Eelam -
தொன்மை
|
Written by சுகுணன்
|
Sunday, 09 August 2009 21:21 |
வன்னி, கிளிநொச்சி மேற்கு ஆனைவிழுந்தான் குளத்தினுள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண் உருவச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
ஆனைவிழுந்தான் குளத்துக்கு நீர் வழங்கும் ஆற்றின் நீர்தேங்கும் பகுதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் குள அணைக் கட்டுமாணத்துக்காக புல்டோசரால் மண் அள்ளப்படுகையில் மண்படையில் மேலிருந்து சுமார் 3 அடி ஆழத்தில் சுடுமண் சிற்பங்கள் எடுக்கப்பட்டன.
இவற்றுள் 6 அங்குலம் முதல் ஒன்றரை அடி உயரம் வரையான பெண் உருவச் சிலைகளின் பாகங்கள், பெண் உருவச் சிலைகளின் கைகள், மார்பகங்கள், முகம், தாடை, சலங்கை அணிந்த கால்பாதம், தலைகளை இழந்த 6 அங்குல உயர பெண் உருவம், ஆபிரிக்க பழங்குடிகளின் சிற்பக்கலையை நினைவூட்டும் 6 அங்குல உயர
குடுமியுடனான சுடுமண் சிற்பம் என்பனவும் காணப்பட்டன.
வவுனியாவிலிருந்து சுகுணன் 7.9.2003
|