என்றும் பதினாறு வயது பதினாறு

Emilia Romagna, always16, 101years இன்றைய நாட்களில் இது போன்ற செய்திகள் எங்களை வந்தடையும் போது எங்கள் முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்து விடுகிறது. மனது சந்தோசப் படுகிறது.

“கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி. கொரோனோவை கட்டுப் படுத்த முடியாமல் இத்தாலி திண்டாடுகிறது” என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இத்தாலி நாட்டில் Rimini நகரத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

101 வயதான முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இத்தாலியில் Emilia-Romagna இல் உள்ள Infermi மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த முதியவர் பூரண குணமடைந்து புதன் கிழமை (25.03.2020) மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தாருடன் இணைந்து கொண்டார் என்றொரு செய்தி வந்திருக்கிறது.

“அந்த முதியவர் 1919இல் பிறந்த போதே ஐரோப்பாவை ஸ்பெயின் காய்ச்சல் பீடித்திருந்தது. யுத்தங்கள், பசி,நோய்கள் என்பவற்றுக்குள் அந்த முதியவர் போராடியே வாழ்ந்திருக்கிறார். இப்பொழுது 101 வயதில் கூட அவர் உலகமே அஞ்சி நிற்கும் கொரோனா வைரஸை வென்று வந்திருக்கிறார்” என Rimini நகர துணை மேயர் Gloria Lisi சொல்கிறார்.

"நாங்கள் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிவோம், ஆனால் அவரது பெயரை பகிரங்கப்படுத்த நாங்கள் விரும்பவில்லை" என்று Rimini நகர துணை மேயரின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு கூறியிருக்கிறார்.

இத்தாலியில் Covid-19 இனால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் இறக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கையில், 101 வயதான ஒருவர் குணமாகி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருப்பது அந்த நாட்டின் மருத்துவர்களின் சேவையைக் காட்டி நிற்கின்றது.

“101 வயதுக்கு அப்பாலும் வாழ முடியும். நம்பிக்கையுடன் போராடுங்கள்” என்று அந்த முதியவர் ஒரு செய்தியை எங்களுக்குச் சொல்லி இருக்கிறார்.

Drucken   E-Mail

Related Articles

நூறாண்டுக்கு மேல் வாழ்க!

நானும் காத்திருக்கிறேன்

பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு

பதின்ம வயது Vitor Rafael

குறைந்த வயது மரணம்

ஆறு வாரங்களில் ஒரு கருவி

செய்திகள்

இன்னுமொரு வழக்கு