home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 24 guests online
Literatur
மனஓசை மின்னூல் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Wednesday, 10 February 2016 10:41
நான் எழுதியவைகளை மின்னூல்களாகத் தொகுத்து விட வேண்டுமென்று பலகாலமாகவே விரும்பியிருந்தேன். சில தடவைகள் முயற்சித்தும் பார்த்தேன். அவைகள் எதுவும் எனது மனதுக்கு அவ்வளவு திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் எனக்கு Free Tamil Ebooks இன் அறிமுகம் கிடைத்தது.

அதில் எனது எழுத்துக்களை மின்னூலாக்குவதை விட அதில் இருக்கும் புத்தகங்களைத் தரவிறக்கி வாசிப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அப்படியே ஒரு வருடத்துக்கு மேலாக எனது படைப்புகளை மின்னூலாக்கும் எண்ணத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டு அங்குள்ள மின்னூல்களை அநுபவித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் வேறு தேடல்களின் போது இணையத்தளங்களில் எனது ஆக்கங்கள் பலதைக் கண்டேன். அது சந்தோசம்தானே என நீங்கள் எண்ணலாம். எனக்கு சந்தோசம் தரவில்லை. வியப்பாக இருந்தது. அப்படியே முழுமையாக எனது கட்டுரைகள் வெவ்வேறு நபர்களின் பெயர்களில் இருந்தன. இன்னும் இருக்கின்றன.

அதன் பின்தான் கண்டிப்பாக எனது எழுத்துக்களை மின்னூலாக்கி விட வேண்டுமென்று நினைத்து செயற்பட்டேன். http://freetamilebooks.com/ எனக்கு வழிகாட்டியாகவும், பிடித்தமானதாகவும் இருந்தது.

அந்த வழிகாட்டலுடன் http://pressbooks.com/ இல் பரீட்சார்த்தமாக எனது மனஓசை நூலையே மின்னூலாக்கினேன். முதல் முயற்சி என்பதால் நிறைய நேரங்களைச் செலவழித்தேன். ஆனால் சில விடயங்களைக் கற்றுக் கொண்டேன். சில மென்பொருட்கள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

Free Tamil Ebooks (http://freetamilebooks.com/ebooks/manaosai-short-stories/) நேற்று எனது மனஓசை மின்னூலை வெளியிட்டது.

Android(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில், புது கிண்டில் கருவிகளில், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில், இணையத்தில், இன்னும் பிற வடிவங்களில் படிக்க ஏதுவாக Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் இந்நூல் உருவாகியுள்ளது. இது எனது பரீட்சார்த்த முயற்சியே.

எனது மற்றைய படைப்புகளையும் ஒவ்வொன்றாகத் தொகுத்து விரைவில் சில மின்னூல்களைத் தயாரித்து விடும் என் எண்ணத்தை செயற்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

நீங்களும் உங்கள் படைப்புகளை இப்படி மின்னூல் ஆக்கலாம்.

- சந்திரவதனா
10.02.2016Comments

வணக்கம்
உங்கள் கதைகளில் எனக்குப் பலகதைகள் பிடித்திருந்தாலும் நீங்கள் எழுதிய வேஷங்கள், பாதை எங்கே? என்ற இரண்டு கதைகளும் எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதோடு உங்கள் மீது இருந்த மரியாதையையும் குறைத்திருக்கிறது.

இப்படியான கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எம்மத்தியில் தன்குடும்பத்திற்காக தங்கள் வாழ்வைத் தொலைத்த பல ஆண்பிள்ளைகள் இல்லையா? உங்கள் கதைகளில் வரும் நபர்கள் உண்மையாக இருந்தாலும் லட்சத்தில் ஒரு ஆளாக இருக்கலாம் (விதி விலக்குகள் ) இவர்களைப் பற்றி எழுதி உங்கள் தரத்தை ஏன் குறைக்கிறிர்கள்?

நன்றி
என்றும் உங்கள் அன்பு வாசகன்
பிலிப் ராஜ்குமார்
Mon, Oct 23, 2017 at 3:37 PM
Last Updated on Tuesday, 24 October 2017 08:03
 
இம்சை அரசி கல்பனா அக்கா PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 18 January 2016 08:57
சமூக வலையத் தளங்களில் தேவையான விடயங்களை தேடி எடுத்து வாசிப்பேன். மற்றும்படி முகநூலில் நான் நுனிப்புல் மேய்பவன். மறந்தும் யாருக்கும் கருத்துக்களை வைக்க நான் முயல்வதில்லை. நான் வைக்கும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால், ஏசிப் பேசி நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விடுவார்கள் என்ற பயம்தான்.

எழுதும் விடயங்களுக்கு கருத்துக்கள் வந்து அதில் உண்மை இருந்தால் அதை ஏற்றுக் கொண்டு எழுதியதை திருத்திக் கொள்ளலாம். அல்லது வந்த கருத்தில் தவறு இருந்தால் சொல்லிக் காட்டலாம். நேரம் இல்லாவிட்டால் பேசாமலே இருந்து விடலாம். ஆனால் எங்களிடம்தான் பொறுமை இல்லையே. நாங்கள் எழுதியதில் யாரேனும் தவறு சொன்னால் எளிதில் கோபம் கொள்ளும் சுபாவம் எங்களுக்கு. அந்தப் பிரச்சினையால்தான் முகநூலில் நான் ஏதும் எழுதாமல் சத்தம் சந்தடி இல்லாமல் ஒரு தடவை வந்து பாத்துவிட்டுப் போவேன்.

மற்றவர்கள் ஏதேனும் சொல்லி விடுவார்களோ, எள்ளி நகையாடுவார்களோ என்ற பயம் எங்களிடம் நிறைந்து இருக்கிறது. அந்த ஒரு குறையால் பலர் தங்களிடம் இருக்கும் திறமைகளை வெளியே காட்டுவதில்லை. ஒரு சிலரே தங்கள் திறமைகளுடன் வெளியே எட்டிப் பார்க்கிறார்கள். அப்படி வருபவர்களுக்கும், எங்களிடம் இருந்து வரவேற்பு கிடைப்பது அபூர்வம். எனக்குத் தெரிந்த ஒருவர், அவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். பெயர் கல்பனா பாலேஸ்வரன். முகநூலில் பிரபல்யம். அவர் பிரபல்யம் அடைந்ததற்கு ஒரேயொரு காரணம் அவரது பாடல்கள்தான். இராகங்கள், தாளங்கள் எல்லாவற்றையும் எங்கேயோ தொலைத்து விட்ட மாதிரி தன் விருப்பத்துக்கு பாடல்கள் பாடி, அதை செல்பி எடுத்து முகநூலில் கல்பனா பாலேஸ்வரன் பதிவேற்றி விடுவார். அவர் பாடும் பாணி, அந்தப் பாடலுக்கான நடனம் அல்லது முகபாவம், அடிக்கடி மாறும் உடை அலங்காரங்கள், குறிப்பாக அவரது குரல் இவை எல்லாம் பலரை அவரது நட்பு வட்டத்துக்குள் இழுத்து வைத்திருக்கிறது. அதனால் அவருக்கு ஏகப்பட்ட இரசிகர்கள். எந்தவிதமான விமர்சனங்களும் அவரை இடை நிறுத்தவில்லை என்பது ஆச்சரியம்தான். ஒரு விதத்தில் இது அவரது தன்னம்பிக்கை என்று சொல்லலாம்.
Last Updated on Monday, 18 January 2016 09:30
Read more...
 
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Friday, 01 January 2016 11:24
வேலை முடிந்தவுடன் என்னிடம் நடை பாதி ஓட்டம் பாதி கலந்து இருக்கும். ரெயினைப் பிடிக்க வேண்டும் என்பதால்தான் அந்த அவசரம். அந்த ரெயினை தவற விட்டால் ஒரு மணித்தியாலம் வரையில் அடுத்த ரெயினுக்காகக் காத்து நிற்க வேண்டும்.

அன்றும் வேலை முடிந்து ராஜ வீதியில் ஊர்ந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்குள் புகுந்து ரெயினைப் பிடிக்க வேகமாகப் போய்க் கொண்டிருந்த என்னை இராசையாவின் குரல் நிறுத்தி விட்டது.

இராசையா, நகரின் பிரதான சீட்டுப் பிடிப்பாளர். வட்டிக்காக பெருமளவு பணத்தை நகர் எங்கும் உலாவ விட்டிருப்பவர். கை விரல்களின் மொளிவரை நீண்ட அகன்ற மோதிரங்கள், சுண்டு விரல் அளவுக்கு கழுத்தில் தடித்த சங்கிலி என்று தகதக என எப்பொழுதும் மின்னிக் கொண்டே இருப்பார். „என்ரை மனுசிக்கு ஐம்பத்தியொரு பவுணிலை தாலி செய்து போட்டவன் நான்' என்று சந்தர்ப்பம் கிடைத்தால் தன் பெருமையை எடுத்து விடுபவர். அவர்தான் இப்பொழுது எனது வேகத்துக்குத் தடை போட்டவர்.

„என்ன அவசரமாப் போறீங்கள் போல இருக்கு?' அவரது கேள்வி அர்த்தமற்றதுதான். நான் அவசரமாகப் போவது கண்கூடு.

அவரது கேள்விக்குப் பதில் சொன்னேன். „ரெயினைப் பிடிக்க வேணும்'
Last Updated on Friday, 01 January 2016 11:29
Read more...
 
நாலும் தெரிந்தவன் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 14 December 2015 22:03
இப்பொழுதெல்லாம் அடிக்கடி சிதம்பரநாதனை நினைத்துக் கொள்கிறேன்.

ஸ்ரெதஸ்கோப் வடிவில் வயர்கள் காதில் இருந்து இறங்கி கைத்தொலைபேசியுடன் இணைந்திருக்கும் நிலை இல்லை என்றால், தனியாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் அச்சொட்டாக சிதம்பரநாதனுடன் பொருந்தி விடுகிறார்கள்.

எழுபதுகளில் எனது அண்ணன் நிறுவிய புத்தகக் கடை நகரத்தின் மையத்தில் இருந்தது. நான் அதிகமான புத்தகங்கள் வாசித்தது அப்பொழுதுதான். கடையில் அண்ணனுக்கு உதவியாக இருந்தேன். சிலவேளைகளில் உபத்திரமும் தந்தேன் என்பதை பின்னர் விளங்கிக் கொண்டேன்.

அந்தக் கடையில் இருந்த பொழுதுதான் சிதம்பரநாதனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. குளித்து சுத்தமாக உடையணிந்து மடித்துக் கட்டிய சாரத்துடன் காலை எட்டு மணிக்கெல்லாம் நகரத்துக்கு வந்து விடுவார். காலை எட்டு மணிக்குப் பிறகு நகரம் முழுவதும் அவருக்கே சொந்தம். நகரத்தை நடை போட்டு அளந்து கொண்டிருப்பார். திடீரென நிற்பார். கைகளை காற்றில் துளாவி பஞ்ச பூதங்களில் நீர், நெருப்பு தவிர்ந்த நிலம், காற்று, ஆகாயம் ஆகிய மூன்றோடும் நிறையவே கதைப்பார். என்னதான் கதைக்கிறார் என்று கிட்டே போனால் கோவித்துக் கொண்டு தள்ளிப் போய் நிற்பார். இதனால் யாருமே அவருக்கு இடைஞ்சல்கள் தருவதில்லை. அவர் தனது தனியான உலகத்தில் சுதந்திரமாக, சந்தோசமாக இருப்பார்.
Last Updated on Monday, 14 December 2015 22:16
Read more...
 
மூணே மூணு கிலோ PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 30 November 2015 12:41
கணேசனுக்கு எம்.ஜி.ஆர் என்றாலே போதும். நாளெல்லாம் அவர் படங்களைப் பற்றி, அவரது படப் பாடல்களைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பான். ஒரு தடவை என்னிடம் கேட்டான் 'இந்தியாவுக்குப் போவோமா?' என்று

'போய்...? '

'எம்.ஜி.ஆரை பார்த்திட்டு வரலாம். '

'செலவுக்கு? '

'நான் தாறன்.. இஞ்சையிருந்து சிப் கொண்டு போனால் அங்கை ஒன்றுக்கு இரண்டாக விக்கலாம் வரக்கை அங்கையிருந்து பட்டுச்சாறி வாங்கிக் கொண்டு வந்தால் இஞ்சை நல்ல விலைக்கு குடுக்கலாம். வாற காசுலை பயணச் செலவை முடிச்சுப் போடலாம். அப்பிடி.. இப்பிடி ஏதாவது கையைக் கடிச்சால் அதை நான் ஏற்கிறன்..'

கரும்பும் தந்து தின்பதற்கு கூலியும் தந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்.
Last Updated on Monday, 14 December 2015 22:17
Read more...
 
இதய மலர்கள் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தீட்சண்யன்   
Tuesday, 10 November 2015 11:48


மாவீரர்களே!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
உங்களிற்கான உணர்வின் அலைகளும்
உத்வேகமான நினைவின் தணல்களும்
மேலும் மேலும் வீச்சுறுகின்றன.

97 இன் மாவீரர் வாரத்தில்
பண்ணேற்றும் ஓர் செய்தி
பறந்து வந்தது - முன்னேற்பாடாக
விமானப் பறப்புகள் யாவும் நிறுத்தமாம்!
சிறீலங்காவில் வடக்கிற்கும் கிழக்கிற்கும்
பறப்புகள் ரத்தாம்!
மாவீரர் வாரத்தில் புலிகள் தாக்கலாமென
´பைலட்´ கள் பயமாம்.
Last Updated on Tuesday, 10 November 2015 12:18
Read more...
 
நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா? PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 09 November 2015 23:04
„இப்படி குடிச்சு உடம்பைக் கெடுத்து வீணா பொழுது போக்குறீங்களே. இந்த நேரத்திலை நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா?' நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் வரும் பாடலின் இடையில் எம்ஜிஆர் பேசும் வசனம் இது. பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நாயகன் குடிப்பது போன்ற காட்சி இருக்காது. விதிவிலக்காக அவரது நூறாவது படமான ஒளிவிளக்கில் அவரே குடித்துப் போட்டு வருவதான காட்சி இருந்தது. அப்படிக் குடித்து விட்டு வரும் அவரை நாலு எம்ஜிஆர்கள் வந்து „தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?' என்று கேட்டு „மதுவால் விலங்கிலும் கீழாய் நின்றாய்' என பாடி விட்டுப் போவார்கள்.

திரையில் மதுவுக்கு எதிராக எம்ஜிஆர் படங்களில் ஏதாவது காட்சிகளோ வசனங்களோ இருக்கும். பிறகு திமுக ஆட்சியில் மதுக்கடைகள் திறந்த பொழுது மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க மதுவிலக்கு பிரச்சாரத்தை மேற்கொள்ள கருணாநிதி எம்ஜிஆரை நியமித்தார். மதுவை எதிர்த்து பிரச்சாரம் செய்த எம்ஜிஆரின் அ(ண்ணா கண்ட)திமுக ஆட்சியின் பொழுது வந்த உன்னால் முடியம் தம்பி என்ற படப் பாடலில் எம்ஜிஆரின் திரைப்படக் கவிஞர் புலமைப் பித்தனின் இந்த வரிகள் இருந்தன.
Last Updated on Monday, 09 November 2015 23:15
Read more...
 
அறுபது பாகக் கிணறு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Tuesday, 03 November 2015 12:10
பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பாம்பு கடித்ததால் எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ராவுக்கு மரணம் நேர்ந்தது. கிளியோபட்ராவை கடித்த அதே நாகப்பாம்பு கடித்ததால் அவருடைய தோழிகள் இருவரும் இறந்து போனார்கள் என கதை இருக்கிறது.

இதை ஆராய்ந்து அது சாத்தியம் இல்லை என்று மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான ஆண்ட்ரூ க்ரேயும், எகிப்திய நிபுணரான ஜாய்ஸ் டில்டெஸ்லியும் கூறுகின்றனர் என பிபிசி இணையத்தில் ஒரு தகவலை சமீபத்தில் வாசித்தேன். கி.மு 30இல் நடந்ததை இப்பொழுது ஆராய்ந்து யாரைப் பிடித்துத் தண்டிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவல் எனக்குள் உறைந்திருந்த ஒரு விடயத்தை விழிக்க வைத்திருக்கிறது.

அந்தக் கிணற்றுக்குப் பெயர் அறுபது பாகக் கிணறு. அது ஒன்றும் அறுபது பாக அளவு ஆழம் இல்லை. அதன் ஆழத்தைப் பார்த்து அந்தக் காலத்தில் யாரோ ஒரு மேதை „கிணறு அறுபது பாகம் வரும் போல' என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆழம் என்றால் அப்படி ஒரு ஆழம். அந்தளவு ஆழத்தில் இதுவரை வேறொரு கிணற்றை நான் பார்க்கவேயில்லை.
Read more...
 
சுதர்சினி PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Saturday, 31 October 2015 23:06
மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல்.

சிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது.
Last Updated on Saturday, 31 October 2015 23:55
Read more...
 
குளம் விழுங்கிய கதை PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by நாவுக்கரசன்   
Thursday, 29 October 2015 13:45
எங்கள் எல்லார் வாழ்க்கையிலும் விதி அதன் கடைசி வரியை முடிவில் எழுதினாலும், சிலரோட விடை பெறுதல் எதிர் பாராத நேரத்தில் எதிர் பாராத இடத்தில நடக்கத்தான் செய்கிறது. எங்களின் குளத்தடி குளப்படிக் குரூப்பில் எங்கள் எல்லாரிலும் மிகவும் உற்சாகமா வாழ்கையின் எதிர்கால கனவுகளைக் கலர் கலராக் கண்டு கொண்டு இருந்த ஜெகதீஸ் என்ற ஜெகதீஸ்வரனின் கதை சில அத்தியாங்களுடன், எங்களின் இளம் வாழ்கையில் அற்புதங்கள் அள்ளி எறிந்த குளத்திலேயே திருக்கார்த்திகை விளக்கீட்டு நாளன்று முடிந்தது. அதை விட முக்கியத்துவமா நினைவுகளின் நாட்குறிப்பில் அழைக்க விரும்பாத ஒரு அவலத்தின் அபத்த வரலாறாய் அதை விதி எழுத வைத்தது.

ஜெகதீஸ் தான் எங்கள் குளத்தடி கிரிகட் டீமில் இருந்த ஸ்டார் ப்ளேயர், மேற்கு இந்திய தீவின் கிரிகெட் கறுவல் விளாசல் மன்னன்கள் போல விளையாடுவான். அவர்கள் போலவே உயரமா, கருப்பா இருப்பான், ஒடுங்கிய முகமும் சுருள் முடியும் அவர்கள் போலவே இருக்கும்.

குளத்தடி வயல்வெளிக் கிரவுண்டில முழங்கையை ரப்பர் போல வளைத்து பெட் பிடிச்சு நாலு பக்கமும் சுழட்டுவான். அவனிட்ட சரியா அம்பிட்ட பந்து கதறிக் கதறித் தான் எல்லைக் கோட்டைத் தாண்டி,சிலநேரம் நடு குளத்துக்க விழும்,அல்லது வெள்ளைச் சொண்டன் வீட்டு விளாத்தி மரதுக்கால பிச்சுக் கொண்டு போய் தகரக் குசினிக்கு மேலால தாளம் போட்டுப் பறக்கும், அல்லது தெய்வேந்திரத்திண்ட பண்டிகள் நின்று உருளுற கொட்டகையின் கூரையைப் பிய்துக்கொண்டு போய் வயிரவர் வழவில விழும்.
Last Updated on Thursday, 29 October 2015 23:51
Read more...
 
வைகறைக்கனவு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:46
மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.

ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிருந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாறாங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக் கூறு போடுமாப் போல மரணவலி கிளர்ந்து எழும்பியது. கண்களைத் திறக்க முடியாதபடி இமைகள் ஒட்டிக் கொண்டுவிட்டன போல அந்தரிப்பாயிருந்தது. நாசி நிறையக் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து கொஞ்சமாவது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவளுக்கு ‘குப்’ பென்று நுரையீரல் வரை நிறைந்த இரத்த வெடில் நாற்றம் அடி வயிற்றில் குமட்டியது.

“இங்க ஒரு பிள்ளை சத்தியெடுக்கிறா என்னண்டு கவனியுங்கோ”

“அவாக்கு இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்குது”

“தங்கச்சி… இப்ப உங்களுக்கு என்ன செய்யுது, அப்பிடியே ரிலாக்ஸா படுத்திருங்கோ. உங்களுக்கு பெரிசா ஒரு பிரச்சனையுமில்லை, கையை ஆட்டிப் போடாதேங்கோ மருந்து ஏறிக் கொண்டிருக்குது.” கழுத்தில் ஸ்டெதஸ்கோப் கொழுவியிருந்த போராளிப் பெண் அவளது தலையை இதமாக தடவி விட்டார். அவளுக்கு சட்டென அந்தக் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நெஞ்சு விம்மலெடுத்துக் குலுங்கியது.
Last Updated on Saturday, 31 October 2015 23:54
Read more...
 
மழைக்கால இரவு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:41
அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும்  பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.

அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த  வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.
Last Updated on Saturday, 31 October 2015 23:37
Read more...
 
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:34
சிறு வயதிலிருந்தே இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களிடமும் அது ஒரு பண்பாக வளர வேண்டும். எந்தவொரு மனிதருக்கும் முதல் நண்பராக அவரது வாசிப்பே அமைய வேண்டும்.

நாம் சிலரை அவதானிக்கின்றபோது கையில் கிடைக்கின்ற எந்த கிழிந்த, கசங்கிய பத்திரிகைத்துண்டையும் கூட ஒரு தடவை படித்த பின்புதான் துாக்கிப் போடுவார்கள். சிலர் தம்மோடு எப்போதுமே ஒரு புத்தகத்தை கொண்டு திரிவார்கள். எனது தோழிகள் மலைமகள். சாம்பவி ஆகியோரும் அப்படியே இருந்தனர். சொற்ப அவகாசம் கிடைத்தாலும் எதாவது புத்தகத்தினுள் மூழ்கி விடுவார்கள்.

நான் அறிந்தவரை சமூகத்திற்கு பெறுமதியான அறிவுசார் சேவைகளை ஆற்றிய பலரும் சிறந்த வாசகர்களாகவே இருந்துள்ளனர். இந்திய போராட்ட வீரர் பகத்சிங் தன்னை துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் கடைசி நிமிடம் வரை வாசித்துக் கொண்டேயிருந்தார். இப்படியாக எத்தனையோ பெறுமதியான உதாரணங்களை வரிசைப்படுத்த முடியும்.

ஆனாலும் பலர் படித்து முடித்து ஒரு உத்தியோகம் கிடைத்ததும் தாம் படிப்பதற்காக கைகளில் புத்தகம் எடுப்பதையே நிறுத்தி விடுகிறார்கள். இதில் மிகுந்த அவலம் எதுவெனில் பல ஆசிரியர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். மக்களுக்கு முன்பாக மேடைகளில் ஏறி முழக்கமிடும் அரசியல்வாதிகளும் தமது அறிவை வளர்த்தெடுப்பதில் பின்தங்கியவர்களாகவே இருந்து விடுகிறார்கள். புதிய கருத்துக்களும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் வரண்டு போயிருக்கும் இவர்களால் இளைய தலைமுறையின் வாழ்வை நீரோட்டமுள்ள பசுமை படர்ந்த தோட்டமாக எவ்விதம் வளர்த்தெடுக்க முடியும்.

ஒரு குழந்தையின் முதலாவது ஆசிரியர் தாய்தான். கருவிலே வளரும் சிசுவினுடைய கிரகிக்கும் திறன் அதனுடைய ஏழாவது மாதங்களிலிருந்தே வளர்ச்சியடையத் தொடங்குவதை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டுள்ளது. நானறிந்தவரை ஒரு காலத்தில் பெண்களின் மனங்கவர்ந்த நாவலாசிரியர் ரமணி சந்திரன். அதனைத்தாண்டிய தேடல் உள்ள பெண்கள் மிகவும் அரிதானவர்களாகவே இருந்தனர். இன்று அதிகமாக பெண்களின் நேரத்தையும் சிந்தனைகளையும் ஆக்கிரமித்து நிற்பது தொலைக்காட்சி நாடகங்கள். இவை எந்தளவு புதிய சிந்தனைகளை விருத்தி செய்கின்றன என்பதற்கான விளக்கம் என்னைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்று.

பாடசாலைக் கல்வியானது தனது நிகழ்ச்சி நிரலின்படி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்ப்படுத்துகின்றது. பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன. அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக, சமூக பிரஞ்ஞை மிக்க கல்வியாளர்களாக உருவாக்குகின்றதா? பெயருக்குப் பின்னால் வால் போன்ற பட்டங்கள் கொண்ட சிலர் கூட இத்துப் போன பிற்போக்கு சிந்தனை மரபுகளுக்குள் இன்னமும் சிக்குப்பட்டு உழல்வதையே நடைமுறையில் காண்கிறோம்.

‘கற்றது கையளவு கல்லாதது கடலளவு’ எனக்கூறுவார்கள். வாசிப்பும் தேடலும் விரிய விரியத்தான் நாங்கள் எவ்வளவு சிறுமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களும், தமது பிள்ளைகளை மாணவர்களை சிறந்த வாசகர்களாக உருவாக்க வேண்டும். இன்றைய நவீன சாதனங்களின் பெருக்கம் சிறந்த வாசிப்புக்கு பல வழிகளை ஏற்படுத்தியிருந்த போதும், இளைய தலைமுறையினர் மேலோட்டமான பாவனைகளுடனேயே திருப்பதிப்பட்டுக் கொள்வதை அவதானிக்கிறோம். உண்மையில் வாசிப்பு என்பது ஒவ்வொருவரின் சுவாசத்தைப் போலவும் அமைகின்ற போதுதான் சிந்தனை மாற்றமும். சமூக மாற்றமும் எதிர்காலத்தை புத்தியால் வெல்லும் சாணக்கியமும் இயல்பாக உருவாகும்.

- தமிழினி ஜெயக்குமாரன்
 
தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:23
ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கு ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, மேலும் அவர்களது காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் மற்றும் 'வன்னியாச்சி' (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி 'வீதியெல்லாம் தோரணங்கள்' குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.
Last Updated on Monday, 19 October 2015 08:30
Read more...
 
கருகிக் கரைகிறது நெஞ்சம் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 08:11
போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால்
குடி பெயர்ந்தலையும்
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கித் தீர்த்திருந்த
இரவின் கர்ஜனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.
Last Updated on Monday, 19 October 2015 08:31
Read more...
 
அவளின் கனவு PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தமிழினி ஜெயக்குமாரன்   
Monday, 19 October 2015 07:58
வானத்தைக் கிழித்து
காற்றிலே சிறகடிக்கும்
ராஜாளி அவளின் கனவு.

முகில்களின் முதுகுகளில்
படர்ந்தபடி உன்னி உன்னி
சவாரி போகின்றன
நம்பிக்கைப் பட்டங்கள்.
Last Updated on Monday, 19 October 2015 08:31
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 18 October 2015 06:28
எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன்.

முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார்.

கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை.

கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது.

கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது.
Last Updated on Sunday, 18 October 2015 22:38
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 05 October 2015 09:21
வெண்புறாவிற்கு அழைத்துச் செல்ல வாகனம் இருந்தது. ஆனாலும் நடந்தே வெண்புறாவிற்குச் செல்ல விரும்பினேன். நடை போட்டு வெண்புறாவிற்குப் போகும் பொழுது கொஞ்சம் அசை போட்டுக் கொண்டேன்.

ஐரோப்பிய தமிழர் புனர்வாழ்வுக் கிளைக் கூட்டத்தில் „வெண்புறா நிறுவனத்தில் எங்கள் சேவை' பற்றி நான் உரையாற்றிய பொழுது டொக்டர் என்.எஸ்.மூர்த்தியின் சிந்தனை எங்கோ சிதறி இருந்தது என்று நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அதன் விளைவுதான் இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

எங்கள் சேவையின் நோக்கமும், அதன் வெற்றியும் டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களையும் ஏதாவது செய்யத் தூண்டி இருக்க வேண்டும். பல வருடங்களாக யாருமே அக்கறை கொள்ளாத வெண்புறா வேலைத் திட்டத்தின் பாரம்பரியம் இப்பொழுதுதான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. தானும் செயற்கைக் கால் பொருத்தும் ஒரு வேலைத் திட்டத்தை இலண்டன் கிளை ஊடாக ச் செய்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கிறது. இலண்டனில் இருந்து ஒரு தொழில் நுட்ப வல்லுனரையும் அழைத்துக் கொண்டு வன்னிக்குப் புறப்பட்டு விட்டார்.

யேர்மனிய தொழில் நுட்பத்தினூடான கால் பொருத்தும் திட்டத்திற்கு நிகராக இலண்டன் தொழில் நுட்பத்தினூடான கால் பொருத்தும் திட்டத்திற்கான பட்டறை வன்னியிலே நடக்கிறது. இந்த விடயம் எனது காதுக்கு வந்த பொழுது சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் வெண்புறா நிறுவனத்தை முழுமையாக எடுத்து அவர் செயற்படும் அறிவிப்பானது ஐபிசி வானொலியில் வந்த பொழுதுதான் மனது சோர ஆரம்பித்தது.
Last Updated on Sunday, 18 October 2015 22:37
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 27 September 2015 22:58
வாகனத்தின் மேற்கம்பிகளைப் பிடித்து எம்பி வெளியே குதித்து, சிரித்தபடி ஒரு இளைஞன். அட அது பிரபாகரன். இராணுவச் சீருடையோ, பிரமுகர்களைச் சந்திக்கும் பிரத்தியேக உடையோ அணியாமல் சாதாரண கோடு போட்ட சேர்ட்டுடனும், சாம்பல் நிற நீள் காற்சட்டையுடனும் சிரித்துக் கொண்டே வந்தார்.

இருக்கையில் இருந்து எழுந்து கொண்டோம்.

„முதலிலை மன்னிக்கோணும். அரை மணித்தியாலம் லேற்றாப் போச்சு“

ஒரு தலைவனின் பேச்சின் கண்ணியம் தெரிந்தது.

„பொடிபில்டிங் செய்யிறீங்கள் போலை' எனது மூத்த மகனைப் பார்த்துக் கேட்டார்.

எனது இரு மகன்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு தருணம் வரும் என்று எதிர்பார்திருக்க மாட்டார்கள். இங்கே அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு அவர்களது வயதுக் கேற்ப சமீபத்தில் வெளி வந்த ஆங்கிலப் படங்கள், இசை அல்பங்கள், விளையாட்டுக்கள் என அவர்களுடன் பிரபாகரன் உரையாடிக் கொண்டிருந்தார்.
Last Updated on Sunday, 18 October 2015 22:36
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 21 September 2015 12:09
மறுநாள் காலையில் செல்வா தனது உதவியாளருடன் வந்தாள். கொல்கர் தாமதங்களை ஏற்படுத்தாமல் கை பொருத்துவதற்கான வேலைகளை உடனேயே தொடங்கி விட்டான். ஸ்ராலின், கொல்கருக்கு உதவியாளராக நின்று உதவிகள் செய்து கொடுத்தான்.

செல்வாவின் கை வேலைகள் ஆரம்பித்த சில நிமிடங்களில் மருத்துவத் துறைப் பொறுப்பாளர் ரேகா வந்தார். நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர், தமிழ்ச்செல்வனுக்கு நேரம் கிடைக்கவில்லை அதனால் அவரால் வர முடியவில்லை என்ற தகவலைத் தந்தார்.

செல்வாவின் கை வேலைகளுக்கான தேவைகள் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனவா என சரி பார்த்துக் கொண்டார். சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.

அன்று மாலை கவிஞர் நாவண்ணன் வந்தார். கூடவே தனது மனைவியையும் இம்முறை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். தனக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கூடி வந்திருப்பதாகச் சொன்னார்.
Last Updated on Sunday, 18 October 2015 22:33
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 13 September 2015 21:47
எல்லாம் ஓரளவு தயாரானது. இம்முறை பயணத்தில் எங்களது இரு மகன்களும் இணைந்து கொண்டார்கள். டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் ஆனந்தண்ணை, கொல்கர், ஸ்ராலின் மூவரையும் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு.

டுசுல்டோர் பிற்கு போகுமுன் ஸ்வெற்றா நகரத்துக்குச் சென்று றாடமாகர் குடும்பம் மற்றும் சங்கர், அவருக்கு உதவிய நண்பர் ஆகியோரைச் சந்திக்க வேண்டி இருந்தது. றாடமாகர் குடும்பம் எங்களை அன்போடு வரவேற்றார்கள். தாங்கள் தந்து விடும் பொருட்களை அழகாகப் பொதி செய்து வைத்ததும் அல்லாமல் அவற்றின் விபரங்கள், அவை எந்த எந்தப் பொதிகளுக்குள் இருக்கின்றன என்ற தகவல்கள் எல்லாவற்றையும் அச்சிட்டு விபரமாக பேப்பர்களில் தந்தார்கள். அவர்கள் தந்த பொதிகளின் அளவு மட்டும் 65 கிலோவிற்கு மேலாக இருந்தது. ஆகவே எனது ஒரு மகனின் பயணச் சீட்டை தாங்களே பொறுப் பெடுப்பதாகச் சொன்னார்கள். இனியவாழ்வு இல்லக் கட்டிடம் கட்டுவதற்காக 2100யூரோக்களையும் ஒரு உறையில் போட்டுத் தந்தார்கள். வாடகைக் காரை வரவழைத்து டுசுல்டோர்ப் வரை போக ஏற்பாடும் அவர்கள் செய்தார்கள்.

நன்றி சொன்னோம். இது ஒரு மனிதாபிமானப் பணி. ஒருவருக்கொருவர் நன்றிகள் சொல்லிக் கொண்டாலும் தொடர்ந்து செய்வோம் என்று சொல்லி அன்போடு வழி அனுப்பி வைத்தார்கள்.
Last Updated on Sunday, 18 October 2015 22:31
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 06 September 2015 11:33
போகும் பொழுது டுசுல்டோர்ப் விமான நிலையத்தில் இருந்த சங்கடங்கள் வரும் பொழுது இல்லை. ஆனந்தண்ணையும் நலமாக இருந்தார்.

தமிழர் புனர் வாழ்வுக் கழக யேர்மன் கிளை அமைந்திருந்த வூப்பெற்றால் நிலைய மண்டபத்திலேயே கூட்டத்திற்கான ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. கொல்கரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கூட்டத்திற்குப் புறப்பட்டோம்.

பயணிக்கும் பொழுதே வன்னியில் எங்களது வெண்புறா திட்டத்தின் முழு விபரங்களையும் ஆனந்தண்ணைக்கு விபரமாகச் சொல்லிக் கொண்டேன். கூடவே செல்வாவிற்கு இலத்திரன் கை பொருத்துவது பற்றியும் சொன்னேன்.

„அதிகச் செலவாகுமா?' என்று கேட்டார்.

„முப்பதில் இருந்து நாற்பது ஆயிரம் யூரோக்கள் வரலாம்'

„அவ்வளவா?'

எங்கே இன்னும் ஒரு தடவை கீழே விழுந்து துடிக்கப் போகிறாரோ என்றொரு பயம் வந்து போனது.

“வங்கியிலை அவ்வளவு பணம் இல்லையே“ அவரது வார்த்தை முடிவு ஆலாபனை பாடியது.
Last Updated on Sunday, 18 October 2015 22:30
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 30 August 2015 06:49
உடும்பைப் பற்றிய நினைவுகளோடு இனி கொல்கர் நித்திரை கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது.

நான் நினைத்தது போலவே அவனது நிலைமை இருந்தது. நேற்றைய மிகுதி இரவில் தான் எடுத்த வீடியோவை திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்ததாக அடுத்தநாள் காலையில் அவன் சொன்னான்.

"இரண்டு உடும்புகள்தானே கிடைத்தது. அதை எப்படி இங்கை இருக்கிற 32 பேரும் சாப்பிடப் போறம்?"

கொல்கரின் சந்தேகத்துக்கு விடை அரசியல்துறையில் இருந்து வந்தது. அன்று இரவு எங்களுக்கான உணவு கண்காணிப்பு அலுவலகருடன் இடம்பெறும் என்பதே அந்த அறிவிப்பு.

கொல்கருக்கு நினைவூட்டினேன். „இரவு உணவுக்கு கட்டைக் காற்சட்டையுடன் வந்து என்னைக் குறை சொல்லாதே“ என்று. சிரித்துக் கொண்டான்.
Last Updated on Sunday, 18 October 2015 22:28
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் – 20 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Thursday, 27 August 2015 21:10
மறுநாள் காலை

இன்று எந்தவிதமான வேலைகளும் இல்லை. எடுத்து வந்த வேலை சிறப்பாக முடிந்ததில் மனது நிம்மதியாக இருந்தது.

நவீனமுறையிலான யேர்மன் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் செய்வதற்கான பயிற்சியை பெறுவதற்கு ஒருவரை அதுவும் யேர்மன் மொழி தெரிந்தவரை கொல்கரிடம் சேர்க்க வேண்டும். அப்படி ஒருவரைக் கண்டு பிடித்து விட்டால் வெண்புறா நிறுவனத்திற்கான எனது வேலைத்திட்டம் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் நான் எனது மற்றைய பணிகளைத் தொடங்கலாம். அதே நேரம் ஒக்ரோபரில் செல்வாவிற்கு கை பொருத்தும் வேலை இருக்கிறது. அதற்கான பணம்?

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக்கிளையில் போதுமாமானளவு பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். தமிழர் புனர்வாழ்வுக்கழக யேர்மனிக் கிளையின் வங்கிக்கணக்குக்கு நிலையாக வந்து கொண்டிருக்கும் பணத்துக்கு வழமையான வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது செல்வாவிற்கு கை போடுவதற்கு பணத்துக்கு என்ன வழி? இந்தக் கை போடும் வேலையைப் பற்றி யேர்மனியில் அறிவிக்கும் பொழுது அங்கே என்ன மாதிரியான விளைவுகள் இருக்கப் போகின்றன.

சிந்தனையில் இருந்த என்னை வெண்புறா வாசலில் வந்து நின்ற வாகனம் கவனிக்க வைத்தது.
Last Updated on Sunday, 18 October 2015 22:26
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 02 August 2015 11:02
ஒரு சில நிமிடங்களில் மீண்டும் வெளிச்சத்திற்குள் நின்றோம். இடையில் விளக்குகள் அணைந்ததால் நாங்கள் பேசிக் கொண்டிருந்த விடயங்களும் விடுபட்டுப் போயின.

கதை இப்பொழுது நவம் அறிவுக் கூடத்தில் நாங்கள் கண்ட நம்பிக்கை தளராத உள்ளங்களைப் பற்றிச் சுழன்று கொண்டிருந்தது.

பிபிசி தமிழ்ச் சேவையில் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய, 14 வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த பெண்ணைச் சந்திக்க வேண்டுமென்பதில் எனது மனைவிக்கு ஆர்வம் இருந்தது. நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போய் விட்ட ஆதங்கத்தை மனைவி பிரபாகரனிடம் சொன்னார்.

„நீங்கள் சொல்லுறது செல்வாவை எண்டு நினைக்கிறன். அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா.
Last Updated on Sunday, 18 October 2015 22:24
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 26 July 2015 21:40
கையில் இருந்த துப்பாக்கியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுற்றி இருந்தவர்கள் அதுவும் கொல்கர் என்ன நிலையில் இருந்தார்கள் என்று தலை தூக்கிப் பார்க்க முடியவில்லை. அல்லது முயலவில்லை. எது என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

„சொல்லுங்கோ. இது அவரின்ரை நாட்டுத் தயாரிப்புத்தான் என்று“ பிரபாகரன் சொல்லும் போதே கொல்கரை நோக்கி கையைக் காட்டினார்.

கொல்கருக்கு எதுவும் புரிய வாய்ப்பில்லை. இப்பொழுது கொல்கரைப் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

„இதுவும் Made in Germany தான்“ பிரபாகரனிடமிருந்து அடுத்து உதிர்ந்த வார்த்தைகளில் கொல்கர் தெளிவு பெற்றிருப்பான்.
Last Updated on Sunday, 18 October 2015 22:23
Read more...
 
வலன்ரீனா PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Friday, 24 July 2015 07:12
இன்றாவது அவளைப் பற்றி நான் எழுதி விட வேண்டும். 13 வருடங்களாக மன இடுக்குகளில் ஒளிந்திருப்பவள்.

அவள் ஒரு சிங்களப் பெண். பெயர் வலன்ரீனா. மிகவும் மென்மையாகப் பேசத் தெரிந்தவள்.

இடுப்பில் குடத்துடன் தண்ணீர் மொண்டு கொண்டு செல்ல வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு குடத்தை நிரப்பும் போதும் சரி, குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும் போதும் சரி என்னுடன் கதைத்துக் கொண்டே இருந்தாள். எனது அந்தரமான மனநிலை பற்றி அவளுக்கு ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

„தம்பி விடுதலைப்போரில் மாவீரனாகி விட்டான்“ என்றாள். ஆச்சரியம் மேலிட „எங்கே நடந்தது?“ என்று கேட்டேன். தாங்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அங்கு நடந்த போரில்தான் தம்பியை இழந்ததாகவும் சொன்னாள். விடுதலைப்புலிகள்தான் தமக்கு இப்போது இங்கே பாதுகாப்புத் தந்திருக்கிறார்கள் என்றாள்.
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 19 July 2015 14:48
„அரசியற்துறையில் நடந்த, இரவு சந்திப்புக்கு இது உசத்தி. நீ காற்சட்டையோடை வந்திட்டு என்னிலை பழி சுமத்தாதை” கொல்கருக்கு நினைவு படுத்தினேன்.

'நீ நேற்று சொல்லும் போதே எனக்குப் புரிந்து விட்டது. இன்றைய சந்திப்பு விசேசமானது என்று” 'சந்திப்புக்கு முன்னால் சோதனைகள் இடம் பெறலாம். தேவை இல்லாத பொருட்கள் இருந்தால் இப்பொழுதே எடுத்து வைத்து விடு'

'கமரா மட்டும் தான் கொண்டு வாறன்'

மதியம் குறைவாகத்தான் உணவு எடுத்துக் கொண்டோம். நினைவுகள் மட்டும் சந்திப்பைப் பற்றி நீண்டு இருந்தது.

எங்களது சந்திப்பிற்கான ஒழுங்கு மீண்டும் ஒரு தடவை அரசியல்துறைச் செயலகத்தால் அன்று உறுதிப் படுத்தப்பட்டது. „வாகனம் வரும் காத்திருங்கள்” என்ற தகவலும் கூடவே வந்திருந்தது.

வாகனத்துக்காக நான் எனது மனைவி கொல்கர் மூவரும் காத்திருந்தோம். நான்காவதாக தமிழர் புனர்வாழ்வுக்கழக இணைப்பாளர் ரெஜியும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.

வாகனமும் வந்தது. நாங்கள் நால்வரும் ஏறிக் கொண்டோம். அன்ரனி, தான் அரசியல்துறைச் செயலகத்தில் இருந்து வருபவர்களுடன் பயணிக்க இருப்பதாகச் சொன்னார்.

பள்ளங்கள், மேடுகள் என வாகனம் விழுந்து எழுந்து பயணித்தது. இப்பொழுது பயண அலுப்புகள் ஏதும் தெரியவில்லை. மனது பெரிய சந்திப்பில் நிலைத்து விட்டதால் உடல் உபாதைகள் மறந்து போயிருந்தன.நீண்ட பயணத்தின் பின் ஒரு குடிசையின் முன்னால் வாகனம் சென்று நின்றது.
Last Updated on Sunday, 18 October 2015 22:21
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 14 July 2015 12:05
தமிழ்ச் செல்வனுடனான அன்றைய இரவு உணவு விருந்தில் எங்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழக இணைப்பாளர் ரெஜியும் கலந்து கொண்டார்.

அரசியல் துறையின் உதவிப் பொறுப்பாளர் தங்கன் எங்களுக்கான உணவுகளைப் பரிமாறினார். அவரிடம் அமைதி நிறைந்திருந்தது. அது அவரின் இயல்பான சுபாவமாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் நட்புக் கொள்ள வைக்கும் பார்வையும், செய்கைகளும் அவரிடம் இருந்தன.

கொல்கர் கொஞ்சம் திருப்தி இல்லாதவன் போல் தெரிந்தான். என்னவென்று அவனிடம் விபரம் கேட்டேன். 'இரவுச் சாப்பாடு என்றவுடன் சும்மா சாப்பிட்டுப் போவது என்றுதான் நினைத்தேன். அதனால்தான் கட்டைக் காற்சட்டையோடு வந்தேன். இங்கு ராஜாங்க மரியாதை அல்லவா நடக்கிறது. இப்படி ஒரு கட்டிடம் வன்னியில் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை' என்றான்.
Last Updated on Sunday, 18 October 2015 22:20
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 07 July 2015 11:36
நாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை மருத்துவத்துறைப் பொறுப்பாளர் ரேகா மூலம் அறிந்து எங்களை சந்திக்க ஜவாகர் வந்திருந்தார்.

ஜவாகருக்கும் ஒரு கால் செயற்கையானதுதான். வெண்புறா நிறுவனமே அதைச் செய்து கொடுத்திருந்தது. கால் பொருத்தப்பட்ட இடத்தில் செயற்கைக் காலுடனான உராய்வினால் காயம் ஏற்பட்டு வலி இருப்பதாகச் சொன்னார்.

அவரது காலைப் பரிசோதித்த கொல்கர் „சரியான அளவுகள் எடுக்காததாலேயேதான் இப்படியான பிரச்சினை வருகிறது. காயம் மாற வேண்டுமானால் செயற்கைக் காலை சில நாட்களுக்குக் கழட்டி வைப்பதுதான் ஒரே வழி' என்றான்.

„அது முடியாதே. நிறைய வேலைகள் இருக்கு' ஜவாகர் தனது நிலையைச் சொன்னார்.
Last Updated on Sunday, 18 October 2015 22:19
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 29 June 2015 12:29
அன்று யேர்மனியத் தொழில்நுட்பத்தில் கால் செய்யும் விடயங்கள் பற்றிய செயற்பாடுகள் இருந்ததால் "மாலை வரை பார்ப்போம் மாறவில்லை என்றால் வைத்தியசாலைக்குப் போவோம்" என கொல்கர் சொன்னான்.

செயற்கைக்கால் செய்யும் முறைகளும், பொருத்தியதன் பின்னரான பயிற்சிகளும் அடங்கிய ஒரு வீடியோவை காண்பித்து, கொல்கர் அதற்கு விளக்கம் கொடுத்தான்.

பின்னர் தகரத்தினால் செய்யப் படும் கால்களில் தான் கண்ட குறைபாடுகளை அடுக்கினான்.

„தகரத்தில் செய்யப்படும் கால்களுக்கான அளவுகளை துல்லியமாக அளவிட வாய்ப்பில்லை. காலுடன் பொருத்தப்படும் இடத்தில் கடினமான இறப்பர் வைத்துத் தைக்கப் படுகிறது. இது காலுக்கு வீணான எரிச்சலைத் தருகிறது. மேலும் நடக்கும் பொழுது அந்த இடத்தில் ஏற்படும் உராய்வினால் புண்களும் ஏற்படும். சரியான அளவுகள் எடுக்காத பட்சத்தில் செயற்கைக் கால் பொருத்தப்படும் கால் பகுதி சோர்ந்து சுருங்கிப் போய்விடும். நடக்கும் பொழுது சமநிலை இல்லாததால் முதுகெலும்பில் வளைவுகள் ஏற்பட்டு வேறு பிரச்சினைகள் வரும். நான் வெண்புறா பதிவேட்டைப் பார்த்தேன். அதில் இதுவரை 1197 பேர்களுக்கு கால்கள் பொருத்தப் பட்டதாக இருக்கிறது. ஆனால் திருத்தவேலைகள் மட்டும் 9893 தடவைகள் நடந்திருக்கின்றன. சராசரியாகப் பார்த்தோம் என்றால், ஒரு காலைப் பொருத்தியவர் அதன் திருத்த வேலைகளுக்காக ஒன்பது தடவைகள் அதுவும் ஒரு குறுகிய காலத்துக்குள் வந்திருக்கின்றார்... "
Last Updated on Sunday, 18 October 2015 07:35
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 23 June 2015 09:46
தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தில் இருந்து வெண்புறா நிலையத்துக்கு வந்தோம். மதிய வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வெண்புறா நிலையத்தின் வரவேற்பறையில் இருந்து எங்களது செயற்பாடுகள் பற்றி நானும், ரெஜியும், கொல்கரும் உரையாடிக் கொண்டிருந்தோம்.

அந்த வெப்பமான வேளையில் சுந்தரம் எங்களுக்கு குடிப்பதற்கு செவ்விளநீர் தந்து விட்டுப் போனார்.

எங்களுக்காக ஒரு இளநீர் கூடமே சுந்தரம் வைத்திருந்தார். வெண்புறா நிறுவனத்தின் இணைப் பொறுப்பாளர் அவர்.

இங்கே சுந்தரத்தைப் பற்றி குறிப்பிடுவது நல்லது. சிங்கள இராணுவத்தின் செல் விழுந்து ஒரு காலை இழந்து நிற்கின்றார். இதே நிலைதான் கரிகரனுக்கும். வெண்புறா நிலையத்தில் பணிபுரிபவர்கள் போராட்டத்தில் களம் கண்டவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நிறையக் கதைகள் இருந்தன. தற்செயலாக வரவேற்பறைக்கு வந்த அன்ரனி நாங்கள் கதைப்பதைக் கேட்டு விட்டு „இங்கை சொல்லி விட்டால் எங்கையெண்டாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து தருவினம் அதை என்னெண்டு சொன்னால் விசாரித்துக் பார்க்கலாம்' என்றார்.
Last Updated on Sunday, 18 October 2015 07:31
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 16 June 2015 21:15
மறுநாள் வெண்புறாவில் வெளியாட்களுக்கான கால் பொருத்தும் வேலைகளும், திருத்த வேலைகளும் இருந்தன.

பலர் செயற்கைக் கால் திருத்த வேலைகளுக்கு வந்திருந்தனர். ஒரு பெண் கால் பொருத்துவதற்காக வந்திருந்தார். அவர் பெயர் ராஜலட்சுமி. மூன்று பிள்ளைகளின் தாய். நிலத்தில் இருந்த கண்ணிவெடியில் காலை இழந்ததாகச் சொன்னார்.

கால் பொருத்திய அந்தப் பெண் தனது பயிற்சியை எடுக்கும் போது கொல்கர் கூடவே நின்று அவதானித்துக் கொண்டான்.

மாலையில் நாங்கள் தொழிற்கூடத்தில் இருக்கும் பொழுது அரசியல் துறைப் பெறுப்பாளர் வர இருப்பதாக அன்ரனி வந்து சொன்னர். நான் அங்கே இருந்த பொழுதுகளில் யாராவது வருவதாக இருந்தாலும் சரி அல்லது நாங்கள் போய் சந்திப்பதாக இருந்தாலும் சரி முன் கூட்டியே அறிவித்து விடும் ஒரு சிறப்பான வழக்கம் அங்கே காணப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்துக்கு வாகனம் ஒன்று வந்தது. அரசியல்துறைப் பொறுப்பாளர் வந்து விட்டதாகச் சொன்னார்கள்.
Last Updated on Sunday, 18 October 2015 07:45
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Wednesday, 10 June 2015 09:51
அடுத்தநாள் மாலை, சிவா மாஸ்ரர் சொன்னபடியே நேரம் தவறாமல் எங்களை அழைத்துப் போக வாகனத்தை அனுப்பி இருந்தார்.

நவம் அறிவுக் கூடத்திற்கான பயணம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் நான் அந்தப் பாதையில் பயணித்ததால் எனக்கு கொஞ்ச அனுபவமும் கூடவே அவதானமும் இருந்தது. ஆகவே வாகனத்தில் இருந்த கம்பியை இறுகப் பிடித்திருந்தேன். எனது மனைவியும், கொல்கரும் பயணத்தில் சிரமப் பட்டார்கள்.

நாங்கள் நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்ற பொழுது அங்கே மாலை நேர விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன. கைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் என மைதானமே களைகட்டி நின்றது.

சிறுவயதில் கெந்தி விளையாடும் பொழுது ஒரு காலில் தொடர்ந்து கெந்த முடியாமல் சமநிலை தவறி மறு காலையும் ஊன்றி விட்டு, அளப்பி விளையாடியது அப்பொழுது சட்டென்று நினைவுக்கு வந்தது. இங்கே சிலர் ஒரு காலோடு கைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கொல்கர் ஆச்சரியப் பட்டுப் போனான். இது உண்மையில் அதிசயம் என்றான். இரண்டு கால்கள் கொண்டு இவர்களது வேகத்துக்கு தன்னாலேயே விளையாட முடியாது என்றான்.
Last Updated on Sunday, 18 October 2015 07:45
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 02 June 2015 06:02
கொழும்பில் இருந்து வன்னிக்கு என்னை அழைத்துக் கொள்ள வந்த சிவா மாஸ்ரருக்கும், என் முன்னால் நிற்கும் இந்த சிவா மாஸ்ரருக்கும் இடையில் நிறையவே வித்தியாசங்களைக் காண முடிந்தது. அளந்துதான் பேசினார். அதிலும் ஆழம் தெரிந்தது. பேச்சில் ஆளுமையும் சேர்ந்திருந்தது.

யேர்மனியில் இருந்து வன்னிக்குப் புறப்படும் பொழுதே யார் யார் என்னைச் சந்திப்பார்கள் என்று ஓரளவு கணித்து வைத்திருந்தேன். அவர்களைச் சந்திக்கும் பொழுது மரியாதை நிமித்தம் அவர்களுக்கு எதைக் கொடுப்பது என்று என்னுள் தெளிவில்லாமல் இருந்தது. அதைக் கொடுக்கலாமா இதைக் கொடுக்கலாமா என்று குழம்பிப் போய் இருந்த எனது கண்ணில் பட்டதுதான் பத்மநாப ஐயர் தமிழியல் ஊடாக வெளியிட்ட `கண்ணில் தெரியுது வானம்´ புத்தகம். பல புலம் பெயர் எழுத்தாளர்கள் அதில் எழுதி இருந்தார்கள். போதாததற்கு மூனாவின் சில கேலிச் சித்திரங்களும் அதில் இருந்தன. தமிழ் கார்டியனில் வெளியாகி அப்பொழுது அதிகம் பேசப்பட்ட கேலிச்சித்திரமும் அவற்றில் ஒன்று. Norway சமாதான பேச்சுக்கு வருகிறது. ஒரு புத்த பிக்கு No way என்று சொல்கிறார். இதுதான் அந்தக் கேலிச்சித்திரம். அந்தப் புத்தகங்களையே அன்பளிப்பாக நான் சந்திப்பவர்களுக்கு கொடுப்பதென தீர்மானித்து எடுத்து வந்திருந்தேன்.
Last Updated on Sunday, 18 October 2015 07:45
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 10 May 2015 23:09
மறுநாள் காலை வெண்புறா நிலையத்தில் இருந்த அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ் கொல்கர் அமர்ந்திருந்தான். அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில் அவன் தியானத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றும். பனைமரத்தின் கீழ் அவனுக்கு ஞானம் கிடைத்து விட்டதோ என நான் நினைத்ததுண்டு.

நீண்டு உயர்ந்திருந்த பனைமரத்தின் கீழ் காலைவேளை நிழலில் இருந்த அவனைப் பார்த்துக் கேட்டேன்.

„யேர்மனி நினைவு வந்திட்டுதோ?' .

„இன்னும் இல்லை. ஆனால் ஒரு கேள்வி. இந்தப் பனைமரத்திலை ஒரு காயையும் காணேல்லை. ஆனால் அந்தக் காணிக்குள்ளை உள்ள மரங்களிலை எல்லாம் காய்கள் இருக்கின்றனவே. ஏன்?' .

„அதுவா? இது ஆண் பனை..“ நீ எப்போதாவது நொங்கு சாப்பிட்டிருக்கிறாயா?'.

„இந்தப் பயணத்திலைதானே நான் முதல் முதலா பனையையே பார்க்கிறன்'.

அப்பொழுது அங்கே வந்த அன்ரனியிடம் விடயத்தைச் சொன்னேன்.
Last Updated on Sunday, 18 October 2015 07:45
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 10 May 2015 23:08
சொன்னபடி அன்று காலை இனியவனால் வரமுடியவில்லை. அவர் தனது உதவியாளரை அனுப்பி இருந்தார்.

யேர்மனியில் விட்டு வந்த பெட்டிகள் வந்து சேரவில்லை. வவுனியாவில் கொடுத்து விட்டு வந்த பொதியைப் பற்றிய தகவலும் வரவில்லை. ஆகவே இன்று எந்தவித வேலையும் இல்லை. அதுவரை ஏதாவது இல்லங்களைப் பார்வையிடலாம் என்று தோன்றியது. அதை அவரிடம் சொல்ல வாருங்கள் என்று கூட்டிப் போனார்.

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்துக்குப் போய் அங்கு துயிலும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அங்கிருந்து குருகுலம் போய் பிள்ளைகளைச் சந்தித்தோம். கொல்கருக்கு அந்த பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றியும், குருகுலத்தின் சேவையைப் பற்றியும் சொன்னேன். அந்தப் பிள்ளைகளின் மேம்பாட்டுக்கு நான் பணம் அன்பளிப்புச் செய்ததைக் கண்டு, கொல்கர் தானும் பணம் அன்பளிப்புச் செய்தான். அந்தக் கள்ளம் கபடம் இல்லாத பிள்ளைகளை கொல்கருக்குப் பிடித்துப் போனது. நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

குருகுலம் இல்லத்தோடு சேர்ந்து ஒரு காணி இருந்தது. அதில் பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்க விரும்புவதாகவும் அதற்கு நிதி தேவைப்படுவதாகவும் குருகுலத்தின் நிர்வாகி சொன்னார். அதை நான் குறிப்பு எடுத்துக் கொண்டேன். யேர்மனிக்குத் திரும்பிய பின் குருகுலத்துக்கான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனது அந்த நினைப்பு ஏனோ நிறைவேறாமலே போயிற்று. யேர்மனியில் சிறுவர் விளையாட்டு மைதானங்களைக் காணும் பொழுதெல்லாம் இன்றும் குருகுலத்துப் பிள்ளைகள் நினைவில் வந்து போகிறார்கள்.
Last Updated on Sunday, 18 October 2015 07:44
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 10 May 2015 21:57
வெண்புறாவில் நாங்கள் தங்குவதற்காக கொல்கருக்கு ஒரு அறையையும் எனக்கும் எனது மனைவிக்கும் ஒரு அறையையும் ஒழுங்கு செய்திருந்தார்கள். மலசல கூடத்தை ஐரோப்பிய முறையில் அமைத்திருந்தார்கள். அதனருகே ஒரு குளியல் அறை இருந்தது. மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் பாவனையில் இருந்தது. அதுவும் மட்டுப் படுத்தப் பட்டிருந்தது. இரவு பத்து மணிக்கு மேலே அரிக்கன் விளக்குதான் உதவி.

"நீங்கள் வாறதெண்டு தகவல் கிடைச்ச உடனை அவசர அவசரமாகக் கட்டினது" அன்ரனி அப்படிச் சொன்ன பொழுது, எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறார்களே. எங்களைத் தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே எல்லா ஒழுங்குகளையும் செய்திருக்கிறார்கள். இவர்களை விட்டு விட்டு ஹொட்டேலில் போய் தங்கி எதைக் காணப் போகிறோம் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
 
„நாங்கள் ஒன்றும் சுற்றுலாவுக்கு வரவில்லையே. சேவை செய்யத்தானே வந்திருக்கிறோம். இந்த வசதி எனக்குப் போதும்' என்று கொல்கர் பச்சைக் கொடி காட்டினான்.
Last Updated on Sunday, 18 October 2015 07:44
Read more...
 
வெள்ளிப்பாதசரம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by இலங்கையர்கோன்   
Monday, 27 April 2015 11:11
தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி... ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி  'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ' என்று கெஞ்சினாள்.

அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னும் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான். அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப் போறது' என்று சொல்லிக் கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினாள். செல்லையா தன் தோளில் கிடந்தசால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல் என்னோட வா' என்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.
Last Updated on Monday, 27 April 2015 11:44
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 24 March 2015 13:14
இப்பொழுது சிறீலங்காவை விட்டு இன்னும் ஒரு நாட்டுக்குள் நுழைவது போன்ற பிரமை. எனது மனதில் எழுந்த உணர்வுகளை எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

முழு இரவும் பயணம் செய்த களைப்பு. காலையில் சாப்பாடு இல்லை. வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் வெய்யில். இருந்தாலும் மனது மட்டும் குளிர்ச்சியாக இருந்தது. உடலில் ஒரு புத்துணர்ச்சி தானாக வந்து சேர்ந்தது.

கொல்கரின் கண்கள் என்னை நோக்கிக் கொண்டிருந்தன. அவன் எனது மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டிருந்தான் என்று அவனது புன்னகை சொன்னது.

சிவந்த மண் பாதை வளைந்து வளைந்து சென்றது. போராடிப் போராடி மண்ணும் சிவந்து போய் விட்டதோ என்று எனக்குள் ஒரு கற்பனை வந்து போனது. ஆங்காங்கே தமிழீழக் காவல்துறைப் பணியாளர்கள். ஆண், பெண் என்று நீல நிறச் சீருடை அணிந்து அழகாக ஆனால் விறைப்பாக கடமையே கண்ணாக அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
Last Updated on Sunday, 18 October 2015 07:44
Read more...
 
அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Saturday, 21 March 2015 13:03
எழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது.

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது.

பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார்.

தான் வாழும் Baden-Wuerttemberg மாநிலத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெண் பொலிஸாரின் (Michele Kiesewetter) கொலையையும், மற்றும் தான் வாழும் நகரத்தில் இருந்த கூ-குளுக்ஸ்-கிளான் (Ku-Klux-Klan) திரைமறைவு இயக்கத்தின் செயற்பாடுகளையும் அவர் தனது எழுத்தில் அந்தப் புத்தகத்தில் வெளிக் கொணர்ந்திருந்தார்.

வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர்

புத்தகம் வெளிவந்த சில நாட்களிலேயே அதன் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்து விட்டன. அதன் வெளியீட்டாளர்கள் அந்தப் புத்தகத்தை மீண்டும் மறுபிரசுரம் செய்திருந்தார்கள்.
Last Updated on Sunday, 17 June 2018 08:30
Read more...
 
புலம்பெயர் இலக்கியம் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by அகில்   
Wednesday, 18 March 2015 08:19
புலம்பெயர் இலக்கியம் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது புலம்பெயர் ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் தான். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும், அதன் இன்னொரு கட்ட வளர்ச்சிக் கூறாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் உள்ளது. புலம்பெயர் இலக்கியத்தை ஆராய்வதாயின் புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்பிரயோகம், புலம்பெயர்ந்த நாடுகள், காலம், படைப்புகள், படைப்புகளின் உள்ளடக்கம் என வகைப்படுத்திப் பார்க்கலாம்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு நாற்று நடுகை செய்யப்பட்டவர்கள் தான் புலம்பெயர்ந்தவர்கள். அதாவது தமது இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றோடு முற்றிலும் மாறுபட்ட புதியதொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களால் படைக்கப்படும் இலக்கியத்தையே "புலம்பெயர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கிறோம். இச் சொற்றொடரை ஆங்கிலத்தில் diaspora literature என அழைப்பர்.

புலம்பெயர்ந்த நாடுகள் எனும்போது கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிஸ், இத்தாலி, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா முதலான நாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள் கனடாவில் மட்டும் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில்; சுமார் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கி;றார்கள். ஏனைய நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆக புலம்பெயர்ந்து சுமார் பன்னிரெண்டு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பலர் இலக்கியம் படைக்கிறார்கள்.
Last Updated on Wednesday, 18 March 2015 08:45
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 16 March 2015 11:04
சிவா மாஸ்ரருக்கு தொலை பேசி எடுத்தேன். "வன்னிக்கு இன்றிரவு புறப்படலாம்“ என்றேன். வன்னிக்குப் போவதற்கான வாகனத்தை ஒழுங்கு செய்து விட்டு தனக்குச் சொல்லும் படி சொன்னார்.

அதையும் நானா செய்ய வேண்டும்? அவரிடம் கேட்டால் “வருபவர்களை அழைத்துக் கொண்டு வன்னி வந்து சேருங்கள், என்றுதான் தனக்குச் சொல்லி விட்டவர்கள்" என்று பதில் வரும். ஆகவே மேற்கொண்டு அவரிடம் கதைப்பதில் ஏதும் பயனில்லை. வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்யச் சொல்லி அண்ணனிடம் சொன்னேன்.

சிறிய வான். சிவா மாஸ்ரருக்கு வீட்டுக்கு எப்போ போய்ச் சேரலாம் என்ற நினைப்பு. வாகனத்தின் முன்னுக்கு அமர்ந்து கொண்டார். எங்களுக்கு பின்னால் இருப்பதற்கு போதுமான இடம் இருந்தது. சாரதியும் அவரது உதவியாளரும் முன்னால் அமர்ந்து கொண்டார்கள். சில நாட்களானாலும் அண்ணனும், கொல்கரும் அதிகநாள் நண்பர்கள் போல் தங்கள் பிரிவின் துயரைக் காட்டிக் கொண்டார்கள். எல்லாம் பியர் தந்த நட்பு என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

போகும் வழியில் வெள்ளையப்பம் அதோடு சேர்த்துச் சாப்பிட சீனிச் சம்பல், பூப்போன்ற இடியப்பம் அதற்கான 'பொல்' சம்பல், சொதி என இரவுச் சாப்பாடு நன்றாகவே இருந்தது.
Last Updated on Sunday, 18 October 2015 07:43
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 08 March 2015 23:42
வெளிநாட்டவருக்கு சுலபமாக வன்னிக்கு செல்வதற்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

வெள்ளவத்தையில் அண்ணன் ஒழுங்கு செய்து தந்த வீடு, சகல வசதிகளையும் கொண்டிருந்தது. சாப்பாட்டு வசதிகளை தனது வீட்டிலேயே அண்ணன் ஒழுங்கு செய்திருந்தார். ஆகவே எங்களுக்கு கொழும்பில் தங்குமிடம், உணவு என்ற பிரச்சனை இருக்கவில்லை. நான் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப் படுத்தினேன். முதலாவதாக எங்களைச் சந்திப்பதற்காக ரிஆர்ஓ வில் இருந்து வந்திருப்பவரை தொடர்பு கொள்வது. இரண்டாவதாக கொல்கருக்கு வன்னிக்குச் செல்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெறுவது. மூன்றாவதாக ஆனந்தண்ணையை தொலைபேசியில் தொடர்பு கொள்வது. நான்காவதாக வன்னிக்குப் புறப்படுவதற்கான பயண ஏற்பாடு செய்வது.

நான் கொழும்பில் சந்திக்க வேண்டியவரின் பெயர் சிவா மாஸ்ரர். அவரது இலக்கத்துக்கு தொலைபேசி எடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  "வந்திட்டீங்களா? யேர்மன்காரரும் வந்தவரோ? இண்டைக்குப் பின்னேரம் வன்னிக்குப் போகலாம்தானே?" நான் பேசுவதற்கு முன்னர் அவரிடம் இருந்து அவசரமாகக் கேள்விகள் வந்து விழுந்தன.
Last Updated on Sunday, 18 October 2015 07:42
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 24 February 2015 23:47
மண்டை ஓட்டுப் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது.

மண்டையோடு மட்டுமல்ல அதிகாரிகளும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

„எங்களின் கொம்புயூட்டர்களில் இவை தெரிந்தன. இவைகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை'

பண்பாகப் பேசினார்கள்.

அது எனக்கு போதுமானதாக இருந்தது. எனது பயணத்தின் நோக்கத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன். கூட வரும் கொல்கரின் பெயரையும் இழுத்து விட்டேன்.

„நல்ல நோக்கத்திற்கான பயணம். ஆனாலும் இப்படியான பொருட்களைக் கொண்டு செல்வதானால் அதற்காக பிரத்தியேகமான படிவங்களை பூர்த்தி செய்து அனுமதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்'
Last Updated on Sunday, 18 October 2015 07:42
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 23 February 2015 21:25
புறப்படும் நாளுக்கு முதல் நாள் எனது மாநிலத்தில் புனர்வாழ்வுக் கலைத் தென்றல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்திற்கு மேலாக ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். ஓயாத வேலை. கலைஞர்கள், மண்டபம், நிகழ்ச்சி ஒழுங்கு, வரவு செலவு என ஏகப்பட்ட பொறுப்புகள். நிறையவே களைத்து விட்டேன். நிகழ்ச்சி முடிய அப்படியே கலைஞர்கள் பயணிக்கும் பஸ்ஸில் வூப்பெற்றால் நகரத்துக்குப் பயணமானோம். நித்திரை கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அன்று இரவு நடந்த கலை நிகழ்ச்சிகள் பற்றியே எல்லோரும் கதைத்துக் கொண்டு வந்தார்கள். இடையிடையே கேள்விகள் என்னை நோக்கியும் வரும். எனது இதே பரிதாபகரமான நிலையிலேயே ஆனந்தண்ணையும் இருந்தார். அவரும் நிறையவே களைத்துப் போய் இருந்தார். நித்திரை இல்லாமல் 450 கிலோ மீற்றர் பயணம் நிறையவே நான் சோர்ந்து போயிருந்தேன்.

காலையில் வூப்பெற்றால் போய்ச் சேர்ந்தோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மன் கிளை வூப்பெற்றால் நகரிலேயே இருந்தது. அங்குதான் காலை உணவு எடுத்துக் கொண்டேன். செயற்கைக் கால் செய்வதற்கான யேர்மனிய தொழில் நுட்பத்துக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் ஏற்கெனவே பெட்டிகளில் போட்டு கட்டி வைக்கப் பட்டிருந்தன. உள்ளே என்ன இருக்கிறது எனப் பிரித்துப் பார்க்க வாய்ப்பில்லை.

 

Last Updated on Sunday, 18 October 2015 07:41
Read more...
 
அவளுக்கு ஒரு கடிதம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Friday, 13 February 2015 22:47
அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். அவனது நண்பர்கள் நேற்று அவனிடம் வேடிக்கையாகச் சொன்னது ஞாபகம் வந்தது.

‘மச்சி... இலவு காத்த கிளி ஆகிவிடாதே!... நீ தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வேறு யாராவது கொத்திக் கொண்டு போகத் தயாரா இருப்பாங்க... நாளைக்குக் காதலர் தினம். சந்தர்ப்பத்தை நழுவவிடாதே! மனதைத் திறந்து அவளிடம் பயப்படாமல் சொல்லிவிடு..’

கல்லூரியில் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் அவர்கள் இருவரும் முன்னணியில் நிற்பவர்கள். பல பரிசுகளைக் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள். போட்டிகளில் வெற்றி பெறும் போதெல்லாம் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வார்கள். எதையுமே ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளும் அவளது மனப்பக்குவம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதனாலோ என்னவோ அவனை அறியாமலே அவனுக்கு அவள்மேல் ஒருவித ஈர்ப்பு  வந்தது.
Last Updated on Friday, 13 February 2015 23:09
Read more...
 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 08 February 2015 22:25
„நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்' என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம் நாடு வளம் பெறலாம்
என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். 

கட்டுரைக்கு வருவதற்கு முன்,

தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான யேர்மன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் முக்கிய பங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனியக் கிளை தொண்டர்களுக்கே போய்ச் சேர்கிறது.

இந்தத் திட்டத்திற்கான முக்கிய தேவையே பணம்தான். அதைப் பெற்றுத் தந்தவர்கள் கழகத்தின் தொண்டர்கள். நிறையவே அவர்கள் சிரமப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நானும் செயற்பட்டதனால் அவர்கள் பட்ட சிரமங்கள் எனக்குத் தெரியும்.
Last Updated on Sunday, 18 October 2015 07:40
Read more...
 
காதல் என்பது... PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Wednesday, 04 February 2015 09:15
நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள்.

அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை.

‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம், வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள்.

இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.             

‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான் விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம் பார்க்கின்றார். அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’
Last Updated on Wednesday, 04 February 2015 09:53
Read more...
 
தூசு தட்டியே காசு பிழைத்தவர் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Sunday, 18 January 2015 09:09
ஒரு விடயத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அது சிறிதோ பெரிதோ அதை மிகத் துல்லியமாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் யேர்மனியர்கள் வல்லுனர்கள். அவர்களுடனான பல ஆண்டுகள் பழக்கத்தினால் இதை நான் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே அதை நான் அறிந்து கொண்டேன். புகலிடம் தேடி யேர்மனிக்கு வந்த பொழுது அவர்கள் எங்களைக் கையாண்ட விதத்திலேயே அவர்களின் திறமையைப் புரிந்து கொண்டேன்.

எண்பதுகளில் யேர்மனிக்கு புகலிடம் தேடி வந்த பொழுது நிறையவே சிரமப் பட்டிருக்கிறோம். படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் அனுமதி இல்லாமல் வாழ்க்கையில் இரண்டு வருடங்களை முகாம்களுக்குள்ளேயே வீணாக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்று கனடா, லண்டன் எனப் பலர் பறந்து விட்டார்கள். எஞ்சியவர்களை முகாமில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பி விட்டார்கள். ஒரு இனத்தை ஒரே இடத்தில் வாழ அனுமதித்தால் அங்கே அவர்களால் தங்களது சமூகத்திற்கு இடையூறு வந்து விடும் என்ற முன்னெச்சரிக்கையே அது.
Last Updated on Sunday, 18 January 2015 10:58
Read more...
 
அமானுஸ்யங்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 14 January 2015 14:10
விழிப்பு வந்து சில நிமிடங்களாகும் வரை அந்தக் கனவு நினைவில் வரவில்லை. வெளியில் இருந்து வந்த மண்வெட்டியால் வறுகி வறுகி இழுக்கும் ஓசை இரவிரவாக பனி கொட்டியிருப்பதை உணர்த்தியது. உறுமிக் கொண்டு செல்லும் கார்களின் ஓசைகள் நான் விழித்தேனோ இல்லையோ ஊர் விழித்து விட்டது என்பதைத் தெளிவு படுத்தியது. வீட்டுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் மெலிதான சத்தமும், மணிக்கூட்டின் டிக், டிக் சத்தமும், இன்னும் மின்சார இணைப்புடனான கருவிகளும் ஒருவித ஒழுங்குடனான ரிதத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எட்டுமணி வரை கட்டிலில் இப்படிப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பது என்பது, அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வாழ்க்கையில் என்றேனும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஊரெல்லாம் ஒரு வைரஸ் காய்ச்சல். காய்ச்சல் என்று மட்டும் சொல்லி விட முடியாத படியான உடல் உபாதைகள். சில மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த வைரஸ் தொல்லையிலிருந்து நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் அது என்னையும் கெட்டியாகப் பிடித்து விட்டது. கை வைத்தியத்தோடு சமாளித்து விடலாம் எனப் பார்த்து, இயலாத நிலையில் மருத்துவரை நாட வேண்டியதாகி விட்டது.
Last Updated on Thursday, 08 September 2016 20:47
Read more...
 
அத்திக்காயும் சித்தப்பாவும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Wednesday, 14 January 2015 11:59
சில விடயங்கள் மூடநம்பிக்கைகள் என்ற வகைகளுக்குள் அடங்கினாலும், சாத்திரங்கள், சம்பிரதாயங்களின் மேல் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களும், உணர்த்துதல்களும் அவ்வப்போது சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இது 1976 இல் நடந்த ஒரு சம்பவம். இது பற்றி நான் ஏற்கெனவே 2001 இல் எழுதியிருந்தேன்.
அவ்வப்போது நினைவுகளில் வந்தாலும், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும், பொங்கல் பற்றிய பேச்சுக்களின் போதும் தவறாமல் வரும் ஒரு நினைவு.


அன்று 1976 ம் ஆண்டு ஜனவரி 12ந் திகதி. நான் A/L (கபொத உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த காலம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்கிகளை வானொலியில் ஒலிக்கவிட்டு அந்த இசை பின்னணியில் ஒலிக்க நான் படித்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்தவாறே படிப்பது அதாவது Pure Maths, Applied Maths செய்வதில் எனக்கு அலாதி பிரியம். நேரம் போவதே தெரியாமல் செய்து கொண்டே இருப்பேன். அப்படியொரு இதமான மாலை நேரத்தில்தான் அன்று சித்தப்பா வந்தார்.

 

Last Updated on Thursday, 08 September 2016 20:52
Read more...
 
எப்போதான் சொல்லுவீங்க..? PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Tuesday, 13 January 2015 14:24
தொண்ணூறுகளின் ஆரம்பம். தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை யேர்மனியில் ஆரம்பித்து இருந்தோம். கைகளில் அடக்கமான தொலைபேசிகளோ அல்லது மடிக் கணணிகளோ இல்லாத நேரம். ஆகவே ஓடியோடித்தான் எங்கள் சேவையைச் செய்து கொண்டிருந்தோம். வீடு, குடும்பம், வேலை என்று எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மல்லுக் கட்டிக் கொண்டுதான் எங்களுடைய புனர் வாழ்வுக்கான சேவை இருந்தது.

மக்களை நாங்கள் அணுகும் முறையை விரும்பிய பலர், தாயகத்துக்கு சேவை செய்வதில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். யேர்மனியில் இருந்த தமிழ் மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை மனம் விரும்பி வழங்கினார்கள். இவை எல்லாம் எங்களுக்கு வலிமையான ஊக்க மருந்துகளாகின. அடுத்த கட்டமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை சட்டரீதியாக யேர்மனியில் பதிவது என்று முடிவெடுத்தோம். அப்பொழுதுதான் சிக்கலே உருவானது.
Last Updated on Tuesday, 13 January 2015 19:00
Read more...
 
யேசுநாதர் ஓவியம் (1979) PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 04 January 2015 12:20
சினிமா பார்ப்பதற்கே சில்லறை இல்லை என்று ஏங்கிய காலம். Canvas இல் ஓவியம் தீட்ட வசதி எங்கே இருக்கப் போகிறது?

மார்க் மாஸ்ரர் சொல்வார் „ஒரு தேயிலைப் பெட்டி ஐம்பது சதம்தான் இருக்கும். மிஞ்சிப் போனால் ஒரு ரூபாதான் வரும் அதிலை படத்தைக் கீறும்' என்று.

அவர் சொன்ன படியே பலதை வரைந்திருந்தேன். அவை எல்லாவற்றையும் என்னால் வெறும் வண்ண எண்ணைச் சோக்குக் கட்டிகளால்தான் வரைய முடிந்தது. எண்ணை வண்ணம் கொண்டு படங்கள் வரையும் ஆசை மட்டும் என்னில் தீராமல் இருந்தது. இதை மார்க் மாஸ்ரரும் நன்கு அறிவார். ஒருநாள் அவர் என்னிடம் சொன்னார் „ வீட்டில் வெள்ளைச் சுவர் இல்லையா? அதிலை வரையும். எதுக்கும் வீட்டிலை கேட்டிட்டுக் கீறத் தொடங்கும்'

எச்சரிக்கையோடு அவர் சொன்ன அந்தத் திட்டம் எனக்குப் பிடித்தப் போனது. வீட்டுச் சுவர் மட்டும் அல்ல வெளியார் சுவர்களும் அப்பொழுது எனக்கு வசப் பட்டுப் போனது. கோவில் சுவர்கள், ஆலயத் திரைச் சீலை, திருவிழாவிற்கு அறுபதடிக்கு ஆண்டவர்கள் கட் அவுட் என எனது ஓவியம் தீட்டும் ஆசை வளர்ந்து கொண்டே போனது.

நான் வரைந்த ஓவியங்கள் மார்க் மாஸ்ரருக்கும் பிடித்துப் போனது. தனது மகனுக்கு செல்வகுமார் என்று எனது பெயரை வைத்து என்னையும் தனக்குப் பிடிக்கும் என்று சொல்லி என்னுள் அவர் உயர்ந்து நின்றார். கடந்த மாதம் நியூசிலாந்தில் இருந்து நாட்டுக்குப் போன எனது அக்கா மகன் அகிலன் ஊருக்கும் போய் வந்திருக்கின்றான். அங்கே எடுத்த புகைப் படங்களை முகநூலில் பதிந்திருந்தான். „எனது மாமா வரைந்த ஓவியங்கள்' என இரண்டு படங்களை அவன் குறிப்பிட்டிருந்தான். அது என்னை சில நாட்களாக எழுபதுகளுக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

திருமணம் ஆன பின்னும் வெள்ளைச் சுவர்கள் இலவசமாகக் கிடைத்தால் விடமாட்டேன். எனது மனைவியின் வீட்டின் வெள்ளைச் சுவரில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் வரைந்த யேசுநாதர் ஓவியம் எத்தனையோ அவலங்களுக்குப் பின்னாலும் இன்னும் அழியாமல் இருக்கிறது. மார்க் மாஸ்ரருக்கு நன்றி! அகிலனுக்கும் நன்றி!

ஆழ்வாப்பிள்ளை
3.1.2014
 
நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 22 December 2014 23:17
ஆனைவிழுந்தான் சந்தியில் இருந்தது அந்த மயானம். மயானத்தை ஒட்டி இருந்த  வீதி எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும். அந்த வழியாக தனியாகப் போகும் போது ஒரு வித அச்சம் இருக்கும்.  ஆனாலும்  நண்பர்களோடு வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பொழுது அந்த மயானத்துக்குள் ஒரு தடவை போய் வலம் வந்து விட்டே போவோம்.  வாய்க்கரிசி போடும் பொழுது வீசப் படும் அரிசியோடு கலந்திருக்கும் ஐந்து, பத்து சத நாணயக் குற்றிகளோடு, சில சமயங்களில் ஐம்பது சத நாணயங்களும்  யார் கண்களிலும் படாமல் எங்களுக்காக ஒளித்துக் காத்திருக்கும். வல்லிபுரக் கோவில் கேணியில் குளித்த பின்னர் மரத்தடிகளில் ஆச்சிகள் சுட்டுக் கொண்டிருக்கும் சூடான தோசைகளை புசிக்கவும், துரைசிங்கத்தின் தமையனார் நடாத்திக் கொண்டிருந்த தேனீர் கடையில் தேத்தண்ணி ருசிக்கவும் அவை எங்களுக்குப்  பயன் பட்டிருக்கின்றன.

ஆனைவிழுந்தான் மயானத்தின் வடக்குப் பகுதியில் இருந்த காணி தனியாருக்குச் சொந்தமானது. வேலி அடைப்புகள் கிடையாது. வெள்ளை மணலை கள்ளமாக அள்ளிச் செல்ல அந்த காணியினூடாகவே வழி அமைத்து றக்டர்கள் பயணிக்கும்.
Read more...
 
உறவுகள் தொடர்கதை PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by குரு அரவிந்தன்   
Monday, 08 December 2014 20:53
அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்த போது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

அப்போதிருந்த நாட்டுச் சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. தேவையில்லாத பிரச்சனைக்குள் ஒருமுறை மாட்டித் தப்பிவந்த எனக்கு அம்மாவைத் தேடி அங்கு செல்லவே பயமாயிருந்தது. எந்தவித நல்ல தகவலும் அம்மாவைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தான் இப்போதய எனது எதிர்பார்ப்பாகவும், துடிப்பாகவும் இருந்தது. அம்மா கடைசியாகப் போட்ட கடிதத்தில் கூட தன்னைப் பற்றிச் சொல்லாமல், ‘ராசா, பிரச்சனைகளுக்குள் அகப்படாமல், கவனமாய் இரு ராசா’ என்று என்னைப் பற்றித்தான் விசாரித்திருந்தாள். கடந்த காலத்தை நினைத்தபோது, எதுவும் நடக்கலாம் என்ற அம்மாவின் பயம் நியாயமானதாகவே இருந்தது.
Last Updated on Monday, 08 December 2014 22:36
Read more...
 
முடித்து வைக்கப்பட்ட வழக்கு! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 07 December 2014 22:34
அறுபதுகளின் பிற்பகுதி. நான் மாணவனாக இருந்த நேரம். அரசியலின் அரிச்சுவடியே எனக்கு அப்பொழுது தெரியாது. இப்பொழுது மட்டும் என்ன தெரியும் என்று கேட்கும் எண்ணம் உங்களுக்கு இப்பொழுது வந்திருக்கும். ஆனால் மரியாதை நிமித்தம் நீங்கள் அப்படியான கேள்விகள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனக்கு அப்பொழுது அரசியலில் தெரிந்தது எல்லாம் வீடும், சைக்கிளும்தான். „இதற்கு நேரே புள்ளடி போடுங்கள் என்றோ „உங்கள் பொன்னான வாக்குகளை இந்தச் சின்னத்துக்குப் போடுங்கள்' என்றோ தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரசுரங்களில் வீடு அல்லது சைக்கிள் படமோதான் இருக்கும். சில சமயங்களில் நட்சத்திரப் படத்துடனும் துண்டுப் பிரசுரம் கிடைத்திருக்கிறது.

எங்கள் நகரத்தில் இரண்டு முக்கிய வேட்பாளர்கள். ஒருவரது சின்னம் வீடு. மற்றையவரது சின்னம் சைக்கிள். என்னதான் ஓடி ஓடிப் பிரச்சாரம் செய்தாலும் ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கே வெற்றி. அதுவும் பெரிதளவிலான வாக்கு வித்தியாசங்கள் எல்லாம் கிடையாது. மிகச் சொற்ப வாக்குகளால் சைக்கிள் பின் தள்ளப் பட்டு விடும். அந்த சொற்ப வாக்குகளின் வெற்றியை வல்வெட்டித்துறை நகர வாக்காளர்களே ஏற்படுத்தி விடுவார்கள். வீட்டின் வேட்பாளர் அவர்களது நகரத்தைச் சேர்ந்ததால் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தங்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவர்கள் வீட்டுக்கே போட்டு விடுவார்கள். மற்றும்படி கொள்கைகளின் அடிப்படையில் வாக்குகள் கிடைத்தன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் எங்களுக்கு அடுத்த தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் காலகாலமாக சைக்கிளே வென்று கொண்டிருந்தது. வீடு பின்னுக்கே நின்றது.
Last Updated on Sunday, 07 December 2014 22:43
Read more...
 
ஊடகப்பறவையே..! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by ரேணுகா உதயகுமார்   
Monday, 01 December 2014 22:26
ஊடகப்பறவையே
ஓராண்டா உனைப்பிரிந்து...
மெல்லினமாய் தமிழ் இனிக்க
இடையினமாய் தழிழ் வளர்த்து
வல்லினமாய் தமிழ் காத்த
எம்மினக்குயிலே
ஐபிசி யின் சாதகப்பறவையே
பாதகன் எமன் வந்து
இடையில் பறித்தது கொடுமையம்மா
காற்றலையில் எமை கைது செய்து
வீற்றிருந்தாய் எம் உள்ளத்தில்
காற்றலையில் தேடுகின்றோம்
கம்பீர குரலதனை
உள்ளிருந்தே உன்குரல்
ஒலிக்கிறது கேட்குதம்மா!

ரேணுகா உதயகுமார்
18.11.2014
Last Updated on Monday, 22 December 2014 23:46
 
அலாரிப்பும் அங்காலாய்ப்பும்! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஐ.ஆர்.நாதன்   
Friday, 28 November 2014 08:34
தாய் சிக்கன், தந்தூரிச் சிக்கன், பட்டர் சிக்கன், சிக்கன் பூரி, கிட்னி பிரை ஸ்மால் சிக்கன், நண்டுக்கறி, இறால் குழம்பு, இறால் பிரட்டல், கணவாய்ப் பிரட்டல், சுறாக் குழம்பு, சுறாப் பொரியல், ஆட்டுக்கால் குழம்பு, ஆட்டு இறைச்சிக் குழம்பு, ஆட்டிறைச்சிப் பிரட்டல், உருளைக் கிழங்குப் பிரட்டல், மரவள்ளிக் கிழங்குப் பிரட்டல், சொதி, பச்சை மிளகாய்ச் சம்பல், சிவத்த மிளகாய்ச் சம்பல், கொத்தமல்லித் துவையல், இடியப்பம், பிட்டு, நூடுல்ஸ், மரக்கறி நூடுல்ஸ், பூநகரிக் குத்தரிசிச் சோறு, ஜஸ்மின் அரிசிச் சோறு, பஸ்மதிஅரிசிச் சோறு, பிரியாணி...

இதை எல்லாம் ஏன் இங்கே வரிசைப் படுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒருவேளை சமையல் குறிப்புகள் எழுதும் நோக்கமா என ஐயப் படுகிறீர்களா?

பயப்படாதீர்கள் அப்படியான அஜீரண வேலைகளை நான் செய்யப் போவதில்லை. பிறகு எதற்காக என்றா கேட்கிறீர்கள்? பின்னர் சொல்கிறேன்.
Last Updated on Friday, 28 November 2014 09:15
Read more...
 
குழந்தைக்கு ஜுரம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தி. ஜானகிராமன்   
Saturday, 22 November 2014 23:25
மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.

“ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரைThi.jaa ப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள்.

கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் தலையணையில் தலை வைத்துக் குழந்தை மல்லாந்து படுத்திருந்தது. மூன்று நாளாக மூடிய கண் திறக்கவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. சளி ஜுரமா, பிடிவாத ஜுரமா இன்னும் டாக்டருக்குப் பிடிபடவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. மாசம் பிறந்து இரண்டாவது வாரம் பாதி நடக்கிறது. இல்லின், மைஸின் என்று என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார் டாக்டர். தம் கையிலே இருக்கிற பெட்டியைப் பிரிக்க யோசனை, ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்து உளவடைக்க டாக்டருக்கு அவ்வளவு சின்னக் குழந்தைகளும் இல்லை. சந்நிதித் தெரு வன்னியர் வீட்டு ‘ட்யூசன்’ பணம் எட்டு ரூபாய் தீர்ந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று மனசை நோண்டும்போதுதான் மனைவி அதை ஞாபகமூட்டினாள்.

“இன்னும் ஒரு புஸ்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே, அதைத் திருப்பிக் கேக்கறாப் போலாவது அந்தப் பாவியைப் பார்த்துக்கிட்டு வாங்களேன்” என்றாள் அவள்.
Last Updated on Saturday, 22 November 2014 23:31
Read more...
 
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 19 November 2014 13:22
அன்றைய தலைவர்கள் பலதரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராடி சிறை சென்றார்கள். ஒவ்வொரு தடவையும் சிறை சென்று திரும்பும் போது அந்தத் தலைவர்களுக்கான மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து கொண்டே போனது. மக்கள் நலனே அந்தத் தலைவர்களின் வாழ்வாக இருந்தது.

ஆனால் இன்று எல்லாமே தலை கீழ். மக்களுக்காக தலைவர்கள் போராடிய காலம் போய் தங்கள் தலைவர்களுக்காக  மக்கள் போராடும் காலம் உருவாகி இருக்கிறது. இல்லை உருவாக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வதே பொருந்தும்.

அன்று கலைஞர் மகள் கனிமொழி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த பொழுது பெரிய வரவேற்பு நிகழ்த்தப் பட்டது. இன்று ஜெயலலிதா பெங்களுர் சிறையில் இருந்து வெளியே வரும் பொழுது கொட்டும் மழையில் நின்று கோலாகல வரவேற்பு நடந்திருக்கிறது. இவர்கள் எதைச் சாதித்து விட்டார்கள் என்று  இப்படியான வரவேற்பு? இதற்குள் காருக்குள் வசதியாக இருந்து கொண்டு கையசைப்பு வேறு தனியாக நடக்கிறது.

தலைவர் தவறானவர் என்று சட்டம் தண்டித்தாலும், தங்களைச் சுரண்டுகிறார் என்று தெரிந்தாலும் அதெல்லாம் தொண்டனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவனது மானசீகத் தலைவன்தான் அவனுக்கு எல்லாமே.
Last Updated on Wednesday, 19 November 2014 13:50
Read more...
 
ஆறாவடு - சயந்தன் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by இல கோபால்சாமி   
Wednesday, 12 November 2014 09:29
அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார்.

நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு சுவாரசியமான கதை. தான் வாங்கிய சோலாபுரி செருப்பை ஒருவன் திருடிவிடுகிறான். அவன் இலங்கையில் மையமிட்டுள்ள இந்திய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். அவனுடன் ஏற்பட்ட தகராறு இவரை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவரை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உந்துகிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஒரு செருப்புக்கான சண்டை காரணம் போலத் தோன்றும், ஆனால் நாம் எதிர்பாராத சில சிறிய நிகழ்வுகள் கூட நம் வாழ்கைப் பாதையின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகப் பட்டது.
Last Updated on Tuesday, 24 February 2015 10:32
Read more...
 
நந்திக்கடல் தாண்டி... 3 PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Friday, 07 November 2014 20:48
அலை துரத்தி வந்து கால்களைத் தழுவிச் சென்றது. உப்புக்காற்று வருடியது. காலையில் இனியவாழ்வு இல்லத்தில் எனது குரல் மீளுவதற்காக அவர்கள் பூசத் தந்த நாசியைத் துருத்திக் கொண்டிருந்த வேப்பெண்ணெய் வாசம் எப்போது என்னை விட்டு அகன்றதென்றே தெரியவில்லை. விடுதலை பற்றிய பேச்சும், மூச்சும் மனதை நிறைத்திருக்க அந்திக் கருக்கலில், மணலில் நடப்பது சுகமாக இருந்தது. கடற்படைத் தளபதி சூசை அவர்களின் அன்புக்கட்டளையை மீற முடியாதிருந்தது.

எமது சம்மதம் கிடைத்ததும் எமக்கான உணவை, நாம் கஸ்ரோவிடம் செல்வதற்கேற்ப விரைவில் தயாரித்து முடிக்கும் படி தனது முகாமுக்கு அறிவித்தல் அனுப்பி விட்டு. ரேகாவிடம், எம்மை அழைத்துச் சென்று, காட்ட வேண்டியவைகளைக் காட்டும் படி சொன்னார்.

சூரியன் மறைந்த பின், அந்த இருள் சூழ்ந்த கானகத்தில் என்ன பார்க்க இருக்கிறதென்று
ஜெனரேட்டர் ஒளி வெள்ளத்தில் அந்தச் சாகசப்பறவைகளைக் காணும் வரை எனக்கு விளங்கவில்லை.
Last Updated on Wednesday, 12 November 2014 10:04
Read more...
 
யாமினி சிவராமலிங்கத்துடன் ஒரு நேர்காணல் PDF Print E-mail
Literatur - Interview
Written by கனகரவி   
Friday, 07 November 2014 20:04
`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி யாமினி சிவராமலிங்கம்  கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை ´தினக்குரல்` பத்திரிகைக்காக கனகரவி நேர்கண்டபோது..

நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்?

இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள், பெண்கள் மனதளவில் சோர்ந்துபோய் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தைக் கூடப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதால் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
Last Updated on Friday, 07 November 2014 20:35
Read more...
 
குண்டுச் சட்டியும் குதிரை ஓட்டமும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஐ.ஆர்.நாதன்   
Monday, 03 November 2014 21:23
ஒரு சனிக்கிழமை.

கட்டுமான கடை ஒன்றில் எனக்குத் தேவையான பொருள் ஒன்று வாங்கச் சென்றிருந்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. சமையலறை யன்னலில் திரைச்சீலை தொங்க விடுவதற்கான ஒரு „கிளிப்' தான் எனக்குத் தேவைப்பட்டது. நான் தேடிய கிளிப் அங்கே இருந்தது.  எனக்குத் தேவைப்பட்டதோ ஒன்றுதான். ஐந்து, பத்து என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் அங்கிருந்த கிளிப்போ ஐம்பது சேர்ந்த பொதியாக கடைத்தட்டில், அழகான பெட்டி ஒன்றுக்குள் அடக்கமாக அமர்ந்திருந்தது. அவ்வளவையும் வாங்கி என்ன செய்வது?

வேறேதாவது தட்டுக்களில் தனியாக தட்டுப்படலாம் என்ற நம்பிக்கையோடு கடையை வலம் வந்து கொண்டிருந்தேன். பொருட்கள் எல்லாம் அவையவைக்கான தளங்களில் அழகழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வலம் வந்து கொண்டிருந்த எனக்கு தூரத்தில் இருந்த ஒரு தளத்தில் உயரமான ஏணியில் நின்று பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும் உருவம் ஒன்று தட்டுப் பட்டது. பார்த்தவுடன் விளங்கிக் கொண்டேன். „அவர் நம்ம ஆள்தான்' என்று.
Last Updated on Monday, 03 November 2014 21:55
Read more...
 
மடமையைக் கொளுத்துவோம்! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Friday, 31 October 2014 09:45
வீட்டினருடனான சம்பாஷணையை முடித்துக் கொண்ட மாமா என் மேசைக்கருகில் வந்தார்.

"இது என்ன பேப்பேஸ்?"

"அது... நான் எழுதின கதை மாமா, வாசித்துப் பாருங்கோ"
அந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித்தார்.

நேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கினேன்.

"எங்கை.... பயணம்?"
வழியில் வந்த பக்கத்து வீட்டு மாமி விசாரித்ததும் தயங்கிய நான்,

"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை, அங்கைதான் போறன்"
கூறி முடிக்கமுன்,

"கூட்டமோ? யாழ்ப்பாணத்திலையோ? அதுக்கு... நீ இங்கையிருந்து... தனியா... அடியாத்தை நல்லாயிருக்கடி"
மாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்தது.
Last Updated on Sunday, 02 November 2014 10:41
Read more...
 
நம்பிக்கை இன்னும் சாகவில்லை..! PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தமிழ்ப்பொடியன்   
Friday, 31 October 2014 09:06
வழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக் கிடந்தது. தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது.

கார்த்திகை 27. இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம். அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது.

சந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது. சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவான் எண்டு நம்ப இல்லை. எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது.

"என்னப்பா யோசிச்சு கொண்டு இருக்கிறியள்?அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.. இனிமேல் எண்டாலும் உங்கட எதிர்காலத்தை நினைச்சு நடவுங்கோ.. "சந்திரனின் மனைவி இதை சொல்லும் போது அவளது கண்களில் ஏதோ வெறுமை தெரிந்தது.
Last Updated on Friday, 31 October 2014 09:34
Read more...
 
கடவுளுக்கே அடுக்குமா? PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Saturday, 25 October 2014 21:43
"பக்தர்கள் பக்திப் பரவசத்தில் இருக்கும் பொழுது கோவிலை இடி என்றால் இடி கோவிலுக்கு விழாது உனக்குத்தான் விழும்"

மீட்டாத வீணை என்ற நாவலில் எப்பொழுதோ நான் வாசித்தது. அது இன்னும் எனக்குள் இருக்கிறது. அதனால்தான் பக்த கோடிகளிடம் இருந்து காத தூரம் தள்ளி வந்து பயம் இல்லாமல் இதை என்னால் எழுத முடிகிறது.

சமீபத்தில் ஒரு அம்மன் ஆலயத்தில் நடந்த மாம்பழத் திருவிழா சக  கற்பூரச் சட்டித் திருவிழா நிகழ்வை இணையத்தில் பார்க்கக் கிடைத்தது அடியேன் புண்ணியம்(?).

புலம் பெயர்ந்து வந்த பொழுது எங்களுடன் எடுத்து வர வேண்டியது எத்தனையோ இருந்தும்  நாங்கள் முதன்மையாகக் கருதி கொண்டு வந்தது என்னவோ சீட்டையும், வட்டியையும் தான். ஆனால் கடவுள்களையும் எங்கள் பெட்டிக்குள் நாங்கள் அடைத்துக் கொண்டு வந்ததை ரகசியமாகவே வைத்திருந்தோம். எங்கள் கிராமங்களில், நகரங்களில் இருந்து நாங்கள் எடுத்து வந்த கடவுள்களின் நகல்களை வீட்டுக்கள் மட்டும் வைத்து ஆராதனை செய்து இன்று பரவலாக புலம் பெயர் நாடுகளில் உலாவிட்டு திருவிழாக்களும் செய்யும் நிலைவரை உயர்ந்து விட்டோம்.
Last Updated on Saturday, 25 October 2014 22:01
Read more...
 
உராய்வு - சஞ்சீவ்காந் (கவிதைத்தொகுப்பு) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Tuesday, 21 October 2014 22:04
முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிக மிக இளவயதினர்கள் கூட கவி புனையும் ஆற்றல் கொண்டு கவிதைகளிலேயே தமது உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே.

போர் தந்த பாதிப்பிலும், புலப்பெயர்வு தந்த சோகத்திலும், அநியாயங்களைக் கண்டு மனசு கொதித்ததிலும், சமூகத்தின் கோட்பாடுகளோடு முரண் பட்டதிலும்... என்று ஆர்ப்பரித்து எழுந்த, ஆற்றல்களை வெளிக் கொணர்ந்த… இளங் கவிஞர்களில் இளைஞன் என்ற சஞ்சீவ்காந்தும் ஒருவன்.

சஞ்சீவ்காந், இளைஞனாய் என்னுள் வியப்பை ஏற்படுத்தியவன். புலம் பெயர்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் உள்ள இரு மொழிகளோடும், இரு கலாச்சாரங்களோடுமான போராட்டம் சஞ்சீவ்காந்துக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். புலம்பெயர் மண்ணின் மொழியோடும், கலாச்சாரத்தோடும் தன்னை இணைத்து தனது வாழ்நிலையை வளம் படுத்த வேண்டிய கட்டாயத்தின் மத்தியில் ஒரு இளைஞன் தழிழோடும் ஒன்றி நின்று தமிழில் இலக்கியம் படைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனாலும் இவைகளின் மத்தியில் நின்று தான் எதிர் கொண்ட ஒவ்வொரு முரணோடும் எழுத்தால் முட்டி மோதியவன் சஞ்சீவ்காந். இவனது தமிழின் ஆற்றலும் ஒவ்வொரு கருத்தை முன் வைக்கும் போதும் அதில் இருந்த தெளிவும், சிந்தனா சக்தியும் என்னை மட்டுமல்லாமல் பலரையும் வியக்க வைத்திருக்கின்றன.
Last Updated on Tuesday, 21 October 2014 22:40
Read more...
 
Autoren des Buches "Geheimsache NSU" lesen im Brenzhaus vor etwa 80 Zuhörern PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by VERENA BUFLER   
Thursday, 09 October 2014 21:28
Nationalsozialistischer Untergrund (NSU), das klingt nach Thüringen, zumindest weit weg. Doch das Thema betrifft auch Hall, wo bis heute ein rassistischer Ku-Klux-Klan existiert. Von einer Lesung mit brisantem Inhalt.

Zufall. Immer wieder dieses Wort. Esther Gronbach aus Hall hat es an diesem Abend zu oft gehört, als dass sie mit einem guten Gefühl nach Hause gehen könnte. Ganz im Gegenteil: "Ich bin fassungslos, dass man den Eindruck haben muss, dass eine Mordserie vertuscht wird, und dass nicht wir Bürger geschützt werden, sondern der Verfassungsschutz." Und sie ist deprimiert, weil der Großteil der Bevölkerung desinteressiert sei. Und doch ein wenig hoffnungsfroh, weil es engagierte Menschen gibt, die kritisch nachfragen.

Vier davon sind am Dienstagabend ins Brenzhaus gekommen. Sie sind Autoren des Buches "Geheimsache NSU. Zehn Morde, von Aufklärung keine Spur". Einer von ihnen ist HT-Redakteur Thumilan Selvakumaran, der in dem Buch das braune Netzwerk in Baden-Württemberg beleuchtet.

"NSU, früher assoziierte man diese Buchstaben mit Fahrrädern und Autos", sagt Birgit Schatz, die Geschäftsführerin des evangelischen Kreisbildungswerkes, das zusammen mit der Buchhandlung Osiander, der KZ-Gedenkstätte Hessental und dem Bund der Antifaschisten/VVN zur Lesung geladen hatte. Heute steht NSU für eine rechtsextreme terroristische Vereinigung, die im November 2011 öffentlich aufgeflogen ist, bestehend aus Uwe Mundlos, Uwe Böhnhardt und Beate Zschäpe. Dem NSU werden zehn Morde, mehrere Sprengstoffattentate und Raubüberfälle angelastet. Mundlos und Böhnhardt sind tot, Zschäpe wird seit August 2013 in München der Prozess gemacht.

Das ist die eine Seite des NSU-Komplexes. Die andere ist die Frage: Wie viel Staat steckt eigentlich im NSU? Diese kann auch das vorgestellte Buch nicht beantworten, aber es benennt Ungereimtheiten, kritisiert die Rolle der Geheimdienste in Deutschland, weist den Behörden Ermittlungsansätze auf.

Die Besucher der Lesung bekommen eine schwere Kost serviert: Namen von V-Leuten, Jahreszahlen, Zitate aus Polizeiakten. Und doch folgen sie so gespannt und konzentriert, als würde sich ein Krimi vor ihren Augen abspielen. Einige schütteln resigniert den Kopf, als an das "Heilbronner Wattestäbchen-Phantom" erinnert wird. Eine Panne? Verächtliches Schnauben bei der Aussage des Buchautors Rainer Nübel, dass die grüne Landesregierung Baden-Württembergs sich als einzige in Deutschland sträubt, einen Untersuchungsausschuss zum NSU-Komplex einzuleiten und sich derweil bürgernah nennt. Bitteres Lachen darüber, dass Phantombilder zurückgehalten, Akten scheinbar aus Versehen geschreddert und Augenzeugen eingeschüchtert wurden - alles auf Anweisung von staatlichen Behörden. Am Ende bleibt ein beklemmendes Gefühl zurück. Und viele offene Fragen, recherchiert von mutigen Autoren, die dringend beantwortet werden müssen.

Info "Geheimsache NSU. Zehn Morde, von Aufklärung keine Spur.", herausgegeben von Andreas Förster, Klöpfer & Meyer, 2014, 315 Seiten, erhältlich im Buchhandel.

VERENA BUFLER | 09.10.2014 
Photos - Hans Kumpf

Quelle -  Haller Tagblatt, SÜDWEST PRESSE

Last Updated on Thursday, 09 October 2014 22:14
 
புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்... PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by அ. யேசுராசா   
Thursday, 09 October 2014 08:19

எனது மாணவப் பருவத்தில், இரசிகமணி கனகசெந்திநாதன் ‘கலைச்செல்வி’ இதழில் எழுதிய எனது நூல்நிலையம் என்ற கட்டுரையை எங்கள் ஊர் வாசிகசாலையில், வாசித்தேன். நூல்கள் சேகரிப்பதன் அவசியம், அவற்றைப் பேணுதல் பற்றிப் பல விடயங்களை அதில் அவர் எழுதியிருந்தார். நூல்களை ஒருபோதும் இரவல் கொடுக்க வேண்டாமென்றும் அதில் அறிவுறுத்தியிருந்தார். அக்கட்டுரையை வாசித்தபோது,  நூல்களைச் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் விதையாக விழுந்தது. ஆயினும், வறிய குடும்பத்தைச் சேர்ந்தவனாதலால் என்னால் நூல்கள் எதையும் அப்போது வாங்க முடியவில்லை. உண்மையில், குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, எமது சென். ஜேம்ஸ் ஆலயப் பங்குக் குரவராக இருந்த பொமிக்கோ அடிகளால் ( இவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் நன்கு பேசுவார்) வழங்கப்பட்ட இலவசப் பாடநூல்களைப் பெற்றுப் படித்தவர்களில் நானும் ஒருவன்!

Last Updated on Thursday, 09 October 2014 08:35
Read more...
 
புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by பசுந்திரா   
Wednesday, 17 September 2014 21:45
“சும்மா கீழ இறக்கிவிடுங்க பாப்பம். தெருவால போற சனம் என்ன நினைக்குங்கள் . - கல்யாணம் முடிச்சு பத்து வருசமாகிட்டடுது இப்பதான் புதுமாப்பிள பொம்பிளைக்கு நடிக்கினம் - எண்டு சொல்லப் போகுதுகள்" என்றபடி அன்னக்கிளி கணவனின் பிடியில் இருந்து விடுபட முயன்றாள் . ஆனால் அவன் குண்டுக் கட்டாக அவளை தூக்கிக் கொண்டு வந்ததால் அவளால் முடியவில்லை.

“விளையாடப் போன பிள்ளைகள் வரப் போகுது இறக்கி விடுங்க பாப்பம்” என சற்று பலமாக கூறியது மாடுகளைப் பட்டிக்கு சாய்த்துக் கொண்டு வந்த அன்னக்கிளியின் கணவனின்; தந்தை மருதநாயகத் தாருக்கு  கேட்டு விட்டது .

 

 திரும்பிப் பார்த்தார்.  மகன் மருமகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் போவது தெரிந்தது. சில மணித்தியாலயங்களுக்கு முன் இதே மருதநாயகத்தார் மாடுகளை தேடி போன போது மருமகள் அன்னக்கிளி கிணற்றடி தென்ன மரத்தின் கீழ்  நிலத்தைக் கிண்டிக்கொண்டு இருந்தது அவரின் ஞாபகத்தில் வந்தது.

Last Updated on Wednesday, 17 September 2014 21:55
Read more...
 
நான் கேட்டவை 2 - மனதில் நிற்கும் பாடல்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 07 July 2014 21:42

எனக்காகவா நான் உனக்காகவா.. பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியதாக  உங்கள் கட்டுரையில் இருக்கிறது. அது தவறு என்று ஒரு அன்பர் அறிவித்திருக்கின்றார். அதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். சரி பாருங்கள். என்று பொங்கு தமிழ் ஆசிரியரிடம்  இருந்து அறிவித்தல் வந்திருந்தது.

தவறு தெரிந்தது. கண்ணதாசன் அந்தப் பாடலை எழுதவில்லைத்தான்.  கவிஞர் வாலிதான்  அந்தப் பாடலை எழுதி இருந்தார். சுட்டிக் காட்டிய அந்த அன்பருக்கு முதலில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இது எனது முதல் தவறு கிடையாது. பல தடவைகள் இவ்வாறான தவறுகள்  எனக்குள் இருந்திருக்கிறது. இனிமேலும் இதுபோல் தவறுகள் வராமல் காப்பாத்துடா சாமி. சரி இனி சாமி பார்த்துக் கொள்ளும்.

அன்றைய காலத்தில் சினிமா பார்க்கப் போவது என்றால்  மிக மிகச் சிரமமான விடயம். முதலில் சினிமா பார்ப்பதற்கு வீட்டில் இருந்து அனுமதி பெற வேண்டும். பிறகு சினிமா பார்ப்பதற்கான பணத்துக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்.  வீட்டில் சினிமா என்பது அவசியம் இல்லாத ஒன்று. (அநேகமாக நான் அறிந்த  பல வீடுகளில் இதுதான் நிலமை)   அப்படி இல்லை „சினிமாவுக்குப் போகத்தான் வேணும் என்று வீட்டில் கேட்டால், „படத்துக்கு எல்லாம் காசு தரேலாது. படிக்கிற வழியைப் பார்' எனும் பதில் வரும். ஆக சினிமா பார்க்க வேண்டுமானால் காசு வேண்டும்.

Last Updated on Monday, 16 November 2015 09:06
Read more...
 
எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல் PDF Print E-mail
Literatur - Interview
Written by காண்டீபன்   
Saturday, 28 June 2014 17:23

Thumilan Selvakumaranபொங்குதமிழ் இணைய இதழுக்காகப் பேட்டி கண்டவர் காண்டீபன்

துமிலன் (Thumilan Selvakumaran) ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர்.

இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது.

NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன.

துமிலனை பொங்கு தமிழ் இணையம் இந்தப் புத்தகம் சம்பந்தமாக நேர்காணல் செய்திருக்கிறது.

Last Updated on Sunday, 17 June 2018 09:02
Read more...
 
நாவண்ணா..! ஈரத்தால் என் மடலும் சரிகிறதே! PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by கவிஞர் தீட்சண்யன்   
Wednesday, 25 June 2014 07:10

(நண்பர் நாவண்ணன் அவர்கட்கு)

அன்புடையீர்!
என்பும் உருகிடும் இச்சோகம் நின்தனுக்கு
வந்திடும் என்று நான் நினைத்ததில்லை.

மகளிற்காய் நீ வரைந்த பொழிவு மலர் தந்த போது
மனம் நெகிழ உந்தன் மைந்தனை நினைவு கூர்ந்தாய்
'எல்லா இழப்பும் உழன்று களைத்து விட்டேன்
களத்தினிலே நிற்கும் என் இளங்குஞ்சுக் கேதொன்றும்
நிகழந்திடக் கூடாது என்பதுவே வேட்கை' என்றாய்.
'அவ்வாறானதொரு பேரிடி தாங்கிட
என்னிலோ என் அகத்தாளிலோ
திடவலு இல்லை' யென்று தீனமாய்த் தேம்பி நின்றாய்!

Last Updated on Wednesday, 25 June 2014 07:23
Read more...
 
விருட்சமாக எழ விழுந்த வித்து PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by கவிஞர் நாவண்ணன்   
Wednesday, 25 June 2014 06:16

(கவிஞர் வற்றாப்பளையூர் தீட்சண்யன் நினைவாக புலிகளின் குரல் வானொலியில் 19.5.2000 அன்று ஒலிபரப்பப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி.)


விருத்தம்

வளர்பிறை முழுமை கொள்முன்
தேய்ந்திருள் சூழ்ந்ததென்ன!
மலரிதழ் விரியுமுன்னே
மண்ணிலே உதிர்ந்ததாமோ!
தளர் நடை பயில் குழவி
தணலிடை எரியலாமோ!
தமிழ்க்கவி வற்றாப்பளையூர்
தீட்சண்யா தீய்ந்தாயோ நீ!

Last Updated on Wednesday, 25 June 2014 06:32
Read more...
 
நான் கேட்டவை - என் விருப்பம் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Friday, 20 June 2014 21:18

எழுது என்கிறது ஒரு மனம் . வேண்டாம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று தடுக்கிறது ஒரு எண்ணம். எழுதி என்னதான் ஆகப் போகிறது என்ற கேள்வி எழுகிறது மறு புறம். ஆனாலும் எழுது என்கிற உந்துதலே மேலோங்கி நிற்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை என்ற பெயருக்கே பெரிய வரவேற்பிருந்த காலம் அது. அந்தக் கால கட்டத்தில் வானொலியை விட்டால் வேறு கதியே இல்லை. வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாதவர்களுக்கு அப்பொழுது எல்லாம் தேனீர்க்கடைகள் ஒரு வரப்பிரசாதம். காலையில் கடையைத் திறக்கும் போது போடப்படும் வானொலிப் பெட்டி இரவில் கடை மூடும் போதுதான் நிறுத்தப் படும். வானொலியில் நல்ல இனிமையான பாடல்கள் ஒலிக்கும் பொழுதுகளிலும், நல்ல நிகழ்ச்சிகள் வரும் பொழுதுகளிலும் பலர் தேனீர் கடைகளின் ஓரம் நின்று கேட்பதை அல்லது உள்ளே இருந்து தேனீரோடு அவற்றை இரசிப்பதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கிறேன். வீட்டில் அதிக நேரம் வானொலியை ஒலிக்க விட்டால், „வர வர எங்கடை வீடும் தேத்தண்ணிக் கடையாப் போச்சு' என்று பெரிசுகள் அங்கலாய்ப்பதும் இருந்திருக்கிறது.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை இலங்கையைத் தாண்டி இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டிருந்தது. நான் கண்ட சொர்க்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் கே.ஏ. தங்கவேலு, மரணம் அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறார். சொர்க்கத்தில் அவர் நுழையும் பொழுது அங்கு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் அன்றைய ஒலிபரப்பாளர் மயில்வாகனம் அவர்களது குரல் கேட்கிறது. „இங்கேயும் வந்திட்டானா?' என தங்கவேலு கேட்பதாக அந்தக் காட்சி இருக்கும். இந்த ஒரு விடயமே போதும். அன்றைய இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் தரத்தையும் அறிவிப்பாளர்களின் புகழையும் சொல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட, தான் அப்துல் ஹமீத்தின் இரசிகன் எனப் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறார். அந்தளவுக்கு சினிமா சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளைக் கூட இலங்கை தமிழ் வர்த்தகசேவை கட்டிப் போட்டிருந்தது.

Last Updated on Monday, 16 November 2015 09:06
Read more...
 
வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 08 June 2014 12:01
Thumilan Selvakumaranஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப் பட்டதாயினும் திரை மறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப் பட்ட பொழுது அது அதிர்ச்சிக்குள் இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல தாக்குதல்கள் துலக்கப்படாமலே இருந்து வந்தது. அதிலும் 2000 இல் இருந்து 2006ம் ஆண்டுவரை சிறிய வர்த்தக நிலையங்களை வைத்திருந்த எட்டு துருக்கி இனத்தவர்களதும், ஒரு கிரீக் நாட்டவரதும் கொலைகள் மர்மமாகவும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தன. 25.04.2007 இல் கைல்புறோன் என்ற நகரத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டதும் அவருடன் கடமையில் இருந்த மற்றைய ஆண் பொலிஸ் படுகாயப் படுத்தப் பட்டதும் யேர்மனியின் பொலிஸ் துறையையே புரட்டிப் போட்டது. எவ்வளவுதான் புலனாய்வுகள் செய்தும் கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியவில்லை. இது யேர்மனிய பொலிஸின் கையாகாலாத தன்மையா? அல்லது குற்றவாளிகளின் தடயங்கள் திட்டமிட்டே அழிக்கப் படுகின்றனவா? என்ற கேள்விகளும், கருத்தாடல்களும் மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கின. பொலிஸைச் சேர்ந்த ஒருவர் பட்டப் பகலில் அதுவும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவரது வாகனத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டதும், மற்றையவர் படுகாயப் படுத்தப் பட்டதும், தாக்குதலின் பின்னர் அவர்களது ஆயுதங்கள் களவாடப் பட்டதும் சாதாரண விடயங்கள் அல்ல. பொலிசுக்கே நிலமை மோசம் என்றால், சாதாரண பொதுமக்களுக்கு, அதுவும் வெளிநாட்டவருக்கு என்ன பாதுகாப்பு என்று யேர்மனிய ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
Last Updated on Sunday, 08 June 2014 18:38
Read more...
 
கிராமக்கோடு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Tuesday, 03 June 2014 10:40

நகரத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் வடமராட்சிக்கான நீதிமன்றம் அமைந்திருந்தது. கிராமங்களுக்கான சிறு சிறு வழக்குகளைக் கையாள்வதற்கு கிராமிய மட்டத்திலான நீதிமன்றம் ஒன்று பருத்தித்துறை-யாழ்ப்பாண பிரதான வீதியை ஒட்டி, நகரில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. அந்தக் கிராமிய நீதிமன்றம் ஒரு திறந்த மண்டபமாகவே இருந்தது. மூன்று பக்கமும் அரைச் சுவர் கட்டப் பட்டிருக்கும். அந்த மண்டபத்துக்கு மூன்று பக்கத்தாலும் உள்ளே நுளையலாம். கதவுகள் கிடையாது. உள்ளே இருப்பதற்கு இருக்கைகள் கிடையாது. மன்றம் கூடும் பொழுது எழுந்துதான் நிற்க வேண்டும். உள்ளே நிற்பவர்கள் அந்த அரைச் சுவரில் சாய்ந்திருப்பார்கள். வெளியே நிற்பவர்கள் சுவரில் கை வைத்தோ அல்லது சுவரில் வைத்த கையால் நாடியைத் தாங்கிய வண்ணமோ நின்று கொண்டு மன்றில் நடப்பதைப் பார்த்து அவ்வப்போது ஆளாளுக்கு விமர்சனம் தந்து கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் நாங்கள் அந்த அரைச் சுவரில் ஏறி அமர்ந்திருப்போம். அந்த நீதிமன்றத்தினால் அதையொட்டி அமைந்திருந்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு „கிராமக் கோட்டடி' என்ற பெயர் ஏற்பட்டு, அதனால் அந்த ஊருக்கே கிராமக் கோடு என்ற பெயர் நிலைத்து விட்டது.

Last Updated on Tuesday, 03 June 2014 11:25
Read more...
 
Pannenserie oder Absicht? Die Behörden und der NSU PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by AXEL HABERMEHL   
Tuesday, 27 May 2014 21:44

Am Montag erscheint ein neues Buch über die Neonazi-Terroristen des NSU. Einer der Autoren, Thumilan Selvakumaran, ist Redakteur des HALLER TAGBLATTS und hat bereits einige Verbindungen des NSU nach Baden-Württemberg aufgedeckt.

 

Erscheint am Montag unter Beteiligung des Schwäbisch-Haller NSU-Experten Thumilan Selvakumaran.

Es ist nun schon mehr als zweieinhalb Jahre her, dass die deutsche Öffentlichkeit von einer mordenden Neonazi-Terrorgruppe erfuhr, die sich Nationalsozialistischer Untergrund (NSU) nannte. Zweieinhalb Jahre, in denen zwar eine Diskussion über Alltagsausländerfeindlichkeit im Land und Rassismus innerhalb seiner Sicherheitsbehörden entstand, in denen eines aber nicht glückte: Lückenlose Aufklärung.

Last Updated on Sunday, 08 June 2014 18:24
Read more...
 
என் கதாநாயகி ஆட வேண்டும் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by தெ. நித்தியகீர்த்தி   
Tuesday, 27 May 2014 21:29

கடந்த பத்து நிமிடங்களில் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை நூறாவது தடவையாகப் பார்த்து விட்டேன்.  நேரம் மாலை 7 மணி 15 நிமிடங்கள்.  பாழாய்ப் போன தொடரூந்து இன்னும் வந்து சேரவில்லை.  மெல்பேர்ன் 'கிலன் வேவர்லி' தொடரூந்து நிலையத்தில் நான் இழந்துவிட்ட மணித்துளிகள்தான் மிக அதிகம். மெல்பேர்னின வெள்ளவத்தை என்று கூறுமளவுக்கு 'கிலன் வேவர்லியில்' தமிழர்கள் அதிகம் வாழ்கின்றார்கள். நல்லதொரு அரசாங்க பள்ளிக்கூடம் இருப்பதால் இந்த இடம் ஈழத் தமிழரை ஈர்த்ததில் வியப்பில்லை.

எனது வாகனத்தைக் கடந்து சென்ற பலர் தலையசைத்துப் புன்னகைத்துச் சென்றார்கள்.  நானோ பொறுமையை இழந்து கொண்டிருந்தேன். வேனில் காலம். மாலைப் பொழுது.  ஆதவனுக்கு இந்தக் காலத்தில் மெல்பேர்னில் 'ஓவர் டைம்'.  கெதியில் மறையப் மாட்டான்.  ஆனால் என் மனதில் மெல்ல இருள் கவிழ்கின்றது.  முன் பின் தெரியாத இந்தப் பெண்ணை நம்பி என் தன் மானத்தை இழந்து விடுவேனோ? அவள் வருவாளா?  இல்லாவிடில் கடைசி நேரத்தில் கையை விரித்து விடுவாளா?   நினைக்கையில்   நெற்றியில் வியர்வை துளிர்க்கின்றது. தற்செயலாக இறுதி நேரத்தில்  முடியாது என்று சொல்லிவிட்டால்...?.  முதலில் அவள் இந்த தொடரூந்தில் வந்து சேரவேண்டுமே.  அவள்தான் 7 மணிக்கு வரும் வண்டியில் வருவதாக செல்லிடைத் தொலைபேசியில் செய்தி அனுப்பியிருந்தாள்.

Read more...
 
உணர்வுகள் PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by சந்திரவதனா   
Sunday, 16 March 2014 07:56
சிந்தக் கூடாதென நினைத்தாலும்
முந்தி விடுகின்றன
இந்தக் கண்ணீர்த்துளிகள்

கொட்டி விட முனைந்தாலும்
விடாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில நினைவுகள்

- சந்திரவதனா
26.09.2007

Comments
Last Updated on Sunday, 16 March 2014 08:04
 
கண்ணின் மணிகள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by தெ. நித்தியகீர்த்தி   
Friday, 14 March 2014 17:41
"கண்ணே மணியே கண்ணுறங்கு"

இவ்வாறு அன்னையர் பாடும் போது அது என் நெஞ்சைத் தொட்டதில்லை. இதுவும் இளம் வயதில் " என்னுயிர் நீதானே" என்று காதலர் ஒருவருக்கு ஒருவர் சொல்வது போல்தான் என்று எண்ணினேன். அதுவே பின்னர் "சொன்னது நீதானா? சொல் சொல்"என்றும் "அவளா சொன்னாள் இருக்காது" என்றும் முடியும் கதைகள் பல.

அன்று காலை நான் எழுந்த போது வானத்தில் பறப்பது போன்ற இனிய உணர்வு. ஏதோ இரவு தண்ணியைப் போட்டேன் அல்லது கஞ்சா, அபின் என்று கற்பனையைப் பறக்க விடாதீர்கள். நான் சுதந்திரக் காற்றை அனுபவிக்கின்றேன். என் மனைவி தன் தாய் வீட்டிற்குச் சென்று விட்டாள். கட்டிலும் மெத்தையும் எனக்கே சொந்தம். குறட்டை ஒலியைக் குறை சொல்ல யாரும் இல்லை.

அடுத்த அறையில் அம்மா இருந்தார்கள். வழமை போல் கடவுளைக் கும்பிட்டுப் பின் சமையலறை செல்லும் ஓசை கேட்கின்றது. ஆனால் அன்று அந்த ஓசைகள் தாளம் தவறிய பாடலைப் போல்தான் எனக்குக் கேட்டன. அப்பொழுது அம்மாவிற்கு வயது 77 இருக்கும். சொந்த மண்ணை விட்டு எங்களோடு வெலிங்டன் நியுசிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். அங்கு கோயில் குளங்கள் என்று வாழ்ந்தவளுக்கு இங்கு பனியிலும் தனிமையிலும் தன் அந்திக் காலங்களைக் கழிக்கும் தண்டனை கொடுத்திருந்தது சிறீலங்கா அரசு.
Last Updated on Friday, 14 March 2014 18:05
Read more...
 
ஊழிக்காலம் - தமிழ்க்கவியின் (வரலாற்றின் தடம்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by பாவண்ணன்   
Monday, 10 March 2014 11:47
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன, தெருக்களில் புகுந்த வெள்ளம் வீடுகளையும் பெரிய பெரிய மாளிகைகளையும் மூழ்கவைத்துவிடுகிறது. தப்பித்து திசைக்கொருவராக ஓடும் சிறுவர்களும் வயதானவர்களும் பெண்களும் எங்கெங்கோ சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கிறார்கள்.
Last Updated on Tuesday, 21 October 2014 22:15
Read more...
 
சென்றுடுவாய் தோழனே... PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by Majura Amb   
Tuesday, 04 March 2014 23:30

நீ கறுப்பு இனத்தின் தலைவன் மட்டுமல்ல.
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனத்தினதுக்கும் முன்னுதாரணம்.
அந்த இனத்தின் விடுதலைக்கு
நீ கொடுத்தவிலை பெரிதுதான் – அதுபோல்
கொடுத்தோம் நாமும் பெரும் விலை மண்டேலா
தமிழீழ விடுதலைக்காய்......!!
உன் இனவிடுதலைக்காக இருந்தாய் நீ சிறைவாசம்
அதை மிஞ்ச உலகில் எவருமில்லை இன்றுவரை.
Last Updated on Tuesday, 04 March 2014 23:37
Read more...
 
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Tuesday, 04 March 2014 23:09

1972ல் வெளியான 'பொன்னூஞ்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இன்று கேட்டுக்கொண்டிருந்த போது என்னுள் மறக்கமுடியாத பல பழைய ஞாபகங்கள் வந்தன!

எங்கள் வீட்டில் நாதச்சீனையா (வைரவநாதன்) இருந்து படித்துக் கொண்டிருந்த காலம் அது. நாதச்சீனையா 'பிள்ளை' என்று என்னை அன்பு பொழிய அழைப்பார். விடுமுறை நாட்களில் அவரின் நண்பர்கள் பலர் அவரைச் சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டின் முன் அறையில் நாதச்சீனையா இருந்தார். தினகரண்ணா, சிறீ அண்ணா, திருமாள் அண்ணா, நந்தண்ணா, சாந்துக்குஞ்சையா, செல்வக்குஞ்சையா, மனோகரண்ணா....... இப்படியே பட்டியல் நீண்டு கொண்டு போகும்!

Last Updated on Tuesday, 04 March 2014 23:21
Read more...
 
சூரியவழிபாடும் பொங்கல்விழாவும் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by கௌரி சிவபாலன்   
Tuesday, 04 March 2014 22:43

உவகை பொங்க
உண்மை பொங்க
உறவுகள் பொங்க
திறமைகள் பொங்க
நேர்மைகள் பொங்க
நன்மைகள் பொங்க
புதுமைகள் பொங்க
நிஜங்கள் பொங்க
பொங்கட்டும் பொங்கலே 

                           வாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து நாம் வாழ்வதற்கு ஆதாரமான ஆண்டவன் சூரியபகவானுக்காக நன்றி செலுத்துகின்ற நாளே இந்த பொங்கல் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே. பகலவன் இன்றி உயிர்கள் ஏது?  உலகுதான் ஏது? பாரபட்சம் பார்த்து பகலன் கதிர்களைத் தருவதில்லை. அதனால் நன்றி சொல்லும் மகத்தான பண்புக்கு அடையாளமே இப்பொங்கலின் திருநாளாகும். இதனையே ஜேர்மனியர் நசவெந னயமெந கநளவ என்று தோட்டங்களில் விளையும் உருளைக்கிழங்கு, பூசணி போன்ற மரக்கறி வகைகளை படைத்துக் கொண்டாடுகின்றார்கள்.

Last Updated on Tuesday, 04 March 2014 22:58
Read more...
 
சமாதிக்குப் போகாத சன்மானம் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 02 March 2014 09:33

இராஜ வீதி. நிறைந்த சுத்தமாக இருந்தது. அதில் நடந்து செல்கையில் மனது சலனமில்லாது அமைதியாக இருந்தது. வீதித்தரையில் பாறைகளினூடாக நீர்விழுந்து ஓடிக் கொண்டிருந்தது. விழுந்து ஓடும் நீர் தெறித்து உடை நனைந்து விடுமோ என்ற அச்சம் கொண்டு கொஞ்சம் தள்ளி நின்றேன். என்னைப் போல் பலரும் அப்படி நின்றதை பின்னர்தான் அவதானித்தேன். சற்று பார்வையைக் கூராக்கி அவதானித்த பொழுதுதான் புரிந்தது. அது உண்மையான நீர் வீழ்ச்சி அல்ல. அற்புதமாக தரையில் தீட்டப்பட்ட ஒரு அழகான ஓவியம் என்று. சுற்றி நின்றவர்களையும் அந்த அதிசயமான ஓவியம் வெகுவாகக் கவர்ந்திருந்ததை அவதானித்தேன்.

வேலைக்குப் புறப்படும் முன் வான்நிலை பார்ப்பது எனது வழக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வரப் போகிறது. தரையில் தீட்டப் பட்ட அந்த அழகிய ஓவியம் அழிந்து போய்விடப் போகிறது.

Last Updated on Friday, 07 March 2014 09:14
Read more...
 
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by கே. எஸ். சுதாகர்   
Monday, 17 February 2014 06:59

[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]

உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

Last Updated on Tuesday, 11 March 2014 10:04
Read more...
 
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்) PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சஷீவன்   
Sunday, 09 February 2014 08:15
லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன்

மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது  விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை;      அவர்களே தேரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து   சேர்ந்த, கொடுக்கபப்ட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். – கார்ல் மார்க்ஸ்

== பகுதி 1 ==

ஈழப்போராட்டம் – ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக – மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை அளவிட்டுவிடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்கள் – எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடைய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே – அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் – அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை.

அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் – அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு – போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கும் – பங்கு கொண்டவர்களுக்கும் – பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கும் இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் அதன் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையான ஆதாரங்கள்.ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Last Updated on Tuesday, 11 March 2014 09:56
Read more...
 
திரை கடல் ஓடி திரவியம் தேடு PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Thursday, 30 January 2014 10:55

தமிழன் திரைகடல் ஓடித் திரவியம் தேடினான். அன்றே அவனை உலகம் வியந்து பார்த்தது. ஆனாலும் அன்றைய காலங்களை விட  தமிழரை  அதிகளவு உலகம் அறிந்ததும், உலகத்தை தமிழர் அறிந்ததும் 1980களின் பிற்பாடே என்பது எனது கருத்து.

தமிழர்களின் எண்பது காலகட்டத்தின் பாரிய இடம் பெயர்வு அவர்களை  உலக நாடுகளில் பெருமளவு பரவச் செய்தது. அப்படி இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடன் தங்களது கலை, கலாச்சார விழுமியங்களையும் எடுத்துக் கொண்டே இடம் பெயர்ந்தார்களா? அல்லது இடம்பெயர்ந்த பலருக்கு தங்களது கலைகளில், கலாச்சாரங்களில் போதிய தெளிவுகள் இல்லையா? மேற்கத்திய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா? அன்றாடம் தொல்லைப் படும் இயந்திரமான வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு „பணம்...பணம்..' என அலைகிறார்களா தெரியவில்லை.

Last Updated on Thursday, 30 January 2014 11:07
Read more...
 
மரணத்தைத் தேடி PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Thursday, 30 January 2014 10:34

மனநிலை பாதிக்கப் பட்ட தனது 18 வயது மகனை கருணைக் கொலை செய்யக் கோரி தாயே தமிழ்நாட்டுக் காவல் நிலையத்தில் மனு அளித்த செய்தி ஒன்றை வாசித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அதே வேளை மனதில் ஒரு சுமையும் சேர்ந்து கொண்டது. மக்களின் மேல் அதிக அக்கறை இல்லாத அரசாங்கங்களின் செயற்பாடுகளின் விளைவுகளே இவை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு, பராமரிப்புகள், அவர்களுக்கான தேவைகள் என செய்ய வேண்டிய அனைத்துப் பொறுப்புகளும் சமூக சேவை நிறுவனங்களுக்கு மேலாக அரசாங்கங்களுக்கே இருக்கின்றது. ஆனால் இங்கே மக்கள் புறந்தள்ளப் பட்டு அரசியல்வாதிகள் தங்களை முன்னிறுத்தியே செல்கின்றனர். பக்கத்து நாட்டில் தமிழர்கள் அவலமாகச் செத்துக் கொண்டிருக்கும் பொழுது, கடற்கரையில் காலையில் காலாற நடந்து செல்கையில் சட்டென்று அந்தத் தமிழர்கள் நினைவுக்கு வர, நாற்காலியை வரவழைத்து உடனேயே உண்ணாவிரதம் இருந்து ஊடகங்களுக்குச் சொல்லி அனுப்பிய தலைவர்கள் இருக்கும் நாட்டில் மனநிலை பாதிக்கப் பட்டவர்களை கவனிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

Last Updated on Thursday, 30 January 2014 10:43
Read more...
 
பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள் PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by அ.மயூரன்   
Monday, 27 January 2014 22:45

மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழும் நிகழ்வுகளில் பண்டிகைகள், சடங்குகள் என்பன முக்கியம் பெறுகின்றன. இவை காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் என்பவற்றினால் வேறுபாடடைகின்றது. மனிதவாழ்வு பண்பாட்டுக்குரியது என்பதால் உயிரியல் நிலையில் நிகழ்வுகள் பண்பாட்டு வயப்படுகின்றன. அந்தவகையில் தமிழர் சடங்குகள் சமூக, பொருளாதார, அரசியல், போரியல்,சமய, தளங்களைச் சார்ந்தும் அமைகின்றன. அந்தவகையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்பிற்கு உறுதியாய் இன்றுவரை தொடரும் பண்டிகைகளில் தைப்பொங்கல் முக்கிய இடம் வகிக்கின்றது.

தமிழரின் வாழ்வியற்தடத்தில் இன, மத பேதங்களைக்கடந்து தமிழன் என்ற உறுதிப்பாட்டில் ஒற்றுமையடையச் செய்வது பொங்கலே. இப்பொங்கல் பண்டிகையானது இந்து. கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் அற்று தமிழனின் பண்பாட்டியலின் உயிர்ப்பின் தைப்பொங்கல் உறுதியாகவே விளங்குகிறது. தமிழர்களின் வாசல்கள் தோறும் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து அந்த சூரிய தேவனுக்கு தன் நன்றிக்கடனினை செலுத்துகின்றார்கள்.

Last Updated on Monday, 27 January 2014 23:15
Read more...
 
என்னை விட்டால் யாரும் இல்லை PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Monday, 20 January 2014 22:44

மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்...' என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தொகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன் பாடல் வரிகள் என்ற எண்ணமே மேலாக நின்றது. ஆனால் ஒரு சினிமாப் பத்திரிகையில் „சமீபத்திய சினிமாப் பாடல்களைப் பார்க்கும் பொழுது „எது நான் எழுதியது எது வாலி எழுதியது என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருமலர்கள் படத்தில் வாலி எழுதிய, மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்.. பாடலும் அந்த ரகம்தான்...' என்று கண்ணதாசன் பேட்டி ஒன்றில் சொன்ன பொழுதுதான் தெரிந்து கொண்டேன். அந்தப் பாடல் வாலி எழுதியதுதான் என்று.

கண்ணதாசனுக்குப் பிறகே சினிமாவுக்குள் வாலி நுளைந்தாலும், தனக்கு என்று ஒரு இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்டார். எம்ஜிஆருக்கு வாலி என்ற நிலையும், சிவாஜிக்கு கண்ணதாசன் என்ற நிலையும் அன்று ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

Last Updated on Thursday, 23 January 2014 10:15
Read more...
 
சொந்தக்காரன் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by பசுந்திரா   
Sunday, 29 December 2013 11:39

நான் எதிர் பாராத நேரம் ஏதோ ஒன்று எங்கிருந்தோ வந்து என் முகத்தில் விழுந்தது.  'என்ன இது மோசமாக நோகிறதே.. ? ' என அந்த பக்க கண்ணை மூடிக்கொண்டு சாபிட்ட கையாலே  கன்னத்தை தடவிய போது  முன்னால் இருந்த ராசன் படீரென என் முகத்தில் மூக்கடியில் குத்தினான்.  அவன் கோபமாக பேசிய போதுதான் புரிந்தது இது அவனின் இரண்டாவது அடி என்று. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . வலித்த இடத்தை உரஞ்சி விட்டு கையை எடுத்த போதுதான். மூக்காலும் நெற்றியாலும் ரத்தம் வருவது  தெரிந்தது . ரத்தத்தை கண்டதும் எனக்கு  கோவமும் அழுகையும் அதிகமாக வந்தது . ரத்தத்தை பார்த்து பார்த்து அழுதேன். பெரிதாக அழுதாலும் அடிப்பான் என்று வேறு பயமாக இருந்தது . அடித்த அடியில் என்முகம் வீங்கி  சொண்டும் நாக்கு போல் வந்து விட்டது. நான் முடிந்தவரை அழுகையை அடக்கி அழுதேன். ஆனால் விம்மலை அடக்க முடியவில்லை.  எதற்காக அடித்தான் என்று கேட்கவும் முடியவில்லை . அவனாகவும் சொல்லவில்லை.

Last Updated on Friday, 07 March 2014 09:15
Read more...
 
மூனாவின் நினைவுகள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Thursday, 19 December 2013 09:18

மூனாவின் நினைவுகள்

Last Updated on Thursday, 19 December 2013 09:20
 
மான பங்கம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by பசுந்திரா   
Monday, 09 December 2013 22:27

வகுப்புத் தோழன் குண்டனை காலை, அந்தக் கோலத்தில்  கண்டதில் இருந்து நந்தனின் மனம்  திக் திக் என்று இருந்தது.  நந்தன் இதற்கு முன் தேங்காய் பாதியை கடித்து விட்டு தங்கச்சியை சாட்டி விடுவது , தான் வலிய அவளுக்கு அடித்து விட்டு  அவள் அழுதால் ‘தங்கச்சிதான் முதல் அடிச்சவள்’ என்று கதையை மாற்றி விடுவது என  முட்டையால வெளிய வந்த சின்னச் சின்ன குஞ்சுப் பொய்கள் சொல்லி இருக்கிறான். ஆனால் இன்று காலை செய்தது  வித்தியாசம் . இது பொய்யை விட பெரிசு. களவை விடச் சின்னன் .

அது வன்னி மண்ணில் உள்ள மன்னார் மாவட்டதின் ஒரு சிறு கிராமம். உப்புக் காற்றும், பூவரசு மரமும், புழுதி மண்ணும் மட்டுமே கொண்ட பின்தங்கிய  பகுதியான அங்கேதான் இருக்கிறது இந்த ஐந்தாம் வகுப்பு வரையே உள்ள இலுப்பைக்கடவை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. ஆனாலும்  ஆசிரியர்களின் அயராத உழைப்பால் ஆண்டுதோறும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொண்டு  இருந்தார்கள்.

இன்று நந்தனின் வகுப்பு நாலாம் ஆண்டு மாணவர்களுக்கான  சுகாதாரப் பாடம் பரீட்சை.

Last Updated on Tuesday, 10 December 2013 09:00
Read more...
 
படைப்புகளிற்கான அன்பளிப்பு – சில ஞாபகங்கள்..! PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரா இரவீந்திரன்   
Thursday, 05 December 2013 09:06

முன்னர், எண்பதுகளில்(1980ற்குப் பின்னர்) நான் மேல்வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலங்கையில் இரண்டு தமிழ் பத்திரிகைகள் பிரசித்தி பெற்ற தேசியப் பத்திரிகைகளாக இருந்தன. ஒன்று 'வீரகேசரி', மற்றையது 'தினகரன்' ! வடக்கில் 'ஈழநாடு', 'ஈழமுரசு' ஆகியவை முக்கிய பத்திரிகைகளாக மக்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்தன.

முதற் தடவையாக (1981)ல் 'வீரகேசரிக்கு' என் சிறுகதையொன்றை அனுப்பி வைத்த போது அதனைப் பிரசுரித்து, அன்பளிப்பாக 30/-ரூபா இலங்கைப் பணம் காசோலையாகவும் அனுப்பி வைத்திருந்தார்கள். கதையை அனுப்பும் போது அன்பளிப்பெல்லாம் அனுப்புவார்கள் என்ற விடயம் எனக்குத் தெரியாது. அது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது! அது போலவே 'தினகரன்' பத்திரிகைக்கு எனது அடுத்த கதையை அனுப்பி வைத்த போது அவர்களும் என் கதையைப் பிரசுரித்து, 20/-ரூபா காசோலையும் அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார்கள்.

Last Updated on Thursday, 05 December 2013 09:53
Read more...
 
இறக்கி விடு என்னை.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 04 December 2013 09:05
களைத்துப் போய் விட்டேன்
காலச் சாரதியே
என் மண்ணைப் பார்க்க முடிந்த
எங்கேனுமோர் திருப்பத்தில்
என்னை இறக்கி விடு

நேற்றெனும் நினைவு கலங்கலாய்,
இன்று இதோ கடந்து போகிறது
நாளை தெரியாது
இல்லாமைப் பெருங்கனத்தை
இருப்பாய்ச் சுமந்தபடி
எவ்வளவு தூரந்தான்..
இறக்கி விடு
Read more...
 
அனுக்கிரகம்.. PDF Print E-mail
Literatur - கவிதைகள்
Written by தி. திருக்குமரன்   
Wednesday, 04 December 2013 09:03
அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?

வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Page 2 of 5