
கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும்(மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும். அனேகமாக எங்கள் எல்லோரதும் பாடசாலை சூட்கேசில் ஒரு டோங்கு, ஒரு சிற்பி, ஒரு நன்கு சப்பையான காய்ந்த மாங்கொட்டை என்பன இருக்கும். சூட்கேஸ் இல்லாதவர்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.
வீட்டிலும் எப்போதாவது நண்பிகள் ஒன்று கூடும் போது கொக்கான் வெட்டி விளையாடுவோம். ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். "ஏன் தரித்திரம் பிடிக்கும்?" என்ற எனது கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை.
ஆனால் இவ்வளவு தூரம் எமக்குப் பிடித்தமான விளையாட்டு உலகளவில் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. அமெரிக்காவைப் பார்த்தால் கண்ட கண்ட விளையாட்டுக்களை எல்லாம் உலக வெற்றிக் கிண்ண விளையாட்டு என்று அறிவித்துப் போட்டியாக வைத்து விடுவார்கள். எங்கள் விளையாட்டுக்களில் இந்த கொக்கான் போல் உலகளாவாத எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.
இந்தக் கொக்கானை மட்டும் உலக வெற்றிக் கிண்ணப் போட்டியாக்கி இருந்தால் எங்கள் பெண்களில் எத்தனை பேர் சம்பியன் ஆகியிருப்பார்கள்.
சந்திரவதனா
26.4.2005
Comments
பழய நினைவுகள் வந்தது. அதென்ன பொம்பிளயள் சம்பியன் எடுக்கிறது? எங்கட சொந்தத்துக்க நான் தான் சம்பியன் தெரியுமோ. பெண்டுகள் கூட என்னோட கொக்கான் வெட்ட மாட்டினம். நீங்கள் சொல்லிற மாதிரி பொம்பிளயள்தான் பெரும்பாலும் விளையாடுறவை. ஆனா எங்கட ஊரில ஒரு அற்புதம் நடந்துது. வழமையா மதவடிப் பூவரசுக்குக் கீழ கடுதாசி விளையாடிக்கொண்டிருக்கிற கிழட்டுக்கூட்டமொண்டு திடீரெண்டு கொக்கான் வெட்ட ஆரம்பிச்சுது. முதல் ரெண்டு மூண்டாத் தொடங்கி பிறகு கடுதாசியையே விட்டுட்டு முழுக்க கொக்கான் வெட்டினவை. ஆனா ஒரு மாதத்தில பிறகும் கடுதாசிக்கே போயிட்டினம். அதில கோழிப்பீ வழிக்கிறதெண்டு ஒண்டு வரும் தெரியுமோ. posted by வசந்தன்(Vasanthan) : Tuesday, April 26, 2005 2:55:37 PM |
பழைய நினைவுகளை எல்லாம் மீளக்கொண்டுவரச்செய்துவிட்டீர்கள், சந்திரவதனா. |
"ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்." |
றவுண்டெஸ் இது என்ன விளையாட்டு சந்திரவதனா? நான் கேள்விப்பட்டதில்லை. நாங்கள் கொக்கான் வெட்டும் போது மாபிள் பாவிப்பதில்லை. எல்லாம் கற்கள்தான் நிலத்தில் bump பண்ணவும் விடுவதில்லை. மேலே எறிந்து விட்டு கற்களைக் கூட்டி அள்ள வேண்டும். அதிகம் விளையாடினது இல்லை. |
நன்றிகள் சந்திரவதனா அக்கா பழைய நினைவு மீட்டலுக்கு. என்ன இப்ப எங்கட வலைப்பதிவெல்லாத்திலயும் ஈழத்தின் பழைய நினைவுகள கொஞ்சம் அதிகமாக மீட்கிறீர்கள். நல்ல விடயம். |
நாங்கள் கொக்கான் வெட்டும் போது மாபிள் பாவிப்பதில்லை. எல்லாம் கற்கள்தான் நிலத்தில் பம்ப் பண்ணவும் விடுவதில்லை. மேலே எறிந்து விட்டு கற்களைக் கூட்டி அள்ள வேண்டும். |
என்ன கெந்தியடித்தல் கொக்கான் வெட்டுவது என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்கள். அவை இதம் தரும் நினைவுகள் posted by ஜெயச்சந்திரன் :Tuesday, April 26, 2005 9:07:20 PM |
உங்கள் ஊரில் ஆண்களும் கொக்கான் வெட்டினார்களா? எங்கள் ஊரில் நானிருந்தவரை ஆண்கள் கொக்கான் விளையாடியதாய் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வீட்டில் கூட சம்பா, சோகி என்று விளையாடுவார்கள். குண்டடிப்பார்கள். (மார்பிள்) ஆனால் கொக்கான் பக்கம் எந்த ஆண்களும் வருவதில்லை. |
றவுண்டஸ் கிட்டத்தட்ட எல்லே விளையாட்டு மாதிரியெண்டு நினைக்கிறன். posted by வசந்தன்(Vasanthan) : Wednesday, April 27, 2005 12:12:14 PM |
கொக்கான் வெட்டேக்க மேல எறிஞ்சு கீழ கிடக்கிறதுகள ஒண்டு ரெண்டு எண்டு வழிச்செடுத்து எறிஞ்சதப் பிடிக்க வேணும். பிறகு நிலத்தில ஒண்டுமில்லாத நேரத்தில சுட்டி விரல வளைச்சு நிலத்தில வழிச்சு எறிஞ்சத ஏந்த வேணும். அப்பிடி வெறுமையா சுட்டிவிரலால வழிக்கிறதத்தான் அப்பிடிச்சொல்லிறது. posted by வசந்தன்(Vasanthan) : Wednesday, April 27, 2005 12:14:23 PM |
அட சரியா பேஸ்போல் விளையாட்டு மாதிரித்தான் இருக்கு இந்த ரவுண்டெஸ். எங்கட ஊரில இது இல்லை. நாங்கள் ஐஸ் போல் எண்டு ஒண்டு விளையாடுவம். இது ரெண்டு குறூப்பா புறிஞ்சு பேணிகளை அடுக்கி வைச்சிட்டு பந்தால் அடித்து விழுத்த வேணும் விழுந்த பேணிகளை மற்ற அணி அடுக்கி வைக்க முதல் பந்தை எடுத்துக்கொண்டு வந்து அவர்களின் கால்களில் அடித்து அவுட் ஆக்க வேணும். இது எனக்குப் பிடிச்ச விளையாட்டு. |
கருத்துக்களை வாசித்துக் கொண்டு வரும்போது பேணிப்பந்து பற்றி ஒருதரும் சொல்லேலயே, நானாவது சொல்லுவம் எண்ட வர கீழ கறுப்பி அதப்பற்றி எழுதியிருக்கிறா. |
இளைஞன் ஏனையா எல்லவற்றையும் கணனியோடு தொடுக்கின்றீர்கள். மனுசர் உடம்பு பெருத்து அசைய முடியாமல் இருக்கிறம். கொஞ்சம் ஓடியாடி விளையாடினால் உடம்பு குறையும் எண்டு பாத்தால் எல்லாத்தையும் கணனிக்கை கொண்டு வந்து புகுத்தி வெறும் "பொட்டேட்டோவா" மாறுற எண்ணமா? கனடாவில வெக்கை கொஞ்சம் வந்தால்தான் யாராவது நடப்பது. மற்றும் படி பக்கத்தில பால் வாங்கப் போறதெண்டாலும் கார்தான். நான் இப்ப வேலைக்கு நடந்து போய் நடந்து வாறன். அரை மணித்தியால நடை நல்லா இருக்கு. என்ர நண்பர் ஒருநாள் நான் நடந்து வாறதைப் பாத்திட்டுக் காறைக் கொண்டு வந்து பக்கத்தில நிப்பாட்டி ஏறுங்கோ கொண்டு போய் வீட்டில விடுறன் எண்டார். நான் சொன்னன் காரை விட்டிட்டு இறங்கி வாரும் இப்பிடியே கதைச்சுக் கொண்டு நடப்பம் எண்டு. என்னை ஒரு மாதிரிப் பாத்திட்டு ஆள் போயிட்டுது. உடம்பு பெருத்தாலும் சொகுசு மனுசரை விடுதில்லை. posted by கறுப்பி : Wednesday, April 27, 2005 5:34:28 PM |
இவவுக்கு திமிரெண்டு அவர் நினைச்சிருப்பரோ? |
கனடாவில எங்கை முத்தம் இருக்கு? (*_*) எல்லாம் புல்லுத்தான். எங்கட செம்மண் புழுதி முத்தம் மாதிரி வருமே. நான் நினைச்சன் கெந்திப் பிடிச்சு பேணி எறிஞ்சு எல்லாத்தையும் கொம்பியூட்டரில கொண்டு வந்து விளையாடப் போறீங்கள் எண்டு. என்ர பிள்ளைகள் தமக்கு விருப்பமான உருவத்தை கேம்மில செய்து தமக்கு விருப்பமான பெயரை வைச்சு கொம்பியூட்டரில விளையாடீனம். அதுமாதிரி நாங்களும் இளைஞன், பெயரிலி, வசந்தன், வன்னியன், சயந்தன், டீசே எண்டு உருவாக்கிப் போட்டு மோதவிடலாம் எண்டு நினைச்சன். |
அவ பேணிப்பந்தத்தான் சொல்லிறா. |
பிள்ளையார் பேணி தெரியும். யாருக்கும் கிளிப்பொந்து என்று விளையாடுகின்ற விளையாட்டுத் தெரியுமா? |
வசந்தன் |
குழைபோட்டு விளையாடுவது |
டி.சே.! |
இரண்டு தடி கொண்டு விளையாடுவதால் கிட்டி பொல்லு என்பது தான் சரி என நினைக்கிறேன். எல்லே இலங்கையின் தேசியவிளையாட்டு. அது தான் றவுண்டெஸ் என நினைக்கிறேன். posted by kulakaddan : Thursday, April 28, 2005 9:46:52 PM |
ஐஸ் போல் மாதிரி டொச்?இது தடி ஒன்றை வெகு தொலைவிற்கு எறிய அதற்குள் மற்றவர்கள் ஒளித்து விடுவார்கள் ஒழித்தவர்களை தேடிகண்டவுடன் நிலத்தில் புள்ளடி இடவேண்டும். முதல் பிடிபட்டவர் அடுத்து தொடருவார் posted by kulakaddan : Thursday, April 28, 2005 9:51:06 PM |
இளைஞன், |