home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 31 guests online
Proverbs PDF Print E-mail
Blogs - Latest
Written by Chandra   
Wednesday, 08 July 2009 05:37

இன்றுடனாவது பழையன கழித்து புதியன உடுங்கள். கணினி இல்லாத, தபாற்காரன் இல்லாத அந்தக் காலத்தில் புறாவைத் தூது விட்டோம் என்பதற்காக மின்னஞ்சல் வசதி இருக்கும் இந்தக் காலத்தில் காதலிக்குக் கடிதம் அனுப்ப புறாவைத் தேடாதீர்கள்.

வெற்றியின் ரகசியம் நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - பெர்னாட்ஷா

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்! - எட்மண்ட் பர்சி

சுவர்க்கத்தில் என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே தேவை! - டிரைடன்

வெற்றி என்பது குறிக்கோள் அன்று. அது ஒரு பயணமே ஆகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! - ஆர்தர் ஹேவிட்

நம்பி நடக்கிற ஒருவனின் அந்தரங்க விடயங்களை அவன் உனக்கு ஜென்ம விரோதியாக மாறும் போதும் வெளியில் கூறாதே!

செய்து கொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாக இருக்குமானால், இவர் செய்தது சரி என்று எத்தனையோ தேவ தூதர்கள் சத்தியம் செய்தாலும் தவறு சரியாகி விடாது!

அறிவுரையைக் கேட்டு, நடக்காமல் இருப்பது மோசமான செயல். அதைவிட மோசமானது எல்லோருடைய அறிவுரையையும் கேட்டு நடக்க முயற்சிப்பது.

கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவன்தான் சரியான குருடன்! - காந்தியடிகள்

...எறும்பூர கற்குளியும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள், காதைக்கடித்துக்கொண்டு தோடு தருகிறார்கள் என்பதை நீங்கள் நம்புங்கள், கொஞ்சம் சிந்தியுங்கள்.

சொல்லில் சுத்தமும், சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

முட்டாள் மேலும் தேடிக்கொண்டிருக்கட்டும். நீ இருக்கும் கொஞ்சத்தை அனுபவி.

தான் முக்கியமானவன் என்று காட்டிக் கொள்பவன் தனக்கு ஆற்றலில்லை என்பதையே வெளியே காட்டுகிறான்!' - ஸலேட்டர்

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த குணாதிசயங்களாகும்!

தப்பு செய்து விட்டீர்களா? மனப்பூர்வமாக மன்னிப்புக் கேளுங்கள். உர் என்ற முகத்துடன் கேட்கப் படுகின்ற மன்னிப்பு எதிராளிக்கு நீங்கள் செய்கின்ற இரண்டாவது பெரிய அவமானம்.

ஹீரோ என்பவன் யார்? மற்ற எல்லோரையும் விட ஐந்து நிமிடம் அதிகமாகத் தாக்குப் பிடிக்கிறவன்.

'எது சந்தோஷம்?' என்ற கேள்விக்கு பதில் புதிரானது. சந்தோஷத்தை அளவுகோல் வைத்தெல்லாம் அளந்து பார்க்காதீர்கள். இருக்கிற மகிழ்ச்சியும் காணமல் போய் விடும்!'

உண்மை பேசுங்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள். உண்மை எடுபடாத பட்சத்தில் பொய் பேசுங்கள். அதுவும் பொய்யர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்குப் பேசுங்கள், தப்பில்லை.

ஒரு பொய் வாழ்வதற்கு மேலும் ஒன்பது பொய்களை அதற்கு உணவாக அளிக்க வேண்டும்.

ஒரு வார்த்தையை உன் உதடுகள் உதிர்க்கு முன் உன் உள்ளம் அதனை இரு தடவைகளேனும் சிந்திக்குமானால் அதன் விளைவு ஒரு போதும் விபரீதமாக அமையாது.

உள்ளதை இல்லை என்று சொல்வது பாசாங்கு. அதே போல் இல்லாததை உண்டு என்று சொல்வது பம்மாத்து!

வெற்றிகரமாய்ப் பொய் சொல்ல அபார ஞாபக சக்தி வேண்டும். அவ்வளவு ஞாபக சக்தி உள்ள மனிதர்கள் எவருமே இல்லை!

உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பிறகு, உலகமே உங்கள் வசமாகும். - தோரோ

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். - இங்கர்சால்

ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. - ராஜாஜி

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். - கார்ல் மார்க்ஸ்

மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. - சேத்ரஞ்சர்

சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. - டிஸ்ரேலி

நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். - நார்மன் வின்சென்ட்

அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும். நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். - போவீ

முன்னேற்றம் முக்கியம்தான். எந்த விசயத்தில் என்பது அதை விட முக்கியம். மனிதக் கறி தின்னும் காட்டுமிராண்டி, ஸ்பூனும் முள்ளுக் கரண்டியும் பயன் படுத்தக் கற்றுக் கொள்வது முன்னேற்றமா?

கவிழ்த்துவிடும் முகஸ்துதிகளையும் முழுப்பொய்களையும் விட காயப்படுத்தினாலும் உண்மையே மேல்.

நீங்கள் சிங்கமாகவே இருக்கலாம். ஆனால் நரிகளின் துணையில்லாமல் நரிகளுடன் மோதாதீர்கள்.

வெற்றி என்பது விழாமல் நிற்பதல்ல விழுகின்ற ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுந்து நிற்பதே!

துணிச்சலான புதுமையான ஆரம்பம் என்பதே வெற்றியை நோக்கி பாதி தூரம் நெருங்கி விட்ட மாதிரி.

மகத்தான செயல் அனைத்தும் முதலில் முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டவைகளே.

புதிய கருத்து ஒவ்வொன்றும், அதன் தொடக்க நிலையில் ஒருவரே ஆதரிக்கும் சிறுபான்மையாகத்தான் இருக்கும். - தோமஸ் கார்லைஸ்

துன்பம் இல்லாத உலகுக்கு வழிகாட்டுவது துன்பப் பாதையே. - வில்லியம் கூப்பர்

மானத்திற்காக அனைத்தையும் பணயம் வைக்கும் வீர, தியாக உணர்வு கொண்டவர்கள்தான், சுதந்திரத்தை எப்பொழுதுமே போராடிப் பெறுவர். - மகாத்மா காந்தி

அழகான முகத்தின் மூலம் சிலரைத் தான் மயக்க முடியும், அழகான நடத்தையின் மூலமே எல்லோரையும் மதிக்கச் செய்ய முடியும். - சப்ரெம் ஆலன்

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்குரிய சிறந்த குணாம்சமாகும். - லெனின்

பத்திரிகைகளும், புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக் கூடியவை. மற்றவை அநுபவ வாயிலாக அறியவேண்டியவை.

கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது. - ராமகிருஸ்ண பரமஹம்சர்

ngz;> ve;jf; fhw;wpYk; mire;jhbf; nfhz;bUf;Fk; ehziyg; Nghd;wts;.
Mdhy;> ngUk; GaypYk; mts; xbe;J tpokhl;lhs;!" -
Ntl;yp

நான் செய்தாக வேண்டும், செய்தே தீருவேன், செய்ய என்னால் முடியும், செய்வது என் கடமை, இதோ செய்கிறேன். - ரிச்சர்ட் ஹெரிடன்

Last Updated on Friday, 07 August 2009 06:39