
பதின்ம வயதான Vitor Rafael தோல் அழற்சிக்கு (Skin disease psoriasis) ஏற்கெனவே சிகிச்சை பெற்றிருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட சிகிச்சை எதனால் பலனளிக்கவில்லை என்பதை மருத்துவமனை இன்னமும் தெளிவு படுத்தவில்லை. அவனின் மரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருந்ததா அல்லது ஏற்கெனவே அவனுக்கு இருந்த தோல் அழற்சியினால் சிகிச்சை அளிக்கும் போது ஏற்பட்ட ஒவ்வாமையா என்பதை பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ Vitor Rafaelஇன் மரணம், ஐரோப்பாவில் கோவிட் -19 இன் இளைய வயதினன் என்ற பதிவில் இப்போது இருக்கிறது.
உதைபந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்ட Vitor Rafael இன் மரணத்தை அவனது நகரான Aveiro உதைபந்தாட்டக் கழகம் துயருடன் பகிர்ந்திருக்கிறது.