home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 12 guests online
Literatur
அனுக்கிரகம்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 04 December 2013 09:03
அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?

வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!
Read more...
 
முகிலாய் நினைவும்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 04 December 2013 08:57
சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது
Read more...
 
செய்நன்றி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Tuesday, 03 December 2013 23:02

பிறந்த இடத்திலேயே வாழ்ந்து இறந்துவிடும் பாக்கியம் பலருக்கு இன்றைய காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. பழைய வாழ்க்கையை அசை போடும் நிகழ்வுகளும், பால்ய நண்பர்களை மீண்டும் சந்திக்க மாட்டோமா  என்ற  உள்ளிருக்கும் ஆசைகளும் கூடவே வந்து கொண்டிருக்கும். இதில் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள், தொழில் சார்ந்தவர்கள், அங்கு உதவி செய்தவர்கள், ஏற்றி விட்ட நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள்.. என்று பலர் அன்றாடம் நினைவுகளில் வந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

ஆலாலும் பலர் தங்களுக்குத் தேவையான  உதவிகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் காணாமல் போய்விடுவார்கள். வந்த பாதையை, முன்பு வாழ்ந்த வாழ்க்கையை மறந்து வசதியான வாழ்க்கைக்குள் ஐக்கியமாகி விடுவார்கள். வீதியில் எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தாலும் கூட „ஆ.. எப்பிடி இருக்கிறீர்கள்? அவசரமாகப் போகிறேன். பிறகு கதைக்கிறேன்'  அவ்வளவுதான் அவர்களிடம் இருந்து வரும். அதன் பின்னர் அப்படியே அவர்கள் மறைந்து போய் விடுவார்கள். மீண்டும் எங்காவது எப்போதாவது இதே பல்லவி தொடரும். அல்லது இல்லாமலே போய்விடும்.

Last Updated on Tuesday, 03 December 2013 23:09
Read more...
 
காதலான ஆழம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by பசுந்திரா   
Monday, 02 December 2013 10:05

இந்த செய்தி வந்ததில் இருந்து - அப்பா எத்தனை விடயங்களை சாதித்திருக்கிறார் என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.  “எனக்கு படிக்க பணம் தந்தவர் , எனக்கு திருமணம்பேசி செய்து வைத்தவர், நான் அவரது வளர்ப்புப் பிள்ளை, எப்ப வந்தால் பார்க்கலாம் ?" என அழைப்பின் மேல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. நேற்றில் இருந்து தொலை பேசி அலறிக்கொண்டு  இருகிறது.  சில தசாப்த பிரிவின்  முடிவில்  அப்பாவை பார்க்கப்போகிறோம்  என்ற செய்தியால்  . என்னுள் அவர் இப்போது எப்படி இருப்பார் என்ற கற்பனை மேலும் மேலும் வியாபித்தது.  அதனூடே அவர் எங்களை பிரிந்து வெளிநாடு போன நினைவு என் கண்முன்னே நிணலாட்டியது.

Last Updated on Tuesday, 03 December 2013 14:11
Read more...
 
மோனைப் பொருளே மூத்தவனே! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 02 December 2013 09:58

„பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே
மோனைப் பொருளே மூத்தவனே கணேசா இந்த ஏழையைப் பாருமையா...'

கணேசனைப் பார்த்து நாங்கள் எல்லோரும் கிண்டல் செய்து பாடும் பாடல் இது. பானை வயிறும்,  கணேசன் என்ற பெயரும் பிள்ளையாருக்கும,; கணேசனுக்கும் மகா பொருத்தம். நாங்கள், தன்னைக் கேலி செய்து பாடுவதாக அவன் எப்பொழுதும் நினைத்தது கிடையாது. புன்னகையுடன் நாங்கள் பாடுவதை ரசிப்பான். ஆனால் அவனிடம் இருந்த புன்னகை ஒரு சமயம் தொலைந்து போயிற்று. எப்பொழுதும் இறுக்கமான முகத்துடனே இருந்தான். எங்களிடம் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறானா என்ற சந்தேகம் கூட எனக்கு இருந்தது.

Last Updated on Tuesday, 03 December 2013 23:10
Read more...
 
கடவுளின் உரை..! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Monday, 02 December 2013 09:41
மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களின் முன்னால் நகர்ந்துகொண்டிருந்தன!
Last Updated on Monday, 03 November 2014 23:19
Read more...
 
தலைவருடன் சில மணிப் பொழுதுகள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Tuesday, 26 November 2013 10:31
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளில்  இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
Last Updated on Friday, 23 November 2018 14:18
Read more...
 
பாலாழி மீன்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 20 November 2013 10:02

„பாற் கடலில் வாழும் மீனானது, அங்கிருக்கும் பாலை உண்ணும் பொருளென்று அறியாதமையினால் அதனை அருந்தாமல் அந்தக் கடலில் வாழும் சிறிய பொருட்களை வருந்தித் தேடி உணவாக உட்கொள்ளும். „பாடசாலை வகுப்பறையில் சமயபாட வகுப்பில் ஏகாம்பரம் ஆசிரியர் திருவருட்பயனிற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இது எல்லாம் எதுக்கு? திருவருட்பயனை மனப்பாடம் செய்ய வேண்டும். அதுக்கு விளக்க உரையும் சொல்ல வேண்டும். அன்று மனதுக்குள் சலித்துக் கொண்டேன். ஆனாலும் அன்று மனப்பாடமும் செய்து கொண்டேன். மூளையின் ஒரு ஓரத்தில் என்றாவது பயன் படுவேன் என்று பதிந்திருந்த திருவருட்பயன், முகநூலில் வலம் வந்த பொழுது எனது நினைவுக்கு வந்தது.

Last Updated on Tuesday, 03 December 2013 23:12
Read more...
 
காலத் தூரிகை.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 13 November 2013 23:11

ஊர் நினைவில் மிதப்பதற்கு
உயிர் விரும்பிக் கேட்கிறது
யார் முகங்கள், எவர் நினைவு
எழுந்து வரும்!, என அறிய
ஆசை தான் எனக்கும்,
ஆனாலும் உடனடியாய்
யோசித்த மாத்திரத்தில்
யுகத்தை முன் கொணர்தலெலாம்
வாய்ப்பில்லை, எனினுமுயிர்
வாய்விட்டுக் கேட்ட பின்னால்
ஏய்த்து, இழுத்தடித்தல்
எனக்கியலாதெனச் சொல்ல

உதட்டைக் கடித்து
ஓரமாய் விழி உருட்டி
பதட்டமின்றி மனத்தாள்
பாதையொன்றை வரைந்தாள்
ஆளற்று நீண்டு செலும்
அப்பாதை முடிவினிலே
நீலக் கடல் அகன்று
நிலம் தொட்டுப் புரள்கிறது
வானிலிருந்தெடுத்துத் தான்
வண்ணத்தைச் சேர்த்திருப்பாள்

Read more...
 
எதுவுமற்ற காலை.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 13 November 2013 22:59
எதற்கும் வணங்காத காலமொன்று
எமக்கும் இருந்தது

கடல் நோக்கிப் பறந்து செல்லும்
வெள்ளைப் பறவையொன்று
கலங்கி மறைவதைப் போல
மூன்று தசாப்தத்தின் கனவு
ஒருநாள் காலையில் பார்த்த போது
கந்தகப்புகையைக் காவிக்கொண்டு
முகிலாகிக் கலைந்து போனது

உடைந்தழுத படி
ஒருக்களித்துப் படுத்துவிட்டு
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
மறுபக்கம் திரும்பிய போது
ஆண்டுகள் ஓடிப்போயிருந்தன
Last Updated on Wednesday, 13 November 2013 23:10
Read more...
 
ஆழ நட்ட வாழை PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by பசுந்திரா   
Tuesday, 12 November 2013 23:17

11 வயது நிரம்பிய கரனைப் பார்ப்பவர்கள் எட்டு வயதே மதிப்பார்கள். ஆனால் அவனோ அந்த 18 ,19 வயது இளைஞர்கள் மூவரின் பின்னால் கையில் ஒரு தடியை பாதையெங்கும் இழுத்துக் கோடு போட்ட படி நடந்துகொண்டு இருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த இத்தனை வருடத்தில் இதுவே முதல் தடவையாக வேலைக்குப் புறப்பட்டு இருக்கிறான். பெரிதாக ஒன்றும் வெட்டிப் புடுங்கும் வேலை இல்லை. இது ஒரு எட்டிப் புடுங்கும் வேலை. புடுங்குவதும் தேங்காய் மாங்காய் இல்லை. வெறும் பூ. அவன்  இந்த வேலைக்குப் போக பல காரணங்கள் உண்டு. ஆனால் ஒரு தகுதியும் இல்லை.

ஊரில் இருக்கும் போது அவனது தந்தை வாழை நாட்டுவதற்காக ஆழமான கிடங்கு வெட்டி நடுவே வாழைக்குட்டியை வைத்து இவனைப் பிடித்துக் கொள்ளும் படி கூறி மண்ணைப்  போட்டு மூடுவார் .

Last Updated on Wednesday, 13 November 2013 00:10
Read more...
 
ஈருடல் ஓருயிர் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by பசுந்திரா   
Tuesday, 12 November 2013 12:37

முதல் முறையாக மதனா பாலனை இழுத்துக் கொண்டு குழிக்குள் வந்து விட்டாள். நூறு முறை ‘ உள்ள வாங்கோ... உள்ள வாங்கோ...’ எனக் கத்தி தொண்டைத் தண்ணி வற்றி விட்டாலும் பாலன் வரமாட்டான். பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியன் ஆமி ஆட்டலறி ஷெல் அடித்தால், இரண்டு நிமிடம் 25 விநாடி  எடுக்கும் அளவெட்டி மாரியம்மன் கோயிலடிக்கு வந்து விழுந்து வெடிக்க என ஒரு கணக்கு வைத்திருந்தான் பாலன். இந்தக் கணக்கை கண்டுபிடித்து கொஞ்ச நாள்தான் ஆகிறது. முந்தைய இலங்கை ஆமியின் நிமிடக் கணக்கு புதிதாக வந்த இந்தியன் ஆமியோடு ஒத்துப் போக வில்லை. பாலனின் நிமிடக் கணக்குக்கு முன்னே ஷெல் விழுந்து வெடித்தது பல முறை. "வெடிக்கப் போகுது படுங்கோ " என்று கூறி படுத்ததும் வெடிக்காமல் போனது. 'புதைஞ்சு போச்சு போல' என எழும்பி இருந்த பின் வெடித்தது.

இப்போது எல்லாம் இலங்கை ஆமி பாலனை மாட்ட வேண்டும் என்றே ஷெல் அடிக்காமல் இருந்து விட்டார்கள்.  அந்த வேலையை இந்தியன் ஆமி செய்தது. ஆனாலும் போகப் போக ஆராட்சி செய்து பாலன் நேரத்தைக் கண்டுபிடித்துத் திருத்தி விட்டான்.

Last Updated on Wednesday, 20 November 2013 09:53
Read more...
 
தீபாவளி - காரணங்களும் காரியங்களும் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Saturday, 02 November 2013 19:12

சில விடயங்களில் எப்பொழுதும் நாங்கள்  தெளிவு இல்லை.  ஏன், எதற்கு என்ற கேள்விகள்  எங்களிடம் அரிது என நினைக்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜெர்மனியர், ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, சொன்ன வார்த்தைகள் நீண்ட நாட்களாக எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தன.

அவர் சொன்னது இதுதான். 'ஒரு தடவை கொலண்டில்  உள்ள வாசிகசாலைக்குச்  சென்றிருந்தேன். அங்கிருந்த  ஒரு புத்தகத்தில்  உங்களைப் (தமிழரைப் ) பற்றிய  குறிப்பு இருந்தது. அதில் தமிழர்கள் என்றால் குள்ளமானவர்கள், கறுப்பு நிறமானவர்கள், பல்லு வெளியில் துருத்திக் கொண்டிருக்கும், தங்களுக்குத் தேவையானவர் ஒருவர் போனால் அவர் பின்னால்  ஆட்டு மந்தை  போல் எல்லோரும்    போய்க் கொண்டிருப்பார்கள்  என்று எழுதியிருந்தது' என்றார்.  அன்று அவர் என்னைக் கேலி செய்கிறாரா  அல்லது உண்மையாகத் தான் வாசித்ததைத்தான்  சொல்கிறாரா  என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனாலும்  அன்று  ஒல்லாந்தர் எங்களை ஆண்ட பொழுது நாங்கள் அப்படித்தான்  இருந்தோமா?  இன்று கால ஓட்டத்தில் எங்களிடம் மாறுதல்கள் வந்து விட்டனவா? இல்லை இன்னும் அப்படித்தானா? என்னுள் இன்னும் ஒலித்துக்  கொண்டிருக்கும் கேள்விகள் இது.

Last Updated on Monday, 27 January 2014 22:44
Read more...
 
ரொம்பக் கேவலமா இருக்கு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 18 September 2013 21:26
அன்றொரு நாள் மன்னன் சொலமன் சபையிலே ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. இரண்டு தாயார், ஒரு பிள்ளை. இருவருமே அதைத் தன் பிள்ளை என்றனர். அன்று அதற்கு மன்னன் சொலமன் வழங்கிய தீர்ப்பும், அந்தத் தீர்ப்பை வழங்க அவன் கையாண்ட முறையும் மன்னனது புகழையும், தாயின் பெருமையையும் உயர்த்தி நின்றன. இந்த நிகழ்வு இரண்டு ஆயிரங்களைக் கடந்த ஒன்று. இன்றொரு வழக்கு வந்தது. இரண்டு பிள்ளைகள் ஒரு தாய். வழக்கில் கிடைத்த தீர்ப்பும், அதை வழங்கக் கையாண்ட முறையும்
Last Updated on Wednesday, 20 November 2013 10:13
Read more...
 
சிவப்புப் பொறிகள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Tuesday, 23 July 2013 22:19
அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில் ஒருவித எதிர்பார்ப்பை விதைத்திருந்தது. காலைக் குளிர் நீரில் விறைத்துப் போன தன் கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து விட்டான்.

"துரை......, தேத்தண்ணியைக் குடிமேனை" பார்வதியின் இதமான வேண்டுதல் மனதிற்குச் சுகமாக இருந்தது. ஆவி பறக்கக் கொதிக்கும் தேனீரை, மெதுவாக வாயால் ஊதிவிட்டு, சிறிதாக உறிஞ்சிக் கொண்டான்.

வானொலியில் மாநிலச் செய்திகள் ஆரம்பமாகியிருந்தது. ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டான்.
Last Updated on Monday, 03 November 2014 22:48
Read more...
 
மகத்தான துயரங்கள்....! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by Athanas Jesurasa   
Tuesday, 23 July 2013 22:12
ண்பனோடு சும்மா உலவித்திரியலாமென வந்தவனின் கண்ணில் தொலைவில் அவள் பார்வைகொண்டதில் பழைய நினைவுகள் கிளர, தனது வாழ்க்கையின் சாரமே துயரம்தானோவென உணர்வுகொண்டான்.

    சூனியங் கவிந்ததெனக் கழிந்த இரு ஆண்டுகளிற்குப் பிறகு காண்பதில் எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைப்புக்கொண்டவன், நண்பனோடு கதைகொண்டதைப்போல அவளைக் கடக்கையில்,

     “எங்களையெல்லாம் மறந்திற்றீங்கள் போல....” எனக் குரல் கேட்டதில் திடீரென நிற்பாட்டிச் சைக்கிளைத் திருப்பினான்.

    குழந்தையின் கையில் இழுபட்டபடி கிடந்த தாலியைக் கண்டதில் ‘உன்னையா?’ என உருகிக் கேட்க வந்த வார்த்தைகளும் பதுக்கங்கொள்ள, “அப்பிடியில்ல.... கதைப்பிராக்கில கவனிக்க இல்ல” என வெளியிட்டான்.

    அவளோடு  தான் அந்நியங்கொள்ள  நேர்ந்ததும் இந்தத் தாலியால்தானே என்பது உறுத்த, மௌனமாய் அதனை வெறித்த பார்வை கொண்டான்.

    ‘இது’ இந்தக் கழுத்தில் ஏறியதை உணர்த்த வந்ததென லோகநாதனின் தந்தி கிடைத்ததில், இரைந்தபடி கிடந்த கடலை வெறித்துத் திரிந்த நாட்களும் முகங்காட்டக் கண்டான்.

Last Updated on Monday, 02 December 2013 10:32
Read more...
 
உனக்கு நான் அல்லது எனக்கு நீ.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Tuesday, 23 July 2013 22:10

எதுவுமே புரிந்திருக்கவில்லை
எல்லோரும் கூடி அழ
அவனும் சேர்ந்தழுதான்

கண்களை இறுக்கமாக மூடி
ஆடாமல் அசையாமல்
பெட்டிக்குள் அடங்கிப் போய்,
எப்படி அவனிதனை எடுத்துக்கொள்வான்?

முன்னைய நாட்களைப் போலவே
தன்னை
கண்ணாமூச்சியின் பின்
கட்டி அணைப்பாயென்றெண்ணுவானா?
அடிக்கடி ஓடி வந்து
உற்றுப் பார்க்கிறான் உன் முகத்தை
சிரிக்கிறான், அழுகிறான், ஓடித்திரிகிறான்

Read more...
 
ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது.... PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by Athanas Jesurasa   
Tuesday, 23 July 2013 21:57
ரைநாள் நித்திரையில் கழிந்துபோனது. மெயிலில் வந்த அலுப்பு; மத்தியானம் சாப்பிட்ட பிறகும் – சாய்வுக்கதிரையில் சிறு கண்மூடல்.

    யாரோ தோளில் தட்டியதைப்போல.... முழித்தால் தேத்தண்ணீருடன் அக்கா. தம்பியும்கடலால வந்திற்றான் போல; குசினிக்குள் சாப்பிட்டபடி, அவன்....

    ‘எட,அப்ப நாலுமணிக்கு மேலபோல’ ; அவசரம்.

   “எங்க போகப்போறாய்?” – அக்கா.

Last Updated on Monday, 02 December 2013 10:33
Read more...
 
பிரிவு....! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by Athanas Jesurasa   
Tuesday, 21 May 2013 21:40
அது அற்புதமாக இருந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும், 8.30க்கு ‘மூர்’ றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்துபோகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதைஎழுதப்பட்டிருக்க வேண்டும்.

கையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள்,சோகம் நிறைந்தவளாக  மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.

யாரோ‘மூர்’ றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8.35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும். எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன். அது‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்துவிட்டன.
Last Updated on Monday, 02 December 2013 10:33
Read more...
 
ஐயாக்குட்டி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by விசாகுலன்   
Wednesday, 13 March 2013 08:31

நான் ரசித்த படங்களில் ஒன்று குணா. அதில் கமலஹாசன் மூளைவளர்ச்சி குன்றிய ஒருவராக நடிகின்றார். ஒரு பெண்ணை உயிருக்கு மேலாகக் காதலிக்கிறார். காதலிப்பதோடு நில்லாமல் தன் காதலியை கடத்திச் சென்று மலை உச்சியில் உள்ள குகை ஒன்றில் தங்க வைத்துள்ளார். அந்தக் காதலை சில வரிகளில் சொல்ல அவர் காதலி அதை பாட்டாகப் பாடுவார்.

"மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது"

 இந்த வரிகள் குகைச்சுவர்களில் பட்டு எதிரொலிக்கும். அதே மாதிரி சிலவேளைகளில் இடையிடையே என் மனதிலும் எதிரொலிக்கும். நேரம் கிடைக்கும் போது சிலசில கட்டங்களை டிவிடியில் போட்டுப் பார்ப்பேன். ஆனால் என் மனைவி அதைத் தடுத்து விடுவா. அவவின் எண்ணம் இந்த மனுஷனுக்கு குணா மாதிரி தட்டி போட்டுதோ என்று. ஆனால் எனது பழைய நினைவுகளை மீட்டும் போதுதான் அதன் உள்ளார்த்தம் புரிந்தது.

Last Updated on Saturday, 02 November 2013 19:34
Read more...
 
பிரிவெனும் கருந்துளை.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 13 March 2013 08:02

பிரிவு பிளந்தென்னை

விழுங்கிற்று

ஏதோ ஓர் யுகத்தில்

கண்டங்கள் பிளந்து

தேசங்களை விழுங்கியதைப் போல

 

இருளும்,குளிரும் அடர்ந்த

இரவுக் கனவுகளின்

மன அழுத்த நெரித்தலில்

உடல் வியர்த்து, வான் தேடி

பிரமையில்

மல்லாந்து கிடக்கின்ற மலைக்கு

ஆறுதலாய் ஒருகாலை விடிவது போல

Read more...
 
அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து) PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 13 March 2013 08:00

உந்தன் நினைவு வந்தால்

ஒரு கவியும் எழுகுதில்லை

எந்தன் இமை கவிந்து

இருள, துளியிரெண்டு

சிந்தி உன் சிரிப்பாய்

சிதறித் தெறிக்கிறது

 

எத்தனை யுகமாய் நான்

ஏந்தி வந்த புண்ணியமோ

இத்தினத்தில் இவ்வாண்டில்

எழுவன் என்று காத்திருந்து

அப்பனாய் எனைப்படைத்த

அழகேசா! எமக்கிடையில்

இப்படியே பேசாமல்

Read more...
 
அன்பெனும் தனிமை.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 13 March 2013 07:57

மஞ்சட்பூச் சணல்வயலின்

மத்தியிலே தனியாக

எஞ்சிப் போய் நிற்கும்

இருட் பச்சை மரம் போல,

வெட்டிரும்பாற் பிளக்கேலா

வீரியப்பாறையினை

தட்டிப் பிளந்துவிட்டுத்

தனியாக நிமிர்வோடு

எட்டிப் பார்க்கின்ற

இளங்குருத்துத் தளிர்போல

தனித்துவமாய் வாழ் பழகும்

தளராத மனமொன்றை

உனையே அறியாமல்

உள் அறையும் உன் தனிமை

Last Updated on Wednesday, 13 March 2013 07:59
Read more...
 
தேம்பும் உயிரின் தினவு.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 13 March 2013 07:54

இதமான கனவுகளுடன் 

அழகொழுக என் காலைகள் விடிவதாயும்,

ஏதோ ஓர் தீவின் மூலையில்

யாரென்றே தெரியாதவர்களுடன்

வாழப்பணிக்கப்பட்ட இந்த அறைதான்

மகிழ்வு தரும் என்னுடைய வீடென்றும்

இப்போதெல்லாம் நான்

நம்பத் தொடங்கி இருக்கிறேன்

அப்பா என்பவர்

ஸ்கைப்பில் மட்டுமே வரமுடியுமென

என் மகன் நம்பத்தொடங்கி இருப்பதைப் போல

Last Updated on Wednesday, 13 March 2013 07:58
Read more...
 
மீளவிழியில் மிதந்த கவிதை..! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Thursday, 14 February 2013 08:02
(மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?)


மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது.

எவ்வளவு லாவகமாய் அவள் என்னைக் கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை நம்பிச் சரணடைந்தவளைக் காக்கவேண்டியது எனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

தற்செயலாகத்தான் அது நடந்தது, பாடசாலையால் வரும்போது அவளது பென்சில் பெட்டி தெருவில் விழுந்து விடவே அதைக் குனிந்து எடுக்க முயன்றபோது, முன்வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் தன்னைத் தாக்கத்தான் எதையோ எடுக்கிறாள் என்ற பயத்தில் அவளைத் துரத்தத் தொடங்கியது.
Last Updated on Thursday, 14 February 2013 08:24
Read more...
 
ஆசை வெட்கமறியாதோ..? PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Tuesday, 12 February 2013 07:29

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. )

ழுபது கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள்.

Last Updated on Thursday, 14 February 2013 08:47
Read more...
 
WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Thursday, 07 February 2013 23:44
பயம்
நீங்கள் 14வது மாடிக்கு நடந்தே, அதாவது படிகளில் ஏறியே போயிருக்கிறீர்களா? ம்... ´லிப்ற்´ இல்லாவிடில் என்ன செய்வது, நடக்கத்தானே வேண்டும். ஆனால் ´லிப்ற்´ இருக்கத்தக்கதாகவே நடந்திருக்கிறீர்களா? நான் நடக்கிறேன். ´லிப்ற்´ பக்கத்தில் இருக்க நான் மாடிப்படிகளில் ஏறியே போகிறேன். காரணம் பயம். பூட்டப்பட்ட அந்த சிறிய இடம் கொண்ட ´லிப்ற்´ க்குள் சில விநாடிகள் கூட நிற்கப் பயம்.

முன்னர் அப்படியில்லை. சிறுவயதில், கொழும்பில் முதன்முதலாக அப்பாவுடன் ´லிப்ற்´ றில் போன போது என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எப்படி இது சாத்தியம் என்ற வியப்பு. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஓடிச் சென்று " அம்மா, இன்று றூம் நடந்நது" என்றேன். அதன் பின்னான பொழுதுகளிலும் ´லிப்ற்´ என்னைப் பயமுறுத்தியதில்லை. ஆனால் இப்போது... எப்போது எப்படி ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. மெதுமெதுவாக ஆரம்பித்த பயம், இப்போது பூதாகரமாக என்னை ஆட்கொண்டுள்ளது.
Last Updated on Thursday, 08 September 2016 20:59
Read more...
 
பேய் (குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புச் சிறுகதை) PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Friday, 01 February 2013 06:53
அது ஒரு சனிக்கிழமை. எனது தங்கை கிளாரா எனது காதுக்குள் குசுகுசுத்தாள்.
'இண்டைக்குப் பின்னேரம் அம்மாவும், அப்பாவும் வெளியிலை போகினம். நாங்கள் இரண்டு பேரும்தான் வீட்டிலை தனிய..'

'உண்மையாக..?'

'இண்டைக்கு ரீவீயிலை ஒரு பேய்ப்படம் வரும். நாங்கள் அதைப் பார்க்கலாம்' எனக்குப் பயங்கர சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் எனக்குப் பேய்ப்படம் என்றால் நல்ல விருப்பம்.

'உனக்குப் பயமில்லையோ?'

'கொஞ்சம் பயம். உனக்கு..?'

எனக்கும் கொஞ்சம்தான் பயம்.
Last Updated on Friday, 08 February 2013 00:06
Read more...
 
ஆஹா கவிதை கவிதை PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by விசாகுலன்   
Wednesday, 05 December 2012 08:39

யாழ்பாணத்தில் மாணவிகள் tuitionக்குப் போகும்போது மாணவர்கள் bicycleல் நின்றுகொண்டு மாணவிகளுக்கு side அடிப்பது எல்லோரும் அறிந்த விடயம். அவ்வாறு side அடிப்பதற்கு என் நண்பன் செல்லும்போது என்னையும் துணைக்கு அழைத்தான். அவனுக்கு தெம்புக்கு ஒரு ஆள் தேவை. நான் சிறுவயதில் colomboஇல் பலகாலம் இருந்து விட்டு அண்மையில் யாழ்பாணம் வந்தனான். இது எனக்கு கொஞ்சம் புதுசு. இருந்தாலும் போய்தான் பார்ப்போமே என்று அவனுடன் புறப்படேன். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நான் இதைக் கூடவா செய்யமாட்டேன். இருவரும் ஒன்றாக cycleல் புறப்பட்டோம். ஓரங்கட்டைச் சந்தி வந்ததும் Cycleஐ மெதுவாய் நிறுத்திவிட்டு அவனின் கனவுகன்னயின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

தூரத்தில் ஒரு தலைக்கறுப்பு தெரிந்தது. அவன் நிலைகொள்ளாமல் தவித்தான். அதோ "அவள் வாறாள், அவள் வாறாள்" முனகினான். எனக்கு ஒருவரையும் தெரியவில்லை. ஏன் இப்படி அவதிப்படுகிறான் என யோசித்தேன். இல்லை அவன் சொன்னது சரிதான். ஒரு பெண்குயில் ஒன்று தூரத்தே தெரிந்தாள். ஆஹா என்ன நடை. அது அன்ன நடை. இப்போது இன்னும் அருகே வந்து விட்டாள். முகம் சந்திரவதனம். என் நண்பன் அந்தப் பெண்ணை side அடிப்பதில் என்ன தப்பு? அந்த அழகுதேவதையைக் கண்டால் யாருக்குத்தான் காதல் வராது. ஆம் எனக்கும் அவள் மீது காதல் வந்துவிட்டது.

Last Updated on Wednesday, 05 December 2012 09:00
Read more...
 
நினைவில் வைத்திருங்கள்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Monday, 26 November 2012 06:21

கானகத்தின் மூச்சாய்

கடலலையின் அசைவுகளாய்

மானம் எனும் உயிரின்

மார்பாய், எம்தேச

வானத்தின் கீழ் நிற்கும்

வளியாய், வரலாறாய்

ஊனுடம்பின் ஆசைதனை

உதறி எம் மண்ணில்

மானுடம் வாழ்ந்ததென

மார்தட்டிச் சொல்ல வைத்த

எமதிருப்பின் சுவடுகளே!

எமக்காக உம் வாழ்வை

அமரத்துவமடைய வைத்த

ஆற்றல்மிகு நல்லுயிர்காள்!

Read more...
 
பிணத்தின் கனவு.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Thursday, 15 November 2012 07:28

உறைகிறது குருதி

உள்ளிருந்தெழுந்து வரும்

குறை மூச்சு எதற்குள்ளோ

கொழுவுப் பட்டது போல்

தடக்குண்டு, தடக்குண்டு

தள்ளாடிச் சரிகையிலே

சேடம் இழுத்துச் சிரசால் மின்னலொன்று

சூடாற உடற் சூட்டைச்

சூப்பி மேலெழுந்து

தாரகையாய் வானத்தில்

தைத்து ஒளிர்கிறது

Read more...
 
மாறாது நீளும் பருவங்கள்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Thursday, 15 November 2012 07:26

என் நினைவுகளற்று

பாசி படிந்துபோய்க் கிடக்கும்

உன் மனப்பாறையில்

ஏறி உட்கார முனைந்து

இடுப்பொடிய வீழ்வது தான்

என் வாழ்நாட்களுக்கான

இப்போதைய காலம்

 

வாழ்ந்த நாட்களின்

வசந்த நினைவுகள் தான்

வாழும் நாட்களின்

இலையுதிர் நிலையினை

எப்படியோ தாங்கி ஏந்திச் செல்கிறது

Read more...
 
சிரிக்கப் பழகுதல்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Thursday, 15 November 2012 07:21

வாய்ப்பிருந்தால் முடிந்தவரை

வாய்விட்டுச் சிரிக்கின்றோம்

காய்த்திருக்கும் விடுதலைப் பூ

கனியாகும் நாட்களிடை

எழுகின்ற அழுத்தங்கள்

எமைக் கொல்லும்,அக்கணத்தில்

அழுதிருப்போம் ஆனாலும்

அடுத்த நொடி சுதாகரித்து

நாமே எமைத்தாங்கி நடந்து செல்வோம்

இடைவெளியில்

வாய்ப்பிருந்தால் முடிந்தவரை

வாய் விட்டுச் சிரிக்கின்றோம்

Read more...
 
வடலிகளின் வாழ்வெண்ணி.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Monday, 29 October 2012 23:05

எம் மண்ணின் குறியீடே

எப்படி நாம் மெதுமெதுவாய்

இம் மண்ணில் இடிபட்டும்

எழுந்தம் எனச் சொல்லுகின்ற

கம்பீர வரலாற்றின் காட்சி உரு வடிவே!

 

பறந்தடித்த ஷெல்லுக்கும்

பாய்ந்து வந்த குண்டுக்கும்

அறுத்து உன்னுடலை

அரணாகக் கொடுத்தாய் நீ

கறுத்த உன்னுடலுக்குள்

கசிகின்ற கனிவை நாம்

கள்ளாய், கிழங்காக

Read more...
 
நீயில்லாத மழைக்காலம்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Monday, 29 October 2012 23:02

கண்ணைத் திறந்திருந்தால்

காணாத காட்சி எல்லாம்

கண்ணையிமை மூடிக்

கதவடைக்கக் காணுகிறேன்

 

எண்ணங்களெல்லாம்

எழுந்தெழுந்து சிறகடித்து

வண்ணமாய் எமைக் கடந்த

வழிகளிலே பறக்க வைக்கும்

தன்மை இம்மழைக்குத்

தானுண்டு, உன்னிமையை

என்னிமையால் மூடி

Last Updated on Monday, 29 October 2012 23:05
Read more...
 
நிலவாய் தொடர்கிறதென் நிலம்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Monday, 29 October 2012 22:59

அடிக்கின்ற புயல் நடுவே

ஆடுகின்ற மரத்தினது

உடைகின்ற கொப்பாக

ஓர் வாழ்வு, கள்ளடியில்

அடைகின்ற மண்டியைப் போல்

அதிற் தனிமை, ஆனாலும்

விடிவெய்தும் என் தேச

விடுதலையின் எழுகதிரை

கையிரெண்டும் அகட்டி

கால் மடக்கித் தாளிட்டு

மெய் சிலிர்க்க நாடியினை

மேற் தூக்கி அண்ணாந்து

அப்படியே கண்ணால்

அதை நுகர்ந்து பருகியெந்தன்

இப்பிறப்பைத் துறக்கோணும்

என்பதொன்றே தீராத

ஆசையடி எந்தனுக்கு

அதற்குள்ளே என் வாழ்வு

ஓசையின்றி எங்கேனும்

ஓர் கண்டத் தகட்டிடுக்கில்

ஒடிந்து வீழ்ந்துடைந்து

உரு மறைந்து போயிடலாம்

Last Updated on Monday, 29 October 2012 23:02
Read more...
 
மோகன்தாஸ் காந்தி PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by புன்னியாமீன்   
Wednesday, 24 October 2012 08:06

உலக அகிம்சை தினம்: International Day of Non-Violence

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் திகதியாகும்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

Last Updated on Wednesday, 24 October 2012 08:36
Read more...
 
அழிக்கப்படும் சாட்சியங்கள்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 26 September 2012 22:10

அலைக் கரங்களை

மார்பில் அடித்தடித்து

உரக்க அலறியது கடல்

அதன் குரலில்

இத்துணை ஆண்டுகாலக் கனவுகளும்

கண் முன்னே கலைந்து போய்

கந்தகப் புகையான ஏக்கம்

கப்பிப் போய்க்கிடந்தது

Read more...
 
மூனாவுடன் ஒரு நேர்காணல் PDF Print E-mail
Literatur - Interview
Written by இளந்திரையன்   
Monday, 17 September 2012 21:35
ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது...

பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி.

பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொலைகளை மையப்படுத்தி இவர் வரைந்த கருத்துப்படம் 150 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களின் முகப் புத்தங்களில் பிரதிசெய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன. இவரின் 'தாயென்னும் கோயில்' நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசான தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறது.

செல்வகுமாரனின் முழுமையான படைப்பாற்றலை இந்நேர்காணல் வெளிக்காட்டும் என நம்புகிறோம்.

Last Updated on Saturday, 12 July 2014 21:21
Read more...
 
மெளன அலை.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 12 September 2012 12:21

அள்ளி எறிகிறாய் என் கவிதைக்குள்

உன் நினைவுகளையும் காதலையும்

அடர் இரவில்

யாருமற்ற கடலின் நடுவே

கைவிடப்பட்ட படகொன்றின்

செவிப்பறைகளை

நிசப்த ஊழை கிழிப்பது போல

உன்னுடைய ஆழ்மெளன மிகையொலியால்

வெடித்துப் பிய்கிறதென்

மனச் செவிகள்

பிரிவு ஒரு குழந்தையைப் போல்

நம் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி

அங்குமிங்குமாய் ஓடி

அழுதழுது முகம் வீங்கி

ஏமாற்றப் பெரு மூச்சை

எமைச் சுற்றி இறைக்கிறது

Last Updated on Wednesday, 12 September 2012 12:31
Read more...
 
மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Thursday, 23 August 2012 11:10

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

 

வாழ்ந்த வாழ்க்கை வந்த

வழி வழியே வீழ்ந்துடைந்து

பாழ் நிலம் போலிருண்டு

பயனற்றுப் போனாலும்

நானிறந்து போகவில்லை

நடக்கின்றேன் ஆதனினால்

எனக்கென்ன மகிழ்வோடு

இடியாமல் இருக்கின்றேன்

Read more...
 
பனங்கொட்டை பொறுக்கி PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Thursday, 23 August 2012 10:12
உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்த அந்தப் பசுக்கன்றுதான் என் மனதில் சொல்லொணா வேதனையைக் கிளப்பிவிட்டது. நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பதுபோல ஆயுதவிற்பனைக்காக மனிதனே தேடிக்கொண்ட வினையில் மாட்டிக் கொண்ட அப்பாவி இரைகள்தான் இவைகள். பாவம் இந்தப் பசுக்கன்று, வாயற்ற இந்த ஜீவன்களால் தங்களுக்கு நடந்த கொடுமைகளை யாரிடம் சொல்லி அழமுடியும். வண்டிச் சத்தம் கேட்கவே, மிரட்சியோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புல்லுக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டது.  அதன் பசி அதற்கு.
Last Updated on Thursday, 23 August 2012 11:22
Read more...
 
அன்றும் போராளி இன்றும் போராளி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சஞ்சயன் செல்வமாணிக்கம்   
Monday, 20 August 2012 08:33

அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு  என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட  பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை,  மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று.

எனது விடுமுறையில் இலங்‌கை வந்து  தற்போது மட்டக்களப்பில்  தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர்.

மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு  சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான  உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும்,  சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது.

ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

Last Updated on Monday, 20 August 2012 08:43
Read more...
 
கனகலிங்கம் சுருட்டு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Monday, 20 August 2012 08:12

ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம்,

Last Updated on Friday, 01 February 2013 07:28
Read more...
 
படர் மெளனம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Monday, 30 July 2012 21:28

பிரிவின் துயர் உன்னைப்
பிழிந்து உருக்குகையில்
அருவி போற் சொரிந்து அழுது விடு
உள்ளடக்கி
எரிந்தெரிந்து நெஞ்சால் எதுவுமே பேசாமல்
முறிந்த மரம் போல முகஞ்சரிந்து கிடக்காதே
பாழடைந்த கல்லறை போற்
பரவுகின்ற உன் மெளனம்
தோளை உலுப்பியுந்தன் துயரெனக்குச் சொல்லுதடி

நீளுமெம் பிரிவென்று நினைத்தோமா

 அன்பூற

வாழத்தான் சேர்ந்தோம் வலிய விதி

எம்மிடையே

எழுதுகின்ற கதைகளுக்கு என்ன தான்

நாம் செய்வோம்

தொழுதுகொண்டு வாழ்துயரம் தொலையோணும்

என்பதற்காய்

Last Updated on Monday, 29 October 2012 23:05
Read more...
 
நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by K S Sivakumaran   
Thursday, 19 July 2012 21:25

Restrained recollection of the past

A Lankan-born expatriate writer in London recaps her unbearable sorrows experienced in the North especially during the onslaught of the Tigers (Liberation Thamil Tigers Eelam) and the IPKF (Indian Peace Keeping Force) during the second half of the 1980s in her stories in Tamil. Her name after marriage is Chandrakumari Iravindrakumaran, now shortened as Chandra Ravindran. Earlier she used to write short stories in Lanka under her maiden name Chandra Thiyagarajah. She hails from Melaip Pulolyoor, Athiyady, Paruththithurai (Point Pedro) in the widely known region Vadamaratchi in the northern peninsula. Her first collection of short stories was published in Lanka in 1988. It was called “Nilalkal” (Shadows). Until her departure to U.K. via Egypt in 1991, she had worked at the government’s Yaalpaanam (Jaffna) Secretariat. While in London she had worked for seven years until 2007 for the International Broadcasting Corporation. Presently she works for a commercial firm.

In her second collection of short stories titled “Nilavukkuth Thetiyum” (The Moon will Know), she writes 10 stories in an interesting way reenacting her own experiences confronted in the turbulent times three decades ago. Free fro sentimentality she narrates beautifully in a restrained manner the agony (the anguish, uncertainty of life for the next moment and the horrors of killing in a scenario of Jungle Law) and also the ecstasy of the simple rural family life she had enjoyed as a young woman. Though lacking in chiseled craftsmanship in her stories, her descriptive and narrative power of writing captures the right mood of life in the peninsula during three decades of cruel war. Similar situations were experienced in other parts of the country particularly in places where the Tamils and Muslims lived.

Most people including this writer did not experience first hand the gruesome and horrible plight of the people caught in the killings in the name of war. As such we merely thought that the war was between the Tigers and the Lankan Armed Forces. We didn’t realize the gravity of the destruction of human values and cultures of people at large.

Unlike other Lankan writers writing in Tamil from here where emotionalism is not under control, Chandra Ravindran writing from abroad strains her emotions in tranquility that a certain kind of objectivity is displayed in her stories.

Last Updated on Tuesday, 21 October 2014 22:23
Read more...
 
நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by என்.செல்வராஜா   
Saturday, 14 July 2012 06:22

இலண்டனில் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத்தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வும், ஆய்வுரை/பதிலுரையும்

கடந் ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத் தெரியும் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது
  
வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான `ஒரு கல் விக்கிரகமாகிறது´ என்ற சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்தவர். வடமராட்சியில், பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான நிழல்கள் 1988இல் வெளியிடப்பட்டது. ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதைகளினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பாக நிழல்கள் முன்னர் வெளிவந்திருந்தது. லண்டன், .பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2009வரை, ஏழாண்டு காலமாக  இலக்கிய நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:24
Read more...
 
“விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by இளங்குமரன்   
Tuesday, 26 June 2012 09:52

சாவின் விழிம்பில் உயிர் தப்பிய திருக்குமரனின் “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் வெளியீடு .

கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்யப்பட்டு சாவின் விழிம்பில் உயிர்தப்பிய திருக்குமரனின் “விழுங்கப்பட்ட விதைகள்” எனும் கவிதை நூல் தொகுப்பு பிரித்தானியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

23-06-2012 சனிக்கிழமை மாலை 4:00 மணியிலிருன்து 7:00 மணிவரை லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலய மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

எழுத்தாளர் திருமதி. சந்திரா இரவீந்திரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குமரனின் இக் கவிதை நூல் தொகுப்பின் நூல் வெளியீட்டினை ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.

Last Updated on Tuesday, 11 March 2014 20:20
Read more...
 
அன்பினிய என் அப்பா! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by N Suresh   
Wednesday, 21 December 2011 08:24

இன்று வரை
யாரையும் அவ்வளவு
நேசித்ததே இல்லையே
என்னுயிர்
என்னுயிர் அப்பா உன்னை விட !

எந்தனுள்ளம்
ஆறுதலைத் தேடுகிறது
கண்ணீருடன் இன்னமும்
அனாதை நிலையிலிருந்து
மீள இயலமால் !

வருடங்கள் பதினாறு காலமாக
அப்பா உன் மரணம்
கொண்டு சென்றது
உன் உயிர் மட்டுமா
என்னுயிர் நட்பும் தானே !
கனக்கிறதே இதயமின்றும் !

Last Updated on Wednesday, 21 December 2011 08:37
Read more...
 
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சஞ்சயன் செல்வமாணிக்கம்   
Wednesday, 07 December 2011 21:48
1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன்.

 கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலறல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், ச‌தையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை ‌வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போது முதன் முதலில் அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன்.

Last Updated on Wednesday, 07 December 2011 22:40
Read more...
 
ஆலமரம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தாளையடி சபாரத்தினம்   
Saturday, 24 September 2011 06:10
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள் தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து. உயிருக்குயிரான காவலாளியுங்கூட....

காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.
Last Updated on Sunday, 25 September 2011 06:57
Read more...
 
முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by முனைவர் மு.இளங்கோவன்   
Friday, 08 July 2011 13:28
இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள்.

மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில் கவனம் பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே.

Last Updated on Wednesday, 24 October 2012 08:20
Read more...
 
கார்த்திகேசு சிவத்தம்பி PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Friday, 08 July 2011 13:15

யோகர் எனும் சித்தன்

யூகித்துணர்ந் துரைத்த

பாகுத் தமிழ் மொழியின்

பதிவேகால நடை

ஆகி அதற்கேற்ப

அசைந்தோடிச் சூசகமாய்

சொல்லும் வகை உணர்ந்த

சுவையே! தமிழ்ச் சிந்தனையை

Last Updated on Friday, 08 July 2011 13:32
Read more...
 
என் மண்ணும் என் வீடும் என் உறவும்... PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Tuesday, 28 June 2011 07:16

அது ஒரு காலம்! நினைவுகளும் கனவுகளும் நிரம்பி வழிய, இலக்கை அடைந்திடலாம் என்ற நம்பிக்கையில் இடர்களைப் பொருட்படுத்தாமல் சுமைகளை இறக்கி வைக்காமல் நீளமாய் நடந்து கொண்டேயிருந்த காலம்!

அது ஒரு ஆடி மாத நடுப்பகுதி....

கொளுத்தி எரியும் வெயிலில் யாழ்மண் கருகிக் கொண்டிருந்தது!  இராணுவக் கெடுபிடிகள் தாளாமல், வடமராட்சி மண்ணில் சொந்த வீட்டை விட்டு, யாழ் மண்ணிற்கு இடம்பெயர்ந்து சுய அடையாளங்களை மறைக்க முயன்று கொண்டு இருக்கிற போதும் பிறந்து வளர்ந்த ஊரும், தவழ்ந்து மகிழ்ந்த வீடும் மனதிற்குள் வந்துவந்து, எங்களை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்!

எனக்குத் திருமணப் பேச்சுக்கள் நடைபெறுகிறது ஒரு புறம்! என் குட்டித் தங்கை குதியன் குத்திக் கொண்டு, வேம்படிச் சிநேகிதிகளுடன் யாழ் நகரம் முழுவதும் சைக்கிளில் ஊர்வலம் சென்று வருவது மறுபுறம். சுற்றிவர முகாமிட்டிருக்கும் இந்திய இராணுவத்திற்கு இவளின் குடும்ப வேதம் எதுவும் இன்னமும் தெரியாது என்ற தைரியம் அவளுக்கு!

Last Updated on Thursday, 19 December 2013 09:59
Read more...
 
"அந்த 6 நாட்கள்" இராணுவத்தின் பிடியில்.. PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by பிரமிளா சுகுமார்   
Tuesday, 28 June 2011 06:51

அதிகாலையில் சேவல் கூவும் போதே அப்பா எங்களை எழுப்பி விட்டார்.. பிள்ளைகள் எழும்புங்க.. இன்றைக்கு விசேட அடையாள அட்டை எடுக்க மூதூர் போக வேணுமல்லா... கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.. இந்தப் பனிக்குளிரில் போர்த்திக் கொண்டு தூங்க விடாமல் ஏன் எழுப்புகிறார் என எரிச்சலாயும் இருந்தது."இன்றைக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது" என உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது..தங்கையையும் எழுப்பி புறப்படுகிறோம்..யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து 1 வருடத்தின் பின் போன வாரம் தான் எங்கள் சம்பூர் வீட்டுக்கு வந்திருந்தேன்.... ஆமிப் பயம் இந்தப் பக்கம் இப்போதைக்கு வந்து விடாதே என அப்பாவின் கடிதம் அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டிருந்தது... ஆனால் போன வாரம் வந்த அப்பாவின் கடிதத்தில் மகள் திருகோணமலை மாவட்டத்துக்காக விசேட அடையாள அட்டை கொடுக்கப் போகிறார்களாம்.. அதை எடுக்காவிட்டால் நீ ஒருக்காலும் இங்கு வர முடியாமல் போய் விடும்,அதனால் ஒருதரம் வந்து போ,நத்தாருக்கும் நின்று விட்டுப் போகலாம் என எழுதியிருந்தார்.. அம்மாவின் அறிவுறுத்தல் படி சேலையை அணிந்து கொள்கிறேன்.. பெரிய பெண்ணாய்த் தோற்றம் அளிக்கவாம் அந்த ஏற்பாடு...

Last Updated on Tuesday, 28 June 2011 21:08
Read more...
 
என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by கருணா   
Tuesday, 14 June 2011 09:05

ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு

அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்வி முறை, புதிய மனிதர்கள் என்று எல்லாமே புதியனவாக இருந்தன. ஆனால் சொர்க்கத்துக்கே செல்வதைப் போன்ற ஆனந்தத்துடன் அவள் அங்கு வந்திருந்தாள். பாடசாலையில் வெள்ளையின மாணவர்களே நிறைந்திருந்தனர். அவர்களுக்கு அவளும் அவளுடைய தோல் நிறமும் புதுமையாகத் தெரிந்தன. பாடசாலை விளையாட்டு மைதானத்துக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சியான அனுபவம் காத்திருந்தது.

அருகில் வந்த சக மாணவர்கள் அவள் தோலை உரசிப் பார்த்தனர். அவர்களுக்கு அவளது தோலில் அழுக்கேறியதாலேயே அந்த ‘மண்ணிறம்’ வந்திருக்கலாம் என்ற எண்ணம். அவர்கள் அதற்கு முன்னர் மண்ணிறமான மனிதர்களைப் பார்த்திருக்கவில்லைப் போலும்.

Last Updated on Tuesday, 14 June 2011 09:35
Read more...
 
எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரா ரவீந்திரன்   
Tuesday, 14 June 2011 08:13

எல்லாம் வெல்லும் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை சந்திரா ரவீந்திரனது பார்வையில்...

'எல்லாம் வெல்லும்' - அ.முத்துலிங்கத்தின் சிறுகதை பற்றிய ஒரு பார்வை.... அண்மையில் ஆனந்த விகடனில் வெளியாகி இருக்கும் அ.முத்துலிங்கம் அவர்களின் 'எல்லாம் வெல்லும்' கதை, செவியின் பால் சிலவற்றை நுகர்ந்து எழுதப்பட்ட அழகான கற்பனைக் கதை! அவருக்கேயுரிய எள்ளல் நடையும் தகவல் சிதறல்களுமாக நகரும் இக்கதையில் பெண்போராளிகளின் நாளாந்த நடவடிக்கையும் அவர்களுக்கேயுரிய இயல்புகளும் ஆங்காங்கே ஆசிரியரின் கற்பனைகளிலும் கேள்வி ஞானத்திலும் நகருவது, போராளிகளின் உண்மையான இயல்புகளிலிருந்து நழுவி, வாசகர்கள் மத்தியில் போராளிகளின் மனநிலை பற்றியும் களநிலை பற்றியும் குறுநகையுடனான ஒரு மாயப்பார்வையைப் பரப்பி வைத்திருக்கிறது!

Last Updated on Tuesday, 21 October 2014 22:08
Read more...
 
எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Tuesday, 14 June 2011 07:58
எல்லாம் வெல்லும் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை எனது பார்வையில்...

ஒவ்வொரு படைப்புக்குமான வரையறைகளும், வரைமுறைகளும் காலத்துக்காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே நவீனத்துக்குத் தாவிக்கொண்டிருக்கும் போது இலக்கியம் மட்டும் பழைய பாணியிலேயே இருக்க வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு படைப்பு வாசகனின் மனதில் சந்தோசமாகவோ அன்றில் துயரமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்பு நல்ல படைப்பு. அந்த வகையில் வாசித்துப் பல மாதங்களின் பின்னும் என்னுள்ளே மீண்டும் மீண்டுமாய் அசை போட்டுக் கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளை நல்ல படைப்புகள் என்றே நான் கருதுகிறேன்.

தான் இருந்த நாடுகள் பற்றிய, அங்கு வாழ் சமூகம் பற்றிய, நாகரிகம் பற்றிய.. என்று நாமறிந்திராத எத்தனையோ விடயங்களை எள்ளலும், நொள்ளலும் கலந்து அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே.

Last Updated on Tuesday, 21 October 2014 22:17
Read more...
 
சாவினால் சுற்றி வளைக்கப்பட்டவர்கள்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Tuesday, 14 June 2011 05:21

கடவுளும் கையினை உதற உலகமும்

கத்தியத் தீட்டிக் கையினிற் கொடுக்க

திடமாய் இருந்த வாழ்வின் விடுதலை

முடமாய்ப் போனது அன்பே..

இந்தக் கடல்தான் நாம்

எழுந்தன்று நின்ற கடல்

இந்தக் கடல்மடி தான்

எம் வாழ்வைச் சுமந்த மடி

இந்தக் கடற்கரை தான்

எம் வாழ்வின் இறுதி வரை

வந்து வழி அனுப்பி

வாய் விட்டு அழுத கரை

அன்றிந்தக் கடற்கரையில்

அடித்து வந்த அமைதி அலை

இன்றுந்தான் அடிக்கிறது

எவர் சொன்னார் இல்லையென்று..?

Read more...
 
காதல்.......மோதலா? PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by J.P Josephine Baba   
Monday, 06 June 2011 21:18

காதல் என்பது வெள்ளப் பெருக்கு போன்றது. யாரிடம் ஏன், எப்போது வருகின்றது என்பதற்கு பதில் இல்லை என்பதால் காதல் இல்லை என்று இல்லை!காதலை தூய அன்பு என்று அர்த்தம் கொள்பவர்களும் உண்டு. காதலை காமத்துடன் இணைத்துக் கதைப்பவர்களும் உண்டு. காதல் என்பதே ‘இல்லை’ என்று சொல்பவர்களும் இல்லாதில்லை. ஆனால் காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவர இயலாததாக இருக்கின்றது என்பது மட்டுமல்ல நிலையற்றதாக இருக்கின்றது என்பதும் இதன் தனி அம்சமே.

Last Updated on Monday, 06 June 2011 22:11
Read more...
 
கால நதிக்கரையில்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Thursday, 26 May 2011 03:56

வாங்கிய புதுப் பேனா

வரைகிறதா எனப் பார்க்க

ஏதோ சும்மா ஒன்றைக் கிறுக்கினேன்

இரவு வந்து

நாக்கில் விரல் தொட்டுத்

தாள் தட்ட கிறுக்கலதாய்

காலங்களைக் கடந்த

கனவான உன் பெயர்

விக்கித்துப் போனேன்!

 

எனக்கே தெரியாமல்

எப்படி நான் உன் பெயரை

மன மூளை சொல்லாமல்

வரைந்தேன்! ஒரு வேளை

காலம் அரித்து விட்ட

காதல் நினைவெல்லாம்

விரல் நுனியில் தானிருந்து

விம்மிடுமோ..!

இல்லையெனில்

எண்ண வலை பின்னும்

Last Updated on Thursday, 26 May 2011 04:08
Read more...
 
எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சஞ்சயன் செல்வமாணிக்கம்   
Tuesday, 10 May 2011 07:07

எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிக கண்டிப்பாக இருந்தார். நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கேயோ கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து  அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக் கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.

Last Updated on Saturday, 11 June 2011 20:15
Read more...
 
திருகும் மனமும் கருகும் நானும்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Monday, 25 April 2011 23:05
எடுத்ததற்கெல்லாம் இப்போ
இடிந்துடைந்து நெகிழ்ந்துருகும்
குழந்தைத் தனமான மனசே கேள்..!
பூவுலகில்
ஓடும் நீர் மேலே ஒரு முறைதான் மிதிக்கேலும்
வாடும் மனசெனினும் வழி நீள பழகி விடும்
 
காலம் சிரஞ்சீவி மலை கையில் வைத்தபடி
ஞாலம் முழுவதுமேன் நடந்தோடித் திரியுதடி..?
ஞாபக மறதிக்கும் நம் வலிக்குப் பூசுதற்கும்
தாபத்தில் துடிக்கும்
தளிர் மனசை விறைக்க வைத்து
Last Updated on Monday, 25 April 2011 23:44
Read more...
 
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by Dr.புஷ்பா.கனகரட்ணம்   
Wednesday, 06 April 2011 05:03

எம் உடல், உணர்வு மற்றும் அறிகை சார் தொழிற்பாட்டுக்கு நிந்திரை என்பது மிக அவசியம். இது எல்லோர்க்கும் தெரிந்த விடயம். தூக்கமின்மையால் பலர் அவதிப்படுவது உண்டு. தூக்கம் வருதல், களைப்பு - இந்த இரண்டு பதங்களையும் சிலவேளைகளில் ஒரு கருத்துக் கொண்டதாக நாம் கருதுகிறோம். ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.

தூக்கம் வருதல் (Sleepiness) என்பது நித்திரை கொள்ளாமல் இருக்க கஷ்டப்படுவது. ஒரு வேலையை செய்யும் பொழுதோ, தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதோ, ஏன் வாகனம் ஓட்டும் பொழுதோ, சிலருக்கு நித்திரை வரலாம். இது ஆபத்திலும் முடியலாம். அடிக்கடி தூக்கம் வந்து அவதிப்படுவர்கள் சிலர் இரவில் அதிக குறட்டை விடுவார்கள். தங்கள் குறட்டை சத்தத்தாலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு. இவர்கள் எவ்வளவு தான் படுத்தாலும். காலையில் நித்திரை கொள்ளாதது போல் உணர்வார்கள். சிலர் மூச்சு விடுவதை சில நொடிகளுக்கு நிறுத்தி விடுவார்கள்.

Last Updated on Tuesday, 14 June 2011 09:24
Read more...
 
கொடுப்பனவு PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Tuesday, 29 March 2011 08:06

போகின்ற பாட்டுக்கு
போகட்டும் என வாழ்வை
ஆகின்ற படிக்கு அதன்வழியே
போட்டு விட்டு
வேகமோ எந்த ஒரு விவேகமோ
அணுகலின்றி
சும்மா நடந்துலகை
சுற்றித்திரிந்த என்னை
பந்தம் ஒன்றில் இட்டுப்பதித்தாய்
நல்லூரா…
வண்டாடிப்பூமலரும் வடிவழகை
மகன் சிரிப்பிற்
கொண்டாடி மகிழ்கின்ற
கொடுப்பனவை எனக்களித்தாய்

Last Updated on Monday, 25 April 2011 23:44
Read more...
 
ஊன்றிவிட்டுச் செல்லுங்கள்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Tuesday, 29 March 2011 07:29
உந்த வேடுவரின் கற்களுக்கு எப்பேனும்
இந்த மாதிரியாய் தேன் கூடு
வரலாற்றில்
வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோ
தேனீக்கள்
நொந்து வீழ்ந்தாலும்
நூறொன்றாய்ச் செத்தாலும்
சந்து பொந்துகளில்
மறைந்திருந்த வேடரது
சங்குகளிற் போட்டுக் கலைக்காமல்
விட்டதுண்டோ..!

 

Last Updated on Monday, 25 April 2011 23:30
Read more...
 
நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Saturday, 26 February 2011 22:51
தலைப் பயணியே எங்கள்
தாற்பரிய வேர் முடியே
அலைக் கரத்தில் அவதரித்த
உலைக் கரமே  யாராலும்
விலைக்கென்றும் வாங்கேலா
வித்தகமே எம் மண்ணில்
போர்க்குணத்தைத் தோற்றுவித்த
பொருள் முதலே!  கனவிலும் நாம்
கட்டுவதை எண்ணிப் பார்க்கேலாக்
கட்டமைப்பை உன்னுடைய
சுட்டு விரல் அசைவாலே

Last Updated on Monday, 25 April 2011 23:17
Read more...
 
பழையதும் புதியதும் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by அ.செ.முருகானந்தன்   
Wednesday, 23 February 2011 06:59
'ஏய்! ஏய்!' என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என் பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாமலிருந்தால் நல்லாயிருக்காதல்லவா?

'அவசரமில்லை, அண்ணே! ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ;ளப் போகட்டும். ஏது சோடி வாய்த்து விட்டது போலிருக்கே உனக்கு!' என்று சும்மா சொன்னேன். கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத் தெரியாதா? ஆனால், மனுஷன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்துபோய் விடுகிறது.<ஆசனப் பலகையில் நேராக இருந்த மனுஷன் திரும்பி கோணமாக இருந்துகொண்டு, 'ஹீம்! இதெல்லாம் என்ன மாடுகள் தம்பி, முன்னே முன்னே எப்படி மாடுகள் என்னிடம் நின்றன தெரியுமா? உனக்குத் தெரியாது. உனது பெரியப்பாவுக்குத் தெரியும். வேறொன்றுமில்லே. எதற்கும் கைராசி வேண்டும். எல்லாம் மாடுகளைப் பழக்குகிற விதத்திலிருக்கு. எப்பேர்ப்பட்ட சண்டி மாடுகளும் கார்த்திகேசுவின் கைக்கு வந்துவிட்டால் சுட்டியன்களாகிவிடும் என்று முன்னெல்லாம் பேசிக் கொள்வார்கள்.' இப்படி ஆரம்பித்து பேசிக்கொண்டு போனவன் இடையில் ஒரு கணம் நிறுத்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் சொன்னான்:
Last Updated on Sunday, 02 November 2014 10:34
Read more...
 
மெல்லக் கொல்கின்ற நோய் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Friday, 18 February 2011 07:38
பருவம் வந்துள்ளே
பாதையினைத் திறந்து விட
பாவாடை இதழ் மூடி
பட படப்பில் தேனூறி
இடையாடிக் கொண்டிருக்கும்
இளைய பூ ஒன்றுக்கு
உடையுள்ளே நுளைந்து
உறிஞ்சித் தேன் குடித்து
மூழ்கி அதிலாடி
முடியும் வரை உறவாடி
காதல் செய்தபடி
கரு வண்டும்..
Last Updated on Monday, 25 April 2011 23:53
Read more...
 
நெய்தல் நினைவுகள்…! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Tuesday, 04 January 2011 10:25
girl_313கடல்….எப்பவும் எனக்குப் பிடித்தமானதாயிருந்தது..! மேகத்தின் வர்ணத்தை உறிஞ்சி, சூரியனின் நெருப்புக் கதிர்களை உள்வாங்கி… நீலப்பளிங்கு மேடையெனப் பரந்து விரிந்து மிதந்தபடி… அங்குமிங்கும் ஓயாமல் அலைவதும் அள்ளுண்டு புரளுவதுமாய், என் வாழ்க்கைக் காலம் முழுவதும் கடல் என்னுள் ஒரு சரித்திரம் போல் வியாபித்திருந்தது! கடலின் அலைகள் என் உணர்வுகளோடு என்றும் இழைந்து கலந்து போயிருந்தன..! இந்துமாக் கடலும் அதன் இணையற்ற தோழமையும் என்னுள்ளிருந்து பிரிக்க முடியாததாகியிருந்தது!

சமுத்திரத்தின் சல்லாபங்கள் எனக்கு மிக நெருங்கிய சொந்தம் போல..! சமுத்திரத்தினுள் உலவும் மனிதர்கள் நானாகவும் அங்கு வாழும் உயிரினங்கள் என் உறவுகள் போலவும்….நான் அதனுள்ளும்… அது என்னுள்ளாகவும் ஆகியிருந்தது…! என் வாழ்விடம், கடலின் கரையிலிருந்து ஊரின் மையம் நோக்கி ஒன்றரை மைல் தொலைவில் இருக்கிறது. ஆனாலும் அதன் ஓசைகள் காலம் முழுவதும் என்னருகில் என்னோடு ஒட்டியபடியே நகர்ந்தது..!

Last Updated on Tuesday, 04 January 2011 10:39
Read more...
 
பெருநிலம்... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Tuesday, 04 January 2011 09:54

கனவுச் சாம்பல் படர்ந்த மனிதர்கள்
இறந்தபடியே திரிகிறார்கள்...
உயிரைத் தேடும் ஆர்வமின்றி
தேய்ந்த உடல்களை அலையவிட்டபடி
தினமும் அவர்கள் வாழ முனைகிறார்கள்...
இறந்தபடியே வாழ்வது இப்போ
அவர்களுக்கு வசதியாயிற்று..!

Last Updated on Tuesday, 04 January 2011 10:23
Read more...
 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தமிழ்ப்பொடியன்   
Friday, 26 November 2010 14:34


கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!


இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்?

உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!

வாழ்ந்தாலும் ம(வ)ரமாக...
வீழ்ந்தாலும் விதையாக
மாவீரன் மறைவதில்லை
மாவீரம் அழிவதில்லை

ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
மணியோசை கேட்டால் மனமுருகும்...
மாவீரர் கல்லறையில் உயிர் கருகும்...
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும்.

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!
துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில்
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள்.
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர்.
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர்
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர்.
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்து போனீர்-அந்த
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர்.
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின்
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர்.

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!


எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன்.

சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்'
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு'
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்'
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்'
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை'
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று 

தாயகமே தாயாக
தலைவனே உயிராக
தமிழ் மானம் பெரிதாக
தம் உயிர் தந்தவர்கள் 

எரித்தாலும் கடலினுள் கரைத்தாலும் மண்ணினில் புதைத்தாலும்
மாவீரன் மறைவதில்லை
மாவீரம் அழிவதுமில்லை

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!


இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது.
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது.
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..!
எவருக்குமே விளங்கவில்லை..!
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..!
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி'  சுமக்கிறார்கள்
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்ததாய்
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான்.

கண்மணிகளே..!
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்க தவிக்கிறது மனசு...
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
யார் சொன்னது?
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.!

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!


'முடியும்' என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம்
விதைத்து முடிந்ததும் 'அறுவடை' கிடைக்காது.
விடிந்து எழுந்ததும் 'கனவு' பலிக்காது.
விடுதலை என்பது 'உயிர்விலை' கொடுத்துப்பெறுவது.
விடுதலை என்பது 'நீண்ட நெருப்பாறு'
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.!
விழுவது என்பது வெட்கமல்ல.!
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.!
எழுவது பெரிதல்ல.!
எழுந்து அடிப்பதுதான் பெரிது.!
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம்
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.!
எங்கள் வயல் செழிக்கும்.!
காய்ந்து கிடக்கும் எங்கள் 'பூவரசு' பூப்பூக்கும்.!
நம்பு உன்னை நம்பு
உன் தேசத்தை நம்பு
தேசத்தின் புயல்களை நம்பு...
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு
நாளை பிறக்கும் நம் தேசத்தில்
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.!

இது கார்திகைமாதம்..!
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்...!!!
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்...!!!

எத்தனை 'வலி' சுமந்தோம்?
எத்தனை 'உயிர்' கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?
இல்லை
கல்லறைகளுக்குள் தமிழனின் 'கனவுகள்' கருக்கொண்டு கிடக்கின்றன.!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.!
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.!
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.!
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!யுகங்களும் ஆகலாம்..!!!
ஆனால்
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச்
சரித்திரம் சொல்கிறது.

அதுவரை....
நீ
கார்த்திகை பூ எடுத்து வா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..
!

-தமிழ்ப்பொடியன்
26.11.2010
Last Updated on Monday, 03 November 2014 23:52
 
என்னை மறந்து விடாதே..! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by மா.மணிகண்டன்   
Sunday, 31 October 2010 20:05

என் பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது..!
சில நேரம் வெட்கப் புன்னகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!
 
உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கண்ணீர் வடிக்கிறது! பேனா!!
சட்டையின் பையில் நீல நிறமாய்..!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!

Last Updated on Monday, 01 November 2010 07:22
Read more...
 
கண்ணீர் அஞ்சலி PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி.திருக்குமரன்   
Sunday, 10 October 2010 08:38

ஆரெண்டெனக் குன்னைத் தெரியாது
ஆனாலும்
பேரோட, பிறப்பிறப்பும்
கண்ணீர் அஞ்சலியும்,
ஏதோ கவர்ச்சி உள்ள
முக அமைப்பும் ஒரு சிரிப்பும்
’காதோரமாய்ப் போன கதையும்’
மதில் மீது
ஒட்டப் பட்டிருந்த
உன்னைப் பார்த்தவுடன்
கிட்ட வந்து
பார்க்கத் தோன்றியது
அவ்வளவே..,

Last Updated on Sunday, 10 October 2010 08:45
Read more...
 
என் கணவர் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by செல்லம்மாள் பாரதி   
Friday, 10 September 2010 22:27

திருமதி. செல்லம்மாள் பாரதி

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

 திருமதி. செல்லம்மாள் பாரதி
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

Last Updated on Wednesday, 16 March 2011 08:33
Read more...
 
கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா..? PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Tuesday, 17 August 2010 02:28

சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது. அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான்.  ஆனாலும்... எங்கை..? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது.
எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது? காலைமை எழும்பினதிலையிருந்து ஆற அமர நேரமில்லை. வேலை.

ம்... கூம் வேலை எண்டு மட்டும் இந்த மனுசன்ரை காது படச் சொல்லக் கூடாது. உடனை "என்னப்பா உனக்கு இஞ்சை வேலை..?" "ஊரிலை மாதிரி என்ன இங்கையும் கல்லிலை அடிச்சு உடுப்புத் தோய்க்கிறியளோ..? அல்லது ஆட்டுக் கல்லிலையும் அம்மியிலையும் அரைக்கிறியளோ..? அல்லது அடுப்பைத் தன்னும் பச்சை விறகை வைச்சிட்டு ஊதி ஊதி எரிக்கிறியளோ..?" எண்டு பன்மையிலை கேட்கத் தொடங்கீடும்.

எனக்கு வரும் கோவம். ஊரிலை என்ன மிக்சி இல்லையோ? அல்லது எலெக்றிக் குக்கர்தான் இல்லையோ? வாய்க்கு வசதியாக ஏதும் சொல்லேலுமெண்டால் எதையும் சொல்லலாமெண்டு நினைக்குது இந்த மனுசன்.

நானும் சொல்லுறதெண்டால் சொல்லுவன்.  "நீங்கள் மட்டுமென்ன..? ஊரிலை எண்டால் சைக்கிளைத்தான் தூக்கிக் கொண்டு வெளிக்கிடுவியள். இங்கை எண்டால் கார் இல்லையெண்டால் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டியள். அது மட்டுமே! விறகு கொத்துறது, தண்ணி அள்ளிக் கொண்டு வாறது.... எண்டு எத்தினை வேலையள் அங்கை உங்களுக்கும். இங்கை அப்பிடியே சாமான்கள் வேண்டுற வேலையையும் பொம்பிளையளின்ரை தலையிலை போட்டிட்டு, நான் என்ரை மனுசிக்கு சுதந்திரம் குடுத்திருக்கிறன் எண்டுவியளே! உங்கடை சுதந்திரக் குடுப்பனவு பற்றி எங்களுக்குத் தெரியாதாக்கும். வேலைக்குப் போறதும், சாமான் வேண்டப் போறதும் தான் பெண் விடுதலைக்கான அர்த்தம் எண்டு நீங்களெல்லாருமா ஒரு அகராதியே தயாரிச்சு வைச்சிருக்கிறீங்களே! " ம்... இதையெல்லாம் சொல்லுறதிலை ஏதும் பிரயோசனமிருக்கே! அதாலைதான் நான் எப்பவும் நினைக்கிறதோடை நிப்பாட்டிப் போடுவன். சொல்லுறேல்லை.

Last Updated on Thursday, 14 February 2013 08:29
Read more...
 
இரயில் பயணங்களில்... PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 04 August 2010 04:58
அப்போது எனக்கு 21வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமையான இயல்புகள் என்னையும் விட்டு வைக்கவில்லை. சத்தியிலும், குமட்டலிலும் அதானாலான அசௌகரியங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச் சேலை உடுத்தியிருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற்சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.
Last Updated on Thursday, 19 December 2013 08:23
Read more...
 
தீட்சண்யம் (பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கானாபிரபா   
Friday, 30 July 2010 04:10

நாங்கள் பேசுவதில்லை
ஏனெனில்
நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால்

“தீட்சண்யன்” என்னும் எஸ்.ரி.பிறேமராஜன்

இன்னும் மனதில் ஆறாக்காயமாக இருக்கின்றது, போன வருசம் இதே நாட்களில் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்த் தொலைந்து போனதுவும், எல்லாம் தொலந்து இன்று வெறும் சூன்ய வெளியில் வெறித்து நிற்பது போல. போராட்டத்தைப் போஸ்ட்மாட்டம் பண்ணி ஆளாளுக்கு ஆய்வுகளும், நுண்ணிய ஆராய்ச்சிகளும் செய்தவர்களும், சாத்வீகம் பேசிச் சாகடித்த புனித புருஷர்களும் (!) அவரவர் வழியே போய் விட்டார்கள். கண்ணுக்கு முன்னால் ஒவ்வொன்றாகத் தொலைகின்றது மெல்ல மெல்லக் குருதி குளித்துத் திரும்ப எடுத்துக் கொண்ட தேசமும் அதில் தொங்கியிருந்த வரலாற்றுச் சுவடுகளும், பிராந்திய வல்லுறவால் சிதைக்கப்பட்டுச் சின்னாபின்னமாய் ஒடிந்து போயிருப்பது நம் தேசம் மட்டுமல்ல நம்மவர் மனங்களும் தான். “தீட்சண்யம்” கவிதைத் தொகுதியை மெல்லப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கின்றேன்.

“எங்கோ ஓர் ஆற்றுப் படுக்கையில்
சரிந்த
ஏதோ ஒரு மரத்தினால்
திசை மாறியது
அந்த ஆறு மட்டுமல்ல
வெறும் சில
பேராறுகளும்!

Last Updated on Monday, 10 March 2014 13:05
Read more...
 
தோழமைக்கு... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by மு.கந்தசாமி நாகராஜன்   
Friday, 30 July 2010 03:56
எதிர்பாராத வேளையில்
எனக்குக் கிடைத்த
உன் நட்பால்
இன்றும் உணர்கின்றேன்
அன்பின் வலிமையை!

சந்தித்து
ஆண்டுகள்
ஆன போதிலும்
இன்றும் கேட்கின்றேன்
உன்
இதயத்தின் ஒலிகளை...

உன்
மொழிகளைக் கேளாத
செவிகளும் வியக்கின்றன
என் இதயத்துள் ஒலிக்கும்
உன்
மொழிகளைக் கண்டு.

இன்னமும்
கர்ணனையே
உயர் நண்பனென்று
போற்றும்
அறிவிலிகளைக் கண்டு
மெளனமாய்
சிவந்து போகின்றன
என்
விழிகளும் இன்று.

பாலையில்
நான் காய்ந்த போது
சோலையைக் காட்டிய
நீ
சோலையில் நான்
சுகிக்கும்போது
தொலைவில்தான்
நிற்கின்றாய்

அன்பென்பதை
அறிந்திடாத
எனக்குக் கூட
அதன் ஆற்றலையும்
புரிய வைத்த
உன்னால்தான்
இன்னமும்
என்
பேனாமுனைகள்
ஈரத்தைக் கசிகின்றன.

திசை தெரியா
அலைகடலுள்
என்னை
மீட்டெடுத்த
தோணி
நீ!

மொழி தெரியா
முட்டாள் என்னை
மொழிஞனாக்கிய
சிற்பி
நீ!

கலையறியா
காட்டான்
என்னை
கலைஞனாக்கிய
கலைமகள்
நீ!

முத்து
பிறப்பது
அதிசயமில்லை
கண்டெடுப்பதுதான்.
என்னைக்
கண்டெடுத்தது
நீயேதான்!

உன்னால்
பிறந்த
என் மொழிகள்
இன்று
உனக்காகவே
அர்ப்பணம் ஆகின்றன!

என்றென்றும்
நாம்
தொடர்ந்திடத்தான்
இன்றும்
வேண்டுகின்றேன்
இறையை நான்

- மு.கந்தசாமி நாகராஜன் -
 
கைத்தொலைபேசி PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by திரு.ம.இலெ.தங்கப்பா   
Monday, 31 May 2010 19:56
வந்தாலும் வந்ததிந்த நாகரிகந்தான்
வாத்து மந்தை பெருத்ததடா எங்கள் நாட்டிலே
எந்தஇடம் போனாலும் கீ கீ, குவா குவா!
என்னஎன்று திரும்பிப் பார்த்தால் கைத்தொலைபேசி! (01)
வழியோரம் பேசுகிறார் கைத்தொலைபேசி!
வண்டியிலே முணுமுணுப்பார் கைத்தொலைபேசி!
குளியலைறையில் சளப்புகிறார் கைத்தொலைபேசி!
கூடத்திலே படுத்துக்கொண்டும் கைத்தொலைபேசி! (02)
தெருக்குப்பை அள்ளுபவர் வேலை நடுவில்
சிரித்துப் பேசிக் குழைவது பார் கைத் தொலைபேசி!
சறுக்குமரம் சறுக்கிக் கொண்டே பள்ளிச்சிறுமி
தந்தையிடம் பொம்மை கேட்பாள் கைத்தொலைபேசி! (03)
பழம்விற்கும் பாட்டி கையில் கைத்தொலைபேசி!
பாம்பாட்டி கூடைக்குள்ளும் கைத்தொலைபேசி!
குழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டோர் சின்னக்குறத்தி
கூச்சமுடன் பேசுகிறார் கைத்தொலைபேசி! (04)
பாதிமுகம் மழிக்கையிலே முடிதிருத்துநர்
பதைத்து வெளியே ஓடுகிறார் கைத்தொலைபேசி!
காதலியை முதலிரவில் தழுவப் போகையிலே
காதிலே கோள்சொல்லுதடா கைத்தொலைபேசி! (05)
மாலை கட்டிச் சாமிக்குப் பூசை செய்கையில்
மடிக்குள்ளிருந்து அழைக்குதடா கைத்தொலைபேசி!
தாலி கட்டும் வேளையிலே குறுக்கில் புகுந்து
தடுக்குதடா திருமணத்தைக் கைத்தொலைபேசி! (06)
தொலைக்காட்சிக் கதையிலெல்லாம் கைத்தொலைபேசி!
சுற்றிச்சுற்றி வருகுதடா கைத்தொலைபேசி!
தலைக்கு வந்த தண்டனையைக் கடைசி நொடியில்
தப்பிக்கச் செய்யுதடா கைத்தொலைபேசி! (07)
பிச்சைக்காரருக்கு ஒருஉருவா கொடுத்து நடந்தேன்;
பின்னிருந்து கூப்பிட்டது காதில் விழவே
அச்சமுடன் திரும்பிப் பார்த்தேன்; கூப்பிடவில்லை!
ஆருடனோ பேசுகிறார் கைத்தொலைபேசி! (08)
பேருந்தில் ஏறிக்கொஞ்சம் கண்ணை மூடினேன்
பின்னிருந்து குடைந்ததடா கைத்தொலைபேசி!
வேறிருக்கை மாற்றிக் கொண்டேன், நண்பர் சிரித்தார்
விழித்துப் பார்த்தால் அங்கேயும் கைத்தொலைபேசி! (09)
நாய்எதையோ கவ்விக்கொண்டு பாய்ந்திடக் கண்டேன்
நான் விரட்டி அதைப் பிடித்தேன் கைத்தொலைபேசி!
வாயிருந்தும், காதிருந்தும் கைத்தொலைபேசி!
வைத்திலாதார் எத்தனைப்பேர் நாட்டில் இருப்பார்? (10)
ஆய்வாளர் ஒருவர்தமை அணுகிக்கேட்கிறேன்,
அவர்சிரித்தே ஏளனமாய் என்னைப் பார்க்கிறார்
'ஓய், என்ன விளையாட்டா, கைத்தொலைபேசி!'
உமைத்தவிர எவர்க்கும் அதுஉயிர்த் தொலைபேசி! (11)
அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து
ஆண்டவனின் திருப்பிறவி, கைத்தொலைபேசி!
எங்கெங்கும் படையலிட்டுப் பூசை செய்யுங்கள்;
எண்ணியதை நிறைவேற்றும் கைத்தொலைபேசி! (12)


கவிஞர் தங்கப்பா அவர்கள் கைத்தொலைபேசி பற்றி மிக அழகாக நுணுக்கமான பார்வையுடன் இக்கவிதையைப் படைத்துள்ளார். மிகஎளிய மக்களும் அதனைப் பயன்படுத்துவதனை மிகஅழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார். குப்பை அள்ளுபவர், பழம் விற்கும் பாட்டி, பாம்பாட்டி, முடிதிருத்துநர், பூசாரி, பிச்சைக்காரர் முதலிய எல்லோரும் இதனைப் பயன்படுத்துகின்றனர் எனப் பாடி இருப்பது, சாமான்யரும் இந்த அறிவியல் விந்தைக்கருவியை அனுபவித்து மகிழுகின்றனர் எனச் சமத்துவப் பார்வையைக் கூறுகின்றது. ஆனாலும், இந்த நாகரிகம் பயனற்ற முறையில், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தேவை இல்லாது பயன்படுத்தப்படுவதையும் குறிப்பாகச்சுட்டுவது சிறப்பு! பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை! பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா? அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா? கவிஞரைத்தான் கேட்கவேண்டும்! பொதுவில் நம் அனைவரிடமும் உள்ள ஓர் அற்புதச்சிறுகருவியைப்பற்றிச் சுவைபட இவ்வளவு அழகான, சுவையானகவிதையைத் தந்த தங்கப்பா மனதில் தங்கும் தங்கக் கவிதை தந்துள்ளார்! நான் சுவைத்த அக்கவிதையை அனைவரும் சுவைக்க வேண்டாமா?

சான்று:

சிந்தனையாளன் - பொங்கல் சிறப்புமலர் 2007, திருவள்ளுவராண்டு 2038, பக்கம்:159-160

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF
Last Updated on Tuesday, 17 August 2010 02:25
 
தொப்புள்கொடி - தெ. நித்தியகீர்த்தி PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by மதுமிதா   
Friday, 26 March 2010 20:32

புனைவல்ல - உண்மை

சென்னைக்கு மழை வரவேண்டுமானால் வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் மையம் கொள்ள வேண்டும். மழை... மழை... மழை... பெய்து ஓயாத மழை. எங்கும் நகர இயலாது வீட்டிலேயே சிறைப்படுத்திய மழை. ஒரு மாதம் முன்பு சித்தன் யுகமாயினிக்கென மதிப்புரை எழுதித்தருமாறு கொடுத்த புத்தகம். தொப்புள்கொடி.

வாங்கிவிட்டேனேவொழிய பலவேறு காரணங்களால் புத்தகம் வாசித்ததோடு சரி. மனதில் ஆரபி, மாதவன், நிலா, வெற்றிவேலர், மீனா, அஞ்சலி, மயூரன் என பிம்பங்களின் நடமாட்டம்.ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் தொப்புள்கொடியுடனேயே சென்றேன். ஒவ்வொருமுறையும் எழுதத்தான் தருணம் வாய்க்கவில்லை. அன்று மழை உதவியது.

தொப்புள்கொடியுடன் எழுதுகோல் நிமிர்த்தி உட்கார்ந்தேன். எப்படித் தொடங்கலாம் என்கிற யோசனையுடன் கணினியின் இணையதளத்தில் மேய்ந்தேன். சந்திரவதனா பிலாக்கில் செய்தி. நித்தியகீர்த்தி மறைந்தார்.  அதிர்ந்தேன். திறந்த எழுதுகோல் மூடிக்கொண்டது. மனம் அடைத்துக்கொண்டது. வெளியே மழை அழுது கொண்டிருந்தது.

எதற்காக சித்தன் எனக்கு இந்த புத்தகத்தைக் கொடுத்தீர்கள்? எதற்காக நான் எழுதுவதைத் தள்ளிப் போட்டேன். நித்தியகீர்த்தி நம்முடன் நகமும் சதையுமாக மதிப்புரையைக் காணும்படி இருந்திருக்கலாகாதா? இப்போது ஏன் எழுதத் துவங்கினேன்? நான் எழுதும் வேளை பார்த்து இவ்வுலகத்துடனான தொப்புள்கொடி உறவை அறுத்துக் கொண்டு மறைந்து போக வேண்டிய அவசியம் தான் என்ன?

சித்தனை அழைத்து புலம்ப ஆரம்பிக்க... ஒன்றும் புரியாமல் அவர் என்னவாயிற்று என்கிறார். நித்தியகீர்த்தி இப்போது நம்மிடையே இல்லை என்றேன். தொலைபேசியும் தன் பங்குக்கு துண்டித்துக் கொண்டது. மதிப்புரை எழுதி பிரசுரிப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் நினைவாஞ்சலி என்றார் சித்தன்.

Last Updated on Tuesday, 11 March 2014 09:51
Read more...
 
ஒரு கடல் நீரூற்றி... - ஃபஹீமா ஜஹான் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by எம்.ரிஷான் ஷெரீப்   
Friday, 26 February 2010 05:36

ஒலிக்கும் பெண் குரல்

ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியபணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.

ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வதுதான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களைத் தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'. பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப் பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
Last Updated on Monday, 10 March 2014 16:07
Read more...
 
வழிகாட்டிகள்..! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by நிர்மலன்   
Monday, 15 February 2010 15:24

இந்திரனுக்குக் கண் நோகுமாப் போலிருந்தது. தலை வலித்தது. கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்த ஆறாம்தர ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் தாள்கள் மேசை முழுதும் பரவியிருந்தன. அவன் அவற்றிலிருந்த பிழைகளை சிவப்புப் பேனாவால் திருத்திக் கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதுதான் அவனுக்கு வேலை. ஐந்தாவது  தரமாய்ப் புறூவ் பார்த்தாயிற்று. மேலும் பல எழுத்துப் பிழைகள் கண்ணில் தட்டுப்பட்டன. வாணியிடம் கொடுத்திருந்தால் இப்படிப் பிழைகள் வந்திராது. முதலாவது தடவை புறூவ் பார்த்தவுடனேயே அச்சுக்கூடத்திற்கு அனுப்பியிருக்கலாம். வாணி சரியாக அடிப்பதனாற் போலும் எல்லோரும் அவளிடமே வேலைகளைக் கொடுக்கிறார்கள். தர்மினியின் தட்டெழுத்து படுமோசமாய் இருக்கிறது. முதற்தரம் பிழை என்று குறித்துக் கொடுத்தவை அடுத்த முறை பிரிண்ட் எடுத்து வரும் போது சரியாகத் திருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் தரம் பிழையாக உள்ளவை குறித்துக் கொடுக்கும் போது வரும் 'பிரிண்ட் அவுட்டில் முதற்தரம் குறித்துக் கொடுத்த பிழைகள் மீண்டும் தோன்றுகின்றன. சிங்களத்திலிருந்து  தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக்குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமிழில் செய்ய வேண்டியிருக்கிறது.

Last Updated on Tuesday, 16 February 2010 05:38
Read more...
 
சிவா PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by நிர்மலன்   
Monday, 08 February 2010 08:04
ஐந்தாறு வருடங்களுக்குப் பின் சிவாவைக் கண்டதில், என் மனதில் மகிழ்ச்சியும் வியப்பும் பீதியும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தன. சிவாவின் முகம் இறுகியிருப்பது  போலிருந்தது. நான் அருகில்சென்று அமர்ந்ததையும் கவனியாதவனாய், மணவறையை நிமிர்ந்து பார்த்தபடியிருந்தான். குட்டையாக முடியை வெட்டியிருந்த அவன் நன்கு மெலிந்து கறுத்திருந்தான். முகத்தில் படர்ந்திருந்த நான்கைந்து நாள் தாடியையும் மீறி, அதிலிருந்த காயத்தின் வடு தெரிந்தது.

'என்னடா சிவா'

' ஓ!.. முரளி ஏதோ இருக்கிறன்டா...'

அவன் கதைக்கையில் மேற்தாடையின் முன்பல்லொன்று உடைந்திருப்பது தெரிந்தது. ஆறேழு ஆண்டுகள் இருக்குமோ? இவனைப் பிடித்து உள்ளே அடைத்து.. எப்படி இவன் வெளியில் வந்திருப்பான்? இவனுடன் கதைப்பதும் பயந்தான். யாராவது எங்கேயும் போட்டுக் கொடுத்தால்...
'என்ன முரளி யோசனை? பயப்படுறியா?' துயர்கலந்த சிரிப்புடன் தொடர்ந்து சொன்னான் 'என்னிலை குற்றம் நிரூபிக்கப்படாமல், போன கிழமை தான் கோட்ஸாலை வெளியிலை விட்டவங்கள்.'
Last Updated on Monday, 08 February 2010 09:12
Read more...
 
தொப்புள்கொடி (நாவல்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Chandra   
Monday, 08 February 2010 07:53
மனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்

தொப்புள்கொடி - நாவல்
ஆசிரியர்: தெ.நித்தியகீர்த்தி (Australia)
முதற்பதிப்பு: சித்திரை 2009
அட்டை வடிவமைப்பு:மூனா
தயாரிப்பு: சுவடி பதிப்பகம்
வெளியீடு: மனஓசை பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
Chandravathanaa
Nithyakeerthy

ISBN - "978-3-9813002-2-2"
Last Updated on Tuesday, 11 March 2014 20:20
 
நந்திக்கடல் தாண்டி... 2 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 08 February 2010 06:42
முல்லைக்கடல் தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான் கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில் நின்று, எதிர்கரையைத் தொட்டுக் கொட்டிருக்கும் வானத்தை ஒரு தடவையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டு மனம் அலைந்த நாட்கள் சட்டென்று நினைவில் வந்து போயின.

கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். சொன்ன நேரத்தையும் விடத் தாமதமாகவே வந்திருந்தோம். மாலையாகிக் கொண்டிருந்ததால் சுட்டெரிக்கும் வெயில் இன்றி இதமான மெல்லிய குளிர்காற்று எம்மைத் தழுவியது. இன்முகத்துடன் சூசை எம்மை வரவேற்றார்.

“என்ன.. வீட்டை வாறனான்தானே என்றார்.” ம்.. எனக்கு அது தெரியாது. அவர் எனது வீட்டுக்கு வந்து போகும் காலத்துக்கு முன்னரே நான் புலம் பெயர்ந்து விட்டேன்.
Last Updated on Wednesday, 12 November 2014 10:04
Read more...
 
நந்திக்கடல் தாண்டி... 1 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 01 February 2010 07:51
நந்திக்கடல் தாண்டி முல்லைக் கடற்கரையை நாம் சென்றடைந்த போது கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். இன்முகத்துடன் அவர் எம்மை வரவேற்ற விதம் என்னோடு ஒட்டியிருந்த களைப்பை அப்படியே களைந்து விட்டது.

ஐந்து நாட்கள்தான் இம்முறை வன்னியில் நிற்க முடியும். ஜேர்மனியிலிருந்து புறப்படும் போதே அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கு ´இம்முறை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்´ என்று மின்னஞ்சல் மூலம் என் வரவைத் தெரிவித்திருந்தேன்.

நாம் 22ந்திகதி ஐப்பசி மாதம் 2002 இல் வன்னியைச் சென்றடைந்த அன்று நோர்வே பேச்சு வார்த்தைக் குழுவினருடனான சந்திப்பு கிளிநொச்சி அரசியல் துறை அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்ததால் தமிழ்செல்வன் அவர்களால் உடனடியாக எம்மை வந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் தன் சார்பாக சுதா மாஸ்டரையும், மருத்துவத்துறை ரேகாவையும் அனுப்பி வைத்திருந்தார். அவர்களோடு டுபாய் பிட்டு அவித்துத் தந்த நிமலனும், புகழோவியனும் வந்து இணைந்து கொண்டார்கள்.
Last Updated on Friday, 07 November 2014 21:00
Read more...
 
வெற்றி மனப்பான்மை PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by எம்.ரிஷான் ஷெரீப்   
Sunday, 24 January 2010 22:34

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.

Last Updated on Monday, 25 January 2010 10:19
Read more...
 
அரசியல் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by எம்.ரிஷான் ஷெரீப்   
Friday, 22 January 2010 06:26

வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்

Last Updated on Monday, 08 February 2010 06:49
Read more...
 
பனைமரம் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by கலாநிதி. அரு. சிவபாலன்   
Wednesday, 30 December 2009 22:16
ஆரம்பம்: பனமரத்தின் ஆரம்பம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் Borassus flabellifer (Family: Arecaceae)  என்ற இனமே இக்கட்டுரையில் விபரிக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் palmyrah, toddy palm  என்று வழங்கப்படும்.

பனை மரத்தின் விபரம்: நட்டாயிரம் வருடம், பட்டாயிரம் வருடம் என்று தமிழர் வாழ்வோடு ஒன்றி, ஒரு வாழிவாதாரப் பங்கு கொண்ட மரமாகத் திகழும் பனை ஒரு வரண் நில வளரியாகும். நன்றாக வளர்ந்த பனைமரம் 10-30 மிட்டர் உயரம் வரை இருக்கும். இது வேர் (root), அடிமரம் (trunk), ஓலைகளைக் கொண்ட முடி (crown) என மூன்று பகுதிகளைக் கொண்டது. வேர்ப் பகுதி நார் வகையானது, நிலத்தில் படர்ந்து வளரும், ஆணிவேர் இல்லை. அடிமரம் நீண்ட, கறுப்பு நிறமுடையது, உருண்டையானது. இதன் பருமன் மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும்.

Last Updated on Wednesday, 03 February 2010 22:19
Read more...
 
விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கலைவாதி கலீல்   
Friday, 20 November 2009 07:35

கவிதைக்கென்று சில வரையறைகளும் வரம்புகளும் உள. யாப்பமைதியுடனும், அணிச்சிறப்புடனும், தளைதட்டாமல் எழுதப்படுவதே கவிதை என்பர். கவிதையில் பிழையிருப்பின் அதனைச் ´சங்கப் பலகை` ஏற்றுக்கொள்ளாது. ஒரு காலத்தில், கடினமான செய்யுள் வடிவில் இருந்த கவிதைகள், பின்னர் படிப்படியாக இலகுபடுத்தப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்ற பா வகைகளைப் படித்துத் தெளிய பகுப்புரை மற்றும் தனி அரும்பத அகராதிகள் தேவைப்பட்டன.  பின்னர் செய்யுள்கள், கவிதை மற்றும் பாடல் வடிவம் பெற்றன. ஆயினும் யாப்பிலக்கணம் சற்றும் பிசகாமல் தளைதட்டாமல் எழுதப்பட்டது, அல்லது பாடப்பட்டது. காலம் செல்லச்செல்லக் கவிதையின் கடினத்தன்மையும் குறைக்கப்பட்டது. ஆயினும், கவிதை இலக்கணத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இலகுவாய் விளங்கிக் கொள்ளத் தக்க சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் கவிதையின் தனித்துவம் கெட்டுவிடாமல் பேணிக் காக்கப்பட்டது. அதாவது யாப்பிலக்கணம் முறையாகப் பேணப்பட்டது.

Last Updated on Wednesday, 13 February 2013 08:58
Read more...
 
மனஓசை - சந்திரவதனா PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by முல்லைஅமுதன்   
Friday, 20 November 2009 06:43
ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.

ஈழத்தின் கல்வி, மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு, இயல்பாகவே நடைமுறை வாழ்வியலின் ஏதுநிலை என நமது பெண் படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.

ஆமை நகர்வது போலவே பெண் படைப்பாளர்களின் வருகை 80 இற்குப் பிறகு நிகழ்ந்த அதிசயம் அதிக பெண் படைப்பாளர்களின் படைப்புக்களை நாம் படிக்க வாய்ப்பாகியது.

மீனாட்சி நடேசையர் ,கோகிலம் சுப்பையா, குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, யாழ்நங்கை, குந்தவை, கோகிலா மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு பின்னரான இனக்கலவரம்,போராட்ட உணர்வு அல்லது போருக்குள் வாழ்கின்ற சூழல் இவர்களையும் ஆகர்சித்ததில் வியப்பில்லை. இங்கு சந்திரவதனாவின் தாய்-தந்தையரின் அறிவூட்டல் இவருக்குள் ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கலாம். சூழலை அனுபவித்து, வாழ்க்கையை சரிவர உள்வாங்கி அதனை படைப்பில் தந்திருப்பது உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகி இவர் தருகின்ற பதிவுகள் சமூக வட்டத்தின் வரம்புகளை மீறாமல் வார்த்தைகள் சிதறாமல் எங்களுக்கு தந்த ‘மனஒசை’ இல் சிறப்பான சிறுகதைகளை வாசிக்க முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வாசித்த உணர்வு இன்றும் என்னுள் ஞாபக விதைகளை விதைத்ததை உணரமுடிகிறது. என் தந்தையுடன் அவர் மாற்றலாகி சென்ற இடங்களில் நானும் என் தங்கைகளும் சிறு சிறு அசைவுகளையும்/ அமைவுகளையும் அனுபவித்து நுகர்ந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்த கதைகள் அனேகம். ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் போதும் என்னுள் எழுகின்ற உணர்வு என் வாழ்வின் கதைகளைப் போலுள்ளதாக உணர்கையில் எல்லா யாழ்ப்பணத்துக் கிராமங்களின் கதைகளே என உணர்த்தப்படுவது புரிகிறது.
Last Updated on Tuesday, 21 October 2014 22:37
Read more...
 
சுமை தாளாத சோகங்கள்! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Tuesday, 10 November 2009 07:43
வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம்.

இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. நல்லா வேலை குடுத்திட்டாங்களோ? பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.

மே மாதம் எண்ட படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த ஜேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளையே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.
Last Updated on Thursday, 13 November 2014 23:57
Read more...
 
அந்த நாட்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 07 September 2009 06:27
பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போய் விட்டது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டி விட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. பணம் போய் விட்டதையும் விட முதல் தர பயணத்துக்கு காசு கொஞ்சம் குறைகிறது என்ற போது தம்பி செய்து தந்த சங்கிலியை அவசரமாய் ராணிநகை மாளிகையில் விற்ற போதிருந்த கவலை அடிமனதின் ஒரு ஓரத்தில் இன்னும் உரசியது. பொன் போய் விட்டதில் கவலை இல்லை. தம்பியின் அன்பினால் பின்னப்பட்ட ஒன்று போய் விட்டது என்பதில்தான் கவலை. கைமாறிய போது கண்களில் எட்டிப் பார்த்த துளிகளை யாருக்கும் தெரியாமல் சட்டென்று துடைத்து விட்டேன். மனதை அப்படித் துடைத்தெறிய முடிவதில்லைத்தானே.

விமானம் ஃபிராங்ஃபேர்ட்டில்(Frankfurt) தரையிறங்குகிறது என்ற போது அத்தனை சோர்விலும் மனம் படபடத்தது. எல்லாவற்றையும் சரியாகச் சொல்லி சமாளித்துக் கொள்வேனா என்ற பயமும் கூடவே வந்தது. "மூன்று பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு தன்னந்தனியாக விமானம் ஏறப் போகிறாளோ?" என்று முகத்தைச் சுளித்தவர்களும், நாடியைத் தோள்பட்டையில் இடித்தவர்களும் அந்த நேரத்திலும் மனசுக்குள் எட்டிப் பார்த்தார்கள்.
Last Updated on Friday, 29 January 2010 09:20
Read more...
 
அவள் வருகிறாள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 07 September 2009 06:24
அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.

குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய் அலுமாரிச் சிலைகளை ஒரு சென்ரிமீற்றர் அரக்கி வைத்தால் நன்றாக இருக்கும் போலவும், யன்னல் சேலையின் சுருக்குகள் சற்று ஒழுங்கற்று இருப்பது போலவும், புத்தக அலுமாரியில் புத்தகங்களை இன்னும் நேராக்கி விடலாம் போலவும்.. தோன்றிக் கொண்டே இருந்தன.

அவள் வரப்போகிறாள் என்பதில் எனக்குள் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. 23வருடங்களின் பின் சந்திக்கப் போகிறேன். என்னைப் போல எடை போட்டிருப்பாளா? அல்லது அப்போது போலவே அழகாக இருப்பாளா? மனசு கற்பனை பாதியும், கேள்விகள் பாதியுமாக அவளின் வரவுக்காகக் காத்திருந்தது.
Last Updated on Friday, 29 January 2010 09:30
Read more...
 
அழைப்புமணி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 07 September 2009 06:21
நடுநிசியில் விழிப்பு வந்ததற்கான காரணம் சட்டென்று புரியவில்லை. நெஞ்சு படபடத்தது. உடல் பயத்தில் வெலவெலத்தது. யாராவது அழைப்பு மணியை அழுத்தியிருப்பார்களோ?

பிரமையா, கனவா புரியவில்லை. குழப்பமாக இருந்தது.

சிந்தனைகளின் மீது அறைவது போல மீண்டும் அழைப்பு மணி. இப்போது அது கனவோ, பிரமையோ அல்ல என்பது உறுதியாயிற்று. தூக்கம் முற்றாகக் கலைந்து நெஞ்சு இன்னும் அதிகமாகப் படபடத்தது. அசையவே பயமாக இருந்தது.

என்னவன் என் அருகில்தான் படுத்திருந்தான். ஆனால் அவனும் அசைவற்றுக் கிடப்பது போலவே உணர்ந்தேன். தலையைத் திருப்பாமலே 'சத்தம் கேட்டதா?' என்றேன். 'ம்..' என்ற அவன் பதிலிலும் குழப்பம்.

வெறும் அழைப்பு மணிக்கு இத்தனை குழப்பம் ஏன்? என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவரிடமும் எழலாம். அது அர்த்தஜாமம் என்பதையும் விட, நாம் ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஓரிரு வருடங்கள்தான் ஓடியிருந்தன. ஓடியிருந்தன என்று சொல்வதை விட நகர்ந்திருந்தன என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
Last Updated on Monday, 07 September 2009 07:31
Read more...
 
சில பக்கங்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 07 September 2009 06:20
நெருங்கிய உறவொன்றின் மரணம் பெரும் சுமையாக, ஆற்ற முடியாத துயராக, விடை கிடைக்காத கேள்வியாக என்னை அழுத்திக் கொண்டேயிருந்தது. வாழ்பவர்கள் அத்தனை பேரும் இறந்துதான் ஆக வேண்டும் என்ற நியதி மனதுக்கு ஒவ்வாததாக இருந்தது. ஏன் என்ற கேள்வி அடிக்கடி என்னைக் குடைந்தது. மரணம் ஏன் என்பதை விட இந்த வாழ்வும், அதனோடு இணைந்த இன்ப துன்பங்களும், பிரிவுகளும் எதனால்? எதற்காக? மரணத்தின் பின்னே என்ன இருக்கிறது? மூச்சடங்கி, இரத்த ஓட்டங்கள் அஸ்தமித்து, உடல் வெறும் வெற்றுக் கூடாகி, சாம்பலாகி... இதுவே நியதியாய்... ஏன்? மனதின் அலைவுகளைத் தவிர்க்க முடியாமலே இருந்தது.

ஒவ்வொரு மரணமும் அது சார்ந்த நெருங்கிய உறவுகளை அடித்துப் புரட்டிப் போட்டு விடுகிறது. சிலரை மனதளவில் அதள பாதாளத்தில் கூட வீழ்த்தி விடுகிறது. அதற்காக ஆதவன் தொடங்கி அத்தனை இயற்கைகளும் அசமந்து இருந்து விடுவதில்லை. உலகம் தன்பாட்டில் இயங்கிக் கொண்டேயிருக்கும். சம்பந்தப் பட்டவர்களும் அவரவர் மனங்களுக்கு ஏற்ப ஸ்தம்பித்து, உறைந்து, கண்ணீரில் கரைந்து மீண்டும் மெதுமெதுவாக எல்லாவற்றுடனும் இணைவார்கள்.
Last Updated on Thursday, 05 November 2009 14:34
Read more...
 
தவிர்க்க முடியாதவைகளாய்... PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Monday, 07 September 2009 06:19
என் கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும், கோட்டான்களினதும் கூச்சலும், சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக் குறுக்கறுத்து நின்ற பாலத்தைக் கடக்கும் போது குத்தெனத் தெரிந்த ஆற்றின் மீது படர்ந்திருந்த குளிர்ந்த அமைதி சுனாமியை ஞாபகப் படுத்தி என்னைக் கிலி கொள்ளச் செய்தது. அழகான இயற்கை ஏதோ ஒரு கணத்தில் ஆக்ரோஷமாக உயிர் குடிக்கும் என்ற உண்மை இப்போதெல்லாம் அடிக்கடி மனசை உதைத்து விட்டுச் செல்கிறது.
நேற்றிரவு எரிமலை சஞ்சிகையில் வாசித்த, சித்திரா சுதாகரனின் ´மாபிள்கல் பதித்த விறாந்தை´ சிறுகதை நினைவுக்குள் உருண்டது. போர் எப்படியெல்லாம் எங்களைச் சிதைத்து விட்டது. இந்தக் குளிரிலும், பனியிலும் இராப்பகலாய் உழன்று வேலை செய்து மாபிள்கல் பதித்த விறாந்தையுடனான வீட்டுக்காக ஏங்கிய ஏழைத்தாய்க்குப் பணம் அனுப்புகிறான் ஒரு ஐரோப்பியா வாழ் ஈழ அகதி. தாயும் அந்த வீட்டைக் கட்டுகிறாள். கட்டி முடியும் தறுவாயில்தான் அந்தக் கொடுமை நடக்கிறது. அந்த மாபிள்கல் பதித்த தரையிலேயே அந்தத் தாயும், அவனது சகோதரி குடும்பமும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவன் தொலைக்காட்சியில் பார்க்க நேர்கிறது. அந்தக் கொடுமை மனசைப் படுத்தியது. அந்த நினைவில் சப்பாத்தையும் துளைத்துக் கொண்டு கால்விரலில் ஏறிய குளிரை மனசு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தது.
Last Updated on Sunday, 08 November 2009 23:43
Read more...
 
மணியக்கா PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by முல்லை   
Thursday, 03 September 2009 08:33

"மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... "

இந்த வார்த்தைகளுக்கு எங்களிடம் அன்று வேறு பொருளிருந்தது. அதற்குக் காரணமே மணியக்காதான். ஊரில் எல்லோரும் அவவை மணி என்றுதான் அழைப்பார்கள். நாங்கள் சிறியவர்களானதால் மணியக்கா என்று கூப்பிடுவோம். இந்த மணியக்கா இருக்கிறாவே, அவ வாயைத் திறந்தால் பொய்களாகவே உதிரும். அதனால்தான் நாங்கள் மச்சான் இவன் பொய் சொல்லுறான்டா... என்று சொல்வதற்குப் பதிலாக, பொய்க்கு அடைமொழியாக மணியென்று வைத்து, மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... என்று சொல்லுவோம்.

மணி என்ற இந்த மணியக்காவை இப்பொழுதும் தோசை சாப்பிடும் போது நான் நினைத்துக் கொள்வேன்.

அப்போ எனக்கு அதிக வயதில்லை. ஒன்பது பத்து வயதுதானிருக்கும். மணியக்காவும் அவர் கணவர் மாசிலாமணியும் எங்கள் ஊருக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்கள். மாசிலாமணியண்ணை ஒரு கில்மன் கார் வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும் பாடசாலைக்கு பிள்ளைகளை காரில் கொண்டு சென்று கூட்டி வருவது அவரது தொழிலாக இருந்தது. இடைப்பட்ட நேரங்களில் வாடகைக்கு அவரது கார் வரும். எங்களது கிராமத்தில் வாடகைக்கான காராக அவரது கார் மட்டுமே இருந்தது. ஆகவே அவர்களது வருமானம் நன்றாகவே இருந்தது.

சில வேளைகளில் இரவு இரண்டாம் காட்சி சினிமாவிற்கு அவரது கார் வாடகைக்குப் போனால், வீட்டில் மணியக்காவிற்குத் துணையாக நான்தான் அழைக்கப் படுவேன். காரணம் அவர்களுடைய வீட்டுக்கு அடுத்தது எங்களது வீடு. ஒருநாள் மாசிலாமணியண்ணையின் கார் இரண்டாம் காட்சி சினிமாவிற்கு வாடகைக்குப் போய் விட்டது. மணியக்கா என்னைத் துணைக்கு வந்து இருக்கும்படி கேட்டுக் கொண்டா. நான் அவ் வீட்டிற்குப் போன நேரம் மணியக்கா நல்லெண்ணைத் தோசை, முட்டைத் தோசை, நெய்த் தோசை என விதம் விதமான தோசைகளாகச் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா. என்னையும் சாப்பிடும் படி கேட்டா ஆனால் எனக்குப் பசியில்லாததால் மறுத்து விட்டேன்.
Last Updated on Thursday, 19 December 2013 08:23
Read more...
 
இழப்பு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சல்மா   
Wednesday, 02 September 2009 13:33

மழையினால் நசநசத்துக் கிடக்கிறது வீடு. மொஸைக் தரையில் கால் வைக்க முடியாதபடி நெறுநெறுக்கிற மணல், பற்களைக் கூச வைப்பதாயிருக்கிறது. கூட்டத்தின் அடர்த்தியைச் சிரமத்துடன் விலக்கியபடி வெளியில் வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். இழப்பின் துயரத்தாலும் மனித நெரிசலின் இறுக்கத்தினாலும் புழுங்கிக் கிடந்த உடலும் மனமும் தெருக்காற்றின் குளிர்ச்சியில் சிலிர்த்துக் கொள்கின்றன என்றாலும் ஓர் அடிகூட எடுத்து வைக்க இயலாதபடிக்குக் கனத்து நடுக்கமுறுகிறது பாதம். ஒரு நிமிடமேனும் அங்கேயே நின்று ஆசுவாசம் கொள்ள விரும்பினாலும் அதற்குச் சாத்தியமில்லாதபடி அவ்விடத்தினூடாக நடமாடித் திரியும் கூட்டத்தினருடைய இருப்பு சங்கட முண்டாக்குவதாயிருக்க, வலுக்கட்டாயமாக வீட்டை நோக்கிக் கால்களை எடுத்து வைத்து நடக்கிறேன். பத்தடி தூரத்தில் இருக்கும் வீட்டை அடையக் கடும் பிரயத்தனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

Last Updated on Thursday, 03 September 2009 08:53
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Page 3 of 5