து விட்டு அம்மாவைப் பிரசவத்துக்காக வடக்கே விட்டு வந்து பார்த்த பொழுதுதான் தொட்டில் எரிந்து கொண்டிருந்ததை அப்பா கண்டாராம்.

உடைமைகள் எல்லாம் கருகிப் போனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மட்டுமல்ல. கொழும்புத் தமிழர் பலருக்கும்தான்.

அவன் பிறந்த பலன்தான் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று சில வாய்கள் முணுமுணுத்தாலும் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முத்தானான். மூத்த பிள்ளை. மூத்த பேரப்பிள்ளை. மூத்த மருமகன். மூத்த பெறாமகன்... இப்படியே எல்லாவற்றிலும் அவன் மூத்தவனாய், முத்தானவனாய் மிளிர்ந்தான்.

எனக்கும்தான் அவன் மூத்தவன். அவன் இருந்த கருப்பைக்குள்தான் அவனுக்கு அடுத்து நானும் இருந்தேன். அவன் சுவைத்த அம்மாவின் மார்பகங்களைத்தான் நானும் சுவைத்தேன். அவன் கிடந்த மடிகளில்தான் நானும் தவழ்ந்தேன். அவன் சாய்ந்த தோள்களில்தான் நானும் தூங்கினேன். அவன் ஓடிய எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நானும் கால் பதித்தேன்.

அவன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ராஜா. பிறேமராஜன் எனப் பெயரிட்டிருந்தாலும் ராஜன் என்றே அம்மா அவனை வாஞ்சையுடன் அழைப்பாள். அன்போடு அணைப்பாள். எல்லோருக்கும் அவன் ராஜன்தான். சிரிப்பும், துடிப்பும், அறிவும், குறும்பும், அழகும் அவன் கூடவே பிறந்தவை.

நேற்றுத் தோசை சுடும் போதும் வழமை போலவே அவன் பற்றிய சில நினைவுகள். இலுப்பெண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பெண்ணெய் வாங்குவாள். இலுப்பெண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடுமாம். இந்த விடயங்களிலெல்லாம் அம்மா கவனம். ஒவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.

இலுப்பெண்ணெய்யை சும்மா சாப்பிடவோ குடிக்கவோ முடியாதுதானே. கசக்கும். அதுவும் ஊர் இலுப்பெண்ணெய் நேரடியாகக் கையால் பிழிந்தெடுக்கப் பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கையாளும் உத்தி தோசைக்கு இலுப்பெண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சுடுவது. அப்படிச் சுட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.

அடுப்புக்குள் சுள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சுடும் போது எங்கள் வீடு முழுக்க உழுந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.

எண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சுடச்சுடச் சாப்பிட்டால்தான் சமிக்கும் என்பதால் அம்மா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு சுட்டுச் சுட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.

முதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய்த் தோசை. அடுத்து இரண்டோ, மூன்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பெண்ணெய்த் தோசை. கடைசியாக ஆசைக்கு ஒரு நெய்த்தோசை. அண்ணன் ஒரு பிடிபிடித்து விட்டு வருவான்.

இலுப்பெண்ணெய் தோசையை விட நெய்த்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பெண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.

அண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன்தான் இருக்கும்.

அம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.

நானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதைந்து போனேன். ஏன் ஏன்..? என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவனைப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள்? இன்னும் அவள் மனம் என்ன பாடுபடும்?

அவள் மட்டுமா? இன்னும் எத்தனை அம்மாக்கள்!

சந்திரவதனா
13.5.2008


முகவரி தேடும் மனவரிகள்


Comments
Last Updated on Wednesday, 25 June 2014 07:23
 
ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 22:25
இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு விரைந்து, அங்கு வரும் உணர்வு அலைகளுக்கு ஏற்ப கட்டளை மின்னலைகளை உருவாக்கி, உடலின் வலிகளையும், நோய்களையும் நீக்க வல்லது.

என்னை ஒரு சிலர் கேட்பார்கள் "எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில், உலகில் என்று இருக்கின்றன. நீயென்ன சும்மா உந்தச் சினிமாப் பாடல்களை ரசிக்கிறாய்" என்று. அவர்களுக்கு நான் சொல்லும் பதில்கள் அவர்களைத் திருப்திப் படுத்துகின்றனவோ, இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இசை என்பது எனது உயிரை அசைக்கிறது என்பது உண்மை. எனது உணர்வுகளைத் தாலாட்டுகிறது என்பது உண்மை. எனது ஞாபகங்களை மென்மையாகவும், தன்மையாகவும் மீட்டுகின்றது என்பது உண்மை.
Last Updated on Friday, 19 November 2010 10:47
Read more...
 
சில நிர்ப்பந்தங்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 22:23
காரை நிற்பாட்டி விட்டு மணியைப் பார்த்தேன். வேலை தொடங்க இன்னும் 5நிமிடங்கள் இருந்தன. எனக்கொரு வசதி. நான் வேலை செய்யும் வங்கியும், தபாற்கந்தோரும் பக்கத்துப் பக்கத்திலேயே இருப்பதால் வேலைக்கு வரும்போதே தபாற்கந்தோர் வேலைகளையும் முடித்து விடுவேன்.

அன்றும், முதல்நாள் இரவு தம்பிக்கு எழுதிய கடிதத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். அந்த 5நிமிடங்களுக்குள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்து விட எண்ணி வாசித்தேன்.

19.11.1993 என்று திகதியிட்ட அக்கடிதத்தில்
அன்பு ####, எப்படி இருக்கிறாய்? பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்... இவ்வளவு சாவுகள்...! மனசை நெருடுகின்றன... என்று தொடங்கி உனக்கொன்றும் ஆகவில்லை என்பதில் சந்தோசம். என்று மிகவும் சுயநலமாக முடித்திருந்தேன். இம்முறை அவனுக்கு நிறைய எழுத முடிந்ததில் எனக்கு நிறையவே சந்தோசம்.
Last Updated on Thursday, 19 December 2013 08:24
Read more...
 
ஓடிப்போனவள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 22:21
தோளில் என் சின்னவனைப் போட்டுக் கொண்டு ஒழுங்கைகள் தாண்டி குறுக்கு வழியால் எனது மாமி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதுதான் அவளைக் கண்டேன். அவளது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். ஆனால் அது அவள்தானா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருந்தது.

என்னோடு அவள் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவளை அழகி என்று சொல்ல முடியா விட்டாலும் அவள் கூந்தல் அழகு. நீளக் கூந்தலை நேர்த்தியாகத் வாரி இழுத்து அழகாகப் பின்னியிருப்பாள். அவள் அம்மாதான் அவளுக்குப் பின்னி விடுவாளாம். ஒற்றைப் பெண்பிள்ளை.

நான் ஐந்தாம் வகுப்புக்குப் போன போது அவள் ஆறாம் வகுப்புக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. எங்களோடு இருந்தாள். வரிசையெடுத்துப் பார்த்து இருந்த போது அவள் எங்கள் எல்லோரையும் விட உயரமாக இருந்ததால் வகுப்பில் கடைசி வாங்கில்களின் வரிசையில் கடைசி மூலையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

அவளுக்கு அந்த நீண்ட கூந்தலும் இல்லையென்றால் நாங்கள் அவளை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டோம்.

திடீரென்று ஒருநாள் அவள் பாடசாலைக்கு வரவில்லை. ஓடிப்போய் விட்டாளாம். அதுவும் பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப் போய் விட்டாளாம். வகுப்பறையில் கடைசி மூலையில் இருந்தவள் "நடுச்சாமத்திலை பாத்ரூம் போகோணுமெண்ட, தாய் கூட்டிக் கொண்டு போனவவாம். "ஏனணை கூட வாறாய். நீ அதிலை இரு. நான் ஆறுதலாப் போயிட்டு வாறன்" எண்டு சொல்லிப் போட்டுப் போனவள் அப்பிடியே போயிட்டாளாம்." என்று பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல சந்து பொந்துகளில் கூடப் பேசப் பட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இவளை விடப் பதினைந்து வயது கூடவாம்.

பத்து வயது கூட நிரம்பாத எனக்கு அப்போது ஓடிப்போவதன் தாத்பர்யமே புரியவில்லை. ஏன் படிக்காமல் போனாள்? என்ற ஒன்றுதான் எனக்குள் பெரிய கேள்விக்குறியாய் நின்றது. வகுப்பில் ஒரே அவள் கதையாய் இருந்ததால் அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் பல தகவல்கள் கேட்காமலே கிடைத்தன. அவளுக்கு எங்களை விட மூன்று நான்கு வயது கூட என்ற தகவலும் கொசுறாய்க் கிடைத்தது.

ஒருநாள், "இனி அவளைப் பற்றி ஒருத்தரும் வகுப்பிலை கதைக்கக் கூடாது" என்று முருகேசம்பிள்ளை ரீச்சர் பிரம்பை மேசையிலை ஓங்கி அடித்துச் சொன்னதோடு அவள் பற்றிய கதை குசுகுசுப்பாய் மாறி ஒரு கட்டத்தில் முழுவதுமாய் நின்று போனது. இடைக்கிடை எப்பவாவது அவள் நினைவு வந்தாலும் அது அப்படியே என் மனசோடு அடங்கி விடும்.

அந்த அவளைத்தான், 1969இல், "ஓடிப்போன ..." என்று எல்லோராலும் அடைமொழி போட்டு அழைக்கப் பட்ட அவளைத்தான் குட்டிமணி, தங்கத்துரை.. எல்லோரும் கொல்லப்பட்டு, நாடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்த 1983இன் ஒரு நாளில் கண்டேன்.

நீண்ட கூந்தல் எலிவாலாகி, சோகம் முகத்தின் இருப்பிடமாகி.... உருக்குலைந்து நின்றாள். அவள் காலுக்குள் ஒரு சிறுமியும், இரு சிறுவர்களும். என்னைக் கண்டதும் சிரிக்கவா விடவா என்ற யோசனையோடு சங்கோஜித்தாள். நானாவது ஏதாவது கேட்டிருக்கலாம். சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டுப் போய் விட்டேன். பின்னர் மாமியிடம்தான் "அது அவள்தானா!" என விசாரித்தேன்.

அவளேதானாம். கூட்டிக் கொண்டு போனவன் சில வருசங்களில் இவளையும் பிள்ளைகளையும் நடுத்தெருவிலை விட்டிட்டு இன்னொருத்தியோடை போயிட்டானாம். சாப்பிடவே வழியில்லாமல் பல்லைக் கடிச்சுக் கொண்டு வாழ்ந்தவள் `இனியும் இயலாது` என்ற நிலையில் 14வருசங்கள் கழிச்சு தாயைத் தேடி வந்திருக்கிறாளாம்.

எனக்கு அப்போதெல்லாம் அவளை நினைக்க ஒரு புறம் பாவமாக இருந்தது. இன்னொரு புறம் ஏன் மொக்கு மாதிரி ஓடிப்போனவள்? என்றிருந்தது.

பலவருடங்களின்பின்தான் அவள் போனால் ஓடிப்போனவள். அவன் போனால் கூட்டிக் கொண்டு போட்டான். என்ற அவள் அவனுக்கான சமூகத்தின் பார்வை விளங்கியது.

இன்னும் சில வருடங்களின் பின்தான் 13வயதுச் சிறுமியை 28வயதுகள் நிரம்பிய ஒருவன் பாலியல் துர்ப்பிரயோகத்துக்குப் பயன் படுத்தியிருந்த கொடுமை புரிந்தது.

சந்திரவதனா
10.11.2005
Post a Comment

 

Comments


சேலை முள்ளில் பட்டாலும் முள் சேலையில் பட்டாலும் சேதம் சேலைக்குத்தான் என்பதை சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அதேபோல் பெண்ணை கயவன் ஒருவன் கடத்திக்கொண்டு போனாலும் அவனை விட்டுவிட்டு பெண்ணை 'ஓடிப்போனவள்' என்று பட்டம் கட்டுவதுதான் இந்த சமுதாயத்தின் வேலை!

சமுதாயம் என்பது என்ன? சம்மந்தப்படாதவர்களின் கும்பல் தானே.
Posted by டி.பி.ஆர். ஜோசஃப் : Donnerstag, November 10, 2005 10:50:21 AM


எப்பொழுதுமே கெட்ட பெயரைச் சுமப்பது பெண்கள்தான். இந்த விஷயத்திலும் அப்படித்தான்.

Posted by G.Ragavan : Donnerstag, November 10, 2005 3:06:29 PM

Last Updated on Thursday, 19 December 2013 08:24
 
தடம்பதித்தவர்கள் - லxxல் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 22:20
எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.

லxxல்
அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.

இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு "ஹலோ"வோ அல்லது ஒரு "வணக்கமோ" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.

நிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.

அவனது பெயர் லxxல் என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.

Tuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.

இது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.

"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது." என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து "என்னை மறந்து விடாதே..." என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.

நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.

அன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.

எல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. "பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை." சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...?

ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.

ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.

அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும்

என்ற வாக்கியங்கள் இருந்தன.

அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.

ஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. "நீயா எழுதினாய்?" என்றோ, அல்லது "ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.

அந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.

சந்திரவதனா
7.11.2005

Post a Comment

Comments


மனம் கனத்து விட்டது. விழிகள் கலங்கவதற்கான ஆயத்தம். நெஞ்சினுள் அடைப்பது போன்ற உணர்வு. இரண்டொரு தடவை செருமி சுதாகரித்துக்கொண்டேன். நல்லதொரு கால மீட்டல்.

சமுதாயம் என்பது என்ன? சம்மந்தப்படாதவர்களின் கும்பல் தானே.
Posted by நளாயினி : Montag, November 07, 2005 11:06:40 AM


சந்திரவதனா
நெகிழ வைத்த பதிவு. கோட்டையில் பிறந்தாலும் கொட்டியபடியே இருப்பார்கள்... லxxல் என்ற பெயர் மிகவும் அறியப்பட்ட ஒரு பெயராக தோன்றுகிறது


Posted by தேன் துளி : Montag, November 07, 2005 2:24:49 PM

Last Updated on Tuesday, 22 September 2009 12:36
 
நீரும் 32 பல்லையும் காட்டும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 22:19

நீரும் 32 பல்லையும் காட்டும்


அன்று சென்றல் தியேட்டருக்கு ஏதோ ஒரு படம் பார்க்கக் கணவருடன் சென்றிருந்தேன். இடைவேளை ஆரம்பமாக குப்பென மின்விளக்குகள் ஒளிர்ந்தன. இருளில் இருந்து திரையின் ஒளியை மட்டும் நோக்கியதில் களைப்படைந்திருந்த கண்கள் ஒளி கண்டு மலர்ந்தன. தெரிந்தவர்களின் புன்சிரிப்புக்கள், தலையாட்டல்களில் மனமும் உற்சாகமடைந்து கொண்டிருந்தது.

திடீரென யாரோ பின்னால் நிற்பது போன்ற உணர்வு. சட்டென்று திரும்பினேன். நந்தகுமார் மாஸ்டர் எனது கணவரின் தோள்களைத் தட்டினார். ரியூட்டரியில் கணித மாஸ்டர் வராத வேளைகளில் அவருக்குப் பதிலாக வரும் மாஸ்டர். நண்பி திலகத்தின் முறை மச்சான். அவர்களுக்குள் காதலும் கூட. அதனால் எங்கள் சீண்டல்களுக்கும் சில சமயம் ஆளாபவர். எனது கணவரின் நண்பர். ஐந்து வருடங்களின் பின் சந்திக்கிறேன். திலகத்துக்கும் அவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் இருப்பதாக ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன்.

எனது கணவரோடு இரண்டு கதை கதைத்து விட்டு என் பக்கம் திரும்பி "சந்திரவதனா...! றேடியோவிலை உங்கடை பெயர் வராத நாட்களே இல்லை. ஒரு நாளைக்கு மூன்று தரத்துக்குக் குறையாமல் உங்கடை ஏதாவது ஆக்கங்கள் போகுது. இண்டைக்கும் அந்தக் கவிதை நல்லாயிருந்தது." பாராட்டி விட்டு மீண்டும் கணவரோடு கதைக்கத் தொடங்கி விட்டார்.

அந்த வயசில் எனக்குக் கிடைத்த அந்தப் பாராட்டில், உச்சி குளிர்ந்ததில் சந்தோசத்தை அடக்க முடியாமல் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தேன்.

படம் முடிந்து சைக்கிளில் வீடு திரும்பும் போது கணவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாய் சைக்கிளை உழக்கினார். "ஏன்...?" என்ற கேள்வியை வீட்டில் வந்து இறங்கும் போதுதான் கேட்டேன்.

சடாரென்று சூடாக வீழ்ந்தன வார்த்தைகள் "சும்மா அவனவன் வந்து, கவிதை நல்லாயிருக்கு, கட்டுரை நல்லாயிருக்கு எண்டுவான். நீரும் 32 பல்லையும் காட்டும்."

எனக்கு ஒருதரம் சப்தநாடியும் அடங்கி ஒடுங்கின.

சந்திரவதனா
28.7.2005

Post a Comment

 

Comments

Last Updated on Thursday, 19 December 2013 08:25
 
அவர்கள் அவர்களாகவே..! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:55

இது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம்.

பாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க.. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்...? என்று பார்க்க வேண்டும், உதவ வேண்டும் என்ற ஆசையில் தொடங்கப் பட்ட பயணம் இது. அங்கு போன பின்தான் பயணத்தின் அவசியம் தெரிந்தது. 12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான அங்கு கழிந்த பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. அந்த மணிப்பொழுதுகளில் ஒரு துளி இது..!


ஜேர்மனிய அவசரம் போல் விரையாமல் அங்கு பொழுதுகள் ஏ9 பாதை போல நீண்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருக்கும் வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில்நுட்ப நிறுவனப் பிராந்தியச் செயலகத்தின் செயற்கை உறுப்புத் தயாரிக்கும் பட்டறையில் தகரங்களை "ணொங்.." "ணொங்.." கென்று செவிப்பறை அதிர அறையும் சத்தம் ஓய்ந்து அரை மணி நேரமாகியிருந்தது. சுட்டெரிக்கும் வெயில் மட்டும் விட்டுப் போக மனமின்றி இன்னும் கொளுத்திக் கொண்டேயிருந்தது.

Last Updated on Friday, 14 November 2014 07:39
Read more...
 
முகவரி தேடும் மனவரிகள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:46
இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்..?


அண்ணா..! இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன். அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும், நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும் நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும் என் வாழ்க்கையாகி விட்டது.

எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.

இன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.

உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொழுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.

கடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா..? உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.

ஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்..! அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி..! புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி.. பெருவிரல் இல்லாது..! ஓ..  வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.

இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.

இன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.

நான் வாசிக்கத் தொடங்கினேன்.

157/1 OLR Lane
Hospital Road
Jaffna
Srilanka
29.6.1991

பிரிய தங்கைக்கு,

உனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்தது போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன். என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி, என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.

20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணமனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.

29.12.90 அன்று வவுனியா வந்தும் சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால், 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.

காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு, தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால் எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.

Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. - பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க - பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.

மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.  (மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி... ஐயோ... அம்மா..! என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.

எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.

கூடாது.. இது ஆபத்து.. என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி "அண்ணை என்னைத் தூக்குங்கோ.." என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். "ஐ..யே..யே"  என்றார். "பொறுங்கோ வாறன்" என்றார்.

எங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. "அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும்"  என்றேன்.  "ஆளே முடியப் போகுது. சைக்கிளாம்"- என்றார்கள்.

கால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க. எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.

ரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். `நான் செத்து விடுவேன்´  என்று நம்பினர்.

யாரோ, எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.

"எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ" என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.  அவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான் - இரத்தம் போகாதிருக்க. ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.

இறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். - மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)

மீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.

நடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் "நீரெண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட.." என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)

ஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையிலிருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ் றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்ப வில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது.

எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.

இது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.

உன் பிரிய
அண்ணன்.


இப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில், விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதிலிருந்து... எத்தனையோ நினைவுகள்! எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில்! ஏன் இன்று இப்படியானோம்?

பத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ..
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ..
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

போவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட
"டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும்" என்று சொன்னாயாமே!
"தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ?" என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே!
பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப..?

13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட எனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....

சந்திரவதனா
யேர்மனி
9.7.2000
Last Updated on Thursday, 13 November 2014 23:58
 
அந்த மௌன நிமிடங்களில்..! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:44

மாவீரர்நாள் 2000 - Dortmund யேர்மனி 30.11.2000

நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.

தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச்சுற்றி வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஒலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும், யேர்மனியின் வர்த்தக நகரான டோட்மூண்ட் (Dortmund) நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது. நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். யேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும் அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.

பண்போடும் மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.  புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.
Last Updated on Sunday, 27 November 2016 14:40
Read more...
 
நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு) PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:32

எங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது

"என்ரை தலேணியை ஆர் எடுத்தது? அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது."

தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.

தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.

"அம்மா...! தலேணி...! "
பரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.

"டேய்..! என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்?" கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.

"அக்கா என்றால் அக்காதான்."  முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.

"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..!"

டக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது.  "என்னடா.. நீ..! பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. "என்ற படி அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.

"ஏமாந்துட்டா...! ஏமாந்துட்டா...!" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.

"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு." என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.

திடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ்சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன. இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ.! நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.

மீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ..! எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ..! அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை. பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு தூரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக  "பரதன்..! நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..?" என்று கேட்டோம்.

உடனே அவன் தடுமாறி "இல்லை...இல்லை... ஆர் சொன்னது..?" என்றான்.

பின்னர் ஒரு நாள் "அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ." என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.

எங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.

(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)

Last Updated on Thursday, 08 September 2016 21:05
 
KG பேனா PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:29
அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.

Ciel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் பாவிக்க நிர்ப்பந்தப் படுத்தப் பட்டோம்.

Ciel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கழுத்து வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ரீச்சர் சொன்னா "KG பேனை நல்லது" என்று.
Last Updated on Thursday, 20 October 2016 10:18
Read more...
 
தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:24

Platform பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத நிலையங்களில் ஓன்றான நாகொல்லகமவுக்குச் சென்றிருந்தோம்.

அப்பாவுக்கு அன்று பகல் வேலை. மாலை நான்கு மணியளவில் அம்மா கடலைப் பருப்பு வடை சுட்டு, சுடுதண்ணீர் போத்தலில் தேநீரும் விட்டு அப்பாவிடம் கொடுக்கும் படி தந்து விட்டா.

"கவனமாகப் போ. பிளாற்ஃபோம் (Platform) கரைக்குப் போயிடாதை. விழுந்திடுவாய். ரெயின் வந்திடும்." என்ற அம்மாவின் அன்பு நிறைந்த கட்டளை என் மூளையின் ஆழத்தில் பதிந்திருந்து என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் நான் அந்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் ஒரு பக்கம் கையிடையில் சுடுதண்ணீர் போத்தலை அணைத்த படியும், மறு கையில் வடைப் பார்சலை இறுகப் பிடித்த படியும், எனக்கேயுரிய துள்ளலில் நடந்து கொண்டிருந்தேன். அம்மா எங்கே பார்க்கப் போகிறா என்ற தைரியம்.

நாகொல்லகம போலவே புகையிரத நிலையமும் அழகாக இருந்தது. தண்டவாளம் தாண்டிய புல்வெளியில் சிலர் Volley Ball விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் தாண்டிய பச்சை மரங்களிடையே சிவப்பு, மஞ்சள், வெள்ளை... என்று பற்பல வர்ணங்களில் பூக்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மாங்காய்கள் போல ஏதோ காய்கள் சில மரங்களில் காய்த்துத் தொங்கின.

நீலமாய் அழகாய் வானம் இருக்க, வானவெளியில் கூட்டங் கூட்டமாய் சிறுபறவைகள் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. நகரும் முகில் கூட்டங்களுக்குள் விதவிதமான உருவங்கள் தெரிந்தன. ம்.... என்ன நடந்தது?

இயற்கையோடு சேர்ந்து நடக்கையில் ஒரு கணம் என்னை மறந்து போனேன். கீழே வீழ்ந்து விட்டேன். தண்டவாளத்தில் "டொங்" என்று இடிபட்ட சத்தத்தோடு பிளாஸ்க் உருண்டது. வடைப்பார்சல் அருகில்தான் இருந்தது. உதட்டில் வலித்தது. தடவினேன். சிவப்பாக இரத்தம். உதடு வெடித்து விட்டது.

யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தேன். ஒருவரும் பார்க்கவில்லை. வலியை விட யாரும் பார்த்து விடக் கூடாது என்பதில்தான் என் முழுக்கவனமும் இருந்தது. பார்த்து விட்டால் வீழ்ந்ததிலான அவமானத்தோடு தகவல் அப்பாவுக்கும் போய் விடும்.

அவசரமாக பிளாஸ்கைத் தூக்கிக் கொண்டு பிளாற்ஃபோமில்(Platform ) ஏற முயற்சித்தேன். எனது அந்தரமும், அவசரமும் உடலில் திடீரென்று ஏற்பட்டு விட்ட வலியும் சேர்ந்து என்னால் பிளாற்ஃபோமின் (Platform) உயரத்துக்குத் தொங்கி ஏற முடியாமல் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு கணம் நெஞ்சு சில்லிட்டது. சிக்னல் வீழ்ந்து விட்டது. ஏதோ ஒரு லைனில் ரெயின் வரப் போகிறது. Platform கரையோடு நான் நின்றேன். தண்டவாளங்களைக் கடந்து மற்றப் பக்கம் ஓடலாம் என்ற யோசனை ஏனோ உடனே வரவில்லை. ஓடினாலும் ரெயின் வருமுன் தாண்டுவேனா என்பது அடுத்த விடயம்.

அப்போதுதான் புகையிரதநிலைய உதவிஅதிபரான டிக்சன் அங்கிள் Tablet உடன் வந்தார். அவர் அப்பாவின் உதவியாளர். என்னைக் கண்டதும் திடுக்கிட்ட அவர் ஓடி வந்து கையை நீட்டினார். நான் அவரது கையைப் பிடித்ததும் இழுத்து.... எறியாத குறையாய் பிளாற்ஃபோமில்(Platform) என்னைப் போட்டார்.

ரெயின் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து, Platform இன் தொடக்கத்தில் நின்ற போர்ட்டர் மார்ட்டினிடம் Tablet ஐக் கொடுத்து, டிக்சன் அங்கிளின் கையிலிருந்த Tablet ஐ வாங்கிக் கொண்டு நில்லாமலே போய் விட்டது. அதன் பின்தான் டிக்சன் அங்கிள் என்னை மிகுந்த கோபத்தோடு பார்த்தார். சிங்களத்தில் திட்டினார்.

நான் அப்பாவின் அலுவலக அறைக்குள் போய் விட்டேன். அப்பா தொலைபேசியில் அலுவலக விடயமாக யாருடனோ சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மெல்லிய முறுவலுடன் நோக்கியவர் உடனேயே முகத்தில் கேள்விக்குறி தொக்க.. என்னைப் பார்த்து விட்டுக் கதையைத் தொடர்ந்தார். உடைந்திருந்த சொண்டும் அதன் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரத்தமும் அவரைக் குழப்பியிருக்க வேண்டும்.

நின்றால் பிழை என்று வடையையும், தேநீரையும் உள் அறை மேசையில் கொண்டு போய் வைத்து விட்டு உடனேயே ரெயில்வே குவார்ட்டர்ஸ்சுக்குத் திரும்பி விட்டேன். சொண்டை உடைத்துக் கொண்டு வந்திருந்த என்னைக் கண்ட அம்மா பதறிப் போய் "என்ன நடந்தது..?" என்று கேட்டா. அம்மாவுக்குப் பொய் சொல்ல அப்போது, அந்த எட்டு வயதில் எனக்குத் தெரியாது. பிறகென்ன அம்மாவிடம் மாட்டினேன்.

அது மட்டுமா..? அப்பாவிடமும்தான். வேலை முடிந்து அப்பா வந்த விதத்திலேயே டிக்சன் அங்கிள் எல்லாம் சொல்லி விட்டார் என்பது தெரிந்தது. கோபம் தெறிக்க வந்தவர் என்னைக் கண்டதும் சற்று ஆறி விட்டார்.
"என்ன பிள்ளை இப்பிடியே பொறுப்பில்லாமல் நடக்கிறது..?" என்று கண்டித்து விட்டு, அம்மாவிடம் "உம்மடை மகள் இண்டைக்கு என்ன செய்தவள் தெரியுமே..? டிக்சன் மட்டும் இல்லையெண்டால் ஒரு செத்த வீடெல்லோ இப்ப கொண்டாடியிருப்பம்." என்றார்.

உண்மைதான். அன்று டிக்சன் அங்கிள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று நான் இதை எழுதக் கூட இங்கில்லாது போயிருப்பேன்.

சந்திரவதனா
யேர்மனி
23.8.2004

Post a Comment
முதற்பதிவு - மரத்தடி
Last Updated on Thursday, 19 December 2013 08:26
 
அவன் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 16 July 2009 21:22
அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள்.

பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை.

யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்.
Last Updated on Thursday, 19 December 2013 08:27
Read more...
 
புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2004 PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தமிழ்செல்வன்   
Wednesday, 15 July 2009 06:45
Last Updated on Wednesday, 15 July 2009 06:49
 
மனசு சூனிய வெளிக்குள்... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:35
மனசு சூனிய வெளிக்குள்
சிக்கித் தவிக்கிறது.

உன்னவள்
உன் அஸ்தியை
ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள்.
அவள் புண்ணியவாட்டி.
உன் அருகிருந்து
தன் கடன் முடித்து விட்டாள்.

நான்
எதுவுமே செய்யாதிருந்து விட்டு
இப்போ...
சூனிய வெளிக்குள் நின்று
சுற்றிச் சுழல்கிறேன்.

உயிர் போன பின்னும்
நீ அருகிருக்கிறாய் என்பதில்
வலி தெரியாதிருந்தது.
சிதையேறிய போதுதான்
நீ இனியில்லை என்ற நினைப்பில்
மனசு பதை பதைக்கிறது.

நாடொன்றுதானே
நன்றாக உறவாடியிருப்பேன் என்று
ஊரவர்கள் நினைப்பார்கள்.
யாருக்கும் நான் ஏதும் சொல்லவில்லை.
போரென்று வந்து புலம் பெயர்ந்த பின்
வேர்களும் விழுதுகளும் வெகு தூரமாகி...
போனதை நினைத்துப்
புலம்புவதுதானே வாழ்வாகிப் போச்சு

நாமெல்லோரும்
"நேரமில்லை" யென்றும்
"தூரமாப் போச்சு" என்றும்
இயலாமைகளுக்கு
போர்வை போர்த்திப் பழகி விட்டோம்.

இத்தனை வருடங்களில்
எத்தனை தரம் சந்தித்திருப்போம்.
மின்னஞ்சலும்
தொலைபேசியும் இல்லையென்றால்
தொடர்பாடல்
என்றைக்கோ அறுந்து போயிருக்கும்
எமது ஓரிரு சந்திப்பின் போதான
உறவு முறை சொல்லி அழைக்கும்
உன் இதமான சிரிப்பு மட்டுந்தான்
என்னோடு நின்றிருக்கும்.

நான் அழவில்லை.
மனசுதான் அலைகின்றது
இல்லாத உன்னோடு கை கோர்த்து
உல்லாச உலா வருகின்றது
நீ இல்லை என்பது
உறைக்கும் சமயங்களில்
மல்லாக்காய் வீழ்கின்றது.

சந்திரவதனா
3.8.2003
Last Updated on Wednesday, 15 July 2009 06:44
 
காலமிட்ட விலங்கையும் உடை PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:34

பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து...
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா
யேர்மனி
10.3.2003

Last Updated on Wednesday, 03 February 2010 22:36
 
மௌனம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:32

இதுவரை
என் மௌனத்தையே
பலருக்குப் பதிலாக்கியுள்ளேன்.

இப்போதெல்லாம்
உன் மௌனமே
எனக்குள் கேள்வியாகின்றது.

சந்திரவதனா
18.1.2003

 
உன் பலம் உணர்ந்திடு! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:25
பெண் வலம் சமையல் புலத்திலென்ற
காலம் போயாச்சு
வெண்கலத்துடன் போராடிய அவள் கரங்கள்
சுடுகலன்கள் ஏந்தியாச்சு
இன்னுமா..?
புலம் பெயர்ந்த என்னகத்துத் தமிழ்ப் பெண்ணே..!
உன் பலம் தெரியாது
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும்
ஒளிந்திருந்து
கண்கலங்குகின்றாய்!
உன் பலம் உணர்ந்திடு!

சந்திரவதனா
10.10.02
 
நீயே ஒரு அழகிய கவிதைதானே.! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:24
நீயே..!
அதிசயமாய்
அழகிய ஓவியமாய்
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்
தழுவுகின்ற காற்றலையாய்.....
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?

உன்னை எண்ணி...!
பூக்களின் நறுமணங்களை
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!

உனது விழிமொழிதலால்
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!

உனது குடிபுகுதலினால்
எத்தனை மனமுகடுகளில்
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?

இன்று உன் பிரிதலினால்
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?

புரியாமல்... புலம்பாதே...!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?

சந்திரவதனா
4.8.02
 
புயலடித்துச் சாய்ந்த மரம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:05
காற்றே!
உனக்கும் இரண்டு முகமா..?

தென்றல் என்றுதானே
என்னைத் தந்தேன்
இளமையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும் வருடலுமாய்
அருகிருந்து
என் இளமையைச் சுகித்து விட்டு
எனதிந்த தள்ளாத வயதில்
உன் சுயத்தைக் காட்டி விட்டாயே!

கனிதரும் காலம் போய் விட்டாலும்
நீ களைப்பாக வரும்போதெல்லாம்
இளைப்பாற இடம் தந்திருப்பேனே!
வேரோடு சாய்த்து விட்டாயே!

வீழ்ந்ததில் வேதனை இல்லை
உன் நியமான
புயல்முகம் கண்டதில்தான்
பலமான அதிர்ச்சி.
வேரறுந்ததில் சோகமில்லை
நீயறுத்தாயே
அதைத்தான் ஏற்காமல்
மனதுக்குள் வெகுட்சி.

சந்திரவதனா
21.4.2002
Last Updated on Tuesday, 17 August 2010 02:25
 
மனநோயாளி PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:02
நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி..!

 

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்...
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு... நான்

அவை
வெடித்துச் சிதறி...
´மனநோயாளி` என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா..?
நடிப்புடனா..?

சந்திரவதனா
24.3.2002Comments

 

அன்புநிறை சந்திரா,

நட்புடனா...?
நடிப்புடனா...?

ஆடையைக்கழற்றியெறிவதைப்போல்
பந்தத்தை அறுத்தெறியும் சில ஆண்களுக்கு
அவளை 'மனநோயாளி' என்று முத்திரை குத்துவது
மிகவும் இயல்பாய் வருகிறது.

உங்கள் கவிதை மனதை என்னவோ செய்கிறது.
நண்பியின் வலியுணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்,
என்பது பச்சென்று புரிகிறது.

ரசித்தேன் சந்திரா,
என்றென்றும் அன்புடன்
Jayanthi

Posted by: Jayanthi at June 2, 2004 08:36 AM


மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்

அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்...

அற்புதமான வரிகள். வலியை அதன் வரிகளுக்கிடையில் கொண்டுவந்திருக்கும் உளவியல் கவிதையாக வந்திருக்கிறது. ஆணதிகாரம் விசிறும் துன்பியலுக்குள் வரிகள் அழைத்துச் செல்கின்றன. .

ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?

ஆணதிகாரத்தை இயல்பானதென அடம்பிடிப்பவர்களை விலக்கிவிட்டு (குறைந்தபட்சம்)பொதுநிலை சார்ந்து சிந்திக்கும் ஜீவிகளை தொற்றும் வல்லமை கொண்ட வரிகளுடன் கவிதை ஏதோ ஒன்றை எம்மிடம் விட்டுச் செல்கிறது. பாராட்டுக்கள் சந்திரவதனா

நட்புடன்
ரவி

Posted by: ravi at June 6, 2004 09:42 AM

Last Updated on Wednesday, 15 July 2009 07:43
 
உனதாய்... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 06:01

பெண்ணே!
நெருப்பாயும் வேண்டாம்
செருப்பாயும் வேண்டாம்
உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்

சந்திரவதனா
8.3.02Comments


நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி.
உனது என்ற சொல்லாடலில் ஓரளவிற்கு மறைந்து கிடக்கிறது பெண் எழுத்து.

இருந்தாலும் எழுதிய பெண் கவிஞர் உனது எனக் குறிப்பிடும்போது விலக்கப்படுகிறது நமது.....
பெண்மையின் பொதுமை விலக்கப்படும் உனதை நீக்கி நமதாய் கவிதை வாசித்தால்....

நமது இருப்பு
நமது விருப்போடு
நமதாய் இருக்கட்டும்

என்று இருப்பின் பெருமையாய் இருககுமோposted by MANIDAL at March 8, 2006 2:04 PM

Last Updated on Wednesday, 15 July 2009 07:51
 
குளிர் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:43

குளிர்..!
அது என்ன செய்து விடப் போகிறது..?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!

குளிர்...!
அது என்ன செய்து விடப் போகிறது..?

சந்திரவதனா
யேர்மனி
மாசி-2002

Last Updated on Friday, 29 January 2010 13:43
 
நட்பென்றுதானே நம்பினேன்..! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:33

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது!

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்!

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்..?

சந்திரவதனா
12.12.2001

 
பெண்ணே நீ இன்னும் பேதைதானே! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:27

மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்

மலரினைத் தலையில் வைத்து
மலரே என்பார்

சொல்லினை அம்பாய் எய்து
துடிக்காதே என்பார்

வேரினில் குத்தி விட்டு
வாடாதே என்பார்

கையினில் தீயைத் தந்து
தீயாதே என்பார்

கண்ணிலே கையை விட்டு
கலங்காதே என்பார்

புண்ணினைக் கிளறி விட்டு
புளுங்காதே என்பார்

மண்ணினைத் தாங்குவாள் போல்
பொறுமை கார் என்பார்

நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்

பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் . என்ன சொல்வார்

பேதைதானே நீ
பேசாதே என்பாரா?!


சந்திரவதனா
யேர்மனி
17.8.2000Comments
அழகான (எனக்கே புரியும்) கவிதை !! ஆமாம், சந்திரவதனா, எப்போதான் எனக்கு பதில் போட போகிறீர்கள்????,

Posted by: raviaa at June 4, 2004 02:39 PM

நட்புடன் சந்திரவதனா,

ஒரு குட்டு. வலியை பொறுத்துக் கொள்ளுங்கள்.
முயற்சியின்றி கிடைத்த நான்கு மலர்களைக்கொண்டு மாலை தொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் கவிதைத் தோப்பில் உலவும் பழுத்த கிழவி சொல்கிறாள். அவளுடன் நான் சண்டை பிடிப்பதாயில்லை.

நட்புடன்
ரவி

Posted by: ravi at June 4, 2004 07:21 PM

அன்புநிறை சந்திரா,

அடடா, அபாரம். அப்படியே புட்டுப்புட்டு வச்சிட்டீங்களே.

பேசாதே என்பாரா?!
ஆமா, அதுவும் தான் நடக்குதே,..

கவிதையை படிச்சா அப்படியே கஷ்டமேயில்லாம எழுதிட்டா மாதிரி ஒரு உணர்வு வருது. ஆனா, ஒவ்வொரு எழுத்திலும் உள்ள ஆழம்!

இது முந்தைய கவிதையை (மனநோயாளி) விட அழகு.
இதையும் பீட்டடிக்கறமாதிரி ஒண்ணத்தரப்போறீங்களோ!?
படிக்க/ரசிக்க நாங்க ரெடி.

பிரமிப்பா இருக்கு, கவிதை வடிவத்தைக்கையாளும் உங்களை போன்றோரைப்பார்க்கும்போது.

வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன், ஜெ

Posted by: Jayanthi at June 5, 2004 09:48 AM
Last Updated on Wednesday, 15 July 2009 07:55
 
களிக்கும் மனங்களே கசியுங்கள் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:24
உப்பளக் காற்றிலே
உயிரைக் கலைய விட்ட
எங்கள் பிள்ளைகளின்
குருதி வெள்ளத்தில்
ஏற்றி வைத்த
வெற்றிக் கொடியை
பற்றிப்
பரவசப் பட்டு
மனம்
ஆனந்தக் கண்ணீர் வடித்தது!

நியம் தந்த களிப்பில்
அவசரமாய் வந்த
ஆனந்தக் கண்ணீர்
அது நியமானது!
பிறகேன் போலியாய்
பார்ட்டியும்..!
படாடோபமும்..!

போர்க்களத்திலே வீழ்ந்தும்
குருதி வெள்ளத்திலே சாய்ந்தும்
போனவர்களின் தியாகமும்
அவர்கள்
ஈன்றவர்கள் மனதை
பற்றி நிற்கும் சோகமும்
நாம் இங்கு
பாடி நிற்கவும்
பார்ட்டி வைக்கவுமா..?
இல்லை!
வாடி நிற்கும் எம்மவர்
வாழ வேண்டும்
கூடிழந்த எம்மவர்க்கு
கூரை வேண்டும்
ஓடி ஓடிக் களைத்தவர்க்கு
ஓய்வு வேண்டும்
போலியாய்
எதுவும் வேண்டாம்..!

களிக்கும் மனங்களே
கசியுங்கள்
வெற்றி கண்ட மண்
வற்றி நிற்கிறது
பற்றோடு கை கொடுங்கள்.

சந்திரவதனா
யேர்மனி
29.4.2001
 
நான் ஒரு பெண் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:12
வீணை என்று
சொல்லாதே என்னை
நீ மீட்டுகையில் நாத மிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மௌனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை

கிளி மொழியாள் என்று
சொல்லாதே என்னை
நீ சொன்னதைச் சொல்லவும்
சொல்லாதிருக்கையில்
தனிமைச் சிறையில் வாடவும்
நான் ஒன்றும் பட்சி இல்லை

பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால் எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை

பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை

மீட்டத் தெரியாதவனிடம்
அகப்பட்ட வீணையாகவோ
பேசத் தெரியாதவன் வீட்டு
கூட்டுக் கிளியாகவோ
சூடி எறியும் பூவாகவோ
கிள்ளி விளையாடி
அள்ளி உறவாடி
பின் தள்ளி எறியும்
பாவைப் பிள்ளையாகவோ
எண்ணாதே என்னை

சொல்லாலும் செயலாலும்
அன்போடு தொடுகின்ற
மென் உறவுக்காய் ஏங்குகின்ற
உன் போல மனம் கொண்ட
பெண் என்று மட்டும்
எண்ணு என்னை
அது போதும் எனக்கு.

சந்திரவதனா
யேர்மனி
May - 2000


பிரசுரம் - ஈழமுரசு(4-10 மே - 2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நிலாமுற்றம்( 8.5.2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நங்கையர் நாழிகை (2001)
 
முத்தம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:10
அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை

ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்

காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்

அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.

சந்திரவதனா
யேர்மனி
21.7.99
 
ஏன் மறந்து போனாய்? PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:07


பெண் விடுதலை பற்றி
நண்பர்களுடன்
நயமாகப் பேசுகிறாய்!

சீதனக் கொடுமை பற்றி
மேதாவித் தனமாய்
மேடையில் விவாதிக்கிறாய்!

பெண்ணையும்
கண்ணாகப் பார்க்கும் படி
கதைகள் புனைகிறாய்!
கவிதைகள் வடிக்கிறாய்!
Last Updated on Monday, 08 February 2010 06:50
Read more...
 
இதுவும் காதலா..? PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:05
ஈமெயில் பார்த்து
இதயச் சுவர்கள் வேர்த்து
முகம் தெரியா உனக்காய்
முழுமதியாய் சிரித்து..!

இதற்கு என்ன பெயர்..!
இதுவும் காதலா..?

சந்திரவதனா
1999
 
தாய்மனமும் சேய்மனமும் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 05:02

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.

சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.

புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.

சந்திரவதனா
11.6.1999

Last Updated on Wednesday, 15 July 2009 05:04
 
விடுதலை வேண்டி.! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 15 July 2009 04:58

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களுக்கு
என் நாசித்துவாரமும்
பாதையாகிப் போனதில்
தொண்டைக்குழி வரை
மசமசத்தது

விடுப்புப் பார்ப்பதே
வேலையாக இருந்ததில்
விழிகளும் சிவந்தன

“அக்கா!
சித்திரைக்குப் பொங்கியாச்சே?”

பாதையில் ஒரு தமிழன்
பாசமாய் கேட்டான்

„...ம்ம்ம்...“
காலைப் பரபரப்பில்
பாணைக் கடிக்கவே
மறந்தேன் என்றால்
நம்புவானா...!

பாதி இரவில் விழித்திருந்து
ஊரில் வாழும் உறவுக்காய்
அழுதேன் என்றால்
நம்புவானா...!

கற்தரையில் எம்மவர்
நித்திரை கொள்வதை
ஊர்க்கடிதம்
சொன்னதில் தொடங்கி

இந்திய வல்லூறுகள்
எம்மவரை
உயிர் வதம் செய்வதில்
தொடர்ந்து

செம்மணிப் புதைகுழியில்
எம் பெண்மணிகள்
புதைந்தது வரை

துரையப்பா விளையாட்டரங்கிலும்
புதை குழிகள்
தொடர்வது வரை

சத்தியமாக நான்
சித்திரைக்கு
பொங்கவில்லை என்றால்
நம்புவானா...!

"ஓம் தம்பி பொங்கியாச்சு!

என் பொய்யில்
முகம் மலர்ந்து
முன்னேறிப் போறவனும்
மூக்கைத்தான் தேய்க்கிறான்
கண்களையும் கசக்குகிறான்

அழகிய மலர்களின்
நுண்ணிய மகரந்தக்களுக்கு
இவன் மூக்கும் பலிதானோ..!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களிடமிருந்தாவது
அந்நிய மண்ணில்
அடைக்கலம் தேடும்
எங்கள்
மூக்குகளுக்கும் கண்களுக்கும்
விடுதலை வேண்டுமென
இயற்கையை வேண்டிநின்றேன்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
பிரசுரம் - எரிமலை - மே, 2000

 
லயம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தீட்சண்யன்   
Wednesday, 15 July 2009 04:51

நீ பேசவேண்டுமென்றில்லை.
சும்மா பார்த்து நில்லேன்
நான் பம்பரமாடுவேன்
லயங்களோடு.

- தீட்சண்யன்

 
அம்மா... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தீபா   
Wednesday, 15 July 2009 04:36

சுதந்திரப் பறவையாக
வானில் பறக்க எண்ணி
இறகை விரித்தேன்!

பறக்கையில்தான் தெரிந்தது
அம்மா..! நீதான் வானமென்று!

இப்போ நான்
வெறுமை பூத்த வெட்ட வெளியில்
தனியாக..!

தீபா
Nov-1996

 
உன்னைவிட்டுநெடுந்தொலைவு PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by பாஸ்கர் சக்தி   
Wednesday, 15 July 2009 04:33

உன்னைவிட்டுநெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
நட்சத்திரம் பார்த்திருப்பேன்
கனவு போல மனதினிலே
கண் சிமிட்டி நீ சிரிப்பாய்
நீ சிரிக்கும் நொடியிலெந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்

- பாஸ்கர் சக்தி

 
ஓ..என் நண்பனே..! மாவீரனே..! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by திலீபன்   
Wednesday, 15 July 2009 04:22
மாற்றான் குண்டுகள் - உன்
மர்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை
மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல்
சில்லாகிப் போனாயோ! - அன்றி
நரிகள் கையில் சிக்காது
நஞ்சை நீ மென்றாயோ!

சூரியக் கதிர் சமர்தனிலே
சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே
இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே
மறவனாய் மலர்ந்தாயே
வெளிநாட்டுத் தமிழருக்கும்
வெகுட்சி வரச் செய்தாயே!

வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே
வேங்கையாய் பாய்ந்தவனே
வேட்டை ஆட வந்தவரை
வெட்டிப் புதைத்தவனே
ஊர் உறவு வாழ்வதற்காய்
உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று
உறக்கத்தில் போனாயோ!

தானைத் தலைவன் ஆணைப்படி
அணி வகுத்த புலிகளைப் பார்
படையெடுத்த பகைவர் கொடி
பாதியிலே எரிந்ததைப் பார்
முப்படை மூடரெல்லாம்
முல்லையிலே முறிந்ததைப் பார்
கூவி வந்த கூட்ட மின்று
குரலிழந்து போனதைப் பார்

மண்ணோடு நீ கலந்து
மலராகிச் சிரிக்கின்றாய்
விண்ணோக்கி நான் பார்த்தால்
விண் மீனாய் ஒளிர்கின்றாய்
வாள் ஏந்தும் வீரருக்கு
வேராக நிற்கின்றாய்
விடிவு தேடும் மக்களுக்கு
விடிவெள்ளி நீ தானே.

(சூரியக்கதிர் தந்த பாதிப்பில் எழுதப்பட்டது.)

திலீபன் செல்வகுமாரன்
யேர்மனி
1997


பிரசுரம் - களத்தில்
 
இன்டர்நெட் காதல் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by திலீபன்   
Wednesday, 15 July 2009 04:18

ஈழத்து இளங்குயிலே
இன்டர்நெட்டில் உனைப் பார்த்தேன்
ஒஸ்ரியா வந்திருந்தும்
ஒன் லைனில் உனைக் கேட்டேன்

என் நோட் புக்கில் குடிபுகுந்து
வின்டோஸைத் திறப்பவளே
உன் ஹாட்புக்கில் இடம் தேட
பாஸ் வேர்ட்டைச் சொல்லாயோ?

கண்ணே உன் போன் நமபர்
ஹாட் பீற்றாய் அடிக்குதடி
உனைக் காணாத நேரமெல்லாம்
ஹன்டி எந்தன் கையிலடி

எப்போதும் உனை ரசிக்க
எனக்குள் சற்றலைற்றைப் பூட்டி வைத்தேன்
சீக்கிரட்டாய் உடன் வந்து
ஒளி பரப்புச் செய்யாயோ?

ஹார்ட் கோர் இல் உனை மயக்க
ஹார்ட் வெயர்கள் பொருத்தி வைப்பேன்
ஸொப்ற் ஆன உன் அழகை
ஸொப்ற் வெயர் ஆய்ச் செதுக்கி வைப்பேன்.

திலீபன் - 1997

 
முதுமை PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by திலீபன்   
Wednesday, 15 July 2009 04:15
புயல் அடித்துச் சாய்ந்த மரம் போல்
நானும் கட்டிலில்

விம்மி விம்மி அழுகின்றேன்
பகல் இரவு முழுவதும் அழுகின்றேன்

வேதனையைத் தாங்க முடியவில்லை
கையை அசைக்க முடியவில்லை
இதயம் நின்று விடும் போலுள்ளது

என்னவென்று தெரியாத பயம்
என்னை ஆட்கொள்கிறது
சாவு என்னை அழைக்கிறது போலுள்ளது

என் அழகிய முகம் சிரிப்பு
எல்லாம் வாடி விட்டன

எனக்கா..! இந்த நிலைமை..!
நம்ப முடியவில்லை
இதுவா..! வாழ்க்கை..!

எரியும் மெழுகுவர்த்தியின்
நிலையா எனக்கும்

இளம் மனிதர்களே!
வீண் கனவுகள் காணாதீர்கள்
வீண் ஆசைகள் கொள்ளாதீர்கள்

இன்று எனக்குள்ள விதிதான்
நாளை உங்களுக்கும்

இன்று பெரிதாகத் தோன்றுவதெல்லாம்
நாளை சாம்பலாகி விடும்
இன்று பூத்து அழகாக இருப்பதெல்லாம்
நாளை மண்ணாகி விடும்

இந்த வாழ்க்கை என்பது
ஒரு கெட்ட கனவைப் போன்றது
நீர்க் குமிழியைப் போன்றது.

இளம் மனிதர்களே!
வீண் கனவுகள் காணாதீர்கள்
வீண் ஆசைகள் கொள்ளாதீர்கள்

திலீபன் 
யேர்மனி
1997
Last Updated on Wednesday, 15 July 2009 08:01
 
சாவோடிவை போகும்! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Thursday, 09 July 2009 12:09

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?

Last Updated on Tuesday, 14 June 2011 06:25
Read more...
 
நிலுவை PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by ஆழியாள்   
Wednesday, 08 July 2009 06:06
நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.
Last Updated on Thursday, 09 July 2009 12:17
Read more...
 
காதல் கசக்குமா...? PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by சந்திரவதனா   
Sunday, 05 July 2009 21:58

"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...

என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.

ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது
என்றும் கூறப் படுகிறது.

தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.

வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.

இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.

சந்திரவதனா

 

Comments

Blogger 
Syam said...

/காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு/

ஒத்துக்க மாட்டேன் ஒத்துக்க மாட்டேன் ஒத்துக்க மாட்டேன், ஒத்துக்காட்டி போ அப்டீங்கறீங்களா

Chandravathanaa said...

syam
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஒரு கேள்வி:
மனைவி இருக்க ஆண்கள் வேறு பெண்களை நாடுவது ஏன்?

மேலூர் தென்றல் said...

ஆண்களை குறைத்து மதிப்பிடுகின்றீர்கள் கண்வன் இருக்க வேறு ஆண்களை நாடும் பெண்களை கண்டதில்லையா நீங்கள்

Chandravathanaa said...

கண்டிருக்கிறேன்.
ஆனால் மிக மிகக் குறைந்த சதவீதத்தினரே.
ஆண்களைப் பார்க்கும் போது அவர்களில் பெரும்பான்மையான வீதத்தினர் மனைவி இருக்க வேறு பெண்களை நாடுகிறார்கள்.

மேலூர் தென்றல் said...

குரைந்த அளவென்றாலும் தவறுதானே

மேலூர் தென்றல் said...

குறைந்த

Chandravathanaa said...

தவறுதான்.
நான் இல்லையென்று சொல்லவில்லை.

எம்.கே.வான்மதி said...

Very nice.
and see my blog:

Last Updated on Wednesday, 22 July 2009 04:35
 
எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா? PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by சந்திரவதனா   
Sunday, 05 July 2009 21:55
நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.

எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.

மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.

இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.

அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.

முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

சந்திரவதனா
யேர்மனி
Comments

Solian - யாழ் களத்தில்

மேற்கோள்: அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.

இதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை... ஏறக்குறைய 10 வருடங்கள் ஒன்றாக ஜேர்மன் நாட்டு பெண்களைத் திருமணம் செய்த மூவரின் அனுபவங்களை கேட்டறிந்தவன் என்றவகையில் நான் அறிந்தவையாவன... ஒருவருக்கு 5 பிள்ளைகள்.. மிகவும் நல்ல குடும்பம் என்றவகையில்தான் வாழ்ந்தார்கள். தொழிற்சாலை ஒன்றில் நல்லதொரு பதவியில் இருந்தார். திடீரென அவரது வேலை பறிபோக.. மனைவி வெளியில் பிடித்து விட்டுவிட்டார்.

மற்றைய இருவருக்கு தற்போது 45 வயதுக்கு மேல்.. காரணம்.. 'வயதாகிவிட்டதாம்!' (புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.)

Soliyan
ஞாயிறு ஐப்பசி 31, 2004 2:33 am
-----------------------------------------------------------

 

kuruvikal - யாழ் களத்தில்

நம்மாக்கள் சரியான சுயநலவாதிகள்.... காதலை வைச்சே கலியாணத்தை முடிச்சிடுவாங்கள்...பிறகெங்க பிரியுறதும் சேருறதும்.... என்ன கஸ்டப்பட்டாலும் வண்டி ஓட்ட வேண்டியதுதான்.... மேற்கத்தேயன் அப்படியில்ல அவன் லவ்விலும் சுதந்திரம் கொடுக்கிறான்...சுதந்திரமா உணர்வுகளை வெளிப்படுத்த விடுறான் அழுத்தங்கள் கொடுத்து சாதிக்க நினைக்கிறது குறைவு...ஆனா என்ன பணமில்லையோ காதல் அம்போ....அந்தளவிலதான் அவயின்ர லவ்...ஆனா எங்கட ஆக்களவிட கொஞ்சம் சுதந்திரம் இருக்கு.....!

ஆனா அவங்கட லவ்வ வரையறுக்கிறது வலு கஸ்டம் எங்கட வரையறுக்கிறதும் சுகம்...நீடித்தும் வாழும்...! மற்றும்படி காதலிச்சு கலியாணம் முடிச்சா பிரச்சனை எண்டுறது எங்க ஆக்களில எங்கினையன் ஈகோ கேசுகளிலதான் அதிகம்....ஆனா அவங்கள் லவ் பண்ணுவாங்கள் எல்லாம் செய்வாங்கள்..கலியாணம் எண்டா காய் வெட்டிடுவாங்கள்...அந்த லெவலிலதான் அவங்கட லவ்....அது அவங்களுக்குச் சரி பிறகு டி என் ஏ ரெஸ்ட் செய்து பிறக்கிறதுகளுக்கு அப்பா அம்மா கண்டு பிடிப்பாங்கள்..அது பொழுதுபோக்கு அவங்களுக்கு....! நமக்காகுமோ...ஆகும்...மனசு கேக்காதே....பாவம் பாத்திடுவமே....!

kuruvikal
சனி ஐப்பசி 30, 2004 8:33 pm
-----------------------------------------------------------

 

Kanani - யாழ் களத்தில்

எனது நண்பர்களின் (மேற்கத்தேய மற்றும் நம்நாட்டவர்) அனுபவத்தில் காதலை மறத்தல் மேற்கத்தேயருக்கு இலகுவாக இருக்கிறது. சிறிய பிரச்சனைகளுக்குக்கூட பிரிகிறார்கள்...கோபத்திலிருக்கும்போது காதலை உணர போதிய காலவகாசம் கொடுக்கிறார்களில்லை...அதற்குள் அடுத்த காதல் தயாராகிறது... நம்மவர் காதல் என்னதான் இழுபறிப்பட்டாலும் வண்டி ஓடும்... பிரியப்போகிறோம் என்று இருந்தவர்கள்கூட....இழுபறிப்பட்டு மீண்டும் 6 7 மாதங்களின் பின் சேர்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன்...

Kanani
சனி ஐப்பசி 30, 2004 5:00 pm

 

 

Last Updated on Wednesday, 22 July 2009 04:18
 
இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by திலீபன்   
Sunday, 05 July 2009 06:18

இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது!

ஒரு மனிதனின் மூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும்.

இளைய தலைமுறையினர் எப்பொழுதும் சினிமாப்பாடல்களுடனேயே உழலும் பொழுது அவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று பெரியவர்கள் அலுத்துக் கொள்ளுகிறார்கள்;.

ஆனால் இசையினால் உடலிலும் மனதிலும் மிகச்சந்தோஷமான எழுச்கியும் கிளர்ச்சியும் பெரியவர்களை விட இளைஞர்களுக்குத்தான் கூடுதலாகத் தோன்றுகிறது. இதுவே இளையவர்கள் பெரியவர்களைவிடக் கூடுதலாகப் பாடல்களைக் கேட்பதற்கும் இசை வாத்தியங்களை விரும்பி ரசிப்பதற்கும் காரணமாகின்றது.

ஆனால் பழைய பாடல்களோ கர்நாடக இசைகளோ இவர்களைப் பெரிதும் கவர்வதில்லை. ஏனெனில் பருவ வயதில் இவர்களிடம் கூடிய ஹோர்மோன்கள் சுரக்கப் படுவதால் இசைக்கருவிகளின் அதீதமான சத்தங்களும் அடிகளும் நிரம்பிய புதிய பாடல்கள் இவர்களை மிகவும் கவர்கின்றன.
சத்தமான இசைகள் இவர்களினுள் ஊடுருவி இவர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றன. இதனால்தான் பாட்டுக் கேட்க முடியா விட்டால் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய் விடுகிறார்கள்.

இந்த வயதில் அவர்களுக்கு இருக்கும் அதிகமான படிப்பு இன்னும் விளையாட்டு வேலை பணநெருக்கடி தேவைகள்.... என்று சேர்ந்து ஒரு இறுக்கமான சு10ழ்நிலையில் அமுக்கப் பட்டுக் கொண்டு வாழும் இளைய தலைமுறையினருக்கு இந்த இசைகள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன. இதுவே இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் இசை போன்றவை இளைய தலைமுறையை வெகுவாகக் கவரக் காரணமாயிருக்கின்றன.

இளைய தலைமுறையினரின் புதிய பாடல் ரசனையை வைத்து அவர்களின் இசை ரசனை சரியில்லையென்று பெரியவர்கள் நினைப்பது மிகவும் தவறு.
ஏனெனில் புதிய பாடல்களிலும் சரி பழைய பாடல்களிலும் சரி நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

திலீபன் செல்வகுமாரன்
யேர்மனி
பிரசுரம் - இளங்காற்று மார்ச்-1997

Last Updated on Sunday, 06 September 2009 08:51
 
புகைத்தல் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by திலீபன்   
Sunday, 05 July 2009 06:16

இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.

சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.

கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.

உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.

புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.

ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.

உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................

புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.

மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள்.

இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.

ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.

இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:

புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.

பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.

புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.

புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.

யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.

பொல்லாத புகைப்பழக்கம்
இல்லாதிருப்பதே ஒழுக்கம்.

திலீபன் செல்வகுமாரன் - 1997

Last Updated on Sunday, 05 July 2009 06:18
 
கெரோயின் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by திலீபன்   
Sunday, 05 July 2009 06:15
பொல்லாத போதைப் பழக்கம்
இல்லாதிருப்பதே நல்லொழுக்கம்

கெரோயின் (Heroin), மோர்பைன் (Morphine), கொக்கயின் (Kokain), போன்ற மருந்துகளைப் பாவித்ததால் 1989ம் ஆண்டில் 991 பேரும் 1994ம் ஆண்டில் 1700 பேரும் உயிரிழந்துள்ளனர். 1989ஐயும் 1994ஐயும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் போதை மருந்தினால் இறந்தவர்களது தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

போதை மருந்துகளை விற்பனை செய்வது, அதனை வைத்திருப்பது போன்றவற்றிற்குச் சட்டப்படி அநுமதி தருவதால் இப்பிரச்சனையைக் குறைக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. இது எந்த வகையில் பயன் தரும் என்பதில் மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல் இல்லை.

போதை மருந்தைக் கையாளும் மாபியா என்று அழைக்கப்படும் கூட்டத்தினர் மிகவும் பலம் வாய்ந்து கொண்டு வருகின்ற போதிலும், UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் மாபியா கூட்டத்திற்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் UNO எடுக்கும் நடவடிக்கைகள் பல தோல்வியில் முடிந்துள்ளன. எனினும் UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் போதைப் பொருட்களைப் பாவிப்பதை சட்டபூர்வமாக்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பியாவின் எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் மத்திய ஐரோப்பியாவில் உள்ள போதைப் பொருட்களைக் கடத்தும் கூட்டங்கள் மிகவும் உசாராகச் செயற்பட ஆரம்பித்துள்ளன.

போதைப் பொருட்கள் பாவிப்பதைச் சட்ட பூர்வமாக்குவதாயின் அதற்கு உலக நாடுகள் எல்லாவற்றினதும் ஒத்துழைப்புத் தேவை.

அப்படி இல்லாத பட்சத்தில் பெரும் ஒழுங்கின்மை ஏற்படுவதற்கு இடமுண்டு.

உதாரணமாக ஹொலண்ட் நாட்டில் சில போதைப் பொருட்களுக்குச் சட்டரீதியான அநுமதி தரப்பட்டது. அநுமதி தராத மற்றைய நாடுகளில் உள்ள போதைப் பொருட் பிரியர்கள் உல்லாசப் பயணிகளாக ஹொலண்ட் நாட்டுக்குச் சென்று போதைப் பொருட்களைப் பாவிக்க இது ஏதுவாக இருந்தது.

இப்படியான சில ஒழுங்கின்மையால் உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகிறது. இவ் ஒத்துழைப்பிற்கு எல்லா நாடுகளும் முன்வருமா என்ற பெரியதொரு கேள்வியும் எழாமல் இல்லை.

போதைப்பொருட்களின் பாவனையை சட்டபூர்வமாக்குவதால், போதைப் பொருட்களை கையாளுவதால் ஏற்படும் பல குற்றச் செயல்கள் இல்லாமல் போவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் போதைப் பொருட்களைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் உண்டா என்று கேட்கும் பட்சத்தில், இல்லை என்ற பதிலே முன்வந்து நிற்கிறது.

மருத்துவர் மூலம் போதைப்பொருட்களைக் கொடுத்தால் என்ன? என்று இன்னுமொரு அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றியளிக்காது என்பதை இரண்டு காரணங்களால் விளக்கலாம். ஒன்று மருத்துவரின் வேலைக்கு இது பொருத்தமானதாக இல்லை. மற்றையது மருத்துவரிடம் கிடைக்கும் போதைப்பொருட்களின் விலையை விட, கறுப்புச்சந்தையில் கிடைக்கும் போதைப் பொருட்களின் விலை மலிவாக இருக்கிறது.

ஆகவே சட்டரீதியான அநுமதி என்பது இப்பிரச்சனையை சிக்கலாக்குமே தவிர, ஒரு போதும் ஒரு தீர்வாகாது.

அப்படியாயின் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த முடியாதா? என்ற கேள்வி முன் எழுகிறது.

முடியும். அரசாங்கங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் செயற்பாடுகள் இங்கு முக்கியமானவை. அவை ஒன்று கூடி வரும் போது இதற்கொரு தீர்வைக் காண முடியும்.

போதைப் பொருட்களைக் கையாளும் கூட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் இன்னும் பலமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். போதைப் பொருட்கள் மக்களின் கைகளைச் சென்றடையாதவாறு பாதுகாக்க வேண்டும். மருந்துக் கடைகளில், நாட்டு எல்லைகளில், விமான நிலயங்களில் ஒவ்வொரு அரசாங்கமும் பெரியசோதனைகளை ஏற்படுத்தி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனையளர்கள், பாவனையாளர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் பலமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் விற்பனையாளர்களைக் கைது செய்யும் பட்சத்தில் எந்தவித கருணைகளுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

போதைப் பொருட்களின் பாவனையாளர்களும், அதில் ஆர்வம் உள்ளவர்களும் இப்போதைப் பழக்களிலிருந்து பயந்து ஒதுங்கும் வகையில் அரசாங்கத்தின் தண்டனைகள் கடுமையானதாக இருக்கவேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை நிலையங்களை காவல்துறையினர் கண்டுபிடித்து அங்கு கடமையாற்றல் வேண்டும். காவல்துறையினர் கண்காணிப்பதால் போதைப் பொருட்களின் பாவனையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் தொடர்புகள் இல்லாமல் போய் விட வாய்ப்புகள் உண்டு.

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு சிறைத் தண்டனைகள் மட்டுமின்றி அவர்களிடம் தண்டனையாகப் பணங்களையும் அறவிடுதல் வேண்டும். இப்பணங்களை போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை செய்யவும், சிகிச்சைக்குத் தேவையான இடங்கள், படுக்கைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தவும் வேண்டும்.

தங்களது பிள்ளைகள் இத் தீயபழக்கங்களுக்கு அடிமையாகாத வண்ணம் பெற்றோர்களின் செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.

இளைய பருவத்தினர் இப் பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதற்கான காரணிகளும் சூழ்நிலைகளும் என்ன?

சில ஆய்வாளர்களின் கணிப்பின்படி கீழே தரப்பட்ட காரணங்களே இளைய பருவத்தினரை இத்தீய வழிக்கு இழுத்துச் செல்கின்றன.

1. புதிய விடயங்களை அறிய, அநுபவித்துப் பார்க்க உள்ள ஆசைகள்.

2. படிப்பில் உள்ள சிரமங்கள், அல்லது இதர பிரச்சனைகள்.

3. காதல் தோல்வி, அல்லது மனது விரக்தியடைந்த துன்பமான சூழ்நிலைகள்.

4. பொழுதுகள் போகாமல் சலிப்புகள் உண்டாகும் நிலை.

5. பெற்றோரது தவறான வழிகாட்டல்.

6. போதைப்பொருட்களைப் பாவிப்பவர்களாகப் பெற்றோரே இருத்தல்.

இந்தக் காரணிகள் பிள்ளைகளைத் பொல்லாத போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்காதிருக்க.............

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் கணவனும் மனைவியும் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளனர். எனினும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்திலேயும் தங்களது பிள்ளைகளுக்கு நேரங்களை ஒதுக்கி அவர்களிடம் அன்பாகப் பழக வேண்டும்.

போதைப் பொருட்களால் வரும் கேடுகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

அவர்கள் மனங்களில் எந்த விதமான தனிமை உணர்வுகளோ, விரக்தியான எண்ணங்களோ தோன்றாதபடி நட்புடன் பழகி அவர்கள் மனங்களை ஆட்கொள்ள வேண்டும்.

இதேபோல் பாடசாலைகளும் இது விடயத்தில் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

ஏனெனில்......

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளும் போதைப்பொருட்களின் விற்பனை நிலையம் அல்லது பரிமாறிக்கொள்ளப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களின் வயதுக்கேற்ப, போதைப்பொருட்களின் பாவனையால் வரும் கேடுகள் விளக்கிச் சொல்லப்படல் வேண்டும். அதிர்ச்சி, தெரப்பி படங்கள் மூலம் அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்காட்ட முடியும்.

போதைப்பொருட்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு ஆசிரியராவது நியமிக்கப்படல் வேண்டும். இவ் ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் ஏற்படும் பட்சத்தில், அதனை பெற்றோருக்கு அறியத்தரல் வேண்டும்.

இத்தீய பழக்கங்கள் உள்ள மாணவர்களுடன் தனியாகக் கதைத்து, இப்பழக்கங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் வல்லமையுள்ளவர்களாக இவ் ஆசிரியர்கள் இருக்கவேண்டும்.

எனவே போதைப்பொருட்களுக்கு சட்டபூர்வமான அநுமதி தருவதால் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோரைத் தடுக்க முடியாது. வருமுன் காக்கும் தன்மையாலும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளாலுமே இவ்விடையத்தில் அதிகளவிலான வெற்றியை காணமுடியும்.

திலீபன் செல்வகுமாரன்
பிரசுரம்: இளங்காற்று (மார்ச் 1997)
Last Updated on Sunday, 05 July 2009 06:16
 
மூளையின் சக்தி PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by திலீபன்   
Sunday, 05 July 2009 06:14

ஒரு குழந்தையின் மூளையில் சிந்திக்கக் கூடிய ஷெல்கள் 100 மில்லியார்டன் வரை உள்ளன.

ஒன்பது மாதத்தில் -
ஒரு குழந்தை தனது தாய்மொழிக்கும் வேற்று மொழிகளுக்குமான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்கிறது.

பத்து வயதுக்குள் -
மூளையில் உள்ள தொடர்புகள் நன்கு விருத்தியடைந்து விடுகின்றன. இந்த வயதுக்குள் மூளையில் 100 பில்லியன் தொடர்புகள் உருவாக்கப் படுகின்றன.

பத்தாவது வயதில் -மூளை முழுமையாக விருத்தியடைந்து விடும். 10 மில்லியன் செய்திகளைப் பதியக் கூடிய தன்மையையும் செயற் படக் கூடிய நிலையையும் மூளை பெற்றுவிடும். சில சமயங்களில் மணிக்கு 500 கி.மீ துரித கதியில் மூளையின் செயற்பாடுகள் இருக்கும்.

பதினாறாவது வயதில் -மூளைக்குள் உள்ள அதிகம் பாவிக்கப் படாத மூளைத் தொடர்புகள் அற்றுப் போய் விடுகின்றன.
ஒரு விநாடிக்கு கிட்டத்தட்ட 1000 தொடர்புகள் இல்லாமல் போகின்றன.
இந்த நிலையில்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட மூளை அமைப்பு உருவாகிறது.

இருபத்தைந்தாவது வயதில் -
மூளையின் அளவு ஏறக்குறைய 1500 கிராமாக இருக்கிறது. மூளைச்
ஷெல்களுக்கிடையே உள்ள சைகைப்பாதை (signalbahnen) யை நீட்டிப் பார்த்தால் அது ஏறக்குறைய ஒரு மில்லியன் கி.மீ அளவுக்கு நீளமாக இருக்கும்.
அளவுக்கதிகமான வேலை மற்றும் பிற அழுத்தங்களினால் (Stress) மூளை சுருங்கி விடலாம். உதாரணமாக எமது மூளையில் நினைவுகளைப் பதிந்து வைத்திருக்கும் பகுதிகளும், படிப்பதற்கான பகுதிகளும் 15 வீதம் வரை சுருங்கி விடும்.

முப்பத்தைந்தாவது வயதில் -
10 வயது மூளையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அரை மடங்கு தொடர்புகள்தான்
மூளையில் இருக்கும். யோசிப்பதற்கு அதிகளவு சக்திகள் தேவைப்படாது.

ஐம்பதாவது வயதில் -மில்லியார்டன் அளவில் மூளையில் உள்ள ஷெல்கள் இறந்து விடுகின்றன. ஆனாலும் எங்களது வேலைகளை ஒழுங்காகத் தொடர்ந்து செய்வதற்குப் போதுமான அளவு ஷெல்கள் இருக்கும்.

அறுபதாவது வயதில் -மூளைக்குப் பயிற்சி (GegirnJogging) கொடுப்பது நல்லது.

தனது எண்பதாவது வயதில்தான் Gothe என்பவர் தனது Faust என்ற பிரபல்யமான கதையை எழுதி முடித்தார்.

திலீபன் செல்வகுமாரன் - யேர்மனி

Last Updated on Sunday, 05 July 2009 06:15
 
நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா? PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by திலீபன்   
Sunday, 05 July 2009 06:11
அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.

ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

திலீபன் செல்வகுமாரன்
Last Updated on Sunday, 05 July 2009 06:12
 
போருக்குப் பின் பொருளாதாரம் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by திலீபன்   
Sunday, 05 July 2009 06:09

உலகப் பொருளாதாரம் சீராக இருப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் முக்கியமானது. முதலாவது உலகப்போர் 1914இல் தொடங்கியதில் இருந்து உலகநாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் தேவைகளுக்கு தாங்களே உற்பத்திகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மூலப்பொருட்கள் உள்ள நாடுகள் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கத் தொடங்கின. கைத்தொழில் நாடுகள் தங்களது விவசாயத்தை பலப்படுத்தத் தொடங்கின.

இந்தத் திடீர் நிலமைகளின் மாற்றங்களினால் வறிய நாடுகளிடம் பெரும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வறிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கூடுதலான வட்டிக்கு பணங்களைப் பெற்று தற்காலிகமாக நிலைமைகளைச் சமாளிக்க ஆரம்பித்தன. ஆனால் கழுத்தில் போடப் பட்ட சுருக்குக் கயிறு போல் கடன் தொல்லைகள் வறிய நாடுகளை இறுக்கத் தொடங்கின. வட்டிகள் கூடக் கட்டமுடியாமல் பெரிதும் சிரமப்பட்டன.

உலகப்போர் முடிவுக்கு வந்தபின்னரும் உலகப்பொருளாதாரம் பெரும் சிக்கலான நிலையிலேயே இருந்தது. இன்னும் மோசமான நிலைக்கு பொருளாதார நிலை சரியத்தொடங்கியது. இதற்கு முக்கிய இருகாரணிகள், எண்ணிக்கையிலடங்காத அகதிகளின் தொகையும், பல கோடி மக்கள் வேலையின்றி இருந்தமையுமே ஆகும். விவசாயிகள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் திண்டாடினார்கள். தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கியிருந்தன. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பலர் வேலை இழக்க வேண்டிய நிலைமை உருவானது. வேலை இழந்நோருக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்குக் கூட அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்பட்டன. இதனால் மீண்டும் கடன்கள் வாங்கப்பட்டு அப்போதைய நிலமைகள் சமாளிக்கப்பட்டன. ஆரம்பத்தில், பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. இதனால் மேற்கொண்டு கடன்களைப் பெற்றுக்கொள்ள நாடுகள் தயக்கம் காட்டவில்லை. நாடுகளுக்குக் கடன்களைக் கொடுக்கும் இடத்தில் அமெரிக்கா முதல் நிலையில் இருந்தது.

யுத்தம் நடக்கும்போது கொடுத்த கடன்களாலும், ஆயுத உற்பத்தியாலும் அமெரிக்கா ஒரு பணக்கார நாடாக உருவாகியிருந்தது. தொழிற்சாலைகளின் உற்பத்திகள் திறமையாகச் சந்தைப்படுத்தப்படும் என்று அமெரிக்கத் தொழிற்சாலைகள் நம்பியிருந்தன. அதனால் அமெரிக்கத் தொழிற்சாலைகள் புதுவிதமான முறைகளில் பெறுமதியான பொருட்களை உருவாக்கி ஓரளவு குறைந்ந விலையில் விற்பனை செய்யத் தொடங்கின. அவர்கள் உருவாக்கிய பொருட்கள் தரமாக இருந்த காரணத்தால், நீண்டநாட்கள் பாவிக்கக் கூடியனவாக இருந்தன. இதன் காரணமாக மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களது பொருட்களை வாங்க வேண்டிய தேவைகள் இல்லாது போயின. இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் தேங்கத் தொடங்கின.

அமெரிக்கத் தொழிற்சாலைகளின் பொருட்களின் தரங்கள், விற்பனைகளை அவதானித்த மக்கள் பங்குச் சந்தைகளில் பெருமளவு பங்குகளை வாங்கியிருந்தனர். இந்த மக்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கிகளும் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுக்க முன் வந்தன. மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

1929 கோடைக்காலத்திலும் மீண்டும் பெரியதோர் இடி அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விழுந்தது. பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் தொழிற்சாலைகள் திண்டாடின. தொழிலாலர்களுக்கு ஊதியங்களை கொடுக்க முடியாத நிலையில் பலரை வேலையிலிருந்து தொழிற் சாலைகள் நீக்கிவிட்டன. இந்த நிலமையில் மாற்றம் வரும் என அமெரிக்க மக்கள் நம்பியிருந்தனர். இதை உறுதிசெய்யும் வண்ணம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கூவர்(Hoovar) இன் சொற்பொழிவுகளும் அமைந்திருந்தன.

இருந்தும் 1929 ஒக்ரோபர் மாதத்தில் பங்குச்சந்தையின் பெறுமதிகள் குறைய ஆரம்பித்தன. பங்குகளின் பெறுமதி முற்றாக இல்லாமல் போவதற்கு முன்னர் தங்களது பங்குகளை மக்கள் விற்கத் தொடங்கினார்கள். தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடத் தொடங்கின. 1929ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி வெள்ளிக்கிழமை நிலமை உச்சக் கட்டத்தை அடைந்தது. பின்நாளில் இந் நாள் கறுப்பு வெள்ளிக்கிழமை (Black Friday) என்று பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்கா ஏற்றுமதியின் சுங்கவரியைக் கூட்டி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்தது. இதனால் சர்வதேசச் சந்தையும் பொருளாதார ஆபத்துக்குள்ளானது. தான் கொடுத்த கடன்களைத் திருப்பித்தருமாறு மற்றைய நாடுகளை அமெரிக்கா கேட்கத் தொடங்கியது.

இந்த நேரத்தில் ஜேர்மனியின் பொருளாதாரமும் அதள பாதாளத்திலேயே இருந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து, ஊதியங்கள் குறைந்து, கோடிக்ணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வீதிக்கு வரவேண்டிய நிலமை ஏற்பட்டது. பணம் போதாமல் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

அமெரிக்கா கொடுத்த கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்யெ ஒரு கட்டாயமான நிலையில் வங்கிகள் இருந்தன. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டதனால், தொழிற்சாலைகளுக்கு கடனாகக் கொடுத்த பணத்தை மீளப்பெற முடியாத நிலமைகளும் வங்கிகளுக்குச் சேர்ந்து கொண்டன.

இந்த நிலைகளைப் புரிந்துகொண்ட மக்கள் தாங்கள் வங்கியில் வைப்பீடு செய்த பணங்களைப் பெறுவதற்கு வங்கிகள் தோறும் வெள்ளம் போல் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மக்கள் வைப்பீடு செய்த பணத்தைத் திருப்பித் தரமுடியாத நிலையில் ஜேர்மனியின் முக்கிய பெரிய வங்கிகளில் ஒன்று மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டது. வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக அப்போதைய ஜேர்மன் அரசு வங்கி லீவு நாட்களை அறிவித்தது.

இதேவேளையில் முதலாளி அமைப்புக்களுக்கும், தொழிலாளர் அமைப்புக்களுக்கும் இடையிலேயே பூசல்கள் ஆரம்பித்தன. அரசாங்கத்தின் ஆதரவு முதலாளி வர்க்கத்தின் பக்கமே இருந்ததால் தொழிலாளி வர்க்கம் நசுக் கப்படத் தொடங்கியது. குறைவான ஊதியத்தில வாழ்க்கைச் செலவுக்கே தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனால் அப்போதைய குடியரசிடம் மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். இதுவே NSDSP என்ற கிட்லரின் அமைப்பு முன்னுக்கு வர முக்கிய காரணமாயிற்று.

திலீபன்.செல்வகுமாரன் - யேர்மனி
பிரசுரம் - இளங்காற்று மார்ச்-1997

Last Updated on Saturday, 11 July 2009 21:44
 
மகரந்தங்களினால் ஒவ்வாமையா...? PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by சந்திரவதனா   
Sunday, 05 July 2009 06:05

தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. யேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.003மில்லிமீற்றர் அளவுள்ள பூந்தாதுக்களினால் பாதிக்கப் பட்டவர்கள்.

யேர்மனியில் அனேகமாக மாசி கடைசியிலிருந்து புரட்டாதி கடைசி வரை பூந்தாதுக்கள் பறக்கின்றன. இந்தப் பூந்தாதுக்கள் காற்றினால் ஏறக்குறைய 300கிலோமீற்றர் தூரம் வரை எடுத்துச் செல்லப் படுகின்றன.

இவை அழையா விருந்தாளியாக மூக்கினுள் நுழையும் போது, பாதுகாப்புச் ஷெல்கள் இவைகளுக்கு எதிராக antibody யைத் தயாரிக்கின்றன. இதன் பாதிப்பு ஒரு பாரதூ ரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும். இதனால் வாயும் மூக்கும் புண்ணாகிச் சளி உண்டாகும்.

Pollenallergie எனக் குறிப்பிடப்படும் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாகத் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டால் மார்புச்சளியினாலும் அதனால் ஏற்படும் அஸ்மா இழுப்பு நோயினாலும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்த ஒவ்வாமை மூக்கிலிருந்து சுவாசக் குழாயின் உட்புறச் சவ்விற்கு நகரத் தொடங்கி விடும்.

இதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பூந்தாதுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

தை மாதத்தில் இருந்தே உங்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டால்
உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Graeserpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.

சித்திரையிலிருந்து ஆவணி வரையுள்ள காலப் பகுதியில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Wildkraeuterpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.

கால நிலைக்கும் வெப்ப தட்ப நிலைக்கும் ஏற்ப இந்த மாத எல்லைகள் ஒன்றிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னுக்குப் பின் மாறுபடலாம்.

மாசியும் பங்குனியும் Erle, Hasel என்பன பூக்கும் காலங்கள். இதே காலத்தில்தான் Weide, Pappel, Ulme, Esche, என்பனவும் பூக்கத் தொடங்குகின்றன.

தெற்கு யேர்மனியில் பங்குனி கடைசியில் Birken பூக்கும். Birken, Karle, Hasel இம் மூன்றினதும் பூந்தாதுக்கள் மிகவும் கடுமையான ஒவ்வாமையைத் தரக் கூடியவை.

உங்களுக்கு எந்தெந்த மாதங்களில் ஒவ்வாமைச் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை அவதானித்து, மேற்குறிப்பிட்டவைகளையும் கவனத்தில் கொண்டு எந்தப் பூவின் மகரந்தம் உங்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். அல்லது மருத்துவரிடம் ஒவ்வாமைக்கான பிரத்தியேகப் பரிசோதனையைச் செய்தும் அறிந்து கொள்ளலாம்.

இப்படியான பூந்தாதுக்களினால் ஏற்படும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் - தும்மல், மூக்கினுள் அரிப்பு, எரிச்சல், - சளி - தொண்டையில் அரிப்பு, எரிச்சல் - கண்ணில் கடி, எரிச்சல், - போன்றவை.

இவ்விதமான ஒவ்வாமையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்.


பகல் பொழுதுகளில் வீட்டுக்குள் வரும் காற்றைக் குறைத்து இரவில் மட்டும் யன்னலைத் திறந்து வீட்டுக்குள்ளே காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.

வீட்டினுள்ளே உள்ள காற்று ஈரலிப்புத்தன்மை உள்ளதாக இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி படுக்கையறையினுள் வைக்கலாம்)

வெயில் நேரத்தில் புற்கள், செடிகள் நிறைந்த பகுதிகளிலோ, வயல் வெளிகளிலோ உலாப் போவதையும், சைக்கிள் ஓடுவதையும் தவிர்த்து மழை பெய்து ஓய்ந்த பின் உலாப் போங்கள்.(மழை நேரத்தில் மிகக் குறைந்த மகரந்தத்துகள்களே காற்றோடு உலாப்போகும்.)

மோட்டார் வாகனங்களில் செல்லும் போது கண்ணாடிகளை மூடி விடுங்கள். ஒரு காற்று வடிகட்டியை வாகனத்துள் பொருத்தி வையுங்கள்.

இரவில் தெளிவான சுத்தமான நீரில் தலையைக் கழுவுங்கள்.

வெளியில் போகும் போது அணிந்த உடைகளை படுக்கையறையில் நின்று களையவோ, படுக்கையறையில் கொழுவவோ வேண்டாம். (ஏனெனில் உடைகளில் இருக்கும் மகரந்தத் துகள்கள் படுக்கையறையில் வீழ்ந்திருந்து இரவு முழுவதும் உங்களைப் படுக்க விடாது தொந்தரவு செய்யும்.)

வீட்டில் உள்ள தூசிகளை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.

படுக்கையறையில் நில விரிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மெத்தைகளும், தலையணைகளும் மிருகங்களின் உரோமங்களினாலோ, பறவைகளின் இறகுகளினாலோ செய்யப் படாதவைகளாக பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.

இந்த ஒவ்வாமைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு
முக்கிய விடயம்

சில மருந்துகள் இவ் ஓவ்வாமையினால் வேறு விதமான பாரிய பக்க விளைவுகளைக் கொடுக்கும் அபாயம் இருப்பதால் - உங்கள் உங்கள் நாடுகளில் உங்களது மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் விநியோகிக்கப் படும் ஒவ்வாமைக்குரிய பிரத்தியேக அட்டையைப் பெற்று - அதை நிரப்பி எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.

பிற்குறிப்பு - தகவல்கள் யேர்மனிய மருத்துவப் பத்திரிகையொன்றிலிருந்து எடுக்கப் பட்டதால் மரங்களினதும், பூக்களினதும் பெயர்களை யேர்மன் மொழியிலேயே தந்துள்ளேன்.

சந்திரவதனா செல்வகுமாரன்.
யேர்மனி
வைகாசி - 1997

Last Updated on Sunday, 05 July 2009 06:10
 
காதலினால் அல்ல PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Saturday, 04 July 2009 06:27
புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை.

நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. நான்கு வருடங்களின் முன் வந்திருந்தாய். பார்த்துப் பேசும் பாக்கியம்தான் எனக்கில்லாமற் போய் விட்டது. பார்க்காமலே இருந்து விடுவோம் என்றாய். பால்ய காலத்து முகங்களையே மனங்களில் வார்த்திருப்போம் என்றாய்.

இன்றைக்கு ஏன் இதெல்லாம் என் நினைவில் வருகின்றதென்றே எனக்குத் தெரியவில்லை. இரவின் நிசப்தங்களைக் குலைக்கும் ஒவ்வொரு சப்தங்களும் எனக்குக் கேட்கின்றன. ஆழ்ந்து உறங்கிப் போகும் நான் ஏன் இப்படி அர்த்த ராத்தரியில் அர்த்தமற்று விழித்திருக்கிறேன் என்று புரியவில்லை. மனசு குழம்புகிறது. எதையோ இழந்தது போலத் தவிக்கிறது.
Last Updated on Tuesday, 13 March 2018 08:27
Read more...
 
தத்துவம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Friday, 03 July 2009 16:48

"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

சந்திரவதனா
யேர்மனி

Comments
Last Updated on Friday, 03 July 2009 19:20
 
இலவு காத்த கிளியாக....! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Friday, 03 July 2009 16:46

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும்..!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும்..!

முடியும்..! முடியும்..!
பட்டியல் நீளும்!
...முடியும்..! முடியும்..!
எல்லாம் முடியும்..!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

Last Updated on Wednesday, 15 July 2009 08:04
 
எம்மவர் மட்டும் எங்கே...? PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Friday, 03 July 2009 16:44

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்...

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து...
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி...

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே..!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ..?

சந்திரவதனா
3.4.1999

Last Updated on Wednesday, 15 July 2009 08:07
 
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Page 4 of 5