home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 62 guests online
தாம்பத்ய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும் PDF Print E-mail
Blogs - Latest
Written by Chandra   
Monday, 13 July 2009 22:05

இந்த சீசனில் நம்மில் பலர் எதிர்பாராத விதமாக மழையில் நனைந்து விடுகிறோம்!

ஆனால் நனைந்த எல்லோருக்குமே ஒரே மாதிரி ஜலதோஷம் பிடிப்பதில்லை... அவரவர் உடம்பின் நோயெதிர்ப்புத் திறனைப் பொறுத்து நம் உடம்பு தாங்குகிறது... அல்லது ஜலதோஷம் பிடிக்கிறது.! அல்லது இன்னும் மோசமாகி காய்ச்சலிலேயே விழுகிறோம்!. சிலருக்கு லேசாக ஈரக் காற்று அடித்தாலே கூட சளி பிடித்துக் கொண்டு விடும்!... நூறு இருநூறு பேர் சேர்ந்து இருக்கக்கூடிய கூட்டமான சூழலில் மற்றவர்கள் மூச்சுக் காற்று பட்டாலே இன்பெக்ஷன் உடனே தொற்றிக் கொண்டு விடும்! இவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிக மிக குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

நமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அளவை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாராயண ரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்...

“ஆமாம்...! கணவனும் மனைவியும் மகிழ்வாக இருக்கும் தாம்பத்யத்தில்... குறிப்பாக அவர்களுக்குள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை கண்டறிந்த போது கிடைத்த ரிசல்ட் இது!...

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாவதால், நம் உடம்பில் ஏற்படும் காயங்களும் கூட சீக்கிரமே குணமாகின்றன. இப்படி சீக்கிரமே காயம் ஆற மூல காரணமாக இருக்கும் ஹார்மோன் ஆக்ஸிடோஸின். இந்த ஹார்மோன் தாம்பத்ய உறவின் மகிழ்ச்சியான தருணங்களில் அதிகம் சுரக்கிறது. (கவனியுங்கள்... தம்பதியர், ஒருவருக்கொருவர் அந்நியோன்யம் இல்லாமல் கடனே என்று தாம்பத்ய உறவு கொள்ளும் போது இந்த ஆக்ஸிடோஸின் சுரப்பது கம்மியாகி விடும்.)

இதற்கான ஆய்வுக்காக சில தம்பதிகளிடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொண்டு அவர்கள் தொடையில் சூடு வைத்து காயம் ஏற்படுத்தினார்கள் மருத்துவர்கள். இந்தத் தம்பதியரில் நிஜமாகவே பரஸ்பரம் அதிக பிரியமும் அந்நியோன்யமும் கொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபட்டவர்களுக்கு அந்த தொடைப் புண் சீக்கிரமே குணமாகிவிட்டது. மற்றவர்களுக்கு சீக்கிரம் குணமாகவில்லை. அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் நடந்த விஷயம் இது.


சரி... நோயெதிர்ப்பு சக்தி அதிகமானால் என்ன வரும்?

அதிகம் நோயில் விழாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்நாளும் அதிகமாகும்!...

திருமணம் ஆனவர்கள், திருமணமாகாதவர்களைவிட அதிக வருடங்கள், அதிலும் நோய் நொடி அதிகம் தாக்காமல் உயிர்வாழ்வதை நம்மில் பலர் நம் அருகிலேயே நிறைய பார்த்திருப்போம்!... ஸ்காட்லாந்தில் முப்பந்தைந்தாயிரம் ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்கள்!...

தாம்பத்ய உறவு விஷயத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஹார்ட் ப்ராப்ளம்கூட குறைவாக வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

தாம்பத்திய உறவு என்பது கிட்டதட்ட ஒரு ஏரோபிக் எக்ஸர்சைஸ் மாதிரிதான்! இந்த உறவின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு, கிட்டத்தட்ட டிரெட்மில்லில் அரைமணி நேரம் நடப்பதற்கு சமமான விஷயம்!... கிட்டத்தட்ட இருநூறு கலோரிகள் இந்த செயல் மூலம் எரிக்கப்படுகிறது.! எனவே இதை பிரியத்தை வளர்க்கும் எக்ஸர்சைஸாக இருவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்!’’. என்று டாக்டர் நாராயண ரெட்டி நிறைய பிளஸ் பாயிண்ட்களை சொல்லிக் கொண்டே போகிறார்.

அலுவலகத்தில் பிரச்னை, பணக் கஷ்டம், நண்பர்களின் துரோகம் போன்ற விஷயங்களால் மனச் சோர்வுடன் வீட்டுக்கு வரும் கணவருக்கோ, மனைவிக்கோ தாம்பத்ய உறவு என்பது ஒரு சிறந்த உடனடி மருந்து போல் செயல்படுகிறது. மறுநாள் அந்தக் கணவனோ, மனைவியோ தன் பிரச்னையை சமாளிக்கும் தெளிவுடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதை நாம் பார்க்க முடியும்!

பொதுவாக ‘டிப்ரஷன்’ எனப்படும் மனச் சோர்வுக்கு செக்ஸைத்தான் ஒரு நல்ல மருந்தாக டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

‘‘மிகவும் சரி... டிப்ரஷனில் பாதிக்கப்பட்டு வருபவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள், ரெகுலரான தாம்பத்ய உறவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது புரியும்!...’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டியும் தன் மருத்துவ அனுபவம் மூலம்.

‘‘குறிப்பாக மிக அதிக டிப்ரஷனால் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா பிரச்னைகளுக்கு முற்காலத்தில் சில வெளிநாடுகளில் வைப்ரேட்டர் மூலம் ஏற்படுத்தும் செயற்கை செக்ஸை, டாக்டர்கள் ட்ரீட்மெண்டாகவே தந்திருக்கிறார்கள்!...’’ என்கிறார் டாக்டர்.

தாம்பத்ய உறவால் மேலும் என்ன ஹெல்த் ரீதியிலான உபயோகங்கள்?

* இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறதாம். தாம்பத்ய உறவின் போது சுரக்கும் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள் தான் இப்படி மூளையின் செயல்திறனைத் தூண்டுகிறதாம். ஒரு ஜெர்மன் ஆய்வின் முடிவு இது.

* பெண்களுக்கு குறிப்பாக அந்த நேரத்தில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால், அப்படி ரெகுலர் செக்ஸில் ஈடுபடும் பெண்களின் முகமும், தலைமுடியும் இன்னும் அதிக பளபளப்பாகிறதாம்.

* தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது... தாம்பத்ய உறவின் உச்சபட்ச இன்பத்தின் போது சுரக்கும் எண்டார்பின், செரடோனின் இரண்டும், மக்களின் மன நிலையில் ஏற்படுத்தும் மாறுதலால், ``வாழ்க்கையில் எல்லாம் முடியும்!...’’ என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம்.

* பெண்களுக்கு இது கேன்சர் ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறதாம். உறவில் ஈடுபடும் போது சுரக்கும் Dhea என்ற ஹார்மோன், கேன்சருக்கு முந்தைய ஸ்டேஜில் இருப்பவர்கள் எனில், அவர்களை அடுத்த ஸ்டேஜிக்குப் போகவிடாமல் தடுக்கிறதாம்!

- Dec-2005

Last Updated on Wednesday, 15 July 2009 04:13