ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)

காலையில் வேறொரு தலையிடி மாமியின் ரூபத்தில் முளைத்திருந்தது. வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இயங்கும் அத்தனை மாமூலான செயற்பாடுகளையும் அது தடைசெய்தது. அவன் டிபன்பொக்சை கழுவிக்கொண்டு சாப்பாடு போடுவதற்கு சாப்பாட்டைத்தேடினான். அத்தனை உணவுப்பாத்திரங்களும் சமையலறையில் கழுவி அடுக்கப்பட்டிருந்தது. சமையலறையை சல்லடையாக்கியும்இ ஒன்றும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலமாரிகளாக திறந்து மூடினான். ·பிரிக¨ஐத் திறந்து பார்த்தான் அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் வேண்டி தின்னாமல் காய்ந்து போயிருந்த இரண்டு ஆப்பிள்தான் முளித்துக்கொண்டு கிடந்தது.

ஆரம்பத்தில் அர்த்தம் புரியாமல் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சின்னமாமியின் மொக்குப்புத்தியை நினைத்து சிரிப்பதா.. அழுவதா..? அவனிடம் காசிருந்தால் கொடுக்காமல் விடுவானா. பதினொரு மணித்தியாலம் பாரம்து¡க்கி வேலைசெய்யும் உடம்பு பசி தாங்குமா..?

அவனையறியாமல் தாயின் நினைவு கிளம்பியது. தனக்கு இல்லாவிட்டாலும் மூத்தவனுக்கு என்று ஒளித்து வைத்துக்கொடுக்கும் அன்பேயுருவான அம்மா. அந்த பிரியமான அம்மாவின் தம்பியான சின்னமாமனது பெண்டாட்டியின் மனசு என்ன சாக்கடையா..? தன் சொந்தப் பிள்ளையாக இருந்தால் இப்படிப் பட்டினி போட்டு பழிவாங்குவாளா. கண்ணிலிருந்து நீர் பனித்து விழ யோசித்துக் கொண்டிருந்தான்.

வேலைக்கு செல்ல நேரம் பிந்திக்கொண்டு இருந்தது. 5.50 மெட்ரோவை விட்டால் சரியான நேரத்திற்கு பேக்கரிக்குச் போய்ச் சேரமுடியாது. ஜந்துபத்து நிமிசம் பிந்திக் காட் பஞ்ச் பண்ணினால்கூட அரைமணித்தியாலம் கழித்து விடுவார்கள். கடன் கொடுத்துத் தொலையவேண்டிய வேளையில் பசியையும் பகையையும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது என்ற அவசியத்தால் அந்த காய்ந்த இரண்டு அப்பிள்களையும் து¡க்கி பையில் வைத்துக் கொண்டு இறங்கி ஓடினான்.

இராணுவத்தில் உடல்ரீதியான கடுமையான பயிற்சிக்காலத்தில் இடையிடை உள்ளத்திற்கும் ஒரு பயிற்சி வைப்பார்கள். தினசரி காலைப்பயிற்சிக்கு எழுப்பும்நேரத்தில் ஒருநாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரு அறிவிப்பு வரும். அன்று முழுக்க கிச்சின் சீல் வைக்கப்பட்டுள்ளது என. எல்லாநாட்களையும் போல அன்றும் அத்தனை மாமூலான பயிற்சிகளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனால் மூன்றுவேளையும் சாப்பாடு இருக்காது. ஒரு பாண்துண்டுகூட பொறுக்கி எடுக்கமுடியாதபடிக்கு அத்தனை உணவுகளும் காணாமல் போயிருக்கும். பசியில் சுருண்டு விழுபவனுக்கும் கருணை காட்டமாட்டார்கள். தாக்குதலுக்குப் போய் தற்செயலாக முற்றுகையிடப்பட்டால் இந்தப்பயிற்சி உதவும். அந்த பட்டினிப்பயிற்சி நாளைப்போல இன்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டான்.

ராஐ¡ நினைத்துக் கொண்டமாதிரி அவ்வளவு இலேசாக மாமியின் வக்கிரச் செயலை மறந்து விட்டு வேலை செய்யமுடியவில்லை. ஒவ்வொரு மாமூட்டை து¡க்கி மெ‘¢னில் போடும்போதும் மாமியினது பழிவாங்கும் படலத்தை எப்படி நிப்பாட்டலாம் என்ற சிந்தனையே ஓடியது. சின்னமாமனுடன் தங்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரையான சாப்பாட்டுக்காசை எப்படியும் கொடுத்துவிடவேண்டும். ஆனால் எப்படிக் கொடுப்பது..? என்றே வெறுங்கையால் முழம் போட்டபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

அறுபத்துநாலு மூட்டைமாவு குழைத்து முடியும்போது கை நடுங்கத்தொடங்கியது. நெற்றி குளிர்ந்த வியர்வையால் நனைந்தது. பலதடவைகள் கூடவேலை செய்யும் ரஞ்சனைவேறு சினந்து கோவித்துக் கொண்டான். மாவை வெட்டி உருட்டும் மி‘¢னில் போடும்போது கைதவறி இரண்டு தடவை நிலத்தில் விழுந்து விட்டது. பத்திரோன் பார்த்திருந்தால் இத்தாலிய மொழியில் கெட்ட து¡சணத்தால் பேச்சுக் கொடுத்திருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பதட்டமடைவது தெரிந்தது. பேசாமல் லீவு எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விடலாமா என்றுகூட யோசித்தான். வீட்டுக்குப் போனால் மாமியின் முகத்தைப் பார்க்கமுடியாது. திரிசங்கு நிலையில் மனம் கிடந்து ஆடியது.

பைப்பில் தண்ணியை எடுத்துக் குடித்துவிட்டு அடுத்த மூட்டையை து¡க்கி மிஷினில் போட்டுஇ கலவைகளை அளவாக சேர்த்து விட்டுக் கொண்டிருக்கும் போது அவனைக் கடந்து சென்ற சீனியர் காந்தன் முதுகில் லேசாகத் தட்டியதும் கோவம் குதித்துக் கொண்டுவர திரும்பி முறாய்த்துப் பார்த்தான். அவருக்கு சங்கடமாகப் போய்விட்டது. மைளனமாக நின்று அவனைப் பார்த்தார். பின்னர் தனது அடுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

எப்போதும் கலகலப்பாகவும் தன்னில் நேசமாகவும் பழகும் காந்தனைக் கோவித்தது பெரும்பிழை என உணர்ந்ததும் அவருக்குப் பின்னால் சென்று வழிமறித்தான். அவனது முகவாட்டத்தைக் கவனித்த காந்தன்

"என்ன ராசா..! முகமெல்லாம் காய்ஞ்சு போய்க்கிடக்கு சுவமில்லையே"

"இல்லையண்ணை மனசுக்குத்தான் சுவமில்லை" என்று சொன்னான்.

சுடுதண்ணியில் அவித்த பேகிளை வலைக்கரண்டியால் எடுத்து எள்ளுப்பிரட்டி தடியில் அடுக்கியபடிக்கு காந்தன் கேட்டார்.

"ஏதும் சொல்லக்கூடிய பிரச்சனையெண்டா சொல்லும்."

குடும்பத்திலுள்ள சிறுமைக்குணத்தை அவருக்குச் சொல்லி சந்தியில் ஏற்றுவது அவனுக்கு விருப்பமில்லையாதலால் அன்றைக்குள்ள தனது சிக்கலை காந்தனுக்குச் சொன்னான்.

"வேறெயென்ன பிரச்சனை வருமண்ணை. காசுப்பிரச்சனைதான் அவசரமா ஒரு நு¡றுடொலஸ் தேவையா இருக்குது அதான் குளம்பிக் கொண்டிருக்கிறன்."

"மிஷினோடை வேலை செய்யிறனீர் மூளையை எங்காலும் விட்டா கையைக்காலைத்தான் பறிகுடுக்கோணும். இன்சூரன்சும் இந்த அறுந்த பேக்கரியிலை இல்லை. பின்னேரம் வேலை முடிஞ்சு போகேக்கை பாங்கில அடிச்சுத்தாறன் சம்பளம் எடுத்தோண்ணை தாருமன். யோசிக்காமப் போய் வேலையைப் பாரும்."

தலையை ஆட்டிக்கொண்டு மாக்குழைக்கும் மிஷினை நோக்கி திரும்பி நடந்த அவனுக்கு சிறிது மனத்தெளிவு ஏற்பட்டது. ஓணானை மடியில் கட்டிக்கொண்டு நிம்மதியாக இருக்கமுடியாது. மாமியிடம் காசைக் கொடுத்துஇ ஒருவாறு வீட்டுநிலையை ஸ்திரப்படுத்தியே தீரவேண்டும். இதே நாடகம் தொடர்ந்து நடந்தால் பட்டினியைவிடஇ வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த நாட்டிலும் பழைய பரதேசிக் கோலத்தை கொள்ளமுடியாது. அதைவிட பெரியமாமனின் கடனைக் கொடுத்து ஒப்பேற்றாவிட்டால் காலம் முழுக்க அந்தப்பழி தன்னைத் தொடர்ந்து வரும். இப்போது உள்ளுக்குள் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கும் மாமன்மார் காசை அறவிடுவதற்கு கூட்டுச் சேர்ந்துவிடுவார்கள்.

மிகுதிவேலை கொஞ்சம் உசாராக செய்ய முடிந்தது. கூட வேலைசெய்யும் ரஞ்சனைக் குழைக்க விட்டுவிட்டு அவன் உருட்டும் மிஷினில் வேலை செய்யததால் களைப்புத் தெரியவில்லை. கலவை போடும்போது மட்டும் ரஞ்சனுக்கு கிட்ட நிண்டு காட்டிக் கொடுத்துக் கொண்டான். அப்படியும் அன்று வேலை அரைமணித்தியாலம் லேட்டாகத்தான் முடிந்தது. அதுவரை சீனியர் காந்தன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக காவல் நின்றார்.

காந்தனுடன் சென்று காசை வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வர வரவேற்பறை வெறுமையாக இருந்தது. ரெலிவிஷன் ரேப்செட் எல்லாம் பயங்கர அமைதியாக இருந்தது. சின்னமாமன் வெளியில் எங்கோ சென்றிருந்தான். மாமி இந்த வெக்கைநேரத்திலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறாள் போலும். முப்பதுடிகிரி அனல் அடித்து உடம்பு வேர்த்துக்கசகசக்கும் போது எப்படி மாமிக்கு நித்திரை வருகிறது என்று தெரியவில்லை. சமையல் முடிந்தபிறகாவது வெளியில் பார்க் கடைதெரு என்று போய்ச் சுற்றி வருவது மாமிக்குப் பிடிக்காத பழக்கம். அப்படிச் சுற்றித்திரியும் பெரியமாமியை ஆட்டக்காறி என்று பேசும் ஒரே காரணத்துக்காக சிலவேளை தான் போகாமல் அடைகாக்கிறாளோ தெரியவில்லை.

அவன் வேலை உடுப்பைக் களைந்து சாரம் மாற்றிக்கொண்டு குளிக்கப்போனான். அவன் வந்த சத்தம் கேட்டதும் மாமி எழும்பிவந்து செற்றியில் இருந்து ரெலிவிசன் பார்க்கத் தொடங்கினாள்.

குளித்துவிட்டு பாத்ரூமுக்குள்ளால் வெளியே வந்ததும் மாமியைக் கூப்பிட்டு காசைக் கொடுத்தான். முகமெல்லாம் பல்லாக பிரகாசமாகிய மாமியைப் பார்க்க வெறுப்பு வந்தது. இப்படியும் ஒருபிறவியா..? தடுக்கி விழுந்து விடுபவள் போல ஓடிவந்து காசை வேண்டிவிட்டு சமையலறைக்குள் குடுகுடுவென்று போய் சாப்பாடு போட்டாள். ஆனால் மத்தியானம் என்ன சாப்பிட்டாய் என்று தவறிக்கூட கேட்கவில்லை. அவன் ஆண்டிக்குக் கிடைத்த கோவில் தளியல்போல அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான். பெரும்பாலும் சின்னமாமியுடன் அவ்வளவாக கதைத்துக் கொள்ளும் பழக்கமில்லாததால் நேரே தனது கூட்டுக்குள் போய் படுக்கையில் விழுந்தான்.

மாமன் கதவு திறந்து வீட்டுக்குள் வரும் சத்தம் கேட்டது. எதையும் அமைதியாக ஆறுதலாக செய்யும் குணம் மாமனுக்குக் கிடையாது. கதவு திறந்தாலும் பூட்டினாலும்இ குளிக்கப் போனாலும்  சண்டைக்குப் போகும் கதியில் களேபரப்படுத்தித்தான்  காரியம் முடிப்பான்.

அறைக்குள் உடுப்பு மாத்தப்போன மாமனை "இஞ்சருங்கோ" என்று சின்னமாமி கூப்பிடும் சத்தம் ராஐ¡வுக்குக் கேட்டது. பின்னர் ஒலியின் உருத்தெரியாமல் குசுகுசுவென அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. சற்றைக்கெல்லாம் சடாரென று¡ம் கதவைத் திறந்து கொண்டு சின்னமாமன் பிரசன்னமானான். சின்னமாமனின் தோற்றத்திலிருந்தே ஆள் நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது.

"டேய் எங்கை இந்த சுத்துமாத்துப் பழகின்னி.. ராத்திரி காசு இல்லையெண்டாய். இண்டைக்கு எப்பிடிக் காசு வந்துது..? என்னை என்ன மடையனெண்டு நீயும் உன்ரை பெரியமாமாவும் நினைச்சியளோ..?"

ராஐ¡வுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தோன்றவில்லை. சிக்கலே வேண்டாம் என்று வெளியானிடம் தண்டிக் கொண்டு வந்த காசாலையே சிக்கல் பிறந்துவிட்டதே என நொந்து கொண்டான்.

"மாமா ஏன் இப்பிடிக் கத்திறியள். நான் வேலை செய்யிற இடத்திலை கடன் வேண்டிக் கொண்டு வந்துதானே காசு குடுத்தன்."

"ஓமடா ஓமடா எனக்குத் தெரியாதே உன்னைப்பற்றி. ஊத்தை மக்கிக்கிடங்கான்ரை மேன்தானே நீ..!"

"இதென்ன பிரளயம். குடிச்சுட்டு வந்து இப்ப என்னத்துக்கு செத்துப்போன அப்பாவை இழுக்கிறியள்."

"ஆரடா வடுவா குடிச்சிட்டு நிக்கிறது. இப்ப இந்த நிமிசமே உன்ரை கொம்மான் வீட்டுக்கு போய்த் துலைஞ்சிடு. எல்லாம் கள்ள வடுவாக்கள்."

"இஞ்சரப்பா..! பேசாமல் இஞ்சாலை வாங்கோ. மரியாதை தெரியாததுகளோடை என்ன கதை உங்களுக்கு."

என்று சின்னமாமி மாமனை அடக்கிக் கூட்டிக் கொண்டு போனாள். ராஐ¡வுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. மாமியும் குடிச்சிருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது. என்னவானாலும் இனிமேல் இங்கு இருக்கக் கூடாது என்ற முடிவுடன் உடுதுணிகளை எடுத்து பாக்கிற்குள் அடசிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். சும்மா சமாதானத்துக்குக் கூட போகவேண்டாம் என்று சொல்லாத மாமியிடம் திறப்பைக் கொடுத்துவிட்டு கதவைச் சாத்தி இறங்கிப் போனான்.

நேரே பெரியமாமனது வீட்டுக்குப் போய் அழுகை முட்ட முட்ட நடந்ததைச் சொன்னான்.

எவ்வித ரியாக்சனும் காட்டாமல் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்று பின் சிறிது மெளனமாகிப் போன பெரியமாமன் வரவேற்பானா இல்லை அவனும் வெளியேற்றிவிடுவானா என்று புரியாமல் முளித்தான் ராஐ¡.

ராஐ¡வைக் கனடா கூப்பிடுவதற்கு செலவு செய்த காசை வட்டியும் முதலுமாக அறவிடுமுன்னர் அவனை வெளியேற்ற மாமன் என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரனா..?

"சரியடா ராசா.! அவன்ரை குணந்தான் எங்களுக்கு முதல்லயே தெரியுமே. அதுவும் உன்னால வெல்·பெயரிலை நு¡றுடொலர்ஸ் வெட்டிப் போட்டாங்கள் எண்டு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரியுறான். நீதானே அவனோடை ஒட்டிக் கொண்டு போனனீ இப்ப அழுது என்ன பிரயோசனம். பாக்கைத் து¡க்கிக் கொண்டுபோய் ஆனந்தன்ரை று¡மிலை வை."

பெரியமாமன் அத்துடன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - நவம்பர்  2001,  இதழ் 23

Post a Comment - ஏழாவது சொர்க்கம்

ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 10(நாவல்)

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு