home loans
மொழி


தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா! PDF Print E-mail
மொழி
Written by கா. மாணிக்க வாசகர்   
Sunday, 16 August 2009 21:45
ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் "ரெம’ங்டன்" தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவி நின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.

பெரு எண்ணிக்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே. பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில் இறங்கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
Last Updated on Tuesday, 18 August 2009 08:39
Read more...
 
மொழி வளர்ச்சியின் முக்கிய கூறாக பதிப்புத் துறையே உள்ளது| PDF Print E-mail
மொழி
Written by தி.திருக்குமரன்   
Friday, 31 July 2009 06:06

மேலை நாட்டுத் திறனாய்வுக் கருதுகோளையும் மரபு சார்ந்த தமிழியற் கருது கோளையும் இணைத்து புதிய ஆய்வு முறை ஒன்றினை உருவாக்கியதில் இலங்கை அறிஞர்களிற்கு முக்கியமான பங்குண்டு. இவ்வாறு இந்தியாவிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி வழங்கிய பேட்டியின் போது தெரிவித்தார்.

கேள்வி:- தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர் என்ற வகையில் தமிழ் கூறும் நல்லுலகோடு என்ன விதமான தொடர்புகளை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்?

பொதுவாக தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இலங்கை, இந்தியப்படைப்பாளிகள் காலத்திற்கேற்ற படைப்புகளைப் படைத்து வருகிறார்கள். நான் ஒரு தமிழ்ப் பேராசிரியன் என்ற வகையில் இவற்றின் ஆழத்தையும் சொல்லப்பட்ட நுணுக்க முறைமையையும் எனது அனுபவத்திற்கேற்றவாறு உள்வாங்கி எனது கற்பித்தல் அல்லது வெளியிடுதல் முறையினூடாக உலகுடன் தொடர்பு கொள்ள முயல்கிறேன்.

இந்தத் தொடர்பு தாய் மொழி மூலமாக அமையின் அது அகநிலை சம்பந்தப்பட்டதாக இருக்கும். இதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகோ காலத்திற்கேற்ப வளர்ச்சி நிலை அடைந்துள்ள மொழியின் அத்தனை பரிமாணங்களையும் பகிரலாம்.

Last Updated on Friday, 31 July 2009 06:37
Read more...
 
ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ் PDF Print E-mail
மொழி
Written by வசந்தன்(Vasanthan)   
Tuesday, 14 July 2009 04:34

மெலிதான ஒப்புநோக்கு.

'ஈழத்தமிழ்' என இன்று அறியப்படுவது பெருமளவு யாழ்ப்பாணத் தமிழையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஈழத்தின் வேறுபட்ட பாகங்களிடையில் மொழிப்பாவனையென்பது வேறுபட்டே இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழில் வினவும் போது ‘ஏ’கார ‘ஓ’கார வினாவெழுத்துக்கள் இறுதியில் வரும் வண்ணம் கேள்விகள் கேட்கும் பழக்கமே அதிகமுண்டு. தமிழகத்தைப் போல் ‘ஆ'காரம் இறுதியில் வினாவெழுத்தாக வருவது (கொஞ்சக் காலத்துக்கு முதல்) மிகமிகக் குறைவு.

எடுத்துக் காட்டுக்கள்:
வருவியே? போவியே? சாப்பிட்டனியே? கடிதம் போட்டனியே?
வருவியோ? போவியோ? கூப்பிட்டனியோ? சொன்னனியோ?...

வருவியா? போவியா? சொன்னாயா? போன்ற ஆகார வினாவெழுத்துக்கள் இறுதியில் வரும்படி கதைப்பது (முன்பு) குறைவு. இராம.கி. ஐயா குறிப்பிட்டதைப் போல 'உ'கரச் சுட்டெழுத்து மிக அதிகமான பாவனையிலுள்ளது.

ஆனால் இப்போது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது. சென்ற வருடம் நான் யாழ் சென்றபோது, (கிட்டத்தட்ட 9 வருடங்களின் பின்) இந்த 'ஏ'கார 'ஓ'கார வினையெழுத்துக்கள் குன்றி 'ஆ'கார வினாவெழுத்துக்கள் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட தோற்றப்பாடு காணப்பட்டது.

வருவியா? போவியா? சாப்பிட்டியா? போன்ற நிலையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளினதும் திரைப்படங்களினதும் ஆதிக்கம் என ஊகிக்கிறேன். இது நான் அவதானித்த ஒரு மாற்றம்தான். இதில் தவறிருப்பதாக நான் ஒருபோதும் கருதவில்லை. ஆனால் சிறிது வருத்தமாக இருந்தது. அவ்வளவுதான்.

Last Updated on Tuesday, 14 July 2009 04:46
Read more...
 
திராவிட மொழிகள் PDF Print E-mail
மொழி
Written by சி. மாசிலாமணி   
Tuesday, 14 July 2009 04:19

தென் இந்தியா முழுவதும் 19 கோடி அளவிலான மக்களாற் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் பட்டியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி பூகோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபபூர் ஹைதரபாத் மாவட்டங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது.

பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும்தான் மாநில மொழிகள் என்ற தகைமையையும், கிறிஸ்துவிற்கு முற்பட்ட இலக்கிய சரித்திரத்தையும் கொண்டவை. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகள் சம்பந்தமாக முறையான தகவல் எம்மிடம் இல்லை. இப் 19 மொழிகளுள் 10 இலட்சம் மக்களுக்கு மேற்பட்டோராற் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களாற் பேசப்படும் பிராகுவி வரும். தமிழ்நாட்டில் நீலகிரிப் பிரதேசம் போவோமானால் அங்கு தமிழ் மொழிக்கு மிகவும் நெருங்கிய மொழியான இருளம் உட்பட வடுகம் துடவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும் மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6வது மொழி ஒன்றைப் பேசும் மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசம் மக்களையும் சந்திக்கலாம். பட்டியலில் இல்லாத குறும்பமும் பணிகமும் நீலகிரிப் பிரதேசத்தில்தான் பேசப்படுபவை என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

Last Updated on Tuesday, 14 July 2009 04:44
Read more...